Latest Cinema
- ·
- · sivam
சூர்யா நடிப்பில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற திரைப்படம் மீண்டும் ரிலீஸாகுவதற்கு தயாராகி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.ஏற்கனவே நன்றாக ஓடிய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வது நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு குஷி, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்து வரவேற்பை பெற்றன.சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.சூர்யா - லிங்குசாமி - யுவன் ஷங்கர் ராஜா - சந்தோஷ் சிவன் போன்றோரின் பிரம்மாண்ட கூட்டணி காரணமாக, அஞ்சான் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏ
- ·
- · sivam
நடிகை ஏமி ஜாக்சன் மதராசப்பட்டினம் படத்தில் நடிகர் ஆர்யாவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதன்பின் தாண்டவம், ஐ, தங்கமகன், தெறி, கெத்து, எந்திரன் 2.0, தேவி என தொடர்ந்து நிறைய படங்களில் நடித்து வந்தார்.தமிழை தாண்டி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் படங்கள் நடித்தவர் இப்போது ஹாலிவுட்டில் தான் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.இதனிடையே கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்து நாட்டை சேர்ந்த தொழிலதிபர் ஜார்ஜ் பனோயிட் என்பவரை நிச்சயதார்த்தம் செய்தவர் திருமணம் செய்யாமல் ஆண் குழந்தை பெற்றார். ஆனால் அவர்களுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.பின்னர் ஹாலிவுட் நடிகர் எட் கெஸ்விக் என்பவரை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். இவர்களுக்கும் சமீபத்தில் அழகிய குழந்தை பிறந்தது.ஏற்கெனவே உடல் எடை
- ·
- · sivam
இமயமலையில் உள்ள பாபாஜி குகையில் நடிகர் ரஜினிகாந்த் தியானம் மேற்கொண்டார்.ஒரு வார கால ஆன்மிக பயணமாக நடிகர் ரஜினிகாந்த் இமயமலை சென்றிருக்கிறார். முதலாவதாக ரிஷிகேஷ் (Rishikesh) சென்ற அவர், இரண்டாவது நாளில் பத்ரிநாத் சென்றார். அங்கு சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த், தனது ஆன்மிக நண்பர்களுடன் அங்கிருந்து இமயமலையில் உள்ள பாபாஜி குகை நோக்கி புறப்பட்டார். காவலர்கள் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர்.இந்நிலையில், பாபாஜி குகைக்குச் சென்ற ரஜினிகாந்த், அங்கு நீண்ட நேரம் தியானத்தில் ஈடுபட்டார். தற்போது அதுதொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளன.கடந்த முறை ‘வேட்டையன்’ படம் வெளியாவதற்கு முன்பு அக்டோபர் மாதத்தில் இமயமலைக்கு அவர் சென்று வந்தது குறிப்பிடத்தக்கது.
- ·
- · sivam
கோலிவுட்டின் புதிய ஜோடி கவின் மற்றும் நயன்தாரா நடிக்கும் Hi படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சின்னத்திரையில் ரசிகர்களை கவர்ந்த நடிகர் கவின் தற்போது சினிமாவில் நடித்து பிரபலமாகி வருகிறார். அவரது நடிப்பில் வெளிவந்த ஸ்டார், டாடா உள்ளிட்ட படங்களை ரசிகர்களை கவர்ந்தன. அடுத்ததாக அவர் மாஸ்க் மற்றும் அவரது 9-ஆவது படத்தில் நடித்து வருகிறார்.லோகேஷ் கனகராஜின் அசிஸ்டென்ட் விஷ்ணு இயக்கும் இந்த படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கிறது. ஜென் மார்ட்டின் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு ராஜேஷ் சுக்லா. எடிட்டிங் பிலோமின் ராஜ். கலை சேகர். ஸ்டன்ட் தினேஷ் காசி மேற்கொள்கின்றனர்.Hi என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருக
- ·
- · sivam
நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் புதிய படமான 'வா வாத்தியார்' படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் கார்த்தி போலீஸ் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 'சூது கவ்வும்' என்ற வெற்றிப் படத்தின் மூலம் பிரபலமான நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கி உள்ளார். ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.கீர்த்தி ஷெட்டி 'வா வாத்தியார்' படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம். குமார், ஆனந்த் ராஜ், ஷில்பா மஞ்சுநாத் ஆகியோர் இப்படத்தின் மற்ற முக்கிய நடிகர்கள். சத்யராஜ் வில்லன் வேடத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்போது 'வாத்தியார்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தய
- ·
- · sivam
பிரபல பாடகரும் - நடிகருமான ராஜ்வீர் ஜவாண்டா கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள பட்டி எனும் இடத்தில் கோர விபத்தில் சிக்கினார். இவர் பைக்கில் சென்றபோது நாய் குறுக்கே வந்ததால், இந்த விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்தில் சிக்கிய ராஜ்வீர் ஜவாண்டாவுக்கு தலை மற்றும் முதுகு தண்டில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து பகுதியிலேயே சுயநினைவை இழந்தார்.இவரை அடையாளம் கண்ட மக்கள், உடனடியாக ராஜ்வீர் ஜவாண்டாவை அருகே இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இவருக்கு தலையில் பலமாக படிப்பட்டதால் அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், முதுகு தண்டிலும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, இவருடைய உடல் நிலையும் நாளுக்கு நாள் மோசம் அடைந்தத
