- · 5 friends
-
I
இயற்கையாக வயிற்றை (குடல்) கழுவும் முறை
சிறு குடலில் உணவில் இருந்து சத்தை உறிஞ்சும் சிறு சிறு குழாய்களில் தேங்கி இருக்கிற கழிவுகளினால் உணவில் இருந்து சத்து உடலுக்கு சேராது... பெருங்குடல் சுவர்களில் நாட்பட்ட கழிவுகள் தேங்கியிருப்பதால் கழிவுகள் முழுவதுமாக வெளியேறாமல் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களும் திரவங்களும் சுரந்து உடலை நோய் வர செய்யும்.
தலைவலி கழுத்து வலி இடுப்பு வலி வயிற்று வலி முதுகு வலி மூட்டு வலி என உடலில் உள்ள அனைத்து வலிகளுக்கும் கெட்ட வாயுக்களே காரணம்.. இப்படி வயிற்றில் தேங்கும் கழிவுகளை நாட்பட்ட அனைத்து நோய்களுக்கு முக்கிய காரணம் .. வயிற்றை சுத்தம் செய்வதன் மூலம் அதாவது குடலை கழுவுவதன் மூலம் ஒரே நாளில் நாள்பட்ட பல நோய்கள் சரியாகும். இதை சுகபேதி என்றும் கூறுவார்கள்.
தயாரிக்கும் முறை :
முந்தைய நாள் இரவு இரண்டு லிட்டர் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் (55 கிராம் எடை அளவு உப்பு) நிறைய வறுத்த கல் உப்பு சேர்த்து கரைத்து 20 நிமிடம் நன்றாக கொதிக்க வைக்கவும். பின்பு அடுப்பில் இருந்து இறக்கி மூடி வைத்து விடவும்.
காலை 6 அல்லது 7 மணிக்குள் எழுந்து அந்த நீரை மிக லேசாக சூடு செய்து அடுப்பில் இருந்து இறக்கி ஒரு முழு எலுமிச்சை பழ சாற்றை விதை நீக்கி அதில் பிழிந்தால் குடல் கழுவும் உப்பு கரைசல் தயார்.
.. ஒரு டம்ளர் தண்ணீர் முதலில் குடிக்கவும்... இந்த தண்ணீர் குடித்த உடன் மலம் போக ஆரம்பிக்கும்.மலம் போய் வந்த பிறகு மீண்டும் ஒரு டம்ளர் உப்பு கரைசல் தண்ணீர் குடிக்கவும்.
ஒவ்வொரு டம்ளராக தண்ணீர் குடிக்க குடிக்க பத்து நிமிடம் முதல் 20 நிமிடத்திற்குள் மலம் போக ஆரம்பிக்கும்.
ஒவ்வொரு தடவையும் மலம் போய்விட்டு வந்து உப்புக் கரைசல் தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்கவும்.
முதல் தடவை மலம் குறைந்த நாற்றத்துடன் புதிய மலம் வெளியேறும் இரண்டு மூன்று தடவை மலம் வெளியேறிய பிறகு நாள்பட்ட மலம் அதிக நாற்றத்துடன் வெளியேறும்.
இறுதியாக மஞ்சள் கலர் நீர் வெளியேறும்.. அதன் பிறகு மீண்டும் உப்பு கரைசல் தண்ணீர் ஒரு டம்ளர் குடிக்க தண்ணீர் அப்படியே மலமாக வெளியேறும்.
குடிக்கும் தண்ணீர் அப்படியே மலமாக வெளியேறி விட்டால் குடல் முழுவதுமாக சுத்தமாகி விட்டது என தெரிந்து கொள்ளலாம்.. இனிமேல் உப்பு கரைசல் தண்ணீர் குடிக்க வேண்டிய அவசியம் இல்லை.
சிலருக்கு 1/2 லிட்டர் தண்ணீரிலே குடல் சுத்தம் ஆகிவிடும் சிலருக்கு ஒன்றரை லிட்டர் தண்ணீர் தேவைப்படலாம் சிலருக்கு இரண்டு லிட்டரும் தேவைப்படலாம்.
சிலருக்கு ஒரு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு மலம் வெளியேறலாம் சிலருக்கு இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்த பிறகு மலம் வெளியேறலாம்.
உப்பு எலுமிச்சை பழம் சாறு கலந்து இருப்பதால் மலம் வெளியேறும் போதும் குடல் சுத்தமாக இருக்கும் போதும் உடல் அசரிக்கை மயக்கம் உடல் சோர்வு எதுவும் ஏற்படாது.
குடல் சுத்தமாகும் வரை வேறு உணவும் எதுவும் எடுத்துக் கொள்ள வேண்டாம்.. தாகம் எடுத்தால் நார்மல் தண்ணீர் மட்டும் குடிக்கலாம்.
இந்த இயற்கையான முறையில் குடலை கழுவிய பிறகு சிறுகுடல் சுத்தமாகி நீங்கள் சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்கள் முறையாக உடலுக்கு போய் சேரும்.. பெருங்குடலும் மலக்குடலும் சுத்தமாக இருப்பதால் உடலில் உள்ள வலிகள் அனைத்தும் குறையும்.
(குடல் கழுவுவதை இடையில் நிறுத்த விரும்பினால் ஒரு டம்ளர் மோர் அல்லது ஒரு டம்ளர் தயிர் குடித்தால் மலம் வெளியேறுவது நின்று விடும்)
இந்த முறையில் குடலை சுத்தப்படுத்திய பிறகு கஞ்சி ரசம் சாதம் போன்ற இலகுவான உணவு மட்டும் சாப்பிடவும்.. அன்றைய தினம் அசைவம் தவிர்த்து விடவும்.
குழந்தைகளுக்கு ஒரு டம்ளர் தண்ணீர் மட்டும் குடித்து குடல் சுத்தம் செய்தால் போதுமானது மீண்டும் உப்பு கரைசல் குடிக்க தேவையில்லை.
பெரியவர்கள் மற்றும் நாட்பட்ட நோயாளிகள் மலத்தில் குடிக்கும் உப்பு கரைசல் அப்படியே வெளியேறும் வரை தொடர்ந்து உப்பு கரைசல் குடிக்க வேண்டும்.
ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வயிற்றில் தீவிர அல்சர் உள்ளவர்கள் மருத்துவர் ஆலோசனையுடன் பின்பற்றவும்.
குடல் சுத்தமாக இருந்தாலே நாம் ஆரோக்கியமாக இருப்போம்... வருடம் ஒரு முறை மட்டுமே இதை பின்பற்றலாம்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·