Latest Cinema
- ·
- · sivam
அபுதாபி சுற்றுலாத் துறை விளம்பரத்தில் ஹிஜாப் அணிந்து நடித்ததற்காக தீபிகா படுகோன் மீது சமூக ஊடகங்களில் சைபர் தாக்குதல் வலுத்து வருகிறது. கணவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து தீபிகா இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். இருப்பினும், பல ரசிகர்கள் அவருக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்துள்ளனர். நீங்கள் விளம்பரத்தில் நடித்து காசு சம்பாதிக்க வேறு உடையே கிடைக்கவில்லை. முஸ்லிம்கள் புனிதமான உடையாக கருதும் ஹிஜாப் தான் கிடைத்ததா என கமெண்ட் செய்து வந்தனர்.அதற்கு தீபிகா படுகோன் ரசிகர்களும் பதிலடி கொடுத்துள்ளனர். மற்றொரு நாட்டின் கலாச்சாரத்தை மரியாதையுடன் பார்க்கும் தீபிகாவுக்கு வாழ்த்துகள் என்று ரசிகர்கள் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். மசூதிக்குள் சென்றதால், அதற்கேற்ற பொருத்தமான ஆடைகளை அணிந்துள்ளார் என்று ர

- ·
- · sivam
கோலிவுட்டில் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத் (Anirudh). தற்போது விஜய், ரஜினி, கமல் என முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வரும் அனிருத், அடிக்கடி காதல் சர்ச்சைகளிலும் சிக்குவது உண்டு. அந்த வகையில் லேட்டஸ்டாக அவரும், தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனும் காதலித்து வருவதாக சோசியல் மீடியாவில் தகவல் பரவி வருகிறது. காவ்யா மாறன் (Kavya Maran) தற்போது ஐபிஎல்-லில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் உரிமையாளராக இருந்து வருகிறார்.இருவரும் ஜோடியாக டின்னர் சாப்பிட சென்றதாகவும், ஒன்றாக வெளிநாடுகளில் உலா வருவதாகவும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். ஆனால் இது எந்த அளவு உண்மை என்பது தெரியவில்லை. இருவருமே இதுகுறித்து எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.இதற்கு முன்ன

- ·
- · sivam
வெள்ளாவி வெச்சு வெளுத்தது போல, பல பலனு இருக்கும் ராய் லட்சுமிக்கு சொந்த ஊர் பெங்களூர். இவருக்கு சிறுவயதில் இருந்தே, சினிமா மீது ஆர்வம் இருந்ததால், பள்ளியில் படிக்கும் போதே பல படங்களை விரும்பி பார்த்துள்ளார். கல்லூரிக்கு சென்ற பின் அந்த ஆசை அதிகமாக, தனது ஆசையை பூர்த்திக் செய்து கொள்ள படித்துக்கொண்டு இருந்த போதே, மாடலிங்கில் நுழைந்தார். ஆரம்பத்தில் சிறிய சிறிய கம்பேனிகளின் விளம்பரத்தில் நடித்து வந்த ராய் லட்சுமிக்கு புரூ காஃபி விளம்பரத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த விளம்பரத்தின் மூலம் பிரபலமான இவர், சரவணா ஸ்டோர்ஸ், ஃபேர்அண்ட் லவ்லி விளம்பரம் என அடுத்தடுத்த விளம்பரத்தில் நடித்தார்.விளம்பரங்களில் கிடைத்த வரவேற்பால், கற்க கசடற படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில்

- ·
- · sivam
நடிகர் ரஜினிகாந்த் தனது 1 வார கால ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியுள்ளார். மிகவும் எளிய தோற்றத்துடன் தேக்குமர இலை தட்டில் அவர் சிற்றுண்டி அருந்தும் ஃபோட்டோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.கூலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அவர் ஒரு வார காலத்திற்கு ஆன்மிக சுற்றுப் பயணத்தை தொடங்கியிருக்கிறார்.தற்போது ரஜினிகாந்த் சம்பந்தப்படாத காட்சிகளை இயக்குநர் நெல்சன் திலீப் குமார் படமாக்கி வருகிறார். இந்நிலையில் ஆன்மிக சுற்று பயணத்தை தொடங்கிய ரஜினிகாந்த் நேற்று சென்னையில் இருந்து புறப்பட்டு உத்ரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷிற்கு சென்றடைந்தார்.

