0 0 0 0 0 0
 • 117
 • 97
Comments (0)
Author
 ·   · 1 albums
 •  · 2 friends
 •  · 3 followers
Info
Created:
Updated:
Recent Images
 • 41
 • 46
 • 42
 • 43
 • 48
 • 45
 • 42
 • 47
 • 46
 • 92
 • 95
 • 110
 • 91
 • 79
 • 109
 • 95
 • 91
 • 91
 • 93
 • 91
 • 100
 • 87
 • 99
 • 97
 • 97
 • 90
 • 88
 • 94
 • 84
 • 90
 • 95
 • 96
 • View
Added news 
பிரான்ஸ் நாட்டின் அதிபராக 2007-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரை இருந்தவர் நிக்கோலஸ் சர்கோசி. 66 வயதான சர்கோசி, மூத்த நிதிபதியிடம் இருந்து வழக்கு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாக பெற முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுதொடர்பாக விசாரணை நடத்திய நீதிமன்றம் இன்று அவருக்கு ஓராண்டு தடைவிதித்தது. மேலும், வீட்டுக்காவலில் வைக்க உத்தரவிடுமாறு கோரிக்கை விடுக்க அவருக்கு உரிமை உண்டு என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
 • View
Added news 
பல பாடசாலைகள் ஏற்கனவே 2021ஆம் வகுப்புக்கான மெய்நிகர் பட்டமளிப்பு விழாக்களைத் திட்டமிட்டுள்ளன. பெரும்பாலான உயர்நிலைப் பாடசாலை பட்டப்படிப்புகள் இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், சில பாடசாலை சபைகள், ஏற்கனவே ஜூன் மாதத்தில் நடைபெறும் சந்தர்ப்பத்தைக் குறிக்க ஆன்லைன் நிகழ்வுகளைப் பற்றி யோசித்து வருகின்றன.ரொறொன்ரோ மாவட்ட பாடசாலையின் செய்தித் தொடர்பாளர் ரியான் பேர்ட் கூறுகையில், பட்டமளிப்பு விழாக்கள் இந்த ஆண்டு மீண்டும் மெய்நிகரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என கூறினார்.ஒன்றாரியோவின் சட்பரியில் ஒரு பாடசாலை சபை, ஏற்கனவே பெற்றோரிடம் வரவிருக்கும் பட்டப்படிப்புகள் மெய்நிகரில் நடத்தப்படும் என்று கூறியுள்ளது. மெய்நிகர் கொண்டாட்டங்களைத் திட்டமிடுவதாக பீல் மாவட்ட பாடசாலை சபையும் தெரிவித்துள்ளது.இந்த கொரோனா பரவும் காலத்தில் அனைத்தும் மெய்நிகரில் நடத்துவது அனைவருக்குமே பாதுகாப்பானது. 
 • View
Added a post 
முதல் நாள் சோற்றில் நீரூற்றி, மறுநாள் சாப்பிடும் இந்த பழைய சாதத்தில் தான் பி6, பி12 ஏராளமாக இருக்கிறது. தவிரவும் உடலுக்கு, குறிப்பாக சிறு குடலுக்கு நன்மை செய்யும் 'ட்ரில்லியன்ஸ் ஆஃப் பாக்டீரியாஸ்' (கவனியுங்கள்: 'மில்லியன்' அல்ல 'ட்ரில்லியன்') பெருகி நம் உணவுப் பாதையையே ஆரோக்கியமாக வைத்திருக்கிறதாம்! கூடவே இரண்டு சிறிய வெங்காயம் சேரும்போது, நோய் எதிர்ப்பு சக்தி அபரிமிதமாக பெருகுகிறதாம். அப்புறம் பன்றிக் காய்ச்சல் என்ன, எந்தக் காய்ச்சலும் நம்மை அணுகாது! பழைய சாதத்தின் மகத்துவத்தைப் பற்றி அமெரிக்காவில் வசிக்கும் நம் இந்திய விஞ்ஞானி ப்ரதீப் கூறியதில் இருந்து சில:1. "காலையில் சிற்றுண்டியாக இந்த பழைய சாதத்தைக் குடிப்பதால், உடல் லேசாகவும், அதே சமயம் சுறுசுறுப்பாகவும் இருக்கிறது.2. இரவே தண்ணீர் ஊற்றி மூடி வைப்பதால் இலட்சக்கணக்கான நல்ல பாக்டீரியாக்கள் இதில் உருவாகிறது.3. மறுநாள் இதை குடிக்கும் போது உடல் சூட்டைத் தணிப்பதோடு குடல்புண், வயிற்று வலி போன்றவற்றையும் குணப்படுத்தும்.4. அதுமட்டுமில்லாமல் இதிலிருக்கும் நார்ச்சத்து, மலச்சிக்கல் இல்லாமல் உடலை சீராக இயங்கச் செய்கிறது.5. இந்தப் பழைய சாதம் உணவு முறையை சில நாள் தொடர்ந்து நான் சாப்பிட்டதில் நல்ல வித்தியாசம் தெரிந்தது. இரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்துவிட்டதோடு, உடல் எடையும் குறைந்தது." என்கிறார்.6. மிகவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் உடலுக்கு அதிகமான சக்தியை தந்து நாள் முழுக்க சோர்வின்றி வேலை செய்ய உதவியாக இருக்கிறது. 7. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சட்டென்று சரியாகி விடும்.8. அல்சர் உள்ளவர்களுக்கு இதைக் கொடுத்து வர, ஆச்சரியப்படும் அளவிற்குப் பலன் கிடைக்கும். 9. எல்லாவற்றிற்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி அதிகளவில் கிடைப்பதால், எந்த நோயும் அருகில்கூட வராது. 10. ஆரோக்கியமாக அதே சமயம் இளமையாகவும் இருக்கலாம்". பழைய சாதத்தை எப்படி செய்வது?பழைய சாதத்திற்கு மிகவும் சிறந்தது பிரெளன் ரைஸ் என்று அழைக்கப்படும் கைக்குத்தல் அரிசிதான். ஒரு கல் சட்டி அல்லது மண் சட்டியில் சிறிது சாதத்தைப் போட்டு, சுத்தமான தண்ணீரை நிறைய ஊற்றவும். மறுநாள் சாதத்தை நன்கு பிசைந்து, மோர் சிறிது சேர்த்து, சின்னவெங்காயம் சேர்த்துக் குடிக்க 'ஜில்'லென்று இருக்கும் (மிகவும் சூடாக இருக்கும் சாதத்தில் தண்ணீரை ஊற்றக் கூடாது.)
 • View
changed a profile cover 
 • View
changed a profile picture 
 • View
Added news 
மாளவிகா தமிழ் சினிமாவில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த உன்னை தேடி படம் மூலம் அறிமுகமானவர். பின்னர் மீண்டும் அஜித்துடன் அவர் நடித்த ஆனந்த பூங்காற்றே, அதன் பிறகு நவரச கார்த்திக்குடன் ரோஜாவனம், முரளியுடன் வெற்றிக்கொடி கட்டு போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தார்.இருந்தாலும் அவருடைய துர் அதிர்ஷ்டம் அதன் பிறகு பெரிதாக பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை, எனவே தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும்சிறிய கதாபாத்திரங்களை கொண்ட சந்திரமுகி, ஐயா, வசூல் ராஜா எம்.பி.பி.எஸ், திருட்டுபையலே போன்ற படங்களில் நடித்தார்.சில ஆண்டுகளுக்கு பின் ஒரு தொழிலதிபரை மணந்த மாளவிகா சினிமாவிற்கு லீவ் போட்டுவிட்டு செட்டில் ஆனார். அவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருட்டுபயலே படத்தில் வரும் மாளவிகாவை ரசிகர்கள் யாராலும் மறக்கமுடியாது, அந்த அளவுக்கு கதாநாயகியை விட செம்ம கிளாமராக நடித்து இருப்பார் மாளவிகா.இவருக்கு திருமணம் ஆகி குழந்தை இருந்தாலும் இவர் மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில், ஜவுளி கடை டிரையல் ரூமிற்கு சென்று தொப்பை தெரியும் அளவுக்கு செல்பி எடுத்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். இந்த படம் தற்போது வைரலாகி வருகிறது.
