Ads

Pure silk half saree Collection

New

  • 1517
  • More
  • 618
  • More
  • 646
  • More
  • 615
  • More
  • 637
  • More
  • 612
  • More
  • 652
  • More
  • 642
  • More
  • 659
  • More
  • 586
  • More
  • 616
  • More
  • 636
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a post 
மிகப் பெரிய சாம்ராஜ்ஜியத்தை கட்டியாளும் அரசன் அவன். அவன் மகள் பட்டத்து இளவரசி திருமணம் செய்துகொள்வதில் நாட்டமில்லாமல் இருந்தாள். தனது குலகுருவின் ஆலோசனையை அடுத்து பல ஆலய திருப்பணிகளை செய்தான் அரசன். இதையடுத்து அரச குடும்பத்தினர் யாவரும் வியக்கும் வண்ணம், இளவரசிக்கு திருமணம் செய்துகொள்ளும் ஆசை எழுந்தது. ‘தனக்குரியவனை தானே தேர்ந்தெடுக்க வேண்டும், அவன் அனைத்திலும் சிறந்தவனாக இருக்கவேண்டும்’ என்று கருதினாள். தன் தந்தையிடம் தனது விருப்பத்தை தெரிவித்து, “அப்பா… அழகோ, பணமோ, பட்டமோ, பதவியோ இவைகள் மட்டுமே என்னை மணப்பவரின் தகுதியாக இருக்கக் கூடாது. அதற்கு மேலும் நான் அவரிடம் சில விஷயங்களை எதிர்பார்க்கிறேன். எனவே எனக்கேற்றவரை தேர்ந்தெடுக்க நீங்கள் உதவவேண்டும் அப்பா” என்றாள்.‘மகள் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டாளே அதுவே சந்தோஷம். மேலும் தனது கணவனை தேர்ந்தெடுக்க நம்மையும் ஆலோசனை கேட்கிறாளே… அது அதைவிட சந்தோஷம்’ என்று மகிழ்ந்த மன்னன் தனது மகளுக்கு திருமணம் செய்துவைக்கும் திட்டத்தை பற்றி குறிப்பிட்டு தகுதியுடையவர்கள் சுயம்வரத்துக்கு விண்ணப்பிக்கலாம் நாலாபுறமும் செய்தி அனுப்பினான்.பல விண்ணப்பங்கள் வந்தன. அவற்றை மிக கவனமாக பரிசீலித்து ஐந்து விண்ணப்பங்களை மட்டும் இறுதி செய்தான் மன்னன். அவர்களை தனது அரண்மனைக்கு வரச் சொல்லி தகவல் அனுப்பினான்.இதைக் கேள்விப்பட்ட இளவரசி, மிகவும் குழப்பமடைந்தாள். “அப்பா இது எனக்கு உண்மையில் சவாலான ஒன்று தான். ஐந்து பேரில் யாரை தேர்ந்தெடுப்பது என்று எனக்கு புரியவில்லை. நீங்களே இவர்களுள் மிகச் சிறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துவிடுங்கள்” என்றாள்.பந்து தன் பக்கமே திரும்பியதையடுத்து மன்னன் மீண்டும் குழப்பமடைந்தான்.தனது குலகுருவை அரண்மனைக்கு வரவழைத்து அவரது பாதங்கள் பணிந்து, தனக்கு முன்னுள்ள சவாலை குறிப்பிட்டான்.அனைத்தையும் நன்கு கேட்ட குரு, மன்னனுக்கு சில ஆலோசனைகள் வழங்கினார். அதைக் கேட்டு முகம் மலர்ந்த மன்னன், “அப்படியே செய்கிறேன் குருவே!” என்றான்.அரண்மனை குதிரைப் பயிற்சியாளர்களை அழைத்து, “நம்மிடம் பழக்குவதற்கு கடினமான குதிரை எதாவது இருக்கிறதா?” என்று கேட்டான்.