·   ·  176 posts
  •  ·  17 friends
  • S

    24 followers

தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகைக்கு மீண்டும் கொரோனா

கடந்த  2ஆம் தேதி  கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகையும், அரசியல்வாதியுமான நக்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.  

நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் கொரோனா பரவலால் பாதிப்பால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கொரோனா தடுப்பூசி எடுத்துக் கொண்ட நக்மாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட ஒரே வாரத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நக்மா அறிந்து அதிர்ச்சி அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இதனையடுத்து அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

எனவே கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாலும் யாரும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று அவர் தனது ரசிகர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.                                            

  • 532
  • More
Comments (0)
Login or Join to comment.