 • View
Added news 
இலங்கை கிரிக்கெட்டின் புதிய பணிப்பாளராக டொம் மூடி நியமிக்கப்பட்டுள்ளார்.இன்று (மார்ச், 1ஆம் திகதி) முதல் மூன்று வருடங்களுக்கு அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
 • View
Added news 
மயக்கம் என்ன படத்திற்குப் பிறகு நடிகை ரிச்சா சிம்பு நடிப்பில் வெளியான ஒஸ்தி படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு நடிப்பில் இருந்து விலகி, வெளிநாட்டில் மேற்படிப்புக்காக சென்றுவிட்டார். கல்லூரியில் படித்தபோது அவருக்கும், சக மாணவரான ஜோ லாங்கெல்லா என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.கடந்த ஆண்டு 2019 டிசம்பர் மாதம் அவர்களுக்கு அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றது.திருமணத்திற்கு பின்னர் ரிச்சா காதல் கணவருடன் வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். இந்த வருடம் ஜூன் மாதம் குழந்தை பிறக்கவிருக்கும் ரிச்சாவுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.
 • View
Added news 
பிரித்தானியாவில் கொரோனா தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் 6,035 பேர் பாதிக்கப்பட்டதோடு 144பேர் உயிரிழந்துள்ளனர்.உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக விளங்கும் பிரித்தானியாவில், 41இலட்சத்து 76ஆயிரத்து 554பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 22ஆயிரத்து 849பேர் உயிரிழந்துள்ளனர்.மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில், ஆயிரத்து 971பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 29இலட்சத்து ஐந்தாயிரத்து 317பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
 • View
Added news 
இத்தாலியின் தெற்கு பகுதியில் உள்ள தொன்மை வாய்ந்த நகரமான பாம்பேய் நகரில், 2,000 ஆண்டுகளுக்கு முந்தைய தேர் ஒன்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 4 சக்கரங்களைக் கொண்ட இந்த தேர், பழங்கால குதிரை லாயத்துக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது.கடந்த ஜனவரி 7ஆம் திகதி இந்த தேர் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, அதை பாதுகாப்பாக வெளியே கொண்டு வர பல வார காலம் ஆனது என அகழ்வாய்வாளர்கள் கூறினர்.இந்த தேரை திருவிழாக் காலங்கள் மற்றும் அணி வகுப்புகளுக்கு பயன்படுத்தி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகிறார்கள். இந்த தேர் சிதையாமல், மிக சிறப்பாக பாதுகாக்கப்பட்டு இருக்கிறது. அந்த தேரில் இரும்புக் கூறுகள், அழகான பித்தளை மற்றும் டின் உலோக வேலைப்பாடுகள், கயிறுகள், மலர் அலங்காரங்கள் என பலதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.கி.பி 79இல் வெசுவியஸ் மலையில் ஓர் எரிமலை சீற்றம் ஏற்பட்டது. இந்த எரிமலை வெடிப்பு, பாம்பேய் நகரத்தை ஓர் அடர்த்தியான சாம்பல் படிவத்தால் மூடிவிட்டது. அது அங்கு வாழ்ந்த மனிதர்களின் எச்சங்கள் மற்றும் கட்டடங்களை பாதுகாத்து வருகிறது. இதனால் இந்த நகரம் இன்று அகழ்வாய்வாளர்களின் சொர்க்கமாக இருந்து வருகிறது.
 • View
Added news 
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்து முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதுவரையில் எவ்விதமானக் கருத்துக்களையும் வெளியிடவில்லை.அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளுக்கு இந்த நேரத்தில் பதிலளிக்க வேண்டாம் என்று முன்னாள் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார் என்றும் முன்னான் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை கடந்த வாரம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜனாதிபதி ஆணைக்குழு முன்மொழிந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
 • View
Added news 
சுவிட்சர்லாந்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 16 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ‘சுவிஸ்மெடிக்' என்று அழைக்கப்படும் அந்த நாட்டின் மருத்துவ கண்காணிப்பு குழு இந்த தகவலை தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த கண்காணிப்பு குழு வெளியிட்டுள்ள அறிக்கையில்,தடுப்பூசி போட்டுக்கொண்ட 364 பேருக்கு பாதகமான எதிர்வினைகள் ஏற்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவர்களில் கடுமையான பக்க விளைவுகளை எதிர் கொண்ட 16 பேர் மாறுபட்ட இடைவெளியில் உயிரிழந்துள்ளனர். அவர்களின் சராசரி வயது 86.‌தற்போது கிடைத்திருக்கும் தகவல்களின்படி நோய்த்தொற்றுகள் இருதயம் மற்றும் நுரையீரல் சம்பந்தமான நோய்களால் மரணம் ஏற்பட்டதாக தெரிகிறது. அதேசமயம் தடுப்பூசி தான் மரணத்துக்கு காரணம் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 • View
Added news 
டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியை பிரதமர் மோடி செலுத்திக்கொண்டார். பிரதமர் மோடி கொரோனா தடுப்பூசிக்கான முதல்கட்ட தடுப்பூசியை இன்று எடுத்துக்கொண்டார்.தகுதியான அனைவரும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முன்வர வேண்டும் என பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.அனைவரும் ஒன்றிணைந்து கொரோனா இல்லாத நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்று பிரதமர் மோடி கூறினார்.