- ·
- · sivam
விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவின் காதல் பயணம் ரீல் வாழ்க்கையில் தொடங்கி ரியல் வாழ்க்கையை எட்டியுள்ளது. இருவரும் முதன்முறையாக கீதா கோவிந்தம் படத்தில் ஜோடியாக நடித்தனர். இப்படத்தில் இருவரின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. பரசுராம் இயக்கிய இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் போது தான் இருவர் இடையே காதல் துளிர்விட ஆரம்பித்தது. இதையடுத்து 2019ல் வெளியான 'டியர் காம்ரேட்' படத்தில் ராஷ்மிகா-விஜய் தேவரகொண்டா இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்தனர். அப்படத்திற்கு பின்னர் இருவரும் அடிக்கடி சந்தித்து கொண்டதால், இருவரும் காதலிப்பதாக வதந்திகள் பரவின.விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா இருவரும் தங்கள் காதலை அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றுள்ளனர். அக்டோபர் 3ந் தேதி அன்று குடும்பத்தினர் முன்னிலை

- ·
- · sivam
ஆள விடுங்க... என்னால் முடியாது சாமி: வைரமுத்து பாடலை பார்த்து தெறித்து ஓடிய எஸ்.பி.பி!வைரமுத்து எழுதிய ஒரு பாடலை பார்த்த பாடகர் எஸ்.பி.பி இந்த பாடலை என்னால் பாட முடியாது ஆள விடுங்க என்று சொல்லி தெறித்து ஓடியுள்ளார்.வைரமுத்து எழுதிய ஒரு பாடலை பாட வந்த, எஸ்.பி.பாலசுப்பிரமணியன், இந்த பாடலை என்னால் பாட முடியாது என்னை வம்பில் மாட்டிவிட வேண்டாம் என்று சொல்லி தெறித்து ஓட முயன்றுள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.கடந்த 1999-ம் ஆண்டு அஜித் – ஷாலினி நடிப்பில் வெளியான படம் அமர்களம். சரண் இயக்கத்தில் வெளியான இந்த படம் ஒரு ரவுடிக்குள் உருவாகும் காதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. நாசர், ரகுவரன் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்திருந்தனர். படத்திற்கு பரத்வாஜ் இசையமைக்க

- ·
- · sivam
1940 காலகட்டங்களில் திரைப்படத்தின் ஹீரோ என்றால், நல்ல பலசாலியாக, வாளெடுத்து சண்டைபோட தெரிந்திருக்க வேண்டும் என்கிற கோட்பாடுக¬ள் இருந்தது. இதை எல்லாம் தகர்த்தவர் டி.ஆர்.ராமச்சந்திரன். உருண்டையான கண்களையும் வித்தியாசமான உடல் மொழியையும் கொண்ட இவர் நகைச்சுவை கதாபாத்திரங்களில் வெளுத்துக் கட்டியவர். முட்டாள்தனம், புத்திசாலித்தனம், குறும்புத்தனம், அப்பாவித்தனம், வெட்கம் கலந்த காதல் உணர்ச்சி என கலவையான உடல் மொழிக்குச் சொந்தக்காரர்.காமெடி நடிகர்களுக்குத் தனியாகக் கதை எழுதி நாயகனாக்குவது என்பதை அப்போதே தொடங்கிவைத்தவர் டி.ஆர். இவர் ஹீரோவாக நடித்த, 'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்தில் சிவாஜி செகண்ட் ஹீரோ. சிறுவயதிலேயே எனக்கு படிப்பு வேண்டாம். நாடகத்தில் நடிக்க வேண்டும்' என்றவர். வாய்பாட்டும் ஆர்மோ

