·   ·  11 posts
  • 2 members
  • 1 friends

மேஷம், முதல் மீனம் வரை 12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன்

மேஷம், முதல் மீனம் வரை 12 ராசிக்கான ராகு கேது பெயர்ச்சி பலன் பார்ப்போம்.

ரிஷப ராசியில் உள்ள ராகு மேஷ ராசிக்கும், விருச்சிக ராசியில் உள்ள கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சியாகின்றனர். பிலவ வருடம் பங்குனி 7ம் தேதி 21/03/2022 மதியம் 3.02 மணிக்கு திங்கட்கிழமை வாக்கியப்பஞ்சாங்கப்படி ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது திருக்கணித பஞ்சாங்கத்தின்படி பிலவ வருடம், பங்குனி மாத 29ம் தேதி 12.04.2022 மதியம் 1.38 மணியளவில் ராகு கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் அமரும் போது நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விஷேசமானது.

பிறந்த ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்பது ஜோதிட விதி. நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்கள் கோடீஸ்வர யோகம் பெறப்போகிறார்கள். அதே நேரத்தில் ரிஷபம், கடகம், துலாம், மகரம், ராசிக்காரர்கள் பரிகாரம் செய்தால் பாதிப்புகள் குறைய வாய்ப்பு உள்ளது.

ராகு கேது பெயர்ச்சி

ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். ராகு இப்போது மேஷ ராசியில் செவ்வாய் வீட்டில் அமர்ந்து செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். கேது இனி துலாம் ராசியில் அமர்ந்து சுக்கிரனைப் போல செயல்படப்போகிறார்.

மேஷம்:

ராகு ஜென்ம ராசியில் அமர்ந்து 7ம் இடத்தை பார்ப்பதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும். திருமண யோகம் வரும். உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு வரும். கேது 7ஆம் வீட்டில் இருப்பதால் வீண் விரைய செலவு அதிகரிக்கும் சுப செலவுகளாக மாற்றுங்கள். காரியங்களில் கவனமும் விழிப்புணர்வும் அவசியம்.

ரிஷபம்:

ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்க இருக்கிறது. மன உளைச்சலில் இருந்து விடுபட இருக்கிறீர்கள். கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒருவரையொருவர் புரிந்து கொள்ள முயற்சி செய்வீர்கள், இருப்பினும் ராகு அமர்ந்து இருக்கும் இடம் உங்கள் ராசிக்கு சரியாக இல்லாமல் இருப்பதால் உங்களிடம் உண்மை தன்மை இல்லை எனில் அதுவே பிரிவை நோக்கி பயணிக்க செய்யும், எனவே கவனமுடன் இருப்பது நல்லது. எதையும் ஒளிவு மறைவில்லாமல் நேர்மையாக நடந்து கொண்டால் குடும்ப வாழ்வில் சிக்கல் இல்லாமல் செல்லும்.

மிதுனம்:

ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்து வெற்றியை தருவார். தொழில் வியாபாரத்தில் இரட்டிப்பு லாபத்தை தருவார் ராகு பகவான்.

மறைமுக வழியில் பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் தருவார் ராகு பகவான். எதிர்பார்ப்பு எண்ணங்கள் ஈடேறும். கோடீஸ்வர யோகத்தை தரப்போகிறார் ராகுபகவான்.

கடகம்:

கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி காரிய வெற்றியை கொடுக்கும் அற்புதமான பலன்களைக் கொடுக்க இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு மனதில் நிம்மதி அதிகரிக்கும். தொழில் ஸ்தானத்தில் ராகு அமர்ந்திருப்பதால் நீங்கள் எதிர்பார்ப்பதை விட உயர்ந்த இடத்திற்கு செல்லலாம். வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் நல்ல வேலை அமைந்து செட்டில் ஆகிவிடுவார்கள். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். கணவன் மனைவிக்கு இடையில் இருக்கும் பரஸ்பர அன்பு அதிகரிக்கும், இதனால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

சிம்மம்:

ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் ராகு பயணம் செய்யப்போகிறார். நல்லது நிறைய நடக்கும் ராகு அள்ளித்தரப்போகிறார். புது வீடு கட்டலாம். புது தொழில் தொடங்கலாம்.

உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படப்போகிறது. யோகங்கள் நிறைந்த ராகு கேது பெயர்ச்சியாக உள்ளது.

திடீர் அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. எதிர்பாராத பண மழையில் நனையத் தயாராகுங்கள்.