 • View
Added news 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த விவரஅறிக்கையை இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,10,96,731 உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 15,510 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,57,157 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றின் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,07,86,457  ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 11,288 பேர் குணமடைந்துள்ளனர். குணமடையும் விகிதம் 97.07 சதவீதமாக குறைந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.41 சதவீதமாக உள்ளது.நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 1,68,627 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நாடு முழுவதும் இதுவரை 1,43,01,266 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
 • View
Added a post 
உடனே மனது ஏற்காது. ஆனால் உண்மை.நம்மில் யாருமே இன்னும் பல ஆண்டுகள் உயிரோடு இருக்கப்போவதில்லை. போகும் போது எதையும் எடுத்துக்கொண்டு போகப் போவதில்லை.ஆகவே அதிக சிக்கனமாக இருக்காதீர்கள்.செலவு செய்ய வேண்டியவற்றிற்கு செலவு செய்யுங்கள். மகிழ்ச்சியாக இருக்கவேண்டிய நேரத்தில் மகிழ்ச்சியாக இருங்கள்.உங்களால் முடிந்த தான தர்மங்களை யோசிக்காமல் செய்யுங்கள்!எதற்கும் கவலைப் படாதீர்கள். நீங்கள் கவலைப் படுவதால் எதையும் நிறுத்த முடியுமா? வருவது வந்தே தீரும்!நாம் இறந்த பிறகு, நமது உடைமைகளுக்கு என்ன ஆகுமோ என்று கவலைப் படாதீர்கள். அந்த நிலையில், மற்றவர்களுடைய பாராட்டுக்களோ அல்லது விமர்சனங்களோ உங்களுக்குத் தெரியப் போவதில்லை.நீங்கள் கஷ்டப்பட்டு சேர்த்தவை அனைத்தும், உங்கள் வாழ்க்கையோடு சேர்த்து முடிவிற்கு வந்துவிடும். உங்களைக் கேட்காமலேயே அவைகள் முடிக்கப்பட்டுவிடும்.உங்களின் குழந்தைகளைப் பற்றிக் கவலைப் படாதீர்கள். அவர்களின் வாழ்க்கை அவர்களுக்கு விதித்த விதிப்படிதான் அமையும். அதில் நீங்கள் எந்த மாற்றத்தையும் செய்வதற்கு வழியில்லை!சம்பாதிக்கிறேன் என்று பணத்தைத் தேடி அலையாதீர்கள். பங்குச் சந்தைகள் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். பணத்தைவிட உங்களின் ஆரோக்கியம் முக்கியம்.பணம் ஆரோக்கியத்தை மீட்டுத் தராது!ஆயிரம் ஏக்கர் விளைநிலம் இருந்தாலும், நாளொன்றிற்கு அரை கிலோ அரிசிக்கு மேல் உங்களால் உண்ண முடியாது.அரண்மனையே என்றாலும் கண்ணை மூடி நிம்மதியாகத் தூங்க எட்டுக்கு எட்டு இடமே போதும். ஆகவே ஓரளவு இருந்தால், இருப்பது போதுமென்று நிம்மதியாக இருங்கள்!ஒவ்வொரு குடும்பத்திலும், ஒவ்வொரு மனிதனுக்கும் பிரச்சினைகள் இருக்கும். பிரச்சினை இல்லாத மனிதனைக் காட்டுங்கள் பார்க்கலாம்? ஆகவே உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள்.பணம், புகழ், சமூக அந்தஸ்து என்று மனதைப் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.நீங்கள் மகிழ்ச்சியாகவும், ஆரோக்கியமாகவும், நீண்ட ஆயுளுடனும் இருந்து மற்றவர்களுக்கு உதாரணமாகத் திகழுங்கள்!யாரும் மாற மாட்டார்கள். யாரையும் மாற்ற முயற்சி செய்யாதீர்கள். அதனால் உங்களின் நேரமும் ஆரோக்கியமும்தான் கெடும்.நீங்கள் உங்களுக்கான சூழ்நிலையை உருவாக்கி, அதன் மூலம் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள்.இந்தப் பதிவை நீங்கள் அடிக்கடி திரும்ப திரும்ப படித்தால், உங்கள் வாழ்க்கை நிச்சயம் கவலையில்லாமல் நகரும்!
 • View
Added a post 
சாம்பாரை  இறக்கும்போது, அதில் வறுத்துப் பொடித்த தனியாப் பொடியைத் தூவி இறக்கினால், கும்மென்று வாசனை தூக்கும்.மோர்க் குழம்பு செய்யும்போது, சிறிதளவு ஓமத்தை அரைத்துவிட்டால், குழம்பு  ருசியாகவும்  வாசனையாகவும் இருக்கும்.நெய் காய்ச்சும்போது, சிறிதளவு உப்பு சேர்த்துக் காய்ச்சினால், நெய் வாசனையாக இருப்பதோடு,  நீண்ட நாள் கெடாமலும் இருக்கும்.வடை, பக்கோடா செய்யும்போது, ஒரு தேக்கரண்டி  ரவை கலந்து செய்தால், பக்கோடா மொறுமொறுப்பாக இருக்கும்.இட்லிப்பொடி  அரைக்கும்போது, சிறிது வேர்க்கடலை சேர்த்து அரைத்து வைத்துக்கொண்டால்,சுவை கூடுதலாகும்.ரவா தோசை செய்யும்போது 2 தேக்கரண்டி சோளமாவு சேர்த்து செய்தால், தோசை நன்கு சிவந்து மொறுமொறுவென்று இருப்பதோடு, உடம்பிற்கு நல்லது.எதிர்பாராமல் விருந்தாளி வந்துவிட்டால், பஜ்ஜி போட காய்கறி இல்லையே என்று கவலைப்படவேண்டாம். பஜ்ஜிக்கான மாவைத் தயாரித்து,அதில் தோலுடனான  வறுத்த வேர்க்கடலையை தோய்த்து பஜ்ஜி போடலாம். இது சுலமான பஜ்ஜி. சுவையாகவும் இருக்கும்.இரவில் பால் சாப்பிடும் பழக்கம் இருந்தால், பாலில் 6 பூண்டுப் பற்களை போட்டுக்காய்ச்சி சாப்பிட்டால், கொலாஸ்ட்ரல் பிரச்சினையே வராது.* வத்தக் குழம்பு செய்யும்போது சிறிது கார்ன் ஃப்ளவர் மாவைக் கரைத்து ஊற்றவும். சுவையும் சத்தும் கூடும்.* வாழைப்பூ அடைக்கு பூவை அப்படியே நறுக்கிப் போடக்கூடாது. வாழைப்பூவை முக்கால் பதத்துக்கு வேக வைத்து மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி எடுத்து, மாவில் கலந்து அடை செய்யவும். சுவையாக இருக்கும்.* நுங்கை வாங்கி வந்ததும் சிறிது னேரம் ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். பிறகு எடுத்து தோலை உரித்தால், எளிதாக வரும். ஜில்லென்று இருக்கும்.* கூட்டு செய்யும்போது, உளுத்டஹ்ம் பருப்பு டஹ்னியா இவைகளை அரைத்து விட நேரம் இல்லையென்றால், பரவாயில்லை. கொஞ்சம் ரசப்பொடியைசேர்த்தால், அரைத்துவிட்ட அதே டேஸ்ட் கிடைக்கும்.* முட்டைக் கோஸை பொடியாக நறுக்கி, வதக்கி மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தால், சுவையான ‘ கோஸ் துவையல்’ தயார்.* எலுமிச்சை ஊறுகாய் போடுவதற்கு முன், நன்றாகக் கொதிக்கும் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரையைப் போட்டுக் கலக்கவும். பிறகு முழு பழங்களைப் போட்டு மூடி வைத்து விடவும். 10 நிமிடங்கள் கழித்து எடுத்து, நறுக்கி ஊறுகாய் போட்டால், மறுநாளே உபயோகிக்கலாம். கசப்பு அடியோடு இருக்காது.* கிரைண்டர் குழவியை செங்குத்தாக வைத்துத்தான் கழுவ வேண்டும். படுக்கை வாக்கில் கழுவினால், பேரிங் பழுதாகிவிடும்.* இட்லிக்கு உளுந்துக்குப் பதிலாக மொச்சை பயன்படுத்தலாம். அதிக ஊட்டச் சத்து கிடைக்கும். உளுந்துக்கும் இதற்கும் மணம், சுவையில் வேறுபாடு தெரியாது. செலவும் குறைவு.* இட்லிக்கு மாவு அரைக்கும்போது, உளுந்தை சற்றுக் குறைத்துவிட்டு, இளம் வெண்டைக்காயை நறுக்கிப் போட்டு ஊற வைத்து அரைக்கவும். இட்லி மிருதுவாக வரும்.* எள்ளுக் கொழுக்கட்டைக்கு எள்ளை வறுக்கும்போது அத்துடன் கொஞ்சம் கசகசாவையும் வறுத்துப் பொடித்துச் சேர்த்தால், சுவையும் வாசனையும் அள்ளும்.* அதிரசம் செய்யும்போது, மாவுடன் சிறிது பேரீச்சம்பழம் சேர்த்தால், மிகவும் ருசியாக இருக்கும். தேகுழல், ஓமப்பொடி செய்யும்போது உருளைக் கிழங்கை வேஅக் வைத்து ,மாவுடன் கலந்து பிசைந்தால், சுவை கூடும்.* அரிசி மாவில் செய்வது போலவே கோதுமை மாவு, மைதா, ரவையிலும் தட்டை, முறுக்கு செய்யலாம்.* வெதுவெதுப்பான நீரில் வெல்லத்தைக் கரையவிட்டு, மாவைக் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால், அப்பம் புஸ்ஸென உப்பி வரும்.* பனீர் பொறிக்கும்போது, எண்ணெயில் சிறிதளவு உப்பு போட்டு, பொறித்தால், சீராகப் பொறியும். சாதாரணமாகப் பொறிக்கும்போது சில இடங்களில் கருகுவது போல கருகவும் செய்யாது.* காலிஃப்ளவரை ஃப்ரிஜ்ஜில் வைக்கும்போது, ப்ளாஸ்டிக் கவரில் போட்டு வைக்கக் கூடாது. அடியில் உள்ள கிடிஸ்டரில் வைக்கலாம். அதிலும் தண்டுப் பகுதி மேற்புறமாக இருக்கும்படி வைத்தால் ஈரம் பூவின் மேல் தாக்காது.* ஜாங்கிரிக்கு நீரில் ஊற வைத்த உளுத்தம்பருப்பை விழுதாக அரைத்தவுடன் ஒரு கப் உளுந்து விழுதுக்கு ஒரு டீஸ்பூன் அரிசிமாவைக் கலந்து பிழிந்தால், உடையாமல் முழுதாக வரும்.