- ·
- · sivam
முதல்வன் இன்டர்வியூ ஷுட்டிங் முடிந்து அர்ஜுனுக்கு போன் செய்த ரகுவரன்.. என்ன சொன்னார் தெரியுமா?தமிழ் சினிமாவின் பிரம்மாண்டம் இயக்குநர் ஷங்கர் என்றால் அவர் இயக்கிய படங்களில் ஐகானிக் படமாக அமைந்தது முதல்வன் திரைப்படம். 1999-ல் வெளியாகி மாபெரும் வெற்றி படமாக முதல்வன் படம் விளங்குகிறது. இன்றும் இந்த படத்தை டிவியில் பார்க்கும் போது உட்கார்ந்த இடத்தை விட்டு எழ மனமே வராது. அந்த அளவிற்கு ரசிகர்களைக் கட்டிப்போட்ட திரைப்படம் முதல்வன்.முதல்வன் படத்தில் இன்றும் மீம்ஸ்களிலும், பஞ்ச் டயாக்குகளிலும் சுழன்று வரும் ஒரு காட்சி என்றால் அது அர்ஜுன், ரகுவரன் நேர்காணல் காட்சி தான். தமிழ் சினிமாவின் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படக் காட்சிகளில் இந்தக் காட்சி டாப் 10-ல் இருக்கும் என்பதில் சந்தேகேமேயில்லை. இந்தக் க

- ·
- · sivam
ஒரு பொதுக் கூட்டத்தில், எம்.ஜி.ஆர் பேசிக் கொண்டிருந்தார். கூட்டம் முடியும் தருவாயில், அவர் கூறினார்:“பெண்களும் குழந்தைகளும் இப்போது வெளியேறலாம்... ஆண்கள் மட்டுமே இருக்க வேண்டும், அவர்களிடம் நான் சில விஷயங்களைச் சொல்ல வேண்டும்.”இதைக் கேட்டு, பெண்களும் குழந்தைகளும் வெளியேறினர்.சிறிது நேரத்திற்குப் பிறகு, அவர் ஆண்களிடமும் கூறினார்:“நீங்களும் வெளியேறலாம், உண்மையில் எனக்கு எதுவும் சொல்லத் தெரியவில்லை. பெண்களும் குழந்தைகளும் கூட்டத்தில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் நான் அப்படிச் சொன்னேன்.” அவர் புன்னகையுடன் இதைச் சொன்னார்.அந்த மாதிரியான தொலைநோக்குப் பார்வையைத்தான் இன்று நாம் துரதிர்ஷ்டவசமாக இழக்கிறோம்

- ·
- · sivam
அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர்.அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆரிடம் ... விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி க

- ·
- · sivam
தீபாவளியை முன்னிட்டு நடிகர் துருவ் விக்ரம் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கித்தில் அக்டோபர் -17 அன்று பைசன் திரைப்படம் வெளியாகிறது.இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள் படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றார். அதனைத்தொடர்ந்து அவர் கர்ணன், மாமன்னன், வாழை போன்ற படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநராக கால் பதித்தார். இவர் தற்போது நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமை வைத்து பைசன் என்ற திரைப்படத்தை உருவாக்கியுள்ளார்.இந்த நிலையில், இப்படம் உருவாக்கம் குறித்து இயக்குநர் மாரி செல்வராஜ் கூறியது,"பைசன்" என் கரியரில் முக்கியமான படம். மிகவும் கனமான, சிக்கலான ஒரு கதையை சொல்லியிருக்கிறேன். இந்த கதையை சொல்ல முயற்சிக்கும் பொ

- ·
- · sivam
பாலிவுட் நட்சத்திரமான தீபிகா படுகோன் பெயர் சமீபகாலமாகச் செய்திகளில் அதிகம் இடம்பிடித்து வருகிறார். நாக அஷ்வின் இயக்கும் பிரபாஸ் நடிக்கும் 'கல்கி 2898 AD' படத்தின் இரண்டாம் பாகத்திலிருந்தும், சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'ஸ்பிரிட்' படத்திலிருந்தும் அவர் விலகியுள்ளார். இந்த விலகல்கள் பெரும் விவாதங்களை கிளப்பின. குறிப்பாக பாலிவுட் நடிகர்கள் மற்றும் பாலிவுட் இயக்குநர்கள் படங்களில் நடிப்பதைத்தான் அவர் விரும்புகிறார். தென்னிந்திய சினிமாக்களில் நடிப்பதை அவர் விரும்பவில்லை என்று எல்லாம் சிலர் கருத்து தெரிவித்து விமர்சித்தார்கள்.அதே நேரத்தில், ஐஎம்டிபி (IMDb) வெளியிட்ட 25 ஆண்டுகால இந்திய சினிமா குறித்த சிறப்பு அறிக்கையில் அவர் முன்னிலை வகித்தது குறித்துத் தனது கருத்துக்களைப் பகிர
Latest Cinema (Gallery View)