Cinema
Latest Cinema
நடிகர் ராஜேஷ் பேட்டி ஒன்றில்......
  •  · 
  •  ·  sivam
🌹நான் எம்.ஜி.ஆருடன் இணைந்து பணியாற்றவில்லை என்றாலும் ஒரு நடிகன் என்ற முறையில் 80-களில் அவருடன் பழகி இருக்கிறேன். புரட்சித் தலைவரின் மிகப்பெரிய ரசிகன் என்ற முறையில் எம்.ஜி.ஆர் குறித்த தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்டார் ராஜேஷ்.“🌹நான் சொந்த வீடு கட்டி கிரஹப்பிரவேசம் செய்தபோது அந்த வீட்டுக்கு புரட்சித் தலைவர் வந்து எங்களை ஆசிர்வதிக்க வேண்டும் என்று விரும்பினேன். அவரை நேரில் சந்தித்து அழைப்பிதழ் தருவதற்காக ராமவரம் தோட்டத்துக்கு என் மனைவியுடன் சென்றிருந்தேன்.🌹அது ஒரு சனிக்கிழமை காலை. வரவேற்பறையில் காத்திருந்தோம். யார் யாரோ வருகிறார்கள், அவர்களெல்லாம் உள்ளே அழைக்கப்படுகிறார்கள். எனக்கு மட்டும் அழைப்பு வரவே இல்லை. கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரம் ஓடிவிட்டது.“🌹என்னங்க… இவ்வளவு நேரம் காக்க வைக்கிறாரு” என்ற
நடிகை காஞ்சனா
  •  · 
  •  ·  sivam
🌹என் குடும்பம் நல்ல வாழ்ந்த குடும்பம்தான். ஆனால், அப்பாவின் தொழில் நஷ்டத்தால் ஏற்பட்ட அதிகமான கடன் சுமைகளும் பாரங்களும் என்மேல் விழுந்தன. கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே, இண்டியன் ஏர்லைன்ஸில் ஏர்ஹோஸ்டஸ் பணியில் இருந்தேன். அப்போதுதான் சினிமா வாய்ப்புகளும் தேடிவர, புகழுடன் நிறைவான பணமும் சம்பாதித்தேன். எல்லாக் கடன்களையும் அடைத்தேன்.🌹பெரிய இடங்கள் பலவற்றிலிருந்தும் என்னைத் திருமணம் செய்துகொள்ள முன்வந்தார்கள். ஆனால், சொந்த உறவுகளுக்குள் இருந்த சிலரே அதையெல்லாம் தடுத்தார்கள். என் சினிமா வருமானம் மட்டுமே அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. என் பணத்தை எனக்கே தராமல், மீண்டும் கடன் சுமைகளைத்தான் கொடுத்தார்கள். என் பெற்றோர்கூட அந்தச் சூழ்ச்சிகளை உணரவில்லை. நிம்மதியில்லாமல் இருந்தேன்.'🌹மனசுக்குள்ள
டேட்டிங் ஆப் தொடங்கிய ராய் லட்சுமி
  •  · 
  •  ·  sivam
மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.மங்காத்தா, காஞ்சனா போன்ற திரைப்படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரபல நடிகை ராய் லட்சுமி, தற்போது தொழிலதிபராக புதிய அவதாரம் எடுத்துள்ளார். சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற விழாவில், 'La Ra' என்ற புதிய டேட்டிங் மற்றும் நெட்வொர்க்கிங் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளார்.தற்போது சோஷியல் மீடியா மற்றும் டேட்டிங் ஆப்-களில் போலி கணக்குகள் அதிகரித்துள்ள நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த 'La Ra'
கிரிக்கெட் வீரரை காதலிக்கும் மிருணாள் தாகூர்
  •  · 
  •  ·  sivam
சீதாராமம் படத்தில் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் மிருணாள் தாகூர். அவரது அழகும், திறமையும் அவருக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. அதனையடுத்து பாலிவுட்டில் முழு கவனத்தையும் செலுத்த ஆரம்பித்தார். அதற்கு பலனாக வாய்ப்புகள் கிடைத்துக்கொண்டே இருக்கின்றன. இது ஒருபக்கம் இருக்க அவரும், நடிகர் தனுஷும் காதலிப்பதாக ஒரு தகவல் தொடர்ந்து ஓடியது. அது வதந்தி என்று பின்னர் உறுதியானது. இந்நிலையில் அவர் கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாக கூறப்படுகிறது.மராத்தி மற்றும் ஹிந்தி மொழிகளில் நடிகையாக பயணத்தை ஆரம்பித்த மிருணாள் தாகூருக்கு தெலுங்கில் சீதாராமம் படம் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான அந்தப் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. தெலுங்கிலிருந்து மற்ற தென்னிந்திய மொழிகளு