 • View
Added a post 
திரையில் விரலால் ஏதாவது கிறுக்கிப் பாருங்கள். அசந்து போவீர்கள். திரும்ப திரும்ப தொட்டுப் பாருங்கள் அழகாக இருக்கும். https://www.csh.bz/line/05xp.html
 • View
Added a post 
நமது வீட்டில் நாம் பயன்படுத்தும் எல்லா பொருட்களுக்கும், ஒரு காலாவதி நாள் இருக்கிறது. அதை முதலில் தெரிந்துக் கொள்ளுங்கள்..!!டூத்பிரஷ்..  மூன்று மாதத்திற்கு ஒருமுறை உங்கள் டூத் பிரஷை மாற்ற வேண்டும். இல்லையேல் இதனால் கூட நோய் தொற்று, உடல்நலக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு.முக்கியமாக குழந்தைகள் உபயோகப்படுத்தும் டூத் பிரஷ்களை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டியது மிகவும் அவசியம்.தலையணை.. இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு ஒருமுறை புதிய தலையணை மாற்ற வேண்டும். ஒன்று, அதன் வடிவம் மாறி கழுத்து வலி உண்டாக காரணியாக இருக்கும். மற்றொன்று வீட்டில் அதிகம் தூசு சேரும் பொருள் தலையணை தான். அதன் மூலமாக சரும அரிப்பு அல்லது தும்மல், சளி, இருமல் கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக இருக்கும். இந்த இரண்டு - மூன்று வருட இடைவேளையில் சீராக அவ்வப்போது தலையணையை துவைத்து பயன்படுத்த வேண்டியது அவசியம். கடைசியாக உங்கள் வீட்டு தலையணையை எப்போது துவைத்தீர்கள்? மாற்றினீர்கள்?உள்ளாடை..வருடத்திற்கு ஒருமுறை மாற்றியே ஆகவேண்டும். இல்லையேல் பாக்டீரியா தொற்று பிரச்சனைகள், அரிப்பு, எரிச்சல், புண் போன்றவை பிறப்புறுப்புகளில் ஏற்படும். முக்கியமாக சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். சமீபத்திய ஆய்வில் ஐந்தில் ஒரு ஆண் தினமும் காலையில் சுத்தமாக உள்ளாடை அணிவதில்லை என்ற தகவல் வெளியாகியிள்ளது.குளியல் டவல்.. வருடத்திற்கு ஒருமுறை குளியல் டவலை மாற்ற வேண்டும். குளியல் டவலில் சீக்கிரம் ஃபைபர் தன்மை இழப்பு நேரிடும். இதனால் அதில் பாக்டீரியா தொற்று அதிகரிக்க துவங்கும். நீங்கள் துவைத்தே பயன்படுத்தினாலும், அதில் பாக்டீரியா தான் அதிகரிக்குமே தவிர, உங்களுக்கு நன்மை விளைவிக்காது.ஃபீடிங் நிப்பிள்.. குழந்தைகளுக்கு பால் தர, அழாமல் இருக்க நாம் பயன்படுத்தும் ஃபீடிங் நிப்பிளை நான்கு அல்லது எட்டு வாரங்களுக்கு ஒருமுறை புதிதாக மாற்ற வேண்டும். அதில் ஏற்படும் கிழிசல், கிராக் போன்றவை குழந்தைகளுக்கு சுகாதாரமற்றதாக மாறும். எனவே, ஓரிரு மாதத்திற்கு ஒருமுறை அதை கட்டாயம் மாற்ற வேண்டும்.சீப்பு..வாரத்திற்கு ஒரு முறை உங்கள் சீப்பை கழுவி, சுத்தம் செய்ய வேண்டும். வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். உங்கள் வீட்டில் கழிவறைக்கு இணையாக அழுக்கு சேரும் இன்னுமொரு பொருள் சீப்பு தான். முக்கியமாக வீட்டில் அனைவரும் தனித்தனி சீப்பு பயன்படுத்த வேண்டியது அவசியம்.காலணிகள்.. ஆறு மாதத்தில் இருந்து ஒரு வருடத்திற்குள் காலணிகள் மாற்ற வேண்டும். அடிக்கடி காலணிகளை கழுவி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிக வியர்வை தேங்கும் காரணத்தால் சரும தொற்று/பிரச்சனைகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளன. ஸ்பாஞ்ச்..பாத்ரூம், கிச்சன், தரைகள் துடைக்க, சுத்தம் செய்ய பயன்படுத்தும் பஞ்சை இரண்டு வாரத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இல்லையேல் ஃபங்கஸ் தொற்று அதிகரிக்கும். முக்கியமாக இதன் காரணத்தால் வீட்டில் பாக்டீரியாக்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.சுத்தம் செய்யும் பொருட்கள்..வீடு, கழிவறை, தரை சுத்தம் செய்ய பயன்படுத்தும் பிரஷ், குச்சிகள், கையுறைகள் போன்றவற்றை மூன்று மாதத்திற்கு ஒருமுறை அல்லது ஆறு மாதத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அதிகமாக கெமிக்கல் ஒட்டும் காரணத்தால் இவை சுகதாரமற்ற பொருளாக வீட்டில் அண்டியிருக்கும்.ஷூ..ரன்னிங் ஷூக்களை வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். நீங்கள் கேசுவலாக பயன்படுத்தும் ஷூக்களை விட அதிக வியர்வை உறிஞ்சுகிறது ரன்னிங் ஷூ. எனவே, உங்களுக்கே தெரியாமல் அதில் பாக்டீரியாக்கள் அதிகமாக அண்டியிருக்கும்.விரிப்பு..மெத்தை விரிப்பு நம்மில் பலரும் பல வருடங்கள் மாற்றாமல் பயன்படுத்தும் பொருள். ஐந்தில் இருந்து எட்டு வருடத்திற்கு ஒருமுறை மெத்தை விரிப்பை மாற்ற வேண்டும். இரண்டு வாரம் அல்லது ஒரு மாதத்திற்கு ஒருமுறையாவது மெத்தை விரிப்பை துவைத்து சுத்தமாக பயன்படுத்த வேண்டும்.டெப்லான் பேன்..வீட்டில் சமையல் செய்யும் உணவு பொருட்களுக்கு மட்டுமல்ல, சமையல் செய்ய நாம் உபோயோகப்படுத்தும் பாத்திரங்களுக்கும் கூட காலாவதி நாள் இருக்கிறது. டெப்லான் பாத்திரங்களை மூன்றில் இருந்து ஐந்து வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.பிளாஸ்டிக்..பிளாஸ்டிக் டிப்பன் பாக்ஸ்களை தான் இன்று பிள்ளைகளுக்கு பெற்றோர் அதிகம் வாங்கி தருகிறார்கள். பல டிசைன், வடிவங்களில் கிடைக்கின்றன. ஆனால், இவற்றை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும். இல்லையேல் நச்சு தன்மை அதிகமாகிவிடும்.கம்பளம்..கால் துடைக்க பயன்படுத்தும் கம்பளத்தை இரண்டில் இருந்து நான்கு வருடத்திற்கு ஒருமுறை மாற்ற வேண்டும். அவ்வப்போது சீரான இடைவேளையில் சரியாக துவைத்து பயன்படுத்த வேண்டும். நம் வீட்டில் அதிகமாக பாக்டீரியாக்கள் தாங்கும் பொருள் கம்பளம் தான்.