சற்று யோசித்த பயிற்சியாளர்கள் “ஆம்… அரசே அரேபியாவிலிருந்து வந்த சில குதிரைகள் இருக்கின்றன. மிகவும் அஜானுபாகவான குதிரைகள் அவை. பழக்குவதற்கு மிகவும் கடினமாக முரட்டுத் தனமாக இருக்கின்றன. எதற்கும் கட்டுப்படாத அக்குதிரைகள் பல பயிற்சியாளர்களை உதைத்து கீழே தள்ளி காயப்படுத்தியிருக்கின்றன. அவற்றை என்ன செய்வதென்றே எங்களுக்கு தெரியவில்லை” என்றார்கள்.விபரத்தை குறித்துக்கொண்டான் மன்னன்.மறுநாள் தான் இறுதி செய்த ஐந்து பேரையும் வரவழைத்து குதிரைகள் பற்றி சொல்லி, “உங்களுக்கு தரப்படும் முரட்டுக் குதிரையை யார் அடக்கி அதில் என் மகளையும் ஏற்றிக்கொண்டு சவாரி செய்கிறீர்களோ அவரே என் மகளை மணக்கமுடியும்” என்று அறிவித்தான்.இந்த போட்டியை பற்றி கேள்விப்பட்டவுடன் இளவரசி மிகவும் குழப்பமடைந்தாள். ஏனெனில் சிறு வயதில் குதிரை மீது அமர்ந்து, அது மிரண்டு ஓடி, கீழே விழுந்து அடிப்பட்டதிலிருந்து தனக்கு குதிரையின் கனைப்பு சத்தமோ குதிரையில் ஏறி அமர்ந்து சவாரி செய்வதோ பிடிக்காது என்பது தந்தைக்கு தெரியும். அப்படியிருக்க ஏன் இந்தப் போட்டியை அறிவித்தார் என்று குழப்பமடைந்தாள்.ஆனாலும் தனது தந்தையின் முடிவின் பின்னணியில் நிச்சயம் ஏதாவது அர்த்தமிருக்கும் என்று மனதை சமாதானப்படுத்திக்கொண்டு போட்டிக்கு ஒப்புக்கொண்டாள்.குறிப்பிட்ட நாளன்று அரண்மனை மைதானத்தில் ஒரு குதிரை கொண்டு வந்து நிறுத்தப்பட்டது.மணமகன்கள் ஐந்து பேரும் விருந்தினர் மாளிகைக்கு வரவழைக்கப்பட்டார்கள். இளவரசியை மணம் புரிய அவர்கள் செய்யவேண்டிய சிலவற்றை குறிப்பிட்டு இறுதியில் குதிரையை அடக்கி அதில் இளவரசியுடன் சவாரி செய்யவேண்டியதை பற்றியும் விவரிக்கப்பட்டது.மகளை நோக்கி, “போட்டியின் போது இவர்களுடன் நீ கூட இருக்கவேண்டும்” என்றும் கூறினார். போட்டியாளர்கள் யாருக்குமே இளவரசிக்கு குதிரை மீது இருந்த பயம் பற்றி மூச்சு கூட விடவில்லை. தனித்தனியே பந்தய மைதானத்திற்கு அனைவரும் வெவ்வேறு நேரங்களில் வருவதற்கு ஏற்பாடானது.முதலாமவன் வந்தான். பார்க்க கட்டுமஸ்தாக இருந்தான். இளவரசியை பார்த்தான். குதிரையை சுற்றி சுற்றி வந்தான். குதிரையின் பிடரியை பிடித்து இழுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி பயந்து நடுங்கினாள். அடுத்த சில வினாடிகளில் எப்படியோ குதிரையை அடக்கிவிட்டான். இளவரசியின் கையை பற்றி அனைத்து மேலே ஏற்றினான். இளவரசி மருட்சியுடன் அவனுடன் ஏறினாள். வெற்றிக் களிப்பில் மைதானத்தை சுற்றி சுற்றி வந்தான். ஆனால், இளவரசியோ அச்சம் நீங்காதவளாக கண்களை மூடியபடியே இருந்தாள்.