- ·
- · sivam
அபுதாபி சுற்றுலாத் துறை விளம்பரத்தில் ஹிஜாப் அணிந்து நடித்ததற்காக தீபிகா படுகோன் மீது சமூக ஊடகங்களில் சைபர் தாக்குதல் வலுத்து வருகிறது. கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து தீபிகா இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். இருப்பினும், பல ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்துள்ளனர். நீங்கள் விளம்பரத்தில் நடித்து காசு சம்பாதிக்க வேறு உடையே கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் புனிதமான உடையாக கருதும் ஹிஜாப் தான் கிடைத்ததா என கமெண்ட் செய்து வந்தனர்.அதற்கு தீபிகா படுகோன் ரசிகர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தை மரியாதையுடன் பார்க்கும் தீபிகாவுக்கு வாழ்த்துகள் என்று ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மசூதிக்குள் சென்றதால், அதற்கேற்ற பொருத்தமான ஆடைகளை அணிந்துள்ளார் என்று ர
- ·
- · sivam
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் (Anirudh). தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்டாக அவரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. காவ்யா மாறன் (Kavya Maran) தற்போது ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.இருவரும் ஜோடியாக டின்னர் சாப்பிட சென்றதாகவும், ஒன்றாக வெளிநாடுகளில் உலா வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருவருமே இதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.இதற்கு முன்ன
- ·
- · sivam
வெள்ளாவி வெச்சு வெளுத்தது போல, பல பலனு இருக்கும் ராய் லட்சுமிக்கு சொந்த ஊர் பெங்களூர். இவருக்கு சிறுவயதில் இருந்தே, சினிமா மீது ஆர்வம் இருந்ததால், பள்ளியில் படிக்கும் போதே பல படங்களை விரும்பி பார்த்துள்ளார். கல்லூரிக்கு சென்ற பின் அந்த ஆசை அதிகமாக, தனது ஆசையை பூர்த்திக் செய்து கொள்ள படித்துக்கொண்டு இருந்த போதே, மாடலிங்கில் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கம்பேனிகளின் விளம்பரத்தில் நடித்து வந்த ராய் லட்சுமிக்கு புரூ காஃபி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தின் மூலம் பிரபலமான இவர், சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரம் என அடுத்தடுத்த விளம்பரத்தில் நடித்தார்.விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பால், கற்க கசடற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில்
- ·
- · sivam
நடிகர் ரஜினிகாந்த் தனது 1 வார கால ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். மிகவும் எளிய தோற்றத்துடன் தேக்குமர இலை தட்டில் அவர் சிற்றுண்டி அருந்தும் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ஒரு வார காலத்திற்கு ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.தற்போது ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகளை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படமாக்கி வருகிறார். இந்நிலையில் ஆன்மிக சுற்று பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிற்கு சென்றடைந்தார்.
- ·
- · sivam
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் காதல் பயணம் ரீல் வாழ்க்கையில் தொடங்கி ரியல் வாழ்க்கையை எட்டியுள்ளது. இருவரும் முதன்முறையாக கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பரசுராம் இயக்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் போது தான் இருவர் இடையே காதல் துளிர்விட ஆரம்பித்தது. இதையடுத்து 2019ல் வெளியான 'டியர் காம்ரேட்' படத்தில் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். அப்படத்திற்கு பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதால், இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அக்டோபர் 3ந் தேதி அன்று குடும்பத்தினர் முன்னிலை
- ·
- · sivam
ஆள விடுங்க... என்னால் முடியாது சாமி: வைரமுத்து பாடலை பார்த்து தெறித்து ஓடிய எஸ்.பி.பி!வைரமுத்து எழுதிய ஒரு பாடலை பார்த்த பாடகர் எஸ்.பி.பி இந்த பாடலை என்னால் பாட முடியாது ஆள விடுங்க என்று சொல்லி தெறித்து ஓடியுள்ளார்.வைரமுத்து எழுதிய ஒரு பாடலை பாட வந்த, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், இந்த பாடலை என்னால் பாட முடியாது என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம் என்று சொல்லி தெறித்து ஓட முயன்றுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.கடந்த 1999-ம் ஆண்டு அஜித் – ஷாலினி நடிப்பில் வெளியான படம் அமர்களம். சரண் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஒரு ரவுடிக்குள் உருவாகும் காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. நாசர், ரகுவரன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்க
Latest Cinema (Gallery View)