‘ஓம்’ பட முதல் சிங்கிள் பாடல் வெளியீடு
  •  · 
  •  ·  sivam
தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஓம்: சாப்டர் 1’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது.தனுஷின் 55-வது படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருக்கிறார். ‘ஓம்: சாப்டர் 1’ என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை ஒண்​டர்​பார் பிலிம்ஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது.இந்நிலையில், இந்தப் படத்தின் ‘அலாக்கா லோவா பாடல்’ சிங்கிள் வீடியோ தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ளது. மின்விளக்காக சுடலைமாடன் ஜொலிக்க திருவிழா கொண்டாட்டத்துடன், துள்ளல் இசையுடன் தொடங்குகிறது.இசையின் வேகத்துக்கு ஓடும் வார்த்தைகளை புரிந்துகொள்ள சிரமம் இருந்தாலும், உற்சாகம் உடலோடு ஒட்டிக்கொள்கிறது. அரசல் புரசலாக அரசியல் ஆசையை வெளிப்படுத்தியிருக்கும் தனுஷ், இ
பாடகர் மனோ
  •  · 
  •  ·  sivam
இவரது இயற்பெயர் நாகூர் பாபு.இவரது தாய்மொழி தெலுங்கு.பிறப்பால் இஸ்லாமியர்.இவருக்கு மனோ என்ற பெயரைச் சூட்டியவர் இளையராசா.இவர் ஆந்திரப் பிரதேசத்திலுள்ள விஜயவாடாவில் பிறந்தவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பதினாறு மொழிகளில் 22000-க்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர். கர்நாடக இசை பயின்றவர்.இவரது படமொன்றிற்கு இசையமைக்க வந்த இசையமைப்பாளர் மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இவருடைய பின்னணியை அறிந்து தன்னுடைய இசைக் குழுவில் துணை புரிய சென்னைக்கு அழைத்துக்கொண்டார். அவரிடம் இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார். 1985-ஆம் ஆண்டு கற்பூர தீபம் என்ற படத்தில் கங்கை அமரன் இசையமைப்பில் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், பி.சுசீலாவுடன் இணைந்து பாடும் ஓர் வாய்ப்பு கிடைத்தது. அதனைத் தொடர்ந்து கன்னடத் திரை
கவிஞர் வாலியின் காதல்
  •  · 
  •  ·  sivam
🌹புகழேணியில் வேகமாக முன்னேறிக் கொண்டிருந்தபோது, வாலி திருமணம் செய்து கொண்டார். இது காதல் திருமணம்; ரகசியத் திருமணமும் கூடதிரைப்பட கவிஞராக உயர்ந்த பிறகும், வாலிக்கு நாடக ஆசை விடவில்லை. "லவ் லெட்டர்'' என்ற நாடகத்தை எழுதினார். ஏவி.எம்.ராஜன், ஜாவர் சீதாராமன், `காக்கா' ராதாகிருஷ்ணன் ஆகியோர் இதில் நடிக்க இருந்தனர்.🌹நாடக ஒத்திகை, அடிக்கடி வாலியின் வீட்டில் நடந்தது.இந்த நாடகத்தில் கதாநாயகியாக நடிக்க, திலகம் என்ற பெண்ணை வாலி ஒப்பந்தம் செய்திருந்தார். இவர், வழுவூர் ராமையா பிள்ளையிடம் பரதம் பயின்றவர். நடிகைகள் பத்மினி, ஈ.வி.சரோஜா ஆகியோருடன் சேர்ந்து நடனம் ஆடியவர். எஸ்.வி.சகஸ்ரநாமத்தின் "குயில்'' நாடகத்தில் கதாநாயகியாக நடித்தவர்.🌹திலகத்தை மணந்து கொள்ள வாலி விரும்பினார். ஆனால் காதல் ஏற்படவில்லை.இதுபற்றி
கங்கனா சர்மா கவர்ச்சியாக நடித்த பிராண்ட் புரோமோஷன்
  •  · 
  •  ·  sivam
கங்கனா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நான்கு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில், தனது முதுகுப் பகுதியில் மட்டும் ஒரு பர்ஃப்யூம் பாட்டிலை வைத்து போஸ் கொடுத்துள்ளார். அந்த பாட்டிலின் பெயரான "Crave Me" என்பதையே கேப்ஷனாகவும் பதிவு செய்திருக்கிறார். இதன் மூலம் இது முழுக்க முழுக்க ஒரு பிராண்ட் புரோமோஷன் என்பது தெளிவாகியுள்ளது.பொதுவாக பிராண்ட் புரோமோஷன் என்றாலே, தயாரிப்பை கையில் வைத்தோ அல்லது பயன்படுத்துவதுபோலவோ பிரபலங்கள் புகைப்படம் வெளியிடுவது வழக்கம். ஆனால், கங்கனா சர்மா தேர்வு செய்திருக்கும் இந்த கான்செப்ட் இதுவரை இந்திய அளவில் பெரிதாக யாரும் முயற்சிக்காத ஒன்றாகவே சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, சமீப காலமாக பிராண்ட் புரோமோஷன், கிளாமர் புகைப
