Latest Cinema
- ·
- · sivam
ரஜினியின் ‘கூலி’ திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். லோகேஷ் கனகராஜ் ‘லியோ’ படத்தில் தன்னை சரியாக பயன்படுத்தவில்லை என நடிகர் சஞ்சய் தத் கூறிய நிலையில், தற்போது ‘கூலி’ படத்தால் தான் அப்செட் ஆகியிருப்பதாக நடிகை ஒருவர் கூறியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.தமிழ், மலையாளம், தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை ரெபா மோனிகா ஜான். இவர் கடந்த 2016-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ‘ஜாகோபின்டே சுவர்கராஜ்யம்’ படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அடியெடுத்து வைத்தார். 2018-ல் ஜெய் நடிப்பில் வெளியான ‘ஜருகண்டி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார்.2019-ல் விஜய
- ·
- · sivam
இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுண்டாங்கோட்டை என்ற சின்னஞ்சிறு கிராமம்தான் டி.எஸ். பாலையாவின் சொந்த ஊர். சர்க்கஸில் சேர்ந்து பெரிய கலைஞனாக வேண்டும் என்ற உந்துதலோடு, அப்பா அம்மாவிடம் சொல்லாமல் 14 வயதில் வீட்டை விட்டு ஓடி வந்தவருக்கு அடைக்கலம் கொடுத்தது மதுரை மண்.அங்கே பிரபலமாக இருந்த ‘பாலமோஹன சபா’வில் இடம் கிடைத்தது.அப்போது பாலையாவுக்கு 15 வயது. அந்த சபாவில் பாலையாவுக்கு நடிப்புக் கலையைச் சொல்லிக்கொடுத்தவர் அவரது வாத்தியார் கந்தசாமி முதலியார். அவர் ஒரு திரைப்படத்துக்கு வசனம் எழுதினார். அந்தப் படம் எல்லீஸ் ஆர். டங்கன் முதல்முறையாக இயக்கிய ‘சதி லீலாவதி’(1936). அந்தப் படத்தில், தனக்கு மிகவும் பிடித்த மாணவன் பாலையாவுக்கு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார். அறிமுகப் படத்திலேயே வில்லன் வேடம் என்பத
- ·
- · sivam
தன்னை அவமதிப்ப வர்களை எம்.ஜி.ஆர். எப்படி தண்டிப்பார் என்பதற்கும் ஒரு சுவையான சம்பவம். அவர் சிறிய வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த காலங்களில் ஜூபிடர் படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு சொந்த மான நெப்டியூன் ஸ்டுடியோவில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டார். எம்.ஜி.ஆருக்கு சிறிய வேடம்.ஒரு காட்சியில் நடித்து முடித்து விட்டு அடுத்த ‘ஷாட்’டுக்கு கூப்பிடும் வரை வெளியே உட்கார்ந்திருப்பார். எங்காவது சென்றால், தேடும்போது ஆள் இல்லாவிட்டால் வாய்ப்புகள் போய்விடும் என்பதால் இடத்தைவிட்டு நகரமாட்டார். ஒருநாள் அப்படி உட்கார்ந்திருந்தபோது, அந்த ஸ்டுடியோவில் பணியாற்றிய அப்பன் என்ற பெயர் கொண்ட பணியாளர் ஒருவர், ஒரு கூஜாவையும் டம்ளரையும் எடுத்துக் கொண்டு சென்றார். எம்.ஜி.ஆருக்கு கடுமையான தாகம். பணியாளர் அப்பனைப் பார
- ·
- · sivam
மோகன்லால் நடிப்பில் உருவான ‘ஹிருதயபூர்வம்’ மலையாள திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.மோகன்லால் நடிப்பில் வெளியான ‘துடரும்’ திரைப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து ஓணம் பண்டிகையை முன்னிட்டு மோகன்லால் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான மலையாள படம் ‘ஹிருதயபூர்வம்’. இந்தப் படத்தை மலையாள சினிமாவின் மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காட் இயக்கியுள்ளார். படத்தில் மாளவிகா மோகனன் நாயகியாக நடித்துள்ளார்.சித்திக், பாபு ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு ஜஸ்டின் பிரபாகர் இசையமைத்துள்ளார். ஆசீர்வாத் சினிமாஸ் சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் படத்தை தயாரித்துள்ளார். ரூ.12 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ.80 பாக்ஸ் ஆஃபீ
