Support Ads
Main Menu
 ·   · 24 posts
 • R

  3 members
 •  · 4 friends

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உறவுகளை தேடும் தொடர் போராட்டம்

வடக்கு,கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாகிய நாம் எமது உறவுகளை தேடும் தொடர் போராட்டத்தை கடந்த 20.02.2017 அன்று கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் (அதாவது இதே இடத்தில்) ஆரம்பித்தோம். இன்று எமது போராட்டமானது ஐந்து வருடங்களைப் பூர்த்தி  செய்து ஆறாவது ஆண்டில் தொடர்கிறது. இறுதி யுத்தம் முடிவடைந்ததை தொடர்ந்து எமது உறவுகள் கையளிக்கப்பட்டும், சரணடைந்தும், விசாரணைக்கென  கூட்டிச்செல்லப்பட்டும் 20000 க்கும் மேற்ப்பட்டோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். இது தவிர, இராணுவக்கட்டுப்பாட்டுக்குள் வெள்ளை வானில் கடத்தப்பட்டும், துணை இராணுவக்குழுக்களால் கடத்தப்பட்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டனர். இவர்கள் அனைவரையும் தேடும் எமது போராட்டமானது நூற்றுக்கு மேற்ப்பட்ட பெற்றோர், தம் உறவுகளை பிரிந்த துயரால் நோய்வாய்ப்பட்டு இறந்த பின்பும் தொடர்கிறது. இது எமக்கான நீதி கிடைக்கும் வரை அல்லது எம்மில் ஒருவராவது உயிர் வாழும் வரை தொடரும். இந்த இறப்புக்களின் காரணமாக அவர்களின் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமைக்கான சாட்சிகள்,  ஆதாரங்கள் அழிக்கப்பட்டு விட்டன. இத்துன்பியல் தொடர்ந்தால் இறுதியில் சாட்சிகள் இன்மையால் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்தை மூடுவது சிங்கள அரசுக்கு சுலபமாகிவிடும்.


இலங்கை அரசானது உள்நாட்டில் தீர்வை வழங்குவதாக சர்வதேசத்திடம் கூறிவருகிறது. இலங்கை அரசிடம் இருந்து நீதி ஒருபோதும் எமக்கு கிடைக்காது. தமது கையால் தமது உறவுகளை கையளித்த உறவுகள் சிலர் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு, வருடக்கணக்கில் விசாரணைக்கெடுக்காமல் இழுத்தடித்து, இறுதியில் சரணடைந்தவர்கள் ஏற்றிச் செல்லப்பட்ட பஸ் இலக்கத்தை முறைப்பாட்டாளர் தெரிவிக்காததால் சில வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. யுத்த சூழலிருந்து உயிர்ப் பயத்துடன் ஓடிவரும் ஒருவர் தனது பிள்ளை, கணவன் ஆகியோரைப் பிரியும் நேரத்தில் அழுது புலம்புவார்களா? அல்லது பேப்பர் பேனா தேடித் திரிவார்களா? அதற்குரிய மனநிலையிலா அவர்கள் இருந்திருப்பார்கள்? இலங்கையில் நீதித்துறை எவ்வளவு பாரபட்சமாக சிந்திக்கிறது என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