மண்சோறு தின்றா படம் ஓடாது - சூரி
  •  · 
  •  ·  sivam
காமெடி நடிகராக தனது திரைப்பயணத்தை தொடங்கி, இன்று கதையின் நாயகனாக வெற்றிகரமாக வலம் வரும் சூரி, அடுத்ததாக 'மண்டாடி' படத்தில் நடித்து வருகிறார். கடலோர மக்களின் வாழ்க்கையையும், படகு பந்தயத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படம் செப்டம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ரசிகர்களின் செயல்பாடு குறித்து சூரி பேசியிருப்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அதாவது, தனது முந்தைய படமான மாமன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக சில ரசிகர்கள் மண்சோறு சாப்பிட்ட சம்பவத்தை குறிப்பிட்ட சூரி, "அது எனக்கு சந்தோஷம் கொடுக்கவில்லை. உண்மையை சொல்லணும்னா, வெட்கமாகத்தான் இருந்தது" என்று வெளிப்படையாக கூறினார்.மேலும், "சாப்பாடு கிடைக்காமல் கஷ்டப்பட்டு வளர்ந்தவன் நா
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறை தண்டனை
  •  · 
  •  ·  sivam
நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட ரூ.4.5 கோடி செக் மோசடி வழக்கில் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில், மேல்முறையீடு செய்ய சட்டப்படி அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், தண்டனையை நிறைவேற்றுவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அட்வான்ஸ் புக்கிங்கில் தெறிக்கவிடும் ஜனநாயகன்
  •  · 
  •  ·  sivam
கோலிவுட்டில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் கொண்ட நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவரின் கடைசி படம் ஜனநாயகன். இதனாலேயே, அறிவிப்பு வர்றதுக்கு முன்னாடியே படத்துக்கு பயங்கர ஹைப்ப்பு ஏறிடுச்சு. அப்போதிலிருந்து படம் ரிலீஸ் ஆகும் இந்த நாள் வரை, ஒரு பெரிய ஸ்டார் படத்துக்குரிய எல்லா பரபரப்பும் இந்த புராஜெக்ட்டை சுத்தி இருந்துட்டே இருந்துச்சு. தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகையான பொங்கலுக்கு ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம், சென்சார் பிரச்சினைகளால் ஆறு மாசத்துக்கும் மேல தள்ளிப்போச்சு. இப்போ எல்லா தடைகளையும் தாண்டி, படம் நாளைக்கு தியேட்டர்களுக்கு வருது. இவ்வளவு தாமதம் ரசிகர்களின் ஆர்வத்தை குறைச்சிருக்கா? இல்லவே இல்லைன்னு அட்வான்ஸ் புக்கிங் ரிப்போர்ட் சொல்லுது.சினிமா டிராக்கர்கள் சொல்ற கணக்குப்படி, தமிழ்நாட்டில் மட்
மணிரத்னம் – விஜய் சேதுபதி கூட்டணியில் சாய் பல்லவி
  •  · 
  •  ·  sivam
தமிழ் சினிமாவுல இப்போ வேற லெவல் கூட்டணி ஒன்னு செட் ஆகியிருக்கு! உலக நாயகன்கள்ல ஒருவரான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்துல, நம்ம மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் கியூட்டான நடிப்பால எல்லாரையும் கவர்ந்த சாய் பல்லவி இணையப் போறாங்க.இந்த தரமான சம்பவத்துக்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் முதல் வாரத்துல படுஜோரா தொடங்க இருக்கு. அதுமட்டுமில்லாம, மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா நிறுவனங்கள் சேர்ந்து தயாரிக்குற இந்த படத்துக்கு நம்ம இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் மியூசிக்.ஏற்கனவே ‘செக்கச்சிவந்த வானம்’ படத்துல மணிரத்னம், விஜய் சேதுபதி காம்போ எப்படி பட்ட ஹிட்னு நமக்கு தெரியும், இப்போ அது கூட சாய் பல்லவி வேற சேர்ந்துருக்கதால எதிர்பார்ப்பு இப்போவே ஹைய் ஆப்ல இருக்கு.அதுவும் மணிரத்னம் மேஜிக், ரஹ்மானோட மியூசிக்னு வந்தா தி
Latest Cinema (Gallery View)
145-156