கன்னி:

கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல மாற்றங்களை கொடுக்க இருக்கிறது. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம் போன்ற மாற்றங்கள் சிலருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஒரு சிலருக்கு குடும்பத்தை விட்டு பிரிந்து இருக்கும் சூழ்நிலை ஏற்படலாம். பொருளாதார ரீதியான ஏற்றம் இருப்பதால் வரவுக்கு உரிய செலவு சரியாக இருக்கும், சேமிப்பும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தேவையற்ற நபர்களின் அறிமுகத்தை கூடுமானவரை தவிர்த்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாதவர்கள் மூலம் குடும்பத்தில் தேவையில்லாத சிக்கல்கள், கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் தேவை

தூலம்:

துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி பல எதிர்பார்ப்புகளை அதிகரிக்க செய்யும். தேவையற்ற ஆசைகளை மனதில் வளர்த்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. களத்திர ஸ்தானத்தில் ராகு பயணிக்க இருப்பதால் கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு புதிய மாற்றங்கள் ஏற்படலாம். கணவன்-மனைவிக்குள் இருக்கும் கருத்து வேறுபாடுகளை மனம் விட்டு பேசி தீர்த்துக் கொள்வது நல்லது. தேவையற்ற சிந்தனைகள் உங்களை பல உறவுகளிடம் இருந்து விலகி செல்ல செய்யும் என்பதால் எண்ணும் எண்ணத்தில் கவனம் தேவை.

விருச்சிகம்:

விருச்சிக ராசிக்காரர்களுக்கு ராகு ராசி நாதன் செவ்வாயைப் போல செயல்படப்போகிறார். ஜென்ம கேது மன ரீதியாக நிறைய வலிகளை கொடுத்து வந்தார்.

சில மாதங்களில் முடிவுக்கு வரப்போகிறது. புதிய தெம்பும் தைரியமும் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.

திடீர் பண வரவு வந்து திக்கு முக்காட வைக்கப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய வெற்றியை தரப்போகிறது.

தனுசு:

ஐந்தாம் வீடான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் அமரப்போகும் ராகு பகவானால் முன்னோர்கள் சேர்த்து வைத்த சொத்துக்கள் கிடைக்கும். அந்த பணத்தை தக்க வைத்துக்கொள்ள வேண்டும்.

ஏதாவது ஒரு வழியில் பணம் தேடி வரும். பிள்ளைகள் வழியில் யோகம் தேடி வரும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஒன்றரை வருடத்தில் கோடீஸ்வர யோகத்தை தேடித்தருவார்.

பணப்பிரச்சினை நீங்கும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். பொருளாதாரத்தில் இருந்த மந்தத்தன்மை நீங்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட மன உளைச்சல் முடிவுக்கு வரும். போட்டி பொறாமைகள் விலகும் காலம் வரப்போகிறது.

மகரம்:

மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு இருந்து வந்த தடைகளை தகர்த்து எறிய செய்து தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்யும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தாய்வழி உறவினர்கள் மூலம் வீண் விரயங்கள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் விழிப்புணர்வு தேவை. தேவையற்ற இடங்களுக்கு பயணம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் காணலாம். வெளியூர் மற்றும் வெளி நாட்டுடன் தொடர்புடைய தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். குடும்பத்தை விட்டு பிரியும் சூழ்நிலை ஏற்படலாம். இட மாற்றம் குறித்த விஷயங்களில் எச்சரிக்கை தேவை. கடன் தொல்லையிலிருந்து விடுபட இருக்கிறீர்கள். உங்களை சுற்றி இருந்த எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி காணலாம்.

கும்பம்:

கும்ப ராசிக்காரர்களுக்கு ராசிக்கு மூன்றாவது வீட்டிற்கு ராகு வருவதால் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய தொழில் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

இரட்டிப்பு லாபம் கிடைக்கும். பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகும் கேது அப்பா வழி சொத்துக்களை தேடித்தருவார்.

முன்னோர் வழி சொத்துக்கள் மூலம் பண வரவு அதிகரிக்கும். வீண் விரைய செலவுகளைத் தவிர்த்தால் இந்த ராகு கேது பெயர்ச்சி காலத்தில் கோடீஸ்வரர் ஆகும் யோகம் தேடி வரும்.

மீனம்:

ராகு அள்ளிக்கொடுப்பார். திடீரென கோடீஸ்வர யோகத்தையும் தருவார். கேது மோட்ச காரகன் தடை செய்வார். மீன ராசி மீன லக்னகாரர்களுக்கு கோடீஸ்வர யோகத்தை தருவார்.

ஏதாவது ஒரு விதத்தில் பணம் வரும். பேசியே காரியம் சாதிப்பார்கள். ராகு 2ஆம் வீட்டில் குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் அமர்ந்து பயணம் செய்வதால் பணத்தை அள்ளிக்கொடுப்பார்.