இலங்கையில் தமிழர்களுக்கு சரியான நீதி கிடைப்பதில்லை எனினும் நீதியாக செயற்படடும் ஓரிருவரால் வழங்கப்பட்ட தீர்ப்புக்கள் கூட சர்வ வல்லமை பொருந்திய ஜனாதிபதியின் அதிகாரத்தால் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மிருசுவிலில் சிறுவர் உள்ளிட்ட 8 பேரை கொலை செய்த வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட சுனில் ரத்னாயக்க என்பவருக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு அவர் இராணுவத்தில் பதவி உயர்வுடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளார். எட்டு தமிழர்களை கொலை செய்ததற்கு வெகுமதியாகவே இவரது பதவி உயர்வு கருதப்பட்டு ஏனையோரும் இது போன்ற படுகொலைகளைச் செய்யும் வண்ணம் ஊக்குவிக்கப்படுவார்கள். அதே போலவே திருகோணமலை கடற்படைமுகாமில் 11 பேர் கடத்திச்செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கிலும், திருகோணமலை 5 மாணவர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட வழக்கிலும், முறையே சட்டமா அதிபரால் குற்றப்பத்திரிகை மீளப்பெறப்பட்டும், சாட்சியங்கள் போதவில்லை என்றும் வழக்குகள் மீளப்பெறப்பட்டுள்ளன. அன்று படையினரை வழிநடத்திய இன்றைய ஜனாதிபதிக்கு எமது உறவுகளுக்கு என்ன நடந்தது என தெரியாது என்று கைவிரிக்க முடியாது. இன்று கூட எமது உறவுகள் கையளிக்கப்பட்ட வட்டுவாகல், முள்ளிவாய்க்கால், மாத்தளன், ஓமந்தை ஆகிய இராணுவ காவலரண்களின் பொறுப்பாக இருந்த படை அதிகாரிகளை உள சுத்தியுடன் விசாரிப்பதன் மூலம் எமது உறவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம். அப்படை அதிகாரிகள் தற்போது வெளிநாட்டின் தூதுவராகவோ அல்லது பதவி உயர்வு பெற்று தளபதியாகவோ தான் அவர் இருப்பார்கள். ஆனால் இலங்கை அரசாங்கம் அதைச் செய்யாது. காரணம் அவர்களுக்கு உண்மை வெளிவரக்கூடாது. ஏனென்றால் சிறிலங்காவில் இறுதியுத்தத்தின்பின் பதவியேறற் அத்தனை ஜனாதிபதிக்கும், அமைச்சர்களுக்கும் ஒரு வாக்குறுதியை சிங்கள மக்களுக்கு கூறுகிறார்கள் அது ‘யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த படையினரை காட்டிக்கொடுக்க மாட்டேன். அவர்களை பாதுகாப்பேன்’ என்பதே அதை மிக துணிச்சலாக செய்தும்வருகிறார்கள். உதாரணம் மிருசுவில் படுகொலையாளி காப்பாற்றப்பட்டமை, வசந்த கரன்ன கொட பாதுகாக்கப்பட்டமை, இது போல பல உண்டு ஆனால் தமிழ் அரசியல்கைதிகள் நீண்ட காலங்களாக விசாரணையின்றி சிறையிலே வாடுகிறார்கள். அவர்கள் செய்த குற்றமாக விடுதலை போராட்டத்திற்கு ஆதரவாக உணவு வழங்கியதும் மற்றும் போராளிகளுடன் தொடர்பில் இருந்தமை போன்றவற்றை காரணம்காட்டி பலவருடங்களாக தடுத்து வைத்துள்ளார்கள்.
இந்த நாட்டில் தமிழர்களுக்கு நீதி வழங்குவதில் பாரபட்சம் காணப்படுகிறது. தமிழ் மக்களின் மத சுதந்திரம், தனி மனித சுதந்திரம் கேள்வியாக்கப்பட்டுள்ளது. இரவோடு இரவாக எமது மத அடையாளாங்கள் அழிக்கப்பட்டு விகாரகைள் உருவாகின்றன. எமது பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதற்காகவே புது சட்டங்கள், திட்டங்கள் அமுலுக்கு வருகின்றன. மக்களுக்கு அனுபவங்கள் மூலமாக ஏற்படும் உயிர்ப்பயம் இவை எவற்றையும் பொருட்படுத்தாது மௌனிக்கச்செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள எமது மன நிலையை பாதிக்கும் வகையில் எம்மீது இலங்கை அரசின் புலனாய்வாளர்களின் கண்காணிப்பு தொடர்கிறது. பின்தொடர்தல் , தொலைபேசி அழைப்பு, வீடியோ எடுத்தல் என்பன எமது உறவுகளை அச்சமூட்டும் வகையில் உள்ளன. போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் மிரட்டப்படுகிறார்கள். இப் போராட்டத்தில் முன்னிலை வகிப்பவரின் குடும்ப உறுப்பினர்கள் தேவையற்ற விசாரணைகளுக்கு உள்ளாகும் துர்ப்பாக்கிய நிலையும் காணப்படுகிறது.