- ·
- · sivam
நடிகை சாக்ஷி அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஆதங்கத்துடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “ப்யூர் வெஜிடேரியனான நான் ஆர்டர் செய்த உணவில் சிக்கன் இருந்தது. அந்த உணவை இப்போது தான் தூக்கி எறிந்தேன். இதற்கு உணவு டெலிவரி நிறுவனமான ஸ்விக்கி நிறுவனம் பதில் சொல்லியே ஆக வேண்டும். எனது மத நம்பிக்கையை புண்படுத்தியதற்கு நன்றி” என தெரிவித்துள்ளார்.அத்துடன் தனது உணவில் பன்னீருக்கு பதிலாக சிக்கன் துண்டுகள் இருந்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் தனக்கு பன்னீருக்கு பதிலாக அசைவ உணவை வழங்கிய உணவகத்துடன் பாலிவுட் நடிகர் ஹிருத்திக் ரோஷனின் எச்ஆர்எக்ஸ் (HRX) என்கிற ஃபிட்னஸ் நிறுவனம் தொடர்ந்து விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இதனால் தனது பதிவில் ஹிருத்திக் ரோஷனையும் குறிப்பிட்டுள்ளார் நடி
- ·
- · sivam
ஒரு காலத்தில் ஆசிரியராக பணியாற்றியவர் அதன் பிறகு சினிமாவில் இணைந்து பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து தென்னிந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியிருக்கிறார். அவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர். ரஜினி, விஜய், சூர்யா, விக்ரம், கார்த்தி ஆகியோருடன் தமிழிலும், நாகார்ஜுனா, பிரபாஸ், அல்லு அர்ஜுன், ராணா போன்ற நட்சத்திர ஹீரோக்களுடன் தெலுங்கிலும் நடித்துள்ளார்.தமிழில் மாதவன் நடிப்பில் வெளியான ‘ரெண்டு’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான அனுஷ்கா, வேட்டைக்காரன், சிங்கம், தெய்வத்திருமகள், வானம், லிங்கா என பல படங்களில் நடித்துள்ளார். ‘அருந்ததி’ திரைப்படம் அனுஷ்காவுக்கு பரவலான அடையாளத்தை பெற்றுக் கொடுத்தது என்றாலும், 2015-ல் வெளியான ‘பாகுபல
- ·
- · sivam
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா சமீபத்தில் கடினமான சூழ்நிலையை சந்தித்து வருகிறார். தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி (Venky Atluri) இயக்கும் அவரது புதிய படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே மெதுவாகச் சென்றுகொண்டிருந்தது. இந்நிலையில் ஏற்பட்ட தனிப்பட்ட துயரம் காரணமாக படப்பிடிப்பு மேலும் தாமதமாகியுள்ளது. இந்த செய்தி, சூர்யா ரசிகர்களிடமும், தொழில்துறை வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வெற்றி பெற்ற இயக்குநராக இருந்துவரும் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம், சூர்யாவை ஒரு புதிய கதாபாத்திரத்தில் காட்டும் என்று கூறப்படுகிறது. முதல் லுக் மற்றும் தலைப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.படப்பிடிப்பு ஆரம்பத்திலிருந்தே சில காரணங்களால் மெதுவாகவே முன்னேற
- ·
- · sivam
மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால். தொடர்ச்சியாக மலையாளத்தில் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். அவரின் நடிப்பில் அண்மையில் வெளியான ஹிருதய பூர்வம் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஷாருக்கான் என சூப்பர்ஸ்டார்கள் கோலோச்சும் இந்திய திரைத்துறையில் ஒரே வருடத்தில் 34 படங்களை ரிலீஸ் செய்து அசத்தியவர் மோகன்லால்.கடந்த 1986-ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் 34 படங்கள் வெளியாகின. அதில் 25 படங்கள் பாக்ஸ் ஆஃபீஸில் வசூல் குவித்தன. ஒரு நடிகரின் 34 படங்கள் ஒரே ஆண்டில் வெளியாவது இதுவே முதன்முறை. 1980-ம் ஆண்டு ஃபாசில் இயக்கத்தில் வெளியான 'மஞ்சில் விரிஞ்ச பூக்கள்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் மோகன்லால். இதுவரை 400க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.64 வயதாகும் மோகன்லால் இ
