Cinema
Latest Cinema
நடிகை மனோரமாவின் மகன் காலமானார்
  •  · 
  •  ·  sivam
நடிகை மனோரமாவுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அவர் பெயர் பூபதி. அவரும் சினிமாவில் நடித்துள்ளார். நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி. அதையடுத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். மகன் மீது அதிக பாசம் கொண்டிருந்த மனோரமா, அவருக்காக ‘தூரத்து பச்சை’ என்கிற திரைப்படத்தையும் தயாரித்தார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது.சினிமா கைகொடுக்காததால், சின்னத்திரை சீரியல்கள் பக்கம் சென்ற பூபதி, சில ஆண்டுகள் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். அதிலும் அவரால் பெரியளவில் சோபிக்கவில்லை. பூபதிக்கு திருமணமாகி, ராஜராஜன் என்கிற மகன் மற்றும் மீனாட்சி, அபிராமி என இரு மகள்களும் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த பூபதி, மருத்துவமனைய
எழுத்தாளர்கள் மாநாட்டில் கலைவாணர்
  •  · 
  •  ·  sivam
ஒரு சமயம் எழுத்தாளர்கள் மாநாட்டில் பேசுவதற்காக கலைவாணர் அழைக்கப்பட்டிருந்தார். அப்பொழுது அவர் மேடையில் பேசும்போது ஒரு கேள்வியை எழுப்பினாராம்.எழுத்தாளர்கள் தங்கள் பேனாவை எப்படிப்பட்ட மையைத் தொட்டு எழுதுகிறார்கள் தெரியுமா? - என்று கலைவாணர் அவர்கள் கேட்டதும் மக்கள் அனைவரும். "பேனா மைதான். கருப்பு மை, நீல மை மற்றும் சிகப்பு மையாகத்தான் இருக்கும்" என்று சொன்னார்களாம்."அப்படி இல்லை" என்று கலைவாணர் அவர்கள் சொன்ன பதில்:"சிலர் பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். வேறு சிலர் பொறாமையிலும் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் தற்பெருமையில் தொட்டு எழுதுகிறார்கள். சிலர் பழமையிலும் தொட்டு எழுதுகிறார்கள்.ஆனால் தொடக்கூடாத மைகள், மடமை, கயமை, பொய்மை, வேற்றுமை.நன்மை தரக்கூடிய செம்மை, நேர்மை, புதுமை ஆகியவற்றைத் தொட்டு வாசக
கண்ணதாசன் பாடலுக்கும் சென்சார்
  •  · 
  •  ·  sivam
"அட … அபச்சாரம்… அபச்சாரம்..!என்ன இது... இப்படியெல்லாம் எழுதியிருக்கார்..!"கோபத்தில் கொந்தளித்தார்கள் சென்சார் அதிகாரிகள் !கண்ணதாசன் எழுதிய பாடல் வரிகளை கேட்டதால்தான்,அவர்களுக்கு அத்தனை ஆத்திரம்.'பாவ மன்னிப்பு' படம் தயாராகிக் கொண்டிருந்த நேரம் அது. அதற்கான பாடல்களை எழுதியவர் கண்ணதாசன்.படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்து சென்சாருக்கு போனது.படத்தில் ஆரம்பத்தில் சிவாஜி பாடுவதாக வரும்'வந்த நாள் முதல் இந்த நாள் வரை..'பாடல் காட்சியை பார்த்த சென்சார் அதிகாரிகள் பதறிப் போனார்கள்."இல்லை . இந்த பாடல் வரியை அனுமதிக்க முடியாது.""ஏன் ?""அந்தப் பாடலின் இடையில் கண்ணதாசன் எழுதிய வரியில் மாபெரும் தவறு இருக்கிறது.""தவறா ?""ஆமாம். அது என்ன'எதனைக் கண்டான்மதங்களை படைத்தான்'என்று எழுதி இருக்கிறார் ? அதை மாற்றி எழுதி
கண்ணதாசன், எம்.எஸ். விஸ்வநாதன் இடையே இருந்த நட்பு
  •  · 
  •  ·  sivam
ஒரு நாள் நள்ளிரவு எம்.எஸ்.விஸ்வநாதன் வீட்டு டெலிபோன் மணி அடிக்கிறது. எதிரே பேசிய குரல் "அண்ணா... கண்ணதாசன் நம்மளையெல்லாம் தவிக்க விட்டுட்டு போயிட்டாருண்ணா" என்கிறது. "அய்யோ என் தெய்வமே..." என்று கதறியபடி தலையிலும், முகத்திலும் அடித்தபடியே காரில் கண்ணதாசன் வீட்டுக்கு செல்கிறார் எம்.எஸ்.விஸ்வநாதன். அழுது வடிந்த கண்ணீருடன் அவிழ்ந்த வேட்டியை பிடித்துக் கொண்டு அவர் வந்த காட்சியை வீட்டு ஹாலின் ஷோபாவில் அமர்ந்தபடி ரசித்துக் கொண்டிருந்தார் கண்ணதாசன்.ஓடிப்போய் அவரை கட்டிப்பிடித்து அழுது மாறி மாறி முத்தமிட்டு "எவனோ ஒருத்தன் நீ..." என்றபடி மேற்கொண்டு பேச முடியாமல் தவித்தார். "விஸ்வநாதா பதறாத. நான் தான் அப்படி போன் பண்ணச் சொன்னேன். நான் செத்துப்போயிட்டா நீ எப்படி அழுவேன்னு பார்க்கணும்போல இருந்திச்சு. அத
பழைய கார்
  •  · 
  •  ·  sivam