 • View
Added a post 
நமது உடல் ஆரோக்கியத்திற்கு  மிக சிறந்த உணவை நம்மால் உண்ணமுடியும். உதாரணமாக--1.  ரெடிமேடாக விற்கும் நெல்லிக்காய் வத்தல். (தினமும்ஒன்று)2.  விஷம் கலந்துள்ள சர்க்கரைக்கு பதிலாக வெல்லம் / நாட்டு சர்க்கரை.3.  பிரிட்ஜில் வைக்காத பொருள்கள்.4.  ஒரு கேரட்டுடனும் , (அல்லது)சிறிது தேங்காயுடனும் ஒரு பேரீச்சம் பழத்தை சிறுக சிறுக கடித்து ஒன்றாக சுவைப்பது.(இது --- கண்ணுக்கும், இரத்தம் அதிக மாவதற்கும், அறிவிற்கும், ஞாபக சக்திக்கும்  நல்லது.)5.     80 சதம் கெமிக்கல்கள் உள்ள பாக்கெட் பாலை தவிர்ப்பது நல்லது.6.   தண்ணீராகவே இருந்தாலும் நாட்டு பாலை வாங்க முயற்சிக்கலாமே.7.   முடிந்தவரை பழுப்பு நிறத்தில் உள்ள கல் உப்பை மட்டுமே பயன்படுத்தலாமே.8.   சாதத்தை வடித்து சாப்பிடலாமே.9.   வடித்த கஞ்சியை பழய சாதம் தயாரிக்க பயன்படுத்தலாமே.10.   இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கும் பாத்திரத்தை குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு வருக்கும் தனித்தனியாக வைத்து பயன் படுத்தலாமே.11.   ஒரு நாளின் எல்லா நேரத்திலும் கீழே கண்டபடி சுவாசித்து பழகலாமே.வேகமாக தொப்புள் வழியே காற்று உள்ளே வந்து , மெதுவாக உச்சந்தலை வழியே வெளியே செல்வதாக மனதில் நினைத்தபடியே சுவாசிக்கலாமே.12. காலையில் முதல் வேலையாக அதிக தண்ணீரை குடித்து மலத்தை கழித்துவிடலாமே.  (அ) வெதுவெதுப்பான தண்ணீரை பயன் படுத்தலாமே.(அ) உப்பும் , எலுமிச்சை சாறும் கலந்து குடிக்கலாமே. ஒரே மாதத்தில் குடல் நார்மலாக செயல் படும் நிலைக்கு வந்து விடுமே.13.   வடக்கு பக்கம் தலைவைத்து படுப்பதை தவிர்க்கலாமே.14.   பசிக்கும்போது உடைத்த-கடலை , முளைகட்டிய பயறுகளில்  ஏதாவது ஒன்று, வேர்க்கடலை கொய்யா பழம் போன்ற விலை மலிவான பொருட்களை பயன் படுத்தி பழகலாமே.15.   தினமும் சூரியன் நம்மீது 10 to 20 நிமிடம் படும்படி இருக்கலாமே.பல பல லட்ச ரூபாய் மருத்துவ செலவை குறைக்கலாமே.16.   நமது மகிழ்ச்சி என்பது வெளியில் எந்த பொருளிலும் இல்லை.நாம் நினைக்கும் நேர் மறை எண்ணத்தில் மட்டுமே இருப்பதை நம்பலாமே.17.  எண்ணெய் குளியல், குடல் சுத்தம், போன்றவற்றை கடைபிடிக்கலாமே.18.   மிக சிறந்த உணவையும் சாப்பிடாமல், மனக் கட்டுப் பாடுடன் படையலைப் போட்டு, அதை பார்த்து ரசித்த படி இருக்கும் போதுஅதன் சத்துகளை உடல் கிறகிப்பதை உணர்ந்த பிறகு நிதானமாக சிறிது சாப்பிட்டதுமே திருப்தி உண்டாவதை உணரலாமே. 19.  அடிக்கடி உண்ணா விரதம் இருந்து ,உடல் காற்றின் உதவியுடனும் செயல் படுவதை ரசனையுடன் உணரலாமே.20.   செக்கு எண்ணெய்யின் விலை அதிகமாக இருந்தாலும் அதையே பயன்படுத்தலாமே.  சுட்ட எண்ணையை மீண்டும் பயன் படுத்துவதை தவிர்க்கலாமே.21.  மைதா பொருட்களை தவிர்க்கலாமே.22.  வெது வெதுப்பான நீரை முதலில் தலையில் ஊற்றியும் , சாதாரண நீரை முதலில் காலில் இருந்து ஊற்றியும் குளிக்கலாமே.குளிக்கும் போது வாயை மூடி இருக்கலாமே. பலர் அப்போது வாயால் சுவாசித்து உடல் நலத்தை கெடுத்து கொள்வதை கவனிக்கலாமே.23.   தூக்கம் உடனே வராத மனநிலையில் இருப்பவர்கள், கடைசி சொட்டு காற்றையும் வெளியே விட்டு விட்டு, மூச்சை இழுக்காமல் இருக்கவும்.அதிகப்படியான காற்றை வேகமாக முடிந்த வரை இழுத்து ,சிறிது நேரத்தில் மெதுவாக வெளியே விடலாமே.  இவை ஒரு சுற்று சுவாசம்.இப்படி இருபது சுற்றுவரை  எண்ணுவதற்கு முன்பே நாம் தூங்கி விடுகிறோம். 24. மிக எளிதான உடற்பயிற்சி: தோப்புக்கரணத்தை முடிந்த வரை போடலாமே. படிப்படியாக அதிகப் படுத்திக் கொள்ளலாமே.அப்போது மூச்சை விட்டபடியே உட்கார வேண்டும். கைகள் பெருக்கல் குறியை போல காதுகளை பிடித்து இருக்க வேண்டும்.25.  வீட்டில் நேர்மறை சக்தி அதிகமாவதற்கு வசம்பு, படிகாரம், எலுமிச்சை, போன்ற பொருள்கள் உதவுகிறது.விருப்பம் உள்ளவர்கள் படுக்கை அறைகளில் மறைவாகவும் வைத்து பயனைப் பெறலாமே.26.  உடலில் நேர்-மறை சக்தி அதிகமாவதற்கு நல்ல எண்ணம் உள்ளவர்களின் அருகில் இருக்கலாமே. (அல்லது)   கோவில் சுற்றலாமே. பிரமிடு அமைப்பின் மையத்தில் வைக்க பட்ட கருங்கல்லில் இருந்து வெளிப்படும் காந்த சக்தியை அருகில் சென்று பெறலாமே. உச்சரிக்க கடினமான வார்த்தைகளை  நாம் தவறு இல்லாமல் படிக்கலாமே. நாம் மனம் ஒன்றி படித்தால் மட்டுமே தவறே இல்லாமல் படிக்க முடியும்.இதுவே மந்திரம்.உச்சரிக்கவே கடினமான (மந்திர) சப்தத்தம்  வேறு ஒருவரிடம் இருந்து வெளிப்பட்டாலும் அந்த சப்தம்  நமது வாயில் இருந்தே வெளிப்படுவதை போலவேநாம் மனதால் நினைக்க முடியும்.ஒருவித காந்த சக்தி நம்முள் வந்து சேர்வதை நம்மால் உணர முடியும்.27.   நாம் நம்பிக்கை வைத்து வணங்கும் அளவுக்கே , நமது காந்த அலைவரிசையானது எங்கும் எப்போதுமே செயல் போட்டபடியே உள்ள பிரபஞ்ச காந்த அலைவரிசையுடன் (ஓரளவுக்கு) ஒத்துப் போகும். எந்த கடவுளை எந்த பெயரில் வணங்கினாலும்,நமக்கு இந்த பிரபஞ்சத்தின் காந்த சக்தி கிடைக்கிறது .நல்ல பலன் கிடைக்கிறது. 28.  இந்த பிரபஞ்சத்தில் உள்ள உயிர் இல்லாத வைகளும்,  உயிர் உள்ள வைகளும் நாம் ஒவ்வொரு வரும்,கடவுளின் ஒவ்வொரு துளிகளே.28.  மாதம் ஒரு முறை யாவது சமையல் அறையில் எல்லா பொருட்களையும் நிறப்பினால் தான் சமையல் சரியாக இருக்கும்.