- ·
- · sivam
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர் நடிகர் ரோபோ ஷங்கர். இந்த நிகழ்ச்சிகளில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். இதில் முக்கியமாக தனுஷுடன் மாரி, விஷாலுடன் இரும்புத்திரை உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல வரவேற்பைப் பெற்றுத் தந்தன.நடிகர் ரோபோ சங்கருக்கு நேற்று முன்தினம் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை உறவினர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 8:30 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 46. அவரது இறப்பு திரையுலகின
- ·
- · sivam
நடிகர் தனுஷ் இட்லி கடை என்ற படத்தை இயக்கி, கதை எழுதி, நடித்து, தயாரிப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். இதில் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், பார்த்திபன், சமுத்திரக்கனி, ராஜ்கிரண் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் அக்டோபர் 1ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் வெளிவரப் போகிறது.இதற்கான இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. இதில் தனுஷ் சில விஷயங்களை உருக்கமாக பேசி கடந்து வந்த பாதையை கூறியிருக்கிறார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த டிடி, தனுஷிடம் கருங்காலி மாலை பற்றி ரகசியம் என்ன என்று கேள்வி கேட்டார். அதற்கான ரகசியத்தை சொல்லும் விதமாக தனுஷ் சென்டிமெண்டாக பதில் கூறியிருக்கிறார்.அதாவது இது என்ன மாலை என்று எனக்கு சத்தியமாக தெரியாது, என்னுடைய தாத்தாவின் போட்டோவுக்
- ·
- · sivam
படம் ரிலீஸ் ஆனால் சேலை கட்டிக்கிறேன்; சவால் விட்ட மதுரை தி.மு.க பிரபலம், முதல் காட்சி அங்கேயே வெளியிட்ட எம்.ஜி.ஆர்!மதுரையில் அவர் சேலை கட்டிக்கொள்வதாக பேசியதால், படத்தின் முதல் காட்சி மதுரையில் தான் திரையிடப்பட வேண்டும் என்று முடிவு செய்த எம்.ஜி.ஆர், மீனாட்சி தியேடடரில் முதல் காட்சி காலை 8 மணிக்கு திரையிட்டுள்ளார்.எம்.ஜி.ஆர் நடித்த ஒரு திரைப்படம் வெளியானால் நான் சேலை கட்டிக்கொள்கிறேன் என்று தி.மு.க பிரமுகர் ஒருவர் சொல்ல, அவரை எதிர்த்து தனது படத்தை மதுரையிலேயே திரையிட்டு வெற்றி கண்டுள்ளார் எம்.ஜி.ஆர். இந்த படம் இன்றுவரை பேசப்படக்கூடிய ஒரு படமாக நிலைத்திருக்கிறது.தமிழ் சினிமாவிலும், அரசியலிலும் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் எம்.ஜி.ஆர், தொடர்ந்து 3 முறை முதல்வர் இருக்கையில் அமர்ந்த இவர், இயக்கம
- ·
- · sivam
இயக்குநர் சிம்புதேவன் இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அந்த படத்தில் அவர் வடிவேலுவைக் காட்சிப்படுத்தியவிதமும், நகைச்சுவைக் காட்சிகளும் இன்றளவும் சிரிப்புமழையை வரவழைக்கும் விதத்திலானவை.அந்த படத்த்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின்னர் அறை எண் 305-ல் கடவுள், புலி, ஒரு கண்ணியும் 3 களவாணிகளும் ஆகிய படங்களை இயக்கினார். இதையடுத்து வெற்றிக்கூட்டணியான இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்துக்காக வடிவேலுவுடன் இணைந்தார். ஆனால் அந்த படத்தின் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதில் தொடர்ந்து நடிக்க மறுத்தார். அதனால் அந்த படம் கைவிடப்பட்டது.சமீபத்தில் சிம்பு தேவன் இயக்கத்தில் ‘போட்’ என்ற படம் வெளியானத
Latest Cinema (Gallery View)
- ·
- · sivam