  • 458
  • More
Info
Category:
Created:
Updated:
Ads
Featured Posts
S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?
குறிப்பிட்ட சில ஆங்கில எழுத்துகளை வைத்து ஒருவரது வாழ்க்கையையே தீர்மானித்து விடலாம். அதிலும், A, S, J போன்ற எழுத்துகள் மிகவும் சக்தி வாய்ந்த எழுத்துகளா
கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.கேள்வி : ஒரு பெண் தன் ஆ
உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)
சிவன்: நக்கீரரே! எமது பாட்டில் எங்கு குற்றம் கண்டீர்? சொற்சுவையிலா? அல்லது பொருட்சுவையிலா?.நக்கீரர்: சொல்லில் குற்றமில்லை. இருந்தாலும் அது மன்னிக்கப்ப
சுவையான சம்பவம்...
கம்பன் ஒரு சமயம் கையில் காசில்லாமல் காய்ந்து போய் கிடந்தான்.அப்போது ஒரு தாசி வீட்டு வேலைக்காரன் அவள் கம்பனை சந்திக்க விரும்புவதாக கூறினான்.அவள் பெயர்
வைத்தியரின் தேடுதல்   (குட்டிக்கதை)
ஒரு வைத்தியரும் அவருடைய மனைவியும் காட்டில் நீண்ட நாட்களாக எதையோ தேடிக்கொண்டிருந்தனர்.கணவர் என்ன தேடுகிறார் என்று மனைவிக்கு தெரியாது!  வைத்தியரும் சொன்
சின்னப் பையன்     (குட்டிக்கதை)
இங்கிலாந்தின் பிரபல கம்பெனி ஒன்றிற்கு, பெரியதோர் இயந்திரம் ஜப்பானில் இருந்து வரவழைக்கப் பட்டது. கோடிக்கணக்கில் விலை. அந்த இயந்திரத்தை இன்ஸ்டால் செய்ய
வெற்றிக்கான சூத்திரம்
தன்னம்பிக்கை பயிற்சி வகுப்பில்வெற்றியாளர் ஒருவரை முறைத்து முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார் ஒருவர். முறைத்தவர் முகத்தில் எப்போதும் இறுக்கம். சிரிப்
பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்
பொன்னாங்கண்ணி கீரையில் சாப்பிட்டால் ஆண்களுக்கு தேவையான சக்தி கிடைக்கும். குறிப்பாக, பாலுணர்வை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன. அதேபோல
தூக்கமின்மைக்கான காரணங்கள்
நாம் தூங்கும் பொழுது என்ன நடக்கின்றது என்பதனை நாம் அறிவதில்லை. தூக்கத்தில் நாம் என்னவெல்லாம் செய்கின்றோம் என்பதும் நமக்குத் தெரியாது. யாராவது நம்மைப்
வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்
வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றல் இழப்பு அறிகுறிகளைக் குறைக்க உதவும் 6 சூப்பர்ஃபுட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கலாம். முதுமையை நம்மால் தடுக்க மு
ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது
பல மென்பொருள் நிறுவனங்கள் தங்களது ஊழியர்களின் புத்துணர்ச்சி சூழலுக்கும், அவர்களின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் கணினியின் பயன்பாட்டிற்கும் நாளொன்றுக்க
நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி
ஒருவரை என்ன சொன்னாலும் பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் முட்டாள் என்று சொன்னால் மட்டும் பயங்கரமாக கோபப்பட்டு விடுவார்கள். அப்படி யாரும் சொல்லிவிடாமல் புத
முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா
விசேஷத்திற்கு செல்ல வேண்டும் என்றால், ஐந்து நிமிடத்தில் முகம் பொலிவு பெற வேண்டும் என்றால், சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்து ஐந்தே நிமிடத்தில் உங
அன்பை விதைப்போம்  (குட்டிக்கதை)
ஒரு இளைஞர் தினமும் ஒரு பாட்டியிடம் ஆரஞ்சு பழங்களை வாங்குவார்.பழங்களை எடை போட்டு வாங்கி பணம் கொடுத்த பின்..... அந்த பழங்களில் இருந்து ஒன்றை எடுத்து பிய
இளநரையை போக்கும் செம்பருத்தி இலை ஹேர் பேக் தயார் செய்யும் முறை
எந்த வயதில் இளநரை வந்தாலும் சரி, நீங்கள் இந்த குறிப்பை பின்பற்றலாம். இளநரை மறைவதோடு சேர்த்து, உங்களுடைய தலைமுடி உதிர்வும் நிற்கும். தலைமுடியும் அடர்த்