இதுபோல--உடலுக்கு தேவையான எல்லா சத்துக்களையும் உடலில் சேர்க்கவே பண்டிகை காலங்களில் பல தரப்பட்ட உணவு பழக்கவழக்கங்கள் கடைபிடிக்க படுகிறது.சமூகத்தில் சத்துகுறைவால் வியாதி வருவது தடுக்கப்படுகிறது.   சமூக தர்ம பழக்கங்களின் மூலமாக எளிய மனிதர்களுக்கும் நல்லது நடக்கிறது.எலுமிச்சை+இஞ்சி+பூண்டு மருந்து இதய அடைப்பை நீக்குகிறது.கருஞ்சீரகம்+ஓமம்+ வெந்தயம் மருந்து மனிதர்களுக்கு வரக்கூடிய 4448 வியாதிகளையும் தடுத்து கட்டுப்படுத்துகிறது.உடலில் அதிக ஆக்ஸிஜனை சேர்ப்பதன் மூலம் கேன்சரை கட்டுப்படுத்த முடிகிறது.மேலே குறிப்பிட்டவைகளை கடைபிடித்து வாழ நம் எல்லோராலும் எளிதாக முடியும்.இந்த உலகிலேயே மிகவும் உயர்ந்த பதவியையும்,அளவிடவே முடியாத பணத்தையும் வைத்து கொண்டு இருந்தாலும் பயன் இல்லை.தினமும் பரபரப் பாகவே வாழ்க்கையை வாழ்ந்து முடிப்பவர்களே அதிகம் .எல்லா பழத்திலும் தோலும் கொட்டையும் இருப்பதை நினைத்து கவலைபடுபவர்களே அதிகம்.இதுபோலவே--அனைவரிடமும் குறைகளை மட்டுமே கவனித்து குறைகளையே பேசி வாழ்பவர்களே அதிகம்.நாம் நேர்மறை எண்ணத்துடன் வாழும் போது நமது மனம் ,நமது சுவாசத்தை ஆழமாக நிர்வகித்து ,அதிக நிம்மதியையும், அதிக திருப்தியையும்,அதிக ஆயுளையும் தருகிறது.
 • View
Added a post 
வாரம் ஒரு முறையில் கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்#திங்கட்கிழமை:வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது.#செவ்வாய்க்கிழமை:கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும்.#புதன்கிழமை:தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் சளி சேராது, இருந்தாலும் மலத்துடன் வெளியேறிவிடும்.#வியாழக்கிழமை:சுக்கு, மிளகு, சீரகம், ஓமம் சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் ஜீரணம் நன்றாக ஆகும், வயிறு சம்மந்தப்பட்ட நோய்கள் தீரும்.#வெள்ளிக்கிழமை:வெந்தயம், தனியா சமஅளவு சேர்த்து வறுத்து பொடிசெய்து வைத்துக்கொண்டால், ஒரு தேக்கரண்டி போட்டு பனங்கற்கண்டு, சிறிது உப்பு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் பித்தநீர் வெளியேறிவிடும்.ிக்கிழமை:முருங்கைக்கீரை, வெங்காயம், தக்காளி, பூண்டு, மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால், உடலுக்கு இரும்பு சத்து கிடைக்கும்.#ஞாயிற்றுக்கிழமை:சுக்கு மல்லி காபி குடிக்கலாம்.இப்படி பழகிக்கொண்டால் எந்த வியாதியும் வராது, உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
 • View
Added a post 
இவ்வளவு தாங்க வாழ்க்கை:ஃபெமி ஓடெடோலா:   நைஜிரியாவை சேர்ந்தவர். உலக பணக்கார வரிசையில் 1000 கிட்ட இருப்பவர். ஒரு தொலைபேசி நேர்காணலில் கோடீஸ்வரர் ஃபெமி ஓடெடோலாவை வானொலி தொகுப்பாளர்  பேட்டி எடுத்த போது, "உங்களை #வாழ்க்கையில்மகிழ்ச்சியானமனிதராகமாற்றியதுஎன்ன?" என்ற கேள்விக்கு ..ஃபெமி கூறினார்:"நான் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் 4 நிலைகளை கடந்துவிட்டேன், இறுதியாக உண்மையான மகிழ்ச்சியின் அர்த்தத்தை புரிந்துகொண்டேன்."1.முதல் கட்டமாக செல்வத்தையும் வழிமுறைகளையும் குவிப்பதாக இருந்தது. ஆனால் இந்த கட்டத்தில் நான் விரும்பிய மகிழ்ச்சி எனக்கு கிடைக்கவில்லை.2.பின்னர் மதிப்புமிக்க பொருட்கள் மற்றும் பொருட்களை சேகரிக்கும் இரண்டாம் கட்டம் வந்தது. ஆனால் இந்த விஷயத்தின் விளைவும் தற்காலிகமானது என்பதை நான் உணர்ந்தேன், மதிப்புமிக்க பொருட்களின் மீதான ஈர்ப்பு நீண்ட காலம் நீடிக்காது.3.பின்னர் பெரிய திட்டங்களைப் பெறுவதற்கான மூன்றாம் கட்டம் வந்தது. நைஜீரியா மற்றும் ஆபிரிக்காவில் 95% டீசல் விநியோகத்தை நான் வைத்திருந்தேன். ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் நான் மிகப்பெரிய கப்பல் உரிமையாளராக இருந்தேன். ஆனால் இங்கே கூட நான் கற்பனை செய்த மகிழ்ச்சி கிடைக்கவில்லை.4. நான்காவது கட்டம், என் நண்பர் ஒருவர் ஊனமுற்ற சில குழந்தைகளுக்கு சக்கர நாற்காலி வாங்கச் சொன்ன நேரம். சுமார் 200 குழந்தைகள்.நண்பரின் வேண்டுகோளின்படி, நான் உடனடியாக சக்கர நாற்காலிகள் வாங்கினேன்.ஆனால் நண்பர் நான் அவருடன் சென்று சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு ஒப்படைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். நான் தயாராகி அவருடன் சென்றேன்.அங்கே நான் சக்கர நாற்காலிகளை குழந்தைகளுக்கு என் சொந்த கைகளால் கொடுத்தேன். இந்த குழந்தைகளின் முகங்களில் விசித்திரமான பிரகாசத்தை நான் கண்டேன். அவர்கள் அனைவரும் சக்கர நாற்காலிகளில் உட்கார்ந்து, சுற்றி நகர்ந்து வேடிக்கை பார்த்தனர்.அவரகள் ஏதோ சுவர்க்கத்தை கண்டதுபோல் மகிழ்ச்சியில் ஆழ்ந்து இருந்தனர்.எனக்குள் உண்மையான மகிழ்ச்சியை உணர்ந்தேன். நான் வெளியேற முடிவு செய்தபோது குழந்தைகளில் ஒருவர் என் கால்களைப் பிடித்தார். நான் என் கால்களை மெதுவாக விடுவிக்க முயன்றேன், ஆனால் குழந்தை என் முகத்தை உற்றுப் பார்த்து  என் கால்களை இறுக்கமாக பபிடித்துக்கொண்டது.நான் குனிந்து குழந்தையிடம் கேட்டேன்: உங்களுக்கு வேறு ஏதாவது தேவையா?இந்த குழந்தை எனக்கு அளித்த பதில் எனக்கு மகிழ்ச்சி அளித்தது மட்டுமல்லாமல், வாழ்க்கையைப் பற்றிய எனது அணுகுமுறையையும் முற்றிலுமாக மாற்றியது. இந்த குழந்தை கூறியது :"நான் உங்கள் முகத்தை நினைவில் வைக்க விரும்புகிறேன், உங்களை  சொர்க்கத்தில் சந்திக்கும் போது, நன்றி சொல்ல உங்கள் முகம் சரியாக அடையாளம் காணப்பட்டு இருக்க வேண்டும்
