-
R
- 4 friends
இலங்கையில் வறுமை நிலையில் முதலிடத்தில் உள்ள மாவட்டமாகவும் இதுவரை அடிப்படைத் தேவைகள் கூட நிறைவு செய்யப்படாத ஒரு மாவட்டமாகவும் காணப்படுகின்ற முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் சாதாரணமாக ஒரு சேவையை பெற்றுக் கொள்ளவோ அல்லது ஒரு தேவையை நிறைவு செய்யவும் நாள்கணக்
வடக்கு மாகாணத்தின் வவுனியா மன்னார் யாழ்ப்பாணம் கிளிநொச்சி திருகோணமலை ஆகிய மாவட்டங்களை எல்லைப் பிரதேசங்களாக கொண்டு 1978 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த முல்லைத்தீவு மாவட்டமானது வடக்கு மாகாணத்தில் அதிகூடிய நிலப்பரப்பு கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது.
குறிப்பாக 2,415 km2 (932 sq mi) நிலப்பரப்பினைக் கொண்ட இப்பிரதேசத்தின் பெரும்பாலான பகுதி வன்னி இராட்சியமாகும்.
ஏ-09 வீதியின் கிழக்கு மேற்குப் பகுதிகளாக அமைந்துள்ள இந்த மாவட்டத்தில் மேற்கு புறத்தில் அமைந்துள்ள மிகவும் பின்தங்கிய அடிப்படை வசதிகளே இல்லாத 35க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய வகையில் 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் பன்னிரெண்டாயிரத்து 465 இற்கும் மேற்பட்ட மக்களும் அதேபோல மிகவும் பின்தங்கிய போக்குவரத்து வசதிகள் இல்லாத 68 க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 15 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் ஒன்பதாயிரத்து 641 க்கும் மேற்பட்ட மக்களுமாக சுமார் இருபத்தி இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்ற இந்த பிரதேசங்களில் அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாத நிலையிலும் ஒரு சாதாரணமாக போக்குவரத்துகளை மேற்கொள்ள முடியாத நிலையிலும் காணப்படுகின்றது.
இந்த மக்களுக்கு சேவைகளை வழங்க கூடிய வகையில் அமைந்துள்ள மாங்குளம் ஆதார வைத்தியசாலை மல்லாவி ஆதார வைத்தியசாலை என்பன இன்றுவரை அடிப்படைத் தேவைகள் நிறைவு செய்யப்படாத வைத்தியசாலைகளாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றன.
சாதாரணமாக ஒரு பிரதேச வைத்தியசாலை கொண்டிருக்க வேண்டிய ஒரு அடிப்படை வசதிகள் கூட இல்லாத நிலை காணப்படுகின்றது.
வைத்திய நிபுணர்கள் வைத்தியர்கள் தாதியர்கள் பற்றாக்குறை ஏனைய உத்தியோகத்தர்களுக்கான பற்றாக்குறை வாகன வசதிகள் என தேவைப்பாடுகளின் பட்டியல் நீண்டு செல்கின்றதுஇவ்வாறான நிலையில் இந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் தமத தேவைகளை நிறைவு செய்வதற்கு பல்வேறு சிரமங்களை எதிர் நோக்கி வருகின்றனர்.
இறந்தவர்களின் உடலங்களை உறவினர்களிடம் கையளிக்க குறித்த பிரதேச வைத்தியசாலைகளில் சட்ட வைத்திய அதிகாரிகளின் இன்மை குறித்த பிரதேசங்களில் திடீர் மரண விசாரணை அதிகாரிகள் இன்மை என்பன மிக பெரும் சிரமங்களை ஏற்படுத்துகின்றன.
அதாவது இந்த பிரதேசத்தில் விபத்து அல்லது சந்தேகத்திற்கிடமமாக உயிரிழந்த ஒருவரின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக 78முதல் 97 கிலோ மீட்டர் தூத்திலுள்ள முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனை மேற்கொள்ளளும் நிலை கானப்படுகின்றது.
அதன் பின்னர் உறவினர்கள் சடலத்தைப் பெற்று இறுதிக் கிரியை செய்யும் வரை பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய நிலையில் அதனை சரியான முறையில் செய்யக்கூடிய மலர்ச்சாலை வசதிகளில்லை அதற்காக வைத்திய சாலையில் இருந்து பொறுப்பேற்ற சடலத்தை சுமார் 110கிலோமீற்றர் துரத்திற்கு அப்பாலுள்ள கிளிநொச்சி அல்லது வவுனியாவிற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.
இதனால் உயிரிழந்தவரின் உறவினர்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதுடன் பெருந்தொகைப் பணத்தையும் செலவு செய்ய வேண்டிய ஒரு நிலை காணப்படுகின்றதுசெலவு செய்யப்பட்டாலும் அதை உரிய காலத்திற்குள் பெற்றுக் கொள்வது என்பது மிகப் பெரும் சவாலாகவே இருக்கின்றது.
நட்டாங்கண்டல் பகுதியில் உயிரிழந்த ஒருவரின் சடலத்தை மல்லாவி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அங்கிருந்து நீதிமன்றக் கட்டளைக்கு அமைவாக உடற்கூற்றுப் பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அதன் பின்னர் சடலத்தை உறவினர்கள் பெற்று அதனை தூய்மைப்படுத்தி பாதுகாத்து கிரிகைகளுக்காக எடுத்துச் செல்லக்கூடிய வகையில் மலர் சாலைகள் இல்லாத நிலையில் மீண்டும் சடலத்தை கிளிநொச்சிக்கு எடுத்து சென்று அங்கு அதனை சீர் செய்து வீட்டுக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலைமை காணப்பட்டது.இவ்வாறு இத்தனை கிலோமீட்டர்கள் தூரம் அலைந்து இவற்றைச் செய்ய வேண்டிய நிலை காணப்படுகின்றது குறிப்பாக குறித்த பிரதேசத்தில் ஒரு உயிரிழந்தவரின் இறுதிக் கிரியைகளை கூட சரியாக செய்ய முடியாத ஒரு அவல நிலை காணப்படுகின்றது.
அதாவது மாங்குளம் ஆதார வைத்தியசாலை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றுக்கான சட்ட வைத்திய அதிகாரி களை நியமிப்பதற்கு இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை அதே போல மரணவிசாரணை அதிகாரிகளும் இல்லாத நிலை கானப்படுகின்றது.
இந்தப் பிரதேச மக்களுடைய இது போன்ற தேவைகளை நிறைவு செய்யக்கூடிய வகையில் சட்ட வைத்திய அதிகாரிகளையும் திடீர் மரண விசாரணை அதிகாரிகளையும் நியமிக்க வேண்டிய பொறுப்பை உரியவர்கள் செயற்படுத்தி சேவைகளை பெற்றுக் பெற்றுக்கொள்வதற்கான வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என்பது அவசியமாகும்.
(சு. பாஸ்கரன்)
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·