- · 5 friends
-
I
![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
முகப்பொலிவிற்கு வரப்பிரசாதமாக விளங்கும் கடுக்காய்
முகத்தில் இருக்கக்கூடிய இயற்கையான பொலிவு நீங்குவதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அவற்றில் மிகவும் முக்கியமான ஒரு காரணமாக திகழ்வதுதான் சுற்றுச்சூழல் மற்றும் சூரிய ஒளி. இதனால் நம்முடைய முகத்தில் ஒருவித கருமை தோன்றிவிடும்.
சரியான உறக்கமின்மையாலும் அதிகப்படியான நீரை பருகாமல் இருப்பதாலும் முகத்தில் இருக்கக்கூடிய பொலிவை இழக்க நேரிடும். மேலும் வயதான தோற்றத்தையும் வெளிப்படுத்தும். இவற்றை நீக்குவதற்குரிய ஒரு பேஸ் பேக்கை பற்றி தான் பார்க்கலாம்.
கடுக்காயை நாம் நம்முடைய தலைமுடிக்கு பயன்படுத்துவது போலும் நம் உடலுக்கு உள்ளுக்குள் எடுத்துக் கொள்வது போலவே முகத்திற்கும் நாம் பயன்படுத்தும் பொழுது பல நன்மைகளை அது தருகிறது. கடுக்காயை நாம் முகத்தில் பயன்படுத்துவதன் மூலம் இழந்த பொலிவை திரும்பப் பெற முடியும்.
முகத்தில் இருக்கக்கூடிய சுருக்கத்தை நீக்கி இளமையான தோற்றத்தையும் தரும். கண்களை சுற்றி இருக்கக்கூடிய கருவளையமும் ஒரு சிலருக்கு வாயை சுற்றி இருக்கக்கூடிய கருமையும் நீக்குவதற்கு கடுக்காய் பொடி பெரிதும் உதவி புரிகிறது.
ஒரு மிக்ஸிங் பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மூன்று ஸ்பூன் அளவிற்கு கடுக்காய் பொடியை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனுடன் இரண்டு விட்டமின் இ கேப்சூல் ஆயிலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக அரை ஸ்பூன் அளவிற்கு தேனையும் சேர்த்து நன்றாக கலந்து விட்டு இதை ஃபேஸ் பேக் போடுவதற்கு ஏற்றவாறு தேவையான அளவு பன்னீரையும் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
இந்த பேஸ் பேக்கை அப்படியே நம்முடைய முகத்திலும் கழுத்திலும் கீழே இருந்து மேல் தடவுவது போல் தடவ வேண்டும். எந்தெந்த இடத்தில் கருமைகள் இருக்கிறதோ அந்த இடத்தில் மட்டும் இரண்டு முறை தடவ வேண்டும். சற்று கனமாக தடவ வேண்டும். இப்படி தடவி விட்டு 20 நிமிடம் அப்படியே வைத்து விடுங்கள்.
பிறகு சிறிது தண்ணீரை கைகளில் நனைத்துக்கொண்டு நன்றாக உலர்ந்த இந்த பேஸ் பேக்கை மசாஜ் செய்வது போல் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முகத்தில் இருக்கக்கூடிய கருமைகள் அனைத்தும் நீங்குவதோடு மட்டுமல்லாமல் சுருக்கங்களும் நீங்கி இளமையான பொலிவான முகத்தை பெற முடியும்.
![தமிழ் குழந்தைகளின் பெயர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · Yathusan
- ·
![S என்ற எழுத்தில் உங்கள் பெயர் ஆரம்பிக்கின்றதா?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![கிழவி தோற்றமா? தேவதை தோற்றமா? (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
![உப்புமாவை நேசிக்கும் அன்பர்களுக்கு (நகைச்சுவை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சுவையான சம்பவம்...](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வைத்தியரின் தேடுதல் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![சின்னப் பையன் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வெற்றிக்கான சூத்திரம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![பொன்னாங்கண்ணி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![தூக்கமின்மைக்கான காரணங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![வயதானாலும் நினைவாற்றல் இழப்பை தடுக்கலாம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![ஏசியை பயன்படுத்துவோர் கட்டாயம் கவனிக்கவேண்டியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![நீங்கள் புத்திசாலியா என அறிய அறிவியல் ரீதியான அறிகுறி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![முகப்பொலிவினை இரண்டே நிமிடத்தில் பெற சூப்பரான ஐடியா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·
![அன்பை விதைப்போம் (குட்டிக்கதை)](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- · GomathiSiva
- ·