 • View
Added a post 
கடவுள் எங்கே இருக்கிறார்? பதினைந்து இராணுவ வீரர்கள் மற்றும் அக்குழுவின் மேஜரும் இமாலயாவில் மூன்று மாத காலம் பணி புரிய சென்று கொண்டிருந்தார்கள்.மிகவும் குளிர்ந்த சீதோஷ்ண நிலையும், இடை இடையே பனி மழையும் அவர்கள் மலை ஏறுவதை மிகவும் கடினப்படுத்தியது.இந்நேரத்தில், யாராவது ஒரு கப் தேநீர் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், அந்த மேஜர் மனமும் உடலும் ஆசைப்பட்டது.ஆனால் அது ஒரு வெற்று ஆசை என அறிந்ததும், அதை பொருட்படுத்தாமல், ஒரு மணி நேரம் நடக்க, வழியில் ஒரு மிகச்சிறிய கடை ஒன்றை கண்டார்கள்.அது ஒரு தேநீர் கடைப்போலவே இருந்தது. ஆனால் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது.அதிர்ஷ்டம் இல்லை, தேனீர் இல்லை.ஆனாலும் நாம் சில நிமிடம் ஒய்வெடுக்கலாம். நாமும் மூன்று மணி நேரம் நடந்து வந்திருக்கிறோம் என்றார் மேஜர்.அதில் ஒரு இராணுவ வீரர் சொன்னார்,"சார், இது ஒரு தேனீர் கடை தான், உள்ளே தேனீர் தயாரிக்க எல்லாம் இருக்கக்கூடும், நாம் பூட்டை உடைக்கலாமே" என்றார்.இது ஒரு தர்மசங்கடமான நிலை மேஜருக்கு, 'தன்னுடைய தளர்ந்த வீரர்களுக்கு தேனீர் கொடுக்க பூட்டை உடைப்பதா? அல்லது இப்படிப்பட்ட ஒரு தகாத காரியத்தை செய்யாமல் இருப்பதா?'என்று குழம்பினார்.சிறிது நேரம் கழித்து, அவர் அறிவை விட அவரின் மனம் ஜெயித்தது.வீரர்களிடம் பூட்டை உடைக்கச்சொன்னார்.அவர்களின் அதிர்ஷ்டம், உள்ளே தேனீர் தயாரிக்க அனைத்து பொருட்களும் இருக்க, பிஸ்கெட் பாக்கெட்டுகளும் இருந்தது.அனைவரும் தேநீர் மற்றும் பிஸ்கட்டுகளை நன்றாக சாப்பிட்டு விட்டு புறப்பட தயாராகினார்கள்.நாம் இந்த கடையின் பூட்டை உடைத்து தேனீர் மற்றும் பிஸ்கெட் உண்டோம், நாம் ஒரு மோசமான திருடர்கள் அல்ல, இது ஒரு சூழல், நாம் இந்த தேசத்தை காக்கும் தேசத்தாயின் பிள்ளைகள். இப்படிப்பட்ட நினைவு அவரை வந்து இடிக்க...மேஜர், ஆயிரம் ரூபாயை தன் பர்ஸில் இருந்து எடுத்து, அங்கு இருந்த சர்க்கரை டப்பாவின் கீழே வைத்து விட்டு, கதவை மூடி விட்டு.., தன் குற்ற உணர்ச்சி துறந்து, புறப்பட்டார்...அடுத்த மூன்று மாத காலத்தில், அவரின் தலைமையில் வீரர்கள் தீவிர கிளர்ச்சிக்கு உள்ளாகக்கூடிய அவ்விடத்தில் பணியாற்றினார்கள்.அடுத்த குழு வந்து அவர்களை விடுவித்தது.அதே வழியில் அவர்கள் திரும்ப, அதே தேனீர் கடை... ஆனால் இப்பொழுது அது திறந்திருந்தது.அதன் முதலாளியும் இருந்தார்.ஒரு வயதான அந்த கடை முதலாளி, தீடீரென்று தனக்கு கிடைத்த அந்த பதினாறு விருந்தாளிகளையும் வரவேற்று அமரச்சொன்னார்.எல்லோரும் தேனீரும் பிஸ்கெட்டும் உண்டு களித்தனர்.அந்த வயதானவரிடம், இப்படி ஒரு அத்வான இடத்தில் தேனீர் விற்பது பற்றியும் அவரின் வாழ்க்கை சூழல் பற்றியும் பேசினர்.அவரிடம் பல அனுபவ கதைகள் இருந்தது. மிகவும் நிறைந்த நெஞ்சுடன், கடவுள் பக்தியும் இருந்தது.ஒரு வீரர் கேட்டார், தாத்தா.. கடவுள் இருக்கிறார் என்பது உண்மை எனில், அவர் எதுக்கு உங்களை இப்படி, இங்கே, இவ்வளவு வறுமையுடன் வைத்திருக்க வேண்டும்..? என்று."அப்படி சொல்லாதீர்கள் தம்பி... கடவுள் நிச்சயம் இருக்கிறார்.. அதற்கு என்னிடம் சான்றே இருக்கிறது. மூன்று மாதம் முன்பு, சில தீவிரவாதிகளால், எனது மகன் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டான். நான் எனது கடையை மூடிவிட்டு எனது மகனை மருத்துவமனை கூட்டிச்சென்றேன். அவர்கள் எழுதிக்கொடுத்த மருந்தை வாங்க என்னிடம் பணம் இல்லை. தீவிரவாதிகளுக்கு பயந்து யாரும் எனக்கு கடன் கொடுக்கவும் வரவில்லை. என் நம்பிக்கை ஈற்று போய்விட்டது...கடவுளிடம் கதறி அழுதேன்...ஐயா கனவான்களே, கடவுள் அன்று என்னுடைய கடைக்குள் வந்திருக்கிறார். நான் அழுது ஆற்றிக்கொண்டு என் கடையை வந்தடைந்த பொழுது, என் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. நான் முழுதும் போய் விட்டது என்று நினைத்து கலங்கி, பயந்து உடைக்கப்பட்ட பூட்டை விலக்கி உள்ளே சென்று பார்த்தேன். அங்கே சர்க்கரை டப்பாவின் கீழே ஆயிரம் ரூபாய் இருந்தது.உங்களுக்கு என்னால் அந்த ஆயிரம் ரூபாயின் மதிப்பை வார்த்தைகளால் சொல்ல இயலாது.'கடவுள் இருக்கிறார்' என்பதற்கு இதை விட நான் என்ன சொல்ல...? என்று முடித்தார் அவர்.அவர் கண்களில் அதற்கான நம்பிக்கை மிளிர்ந்தது.அந்த பதினைந்து ஜோடிக்கண்களும் அந்த மேஜரின் ஒரு ஜோடிக்கண்களை இப்பொழுது துடிப்புடன் பார்த்தன.அந்த ஒரு ஜோடிக்கண், எதையும் சொல்லாதீர்கள் என்பதை ஒரு அதிகார ஆணையாக பிறப்பித்ததை, அவர்கள் உணர்ந்தார்கள்.அந்த மேஜர் எழுந்து, எல்லாவற்றிற்கும் பணம் கொடுத்தார்.அந்த முதியவரை தழுவிக்கொண்டு_ ஆம் தாத்தா, எனக்கும் தெரியும்.. கடவுள் இருக்கிறார்.. தாத்தா.. உங்கள் தேனீர் மிக அபாரம்.. இதை அவர் சொல்லும் பொழுது, அவர் கண்களின் ஓரம் படிந்த ஈரத்தை மீதி பதினைந்து ஜோடிக்கண்களும் பார்க்க தவறவில்லை.நீதி:-யாரும் யாருக்கும் கடவுளாகலாம்...பெறுவதைவிட, அதிகமாக கொடுங்கள்...வெறுப்பதைவிட, அதிகமாக நேசியுங்கள்...அன்பே கடவுள்...🙏🏻
 • View
Added a post 
அனுபவங்கள் கூட்டுவோம்!!அன்புதனை பெருக்குவோம்!!அல்லவை யாவும் நீக்குவோம்!!