எமது நீதிக்கான இந்த போராட்டத்தை தொடராமல் செய்வதற்கான குழப்பங்கள் உருவாக்கப்பட்டும் எம்மில் பலரை வயதாகிய தாய்மார், தனியாக குடும்பங்களை தலைமை ஏற்று நடத்தும் பெண்கள் என்று கூட பாராமல், பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அழைத்து விசாரணை என்ற பெயரில் மன உழைச்சலை தருவதும் நீதிக்கான எமது பயணத்திற்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்துகிறது.மதிப்பிற்குரிய மனித உரிமைகள் ஆணையாளர் அவர்களே,

எமது உறவுகளுக்கு நீதி கிடைப்பதற்காகவே நாம் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் போராடிக்கொண்டிருக்கின்றோம். எம்மில் 75 வீதமானவர்கள் வயது முதிந்தவர்களே. அவர்கள் இந்த வயோதிப காலத்திலும் நீதியை தேடி வீதியிலே போராடுகிறாரகள். நாம் மன அழுத்தத்தினாலும் நோய்வாய்ப்பட்டதாலும் 112 பெற்றோர்களை இழந்து விட்டோம் மிஞ்சியிருப்பவர்கள் இறக்கும்முன்பு நீதி கிடைக்க வேண்டும்.

தங்களின் கடந்த வருட அறிக்கையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு இலங்கையின் இனவழிப்பு தொடர்பில் பாரப்படுத்துவதற்கு பரிந்துரை செய்திருந்தீர்கள் அதை விரைவில் செய்வதற்கு ஏதுவாக உரியபடிமுறைகளையும் தாங்களும், தாங்கள் சார்த்த ஐ.நா சபையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.நன்றி