எம்ஜிஆர்., ஒரு புது கார் வாங்க ஆசைப்பட்டார்.அதுபற்றி அவரே எழுதுகிறார்:பொங்கல் பரிசாக ஒரு புது கார் வாங்க வேண்டும் என்று, என்னிடம் என் மனைவி சில நாட்களாக சொல்லிக் கொண்டிருக்கிறாள். இப்போது, நான் வைத்துக் கொண்டிருக்கும் கார் பழையது; அதை வாங்கி, பத்து ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது என்பது, அவளது கண்டுபிடிப்பு!பொதுவாக சினிமா கலைஞர்கள் நினைத்தால், புதுக் கார் வாங்கி விடுகின்றனர். ஆனால், என்னைப் பொறுத்த வரையில், அது ஏனோ, இதுவரை கைகூடவில்லை.மனைவியின் முணுமுணுப்பிலும் நியாயம் இருக்கிறது. சென்ற ஆண்டு, பொங்கல் அன்று, புது கார் வாங்கி விட வேண்டும் என்ற அவளது கருத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தேன். அதற்கேற்ப, இருவரிடம் காரின் விலை விவரங்களை கேட்டு வந்தேன். அது கண்டு, என் மனைவியின், முகத்தில் மலர்ச்சி.ஆனால்
'டியூட்' படக்குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு
  •  · 
  •  ·  sivam
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசானது 'டியூட்'. அவர் ஹீரோவாக நடித்து மூன்றாவது படமாக வெளியாகி, ரசிகர்கள் இடையில் நல்ல வரவேற்பினை பெற்று கொண்டிருக்கிறது 'டியூட்'. ஒரு சில கலவையான விமர்சனங்களை குவித்தாலும், இன்றைய காலத்து இளைஞர்களை கவரும் இந்த படம் வெளியாகியுள்ளது. இந்நிலையில் 'டியூட்' படத்துடைய முதல் நாள் வசூல் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.தெலுங்கில் பிரபலமான தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தமிழில் அஜித்தின் 'குட் பேட் அக்லி' படத்தினை தயாரித்து இருந்தது. இந்த நிறுவனத்தின் தயாரிப்பில் இரண்டாவது படமாக 'டியூட்' வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படம் முதல் நாளில் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 22 கோடி வசூலை குவித்துள்ளத
 விசில் அடித்த ரசிகரை எச்சரித்த அஜித்
  •  · 
  •  ·  sivam
நடிகர் அஜித் குமார் இப்​போது சர்​வ​தேச கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறார். இதற்​காக ‘அஜித்​கு​மார் ரேஸிங்’ என்ற அணியை அவர் வைத்​துள்​ளார்​. இந்த அணி, உலகின் பல்​வேறு பகு​தி​களில் நடை​பெறும் கார் பந்​த​யங்​களில் பங்​கேற்று வரு​கிறது. துபாய், இத்​தாலி, ஸ்பெ​யின் நாடு​களில் நடை​பெற்ற ரேஸ்​களில் பங்கேற்ற அவர் அணி,​பார்​சிலோ​னா​வில் நடந்த கார் பந்​த​யத்​தில் கடந்த வாரம் பங்​கேற்​றது. அங்கு கடந்த ஞாயிற்​றுக்​கிழமை அஜித்​கு​மாரை பார்க்க ரசிகர்​கள் கூடினர். அதில் சிலர், அஜித்​கு​மாரை பார்த்​ததும் ஆரவாரம் செய்து விசிலடித்​தனர்.இதைக் கவனித்த அஜித் கோபமடைந்​தார். விரலை அசைத்​து, ‘அமை​தி​யாக இருங்​கள்’ என்ற சைகை செய்​தார். உடனே ரசிகர்​கள் ஆரவாரத்தை நிறுத்தி அமை​தி​யா​னார்​கள். இந்​தக் காட்சி இணை
இணையத்தில் வைரலாகி வரும் பூனம் பாஜ்வாயின் புகைப்படம்
  •  · 
  •  ·  sivam
ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் பூனம் பாஜ்வா. சமீபகாலமாக படவாய்ப்புகள் ஏதுமின்றி சிறு சிறு வேடங்களில் தலைகாட்டி வந்தவர் திடீரென உடல் எடை கூடி பருமனாக தோற்றமளித்ததால் அந்த வாய்ப்பும் கிடைக்காமல் போக பிறகு கவர்ச்சியில் தாராளம் காட்ட ஆரம்பித்தார்.பூனம் பாஜ்வாக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை, படவாய்ப்புகளும் உருப்படியாக ஏதும் அமையவில்லை.இருந்தாலும் அம்மணி தொடர்ந்து ஏதேதோ செய்து முயற்சித்து வருகிறார். அந்த முயற்சியின் ஒருபகுதியாக, சமீபகாலமாக இவர் எடுத்துள்ள ஆயுதம் தான் கவர்ச்சி. எந்தவித தடையுமின்றி கவர்ச்சிக்கு தாராளம் காட்டிவரும் அம்மணி தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.அவரின் புகைப்படங்களுக்காகவே ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்
‘கருப்பு’ படத்தின் வெளியீடு எப்போது?
  •  · 
  •  ·  sivam
சூர்யாவுடன் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி அப்டேட் கொடுத்துள்ளார்.கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘ரெட்ரோ’ திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து சூர்யா நடிக்கும் படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வருகிறார். இந்தப் படத்துக்கு ‘கருப்பு’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா, மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்து வருகின்றனர். ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். நா
சிவகார்த்திகேயன் - வெங்கட் பிரபு கூட்டணியில் உருவாகும் புதிய படம்
  •  · 
  •  ·  sivam
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த ‘மதராஸி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘பராசக்தி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகிறது. தொடர்ந்து அவர் டான் பட இயக்குநர் சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியானது.சிபி சக்கரவர்த்தி - சிவகார்த்திகேயன் இணையும் படம் கைகூடுமா என்பது குறித்து எந்த அப்டேடும் வெளியாகவில்லை. இந்நிலையில், சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். வெங்கட்பிரபு - சிவகார்த்திகேயன் இணையும் இந்த படத்தை சத்யஜோதி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இந்த படம் தொடர்பாக நண்பரின் வீடியோ பதிவொன்றில்
கல்கி 2-வில் இருந்து தூக்கியெறியப்பட்ட தீபிகா படுகோன்
  •  · 
  •  ·  sivam
கல்கி 2898 AD பாகம் 2 குறித்து ஒரு பெரிய அப்டேட் வெளியாகியுள்ளது. தீபிகா படுகோன் இந்த படத்திலிருந்து விலகியதிலிருந்து, அவருக்கு பதிலாக யார் நடிப்பார் என்ற கேள்வி அனைவர் மனதிலும் எழுந்துள்ளது. சமீபத்திய தகவல்களின்படி, தயாரிப்பாளர்கள் கதாநாயகியை கிட்டத்தட்ட இறுதி செய்துவிட்டனர். சில காலத்திற்கு முன்பு, கருத்து வேறுபாடு மற்றும் கமிட்மென்ட் பிரச்சனைகள் காரணமாக தீபிகா இந்த படத்திலிருந்து விலகினார். சில தகவல்கள், தயாரிப்பாளர்களே தீபிகாவை படத்திலிருந்து நீக்க முடிவு செய்ததாகக் கூறுகின்றன. இதனால் சுமதி கதாபாத்திரத்திற்காக ஒரு இளம் மற்றும் திறமையான கதாநாயகியை தேர்வு செய்ய அவர்கள் முடிவு செய்துள்ளனர்.இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்தில் தீபிகா படுகோன் கதாபாத்திரத
மீண்டும் ரிலீஸுக்கு தயாராகும் சூர்யா படம்
  •  · 
  •  ·  sivam
சூர்யா நடிப்பில் வெளியாகி ஓரளவு வரவேற்பை பெற்ற திரைப்படம் மீண்டும் ரிலீஸாகுவதற்கு தயாராகி வருகிறது. இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.ஏற்கனவே நன்றாக ஓடிய படங்களை மீண்டும் ரிலீஸ் செய்வது நடப்பு ஆண்டில் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு குஷி, கேப்டன் பிரபாகரன் உள்ளிட்ட படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்து வரவேற்பை பெற்றன.சூர்யா நடிப்பில் 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான அஞ்சான் திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்வதற்கு தயாராகி வருகிறது. இந்த படத்தில் சூர்யாவுடன் சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.சூர்யா - லிங்குசாமி - யுவன் ஷங்கர் ராஜா - சந்தோஷ் சிவன் போன்றோரின் பிரம்மாண்ட கூட்டணி காரணமாக, அஞ்சான் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏ
Latest Cinema (Gallery View)
157-168