 • View
Added a post 
சொந்த தாய்நாட்டை விட்டு, வேலைவாய்ப்பு, சொந்ததொழில், படிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக அயல்நாட்டிற்கு புலம்பெயர்ந்து சென்று வாழ்ந்து சில வருடங்களில் அந்த நாட்டிலேயே வாழ்க்கையைத் தொடர ஆரம்பித்து விடுகிறார்கள். ஒருசிலர் காலப்போக்கில் அந்த நாட்டிலேயே தொடர்ந்திருப்பதால் தமது சொந்த தாய்நாட்டையும் மறந்து விடுகின்றனர். என்ன தான் அயல்நாட்டில் வேலை, தொழில் போன்ற சொந்த காரணங்களுக்காக தங்கி விட நேர்ந்தாலும் சொந்த மண்ணை மறப்பது சரியா?ஆடை மாற்றம், பழக்க வழக்கங்களில் மாற்றம், உண்ணும் உணவில் மாற்றம், பேசும் பேச்சில் மாற்றம், மொழியில் மாற்றம் என பலவகையில் மாறினாலும் சொந்த மண்ணையும், தாய்மொழியான தமிழ் மொழியையும் மறக்கலாமா? இது அயல்நாட்டில் இருக்கும் அனைவரையும் குறிப்பதற்காக சொல்லவில்லை. ஒருசிலர் இந்த மாற்றங்களினால் தாங்களும் மாறிப்போய் தங்களுடைய குடும்பத்தார் மற்றும் நண்பர்களையும் மாற்றிவிடுகிறார்கள்.அயல்நாட்டில் கடினமாக உழைத்து வளர்ந்து விட்ட மற்றும் வளர்ந்து வரும் பலர் செல்வ செழிப்பில் கேளிக்கை விருந்து என்ற பெயரில் மது மற்றும் இதர போதை வஸ்துக்களுக்காக அதிகம் செலவழித்து வருகின்றனர். இம்மாதிரி அநாவசியமான செலவுகளை மனமார உணர்ந்து, அதை குறைத்துக் கொள்ளலாம். படிப்படியாக அந்த அநாவசிய செலவுகளை நிறுத்தவும் முயற்சி எடுக்கலாம்.நமது தாய்மண்ணில் சரியான தொழில் இன்றி, வேலைவாய்ப்பின்றி, வாழ்வாதாரத்திற்கு சங்கடப்பட்டு கொண்டிருக்கும் உடன்பிறவா சகோதரர்களுக்கு வழிகாட்ட இந்த தொகையை பயன்படுத்தலாம். நீங்கள் மட்டும் இந்த மனமாற்றத்திற்கு ஆளாகாமல், உங்களின் நண்பர்களையும் நட்புரிமையுடன் இதற்கு உட்படுத்தலாம். நண்பர்களுடன் சேர்ந்து முயற்சி எடுத்து, குழுவாக சேர்ந்து இம்மாதிரி உதவிகளை செய்யலாம்.‘பசித்தவனுக்கு மீனை உண்ணக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’ என்னும் பழமொழிக்கேற்ப வேலைவாய்ப்போ அல்லது தொழிலோ இல்லாமல் சிரமபட்டு வரும் நமது தாய்மண்ணில் வசித்து வரும் உடன்பிறவா சகோதரர்களுக்கு நம்பிக்கையூட்டி ஏதும் உதவிகள் செய்யலாம்.எங்கே தமிழ்?அயல்நாட்டிற்கு சென்று அங்கேயே தொடர்ந்து வசித்து வரும் தமிழ் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் சொல்லிக் கொடுக்கவும் மறந்து விடுகின்றனர். எந்த நாட்டில் வசிக்கிறார்களோ அந்த நாட்டு மொழியிலோ சரளமாக பேசும் அந்த குழந்தைகள் தமிழ் மொழியினை பேச தெரியாமல், படிக்க தெரியாமல் வளர்ந்து வருகிறார்கள். அப்பா, அம்மா என்று கூட சொல்லத் தெரியாமல் வளர்த்து வருகிறார்கள் என்பது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.“தமிழ் வளர்ப்போம்” என கூட்டங்களிலும், விருந்துக் கூட்டங்களிலும் மட்டும் முழங்கிடமாமல், தமிழ் வளர்க்க ஏதேனும் முயற்சி எடுக்க வேண்டும். இதை வீட்டிலிருந்தே தொடங்கலாம். என்ன தான் நேரமின்மை இருந்தாலும், குழந்தைகளுக்கு கொஞ்சம் நேரம் ஒதுக்கி தமிழை கற்றுக் கொடுப்பது மிகவும் அவசியம். இது நாம் நம் தமிழ் மொழிக்கு செய்யும் கடமையாகும். காலத்தின் கட்டாயமும் கூட.சொந்தமண்எங்கு தான் இருந்தாலும் சொந்த நாட்டிற்கு, சொந்த மண்ணிற்கு நேரம் கிடைக்கும் போது குழந்தைகளுடன் சென்று வருவது நல்லது. இதற்காகவும் நேரம் ஒதுக்குங்கள். குழந்தைகளும் அவர்களுடைய தாத்தா, பாட்டி மற்றும் சொந்த பந்தங்களை பற்றியும் நமது தமிழ் பண்பாடு மற்றும் கலாச்சாரங்கள் பற்றியும் புரிந்து கொள்வார்கள். தமிழையும் ஆர்வமாக கற்றுக் கொள்வார்கள்.நீங்கள் அனுபவித்திட்ட தாத்தா, பாட்டி கதைகளையும், அவர்களது அருகாமையையும், வளரும் தலைமுறையும் அனுபவித்திட எண்ணுங்கள். நீங்கள் சிறுவயதில் ருசித்து சாப்பிட்ட பாராம்பரிய உணவு வகைகளை வளரும் தலைமுறையும் ருசித்திட எண்ணுங்கள்.ஏதோ பிறந்தோம், உழைத்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்றில்லாமல், தாய்மண்ணில் உள்ள ஒரு சகோதரனையாவது முன்னேற்ற முயற்சி எடுங்கள். இக்கட்டுரையை படித்துவிட்டு, யாரொருவர் யோசித்து மனமார உதவிட முடிவெடுக்கிறார்களோ அதுவே கட்டுரையாளரின் வெற்றி.- பா. சிவசங்கரன்.*************************************************************************************************************அன்பர்களே.கட்டுரையைப் படித்து விட்டு உங்களின் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள்.உங்களின் மேலான கருத்துக்களை பதிவிடுங்கள்.......
 • View
... or jump to: