- · 5 friends
-
I
உங்களுக்கு தெரியுமா?
இந்திய ரிசர்வ் வங்கி சமீபத்தில் புதிய 100 ரூபாய் நோட்டின் வடிவத்தை வெளியிட்டது.
இதன் ஒருபுறத்தில் மகாத்மா காந்தியின் படமும், மறுபுறத்தில், குஜராத் மாநிலம் பதான் நகரில் உள்ள ’மகாராணியின்படிக்கிணறு’ எனும் புராதனச் சின்னமும் அச்சிடப்பட்டுள்ளது.
மகாத்மா காந்தியை அனைவருக்கும் தெரியும்;
அந்த ’மகாராணியின் படிக்கிணறு’ நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..? வாங்க,
அந்த கிணத்துக்குள் இறங்கி பார்ப்போம்...
11ம் நூற்றாண்டில் குஜராத் பகுதியை ஆட்சி செய்த அரசன் பீமதேவன் நினைவாக,
அவரது மனைவி உதயமதி - மகன் கர்ண தேவன் ஆகியோர் சரஸ்வதி நதியின் அருகில் மக்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் ஒரு பெரிய கிணறு அமைத்தனர்.
64 மீட்டர் நீளமும், 20 மீட்டர் அகலமும், 27 மீட்டர் ஆழமும், அடியில் சுரங்கப்பாதையும் கொண்ட இந்தக் கிணறு, ஏழு அடுக்குகளாக, அழகிய வேலைப்பாடுகளுடன் கட்டப்பட்டுள்ளது.
நான்கு திசைகளிலும் வழியுடன் கட்டப்பட்ட இந்த கிணற்றின் தூண்களின், இந்துக் கடவுள் சிற்பங்களும், வாழ்க்கை முறை பற்றிய குறிப்புகளும் செதுக்கப்பட்டுள்ளன. இதன் அடியில் உள்ள சுரங்கப்பாதை, 32 கிமீ தொலைவில் உள்ள சித்பூருக்குச் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இது, போர்க் காலங்களில் அரச குடும்பத்தினர் இந்த வழியே தப்பிச் செல்வதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக மூடப்பட்டு கிடந்த இந்த கிணறு, 1960ம் ஆண்டு தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு,
1980ம் ஆண்டு புதுப்பிக்கப்பட்டு மீண்டும் பொதுமக்களின் பார்வைக்கு வந்தது.
இது, பண்டைய கட்டடக் கலைக்கும், நீர் மேலாண்மைத் திட்டத்துக்கும் உதாரணமாக விளங்குகிறது.
வறட்சி ஏற்படும்போது இந்தக் கிணறு பெருமளவில் உதவியதாக வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த சில குறிப்புகள் சமண நூல்களில் உள்ளன. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படாத வகையிலும், தேங்கும் நீரால், சுற்றுசுவர் அரிப்பு ஏற்பட்டு சிற்பங்கள் சிதைந்துவிடாத வகையிலும் இது கட்டப்பட்டுள்ளது.
2014ம் ஆண்டு, யுனெஸ்கோ நிறுவனம், இந்த ‘மகாராணியின் படிக்கிணறை’ சர்வதேச பாரம்பரியச் சின்னமாக அறிவித்து, உலக அளவில் அங்கீகாரம் அளித்தது. இந்த கிணற்றையே இந்திய ரிசர்வ் வங்கி புதிதாக புழக்கத்தில் விடவுள்ள 100 ரூபாய் நோட்டில் அச்சிட்டுள்ளது.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·