💓0 😆0 😲0 😥0 😠0 0
 • 304
 • More
Attachments
Info
Category:
Created:
Updated:
Comments (0)
  Ads
  Featured Posts
  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்தி எதிர்காலத்தை பற்றி உணராதவர்களாக இன்றும் நாம் வாழ்கின்றோம்.
  கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்ஙகளில்  சட்டரீதியற்ற மணல் அகழ்வு என்பது பாரிய அளவில் சூழல் பாதிப்புக்களை ஏற்படுத்துகின்றது என்பதுடன் சமூக மட்ட
  என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர் ஆனால் அவர்களுக்கு நிதி பிரச்சனை அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதார பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றது
  சமூகத்தில் இவர்களை இனங்கண்டு அவர்களுக்கான உதவிகளை செய்வதற்கு பலரும் பாரபடசமின்றி முன்வர வேண்டும் என்று பாகிஸ்தான் நாட்டில் இடம்பெற்ற குத்துச்சண்டை இறு
  பொதுமக்களுக்கான போக்குவரத்துச் சேவை இன்மையால் பெரும் சிரமங்களை எதிர் கொள்வதாக தீவக மக்கள்
  நெடுந்தீவானது இலங்கையின் வட பகுதியில் யாழ்ப்பாணக் குடா நாட்டுக்குத் தென் மேற்கே அமைந்துள்ள ஏழு தீவுகளுள் ஒன்றாகும்.  அதிக சுற்றுலாப் பயணிகளைக் கவரக்கூ
  மஞ்சள் பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்
  மஞ்சள் கலந்த பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருப்பதால், தோல், சிறுகுடல், குடல் மற்றும் மார்பகப் புற்றுநோய் வராமல் நம்மைப் பாதுகாக்கும். புற்றுந
  சிவாலயங்களில் பிரதட்சணம் செய்யும் வழிமுறை
  சிவபெருமான் அருள்பாலிக்கும் தொன்மையான திருத்தலங்களுக்கு சென்றாலே நமக்கு அருள் கிடைக்கும். சிவன் கோயிலில் செய்யும் பிரதட்சணத்திற்கு மிகுந்த சக்தி உண்டு
  வேலியே பயிரை மேய்ந்த கதையாக சிறுமி நிதர்சனாவின் மரணம் - சிறுமியின் கொலைக்கு அவரது குடும்பமே காரணம்
  முல்லைத்தீவு மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய ஒரு கிராமங்களில் ஒன்றாக அமைந்துள்ள மூங்கிலாறு வடக்கு கிராமத்தில் நிகழ்ந்த செல்வி- நிதர்சனாவின் மரணம்.ஆரம்
  மீள்குடியேறிய மக்களில் பல்லாயிரக் கணக்கான குடும்பங்கள் வீடுகளின்றி தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றனர் தற்போது பெய்து வரும் பருவமழையில் பெரும்சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
  மழை காலம் தொடங்கி விட்டது இனி வரும் நாட்களில் எவ்வாறு இந்தக் கொட்டில் வீடுகளில் குழந்தைகளையும் முதியவர்களையும் பிள்ளைகளையும் வைத்துக்கொண்டு எப்படி இரு
  படித் *தேன்..* சுவைத் *தேன்*...! உடனே பகிர்ந் *தேன்*
  *தேன்*கொண்டு வந்தவரைப் பார்த்து,நேற்று ஏன் *தேன்* கொண்டுவரவில்லை என்று ஒருவர் கேட்கிறார். அதற்கு அவர் கூறிய *இனிமை பொருந்திய விடை...*  ஐயா நீங்கள் கூற
  அதிபத்த நாயனார் குருபூஜை
  அதிபத்த நாயனார் சிவத்தொண்டர்களாக வாழ்ந்த அறுபத்து மூன்று நாயன்மார்களுள் ஒருவராவார். இவர் மீன்பிடிப்பதை தொழிலாக கொண்டிருந்தவர். தன்னுடைய சிவபக்தியின் க
  ஆடிவெள்ளிக்கிழமையில் அம்மனை வழிபடுவதன் சிறப்புக்கள்
  ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலை முதல் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.வருடம் முழுவதும் உள்ள 1
  பக்தி
  பக்தி என்றால் மாணிக்க வாசகர் போல் இருக்க வேண்டும். மாணிக்க வாசக பெருமானிடம் ஈசனே என்ன வரம் வேண்டும் கேள் என்கிறார். அதற்கு மாணிக்கவாசக பெருமான் என்ன க
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது ஆனால் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்டுள்ளது.
  நாளைய உலகம் இன்றைய மழலைகளின் கைகளில் தங்கியுள்ளது. ஆனால் நவீன உலக ஓட்டத்தைப்புரிய முடியாமலும் தெரியமுடியாமலும் எமது இளம் சமுகம் ஒன்று தனித்து விடப்பட்
  குட்டி கதை - வாழ்வியல் நீதி
  எமதர்மராஜன் ஒரு குருவியை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார். அடடா... இந்த குருவிக்கு கேடு காலம் வந்துவிட்டதே என்பதை உணர்ந்த கருடபகவான், உ
  வீட்டில் வைத்து வழிபட வேண்டிய தெய்வ படங்கள் எவை?
  லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். அலமேலுமங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படத்தை வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொ
  பொது அறிவு தகவல்கள்...!
  பொது அறிவு தகவல்கள்...! * முதன் முதலில் கேள்விக் குறியைப் பயன்படுத்திய மொழி இலத்தின் மொழிதான். * கைரேகையைப் வைத்து குற்றவாளிகளைக் கண்டுபிடிக்கும் முறை
  Ads
  Latest Posts
  பட்டு புடவையில் கறைபட்டு விட்டதா? நீக்குவதற்கான எளிய யோசனைகள்
  டிப்ஸ்: 1 பொதுவாக நடக்கும் போது பட்டு புடவையின் பார்டரில் கறைகள் படிந்துவிடும் அதனை எப்படி அகற்றலாம் என்று பார்க்கலாம். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத
  வாழ்க்கையில் பரீட்சை
  ஒரு நாள்.....கரூர் செல்ல ஈரோடு பஸ் ஸ்டேண்டில் நின்ற ஒரு அரசு பேருந்தில் ஏறி அமர்ந்தேன்.பஸ் ஓரளவு காலியாய் இருந்தது அப்போ ஒரு பெரியவர் வந்து"தம்பி பக்க
  கலெக்டர் ரோஸ் பீட்டர்
  திரு ரோஸ் பீட்டர் என்பவர் மதுரைக்கு 1812 முதல் 1828 வரை கலெக்டராக இருந்தார்.   மக்கள் மீனாட்சியை வழிபடுவது கண்டு அவருக்கு ஆச்சரியம்.   ஆனால் அவருக்கு
  குன்னக்குடி வைத்தியநாதனும் கண்ணதாசனும் .....
  மருத மலை மாமணியே என்ற பாடலில் குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் கண்ணதாசனுக்கும் ஒரு செல்ல போட்டி நடந்தது.இதை குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களே பல இடங்களில
  அறிவியல் விஞ்ஞானி ஐன்ஸ்டீன்
  14.03.1879 ஆம் திகதி ஜெர்மன் நாட்டில் பிறந்த அறிவியல் விஞ்ஞானியான ஐன்ஸ்டீனுக்கு சிறு வயதிலிருந்தே புத்தகங்கள் என்றாலே பிடிக்காது. அவருக்கு சில வார்த்த
  தைப்பூச விரதம் இருந்தால் கிடைக்கும் பலன்கள்
  தைப்பூச நாளில் காலை எழுந்து குளித்து திருநீர் அணிந்து கந்த சஷ்டி கவசம் படித்துவிட்டு நாம் முருகனை வணங்கி மனதார விரதம் இருக்க வேண்டும்,. காலை மாலை என இ
  தாம்பூலத்தின் மகத்துவம்
  மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்  அனைவருக்கும் .சொல்லுங்கள்*       மலட்டுத்தன்மை அறவே இல்லை. கேன்சர் இல்லை, சர்க்கரை வியாதி இல்
  ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி - விளக்கம்
  பழமொழிஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி நாம் அறிந்த விளக்கம் :பேச்சு பெருசா இருக்கும், செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்
  கணவன் - மனைவி புரிதல்....
  ஒரு பெண் ஷாப்பிங் போனார்.கேஷ் கவுன்டரில் பணம் கொடுக்கும்போது அவரது கை பைக்குள் டி.வி ரிமோட் இருப்பதைப் பார்த்து கடைக்காரருக்கு ஆச்சரியம்!"நீங்க டி.வி
  துவந்த யுத்தம்
  பாரதப்போரில் கர்ணணுக்கும் அர்ஜூனனுக்கும் இடையே துவந்த யுத்தம் நடைபெற்று வந்தது. (துவந்த யுத்தம் என்பது இருவருக்கு மட்டும் இடையே நடக்கும் போர்.)மிகவும்
  வித்தை அல்ல அறம்
  துரோணாச்சாரியார் மறுத்துவிட, கிருபாச்சாரியாரிடம் ஒரு நாள் அதிகாலை போகிறான் கர்ணன். மாணவர்களின் திறமையை சோதிக்க, வானத்தில் பறக்கும் ஒரு பறவையை குறிபார்
  சிந்திப்போமா?
  ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று, அங்குள்ள நிர்வாகியிடம் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். எனக்கு 10 ஆண்டுகளாக அவரோடு பழக்கம் உண்டு.அந்த சமயத்தில் அங்க
  ஆழ்மனம் பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள்
  ஆழ்மனதை குறித்து சுவாரஸ்யமான சில தகவல்களை தெரிந்துகொள்வோம்.நம் மூளையின் இயக்கத்திற்கு 95% subconscious mind தான் காரணமாக இருக்கிறது. 5% மட்டுமே consci
  ஒப்பீடு செய்தலும், போட்டி மனப்பான்மையும்
  நான் இன்று காலை jogging ( ஜாகிங், மெது ஓட்டம், சீராக ஓடல்) சென்றுக் கொண்டிருந்த பொழுது எனக்கு முன்னால் 1/2 கிலோ மீட்டர் சென்று கொண்டிருந்த ஒரு நபரைச்
  மினிமலிசம்
  மினிமலிசம் எனப்படும் வாழ்வியலை ஐரோப்பா அமெரிக்கா போன்ற நாடுகளில் பரப்பிக்கொண்டு வருகிறார்கள்.மினிமலிசம் என்றால் ஒருவன் தனக்கு தேவையான பொருட்களை மட்டும
  Ads