இரண்டாமவன் வந்தான். அவன் தான் இந்த நாட்டிலேயே மிகப் பெரிய செல்வந்தனின் ஒரே மகன் அவன். திடீரென்று கைகளை தட்டினான்… எங்கிருந்தோ ஒரு கட்டுமஸ்தான ஆசாமி வர, அவனிடம், “இந்த குதிரையை அடக்கு” என்று கூற, அவன் சில வினாடிகளில் குதிரையை அடக்கிவிட, அவன் துணையுடன் இளவரசியை குதிரை மீது ஏற்றிக்கொண்டவன் அந்த ஆசாமிக்கு பணமுடிப்பை தந்து அனுப்பினான்.“கையை சொடுக்கினால் நாம் இட்ட வேலையை செய்து முடிக்க பலர் இருக்கும்போது, நாம் ஏன் நமக்கு தெரியாத வேலைகளை செய்ய ரிஸ்க எடுக்கவேண்டும்.. இது தான் என்னோட பாலிஸி” என்றான் இளவரசியை பார்த்து புன்னகைத்து. ஒரு வகையில் இவன் சொல்வது வாஸ்தவம் தான் என்று தோன்றியது இளவரசிக்கு.மூன்றாமவன் வந்தான். பார்க்க மன்மதன் போல இருந்தான். மிக நேர்த்தியாக அழகாக ஆடையுடுத்தியிருந்தான். பந்தயத்தை பற்றி கேள்விப்பட்டதும், “எனக்கு குதிரையேற்றமெல்லாம் தெரியாது. ஆனால், நீ என்னுடன் இருக்கும் நேரத்தை உன்னால் மறக்க முடியாததாக செய்யமுடியும்” என்று கூறி, இளவரசியை பல்லக்கில் ஏற்றி தானும் ஏறி மலைப்பாங்கான இடத்திற்கு சென்றான். அங்கு அருவிகளையும் இயற்கை காட்சிகளையும் அவளுக்கு காண்பித்தான். அரைமணி நேரம் கழித்து மீண்டும் திரும்பினார்கள். சொன்னது போல இளவரசிக்கு மனதுக்கு இதமாக இருந்தது.நான்காமவன் வந்தான். பந்தயத்தை பற்றி கூறியதும், இளவரசியை பார்த்தான். இளவரசி இவனை மருட்சியுடன் பார்த்தாள். குதிரை மீது ஏறுவது என்றால் அவளுக்கு பயம் என்று அவனுக்கு புரிந்துவிட்டது. உடனே “எனக்கு ஒரு பலகையும், தூரிகையும், வண்ணப் பொடிகளும் வேண்டும்” என்று கூறினான். அடுத்த சில நொடிகளில் அவை வந்துவிட சுமார் ஒரு மணிநேரம் செலவிட்டு அந்த இடத்திலேயே, அந்த குதிரை மீது இளவரசி அமர்ந்திருப்பதைப் போல ஒரு தத்ரூபமான அழகான ஓவியத்தை வரைந்துவிட்டான். ஓவியத்தில் தன் அழகை பார்த்து தானே வியந்து வெட்கப்பட்டாள் இளவரசி. அவளுக்கு நெகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது.கடைசியாக ஐந்தாமவன் வந்தான். அவனிடம் பந்தயத்தை பற்றி சொல்லப்பட்டது. குதிரையை சுற்றி வந்து தடவிக்கொடுத்தான். குதிரை பலமாக கனைத்தது. இளவரசி அச்சத்தில் கண்களை மூடிக்கொள்வதை கவனித்தான். குதிரையை மீண்டும் தடவிக்கொடுத்தான். இந்த முறை குதிரை விட்டது ஒரு உதை. தூரப்போய் விழுந்தான். உடைகளை துடைத்துக்கொண்டு எழுந்தான்.நேரே இளவரசியிடம் சென்று “வா நாம் இரண்டு பேரும் தானே ஏறப்போகிறோம். இரண்டு பேரும் குதிரையிடம் செல்வோம்” என்றான். இளவரசி மறுத்தாள். “வேண்டாம்… எனக்கு குதிரைகள் என்றாலே அலர்ஜி. குதிரைகளுக்கும் என்னைக் கண்டால் அலர்ஜி. என்னால் நீங்கள் தோற்றுவிடுவீர்கள்….”“பரவாயில்லை… அதனால் என்ன? ஏற்கனவே கீழே தள்ளிவிட்டுடுச்சு. இதுக்கும் மேல என்ன இருக்கு? பரவாயில்லே வா..” என்று கூறி குதிரையிடம் இளவரசியை அழைத்துக் கொண்டு தானும் சென்று, அதைத் தடவிக்கொடுத்து இருவருமே அதன் மீது ஏறப்போவதால், இருவரையும் அதற்கு பரிச்சயமாக்க முயற்சிகள் செய்தான். குதிரை அந்நியோன்யமாகி ஓரளவு சமாதானமானது தெரிந்தவுடன், தைரியமாக அதன் மீது தானும் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சித்தான்.இளவரசி… “வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு… வேண்டாம் எனக்கு பயமாயிருக்கு” என்று அச்சத்தில் தயங்கினாள்.“பயப்படாதே… நான் விழுந்தாலும் உன்னை விழ விட மாட்டேன்” என்றபடி அவளை ஆசுவாசப்படுத்தி தான் ஏறி இளவரசியையும் ஏற்ற முயற்சிதான். அவன் கொடுத்த உத்வேகத்தில் இளவரசி எப்படியோ குதிரை மீது ஏறிவிட்டாள். பந்தயப்படி இன்னும் குதிரை ஒரு அடி கூட எடுத்து வைக்காத நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம், குதிரை கனைத்தது. கனைப்பு சத்தத்தை கேட்ட இளவரசி பயத்தில் “வீல்” என்று அலறிவிட்டாள். குதிரை மிரண்டு போய் திமிறியதில் இருவரும் கீழே விழுந்தார்கள். இருவரையும் ஒரு உதை விட்டுவிட்டு குதிரை சில அடிகள் தள்ளிப் போய் நின்றது. இருவருக்குமே லேசான அடி. சிராய்ப்புக்கள்.காவலர்கள் ஓடி வந்தார்கள். குதிரை அப்புறப்படுத்தப்பட்டு, இருவருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டது.கீழே விழுந்து குதிரையிடம் உதையும் வாங்கியதில் இளவரசிக்கு கோபம் + சோகம் என்றாலும் போட்டியின் விதிப்படி தோற்றுவிட்ட அவனுக்காக சிறிது பரிதாபப்பட்டாள்.அனைத்தும் முடிந்த பின்னர் மாளிகைக்கு திரும்பினாள் இளவரசி.“எப்படியம்மா போட்டி நடந்தது? உனக்கு ஏற்ற மணமகனை தேர்ந்தேடுத்துவிட்டாயா?”“அப்பா… எனக்கு சற்று குழப்பமாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற்றவர்கள் என்னைக் கவரவில்லை. என்னைக் கவர்ந்தவர்கள் போட்டியில் வெற்றிபெறவில்லை. ஒவ்வொருவரும் ஒரு வகையில் சிறந்தவர்களாக தெரிகிறார்கள்.” என்றாள்.“என்ன செய்யலாம்? நீயே சொல்…”“எனக்கு குழப்பமாக இருக்கிறது அப்பா. நீங்களே எனக்குரியவரை தேர்ந்தேடுத்துவிடுங்கள். உங்கள் முடிவு மீது நான் முழு நம்பிக்கை வைக்கிறேன்”.“சரியம்மா… உனக்கு பொருத்தமானவரை நான் தேர்ந்தெடுத்து அனுப்புகிறேன்.” என்றான்.தனது மாளிகையில் இளவரசி காத்திருந்த வேளையில், மன்னர் தேர்ந்தெடுத்த நபர் வந்திருப்பதாக காவலாளி கூற, இவள் ஆர்வமுடன் வாயில் சென்று பார்த்தாள். அங்கு ஐந்தாவதாக வந்த இளைஞன் நின்றுகொண்டிருந்தான்.போட்டியின் நிபந்தனைப்படி இவர் வெற்றி பெறவில்லையே… எப்படி தந்தை இவரை தேர்ந்தெடுத்தார்? குழப்பமடைந்தவள், அப்பாவிடம் சென்றாள்.“என் முடிவை நீ ஏற்றுக்கொள்ளவில்லையா அம்மா?” என்றான் மகளை நோக்கிய அரசன்.“இல்லை இல்லை அப்பா. நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன். ஆனால், இவரை நீங்கள் இறுதி செய்ததன் காரணத்தை அறிய ஆவலாய் இருக்கிறேன்”.அரசன் சொன்னான்… “முதலாவதாக வந்தவன் மிக சிறந்த குதிரையேற்ற வீரன். திறமைசாலி. ஆனால் அது அவனைப் பொருத்தவரை நல்லது. ஆனால் உனக்கு நல்லதில்லை. உன்னை முதன் முதலில் பார்த்தவன், தனது திறமையை நிரூபிப்பதில் தான் கவனம் செலுத்தினானே தவிர, உனக்கு அது பிடிக்குமா பிடிக்காதா என்பதை பற்றியெல்லாம் அவன் யோசிக்கவில்லை. அவனிடம் உனக்கு கொடுப்பதற்கு அன்போ அக்கறையோ எதுவும் இல்லை”.“இரண்டாமவன் மிகப் பெரிய பணக்காரன். அவனிடம் உள்ள செல்வம் காலத்தால் அழியக்கூடியது. பணத்தால் எதையும் வாங்க முடியும் என்கிற மனப்பான்மை அவனிடம் இருக்கிறது. பணத்தால் உனக்கு வசதியான வாழ்க்கை கிடைக்குமே தவிர மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு, மனநிறைவான வாழ்க்கைக்கு அதையும் தாண்டி சில விஷயங்கள் தேவை. அதை அவனால் அளிக்க முடியாது.”“மூன்றாமவன் உன்னை சற்று களிப்புடன் வைத்திருந்தான். ஆனால் உன் தோழிகளுடனும் நண்பர்களுடனும் செல்லும்போது கூட உனக்கு அந்த களிப்பும் மகிழ்ச்சியும் கிடைக்காதா என்ன? மேலும் இவன் கடமையை மறந்துவிட்டான். நம் கண் முன்னே உள்ள சவால்களையும் கடமைகளையும் இப்படி புறக்கணிப்பது சரியல்ல. காரணம், நமது மகிழ்ச்சியான தருணங்கள் முடிந்தவுடன் அவை மீண்டும் நம் முன்னே வரும். மைதானத்தில் குதிரை எப்படி அடக்கப்படுவதற்கு காத்திருந்ததோ அதே போல பிரச்னைகளும் வாழ்க்கையில் காத்திருக்கும். அவற்றை சந்தித்தே தீரவேண்டும்!”“நான்காம் நபர் மிக பெரிய கலைஞன். திறமைசாலி என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவனிடம் உனக்கோ எதிர்காலத்தில் அவன் உன்னிடம் கொள்ளக் கூடிய பந்தத்திற்கோ கொடுப்பதற்கு ஒன்றுமில்லை.”“ஆனால், ஐந்தாவதாக வந்தானே அவன் தான் உன் உணர்வுகளை புரிந்துகொண்டான். குதிரை மீது நீ கொண்டிருந்த அச்சத்தை கவனித்து அதை போக்குவதற்கு முயற்சித்தவன் அவன் மட்டுமே. அவன் போட்டியில் ஜெயித்தானா இல்லையா என்பது பிரச்னையல்ல. ஆனால் குதிரையை அடக்க முயற்சித்த போராட்டத்தில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்தீர்கள். ஒன்றாக விழுந்தீர்கள். கற்றுக்கொண்டீர்கள். இது தான் வாழ்க்கை துணை என்பதற்கு சரியான அர்த்தம் மகளே!” என்றார்.‘வாழ்க்கை துணை’ என்ற சொல்லுக்கு தகுதியானவர் அழகும் செல்வமும் செல்வாக்கும் திறமையும் கலைத்திறனும் நகைச்சுவை உணர்வும் கொண்டவர் அல்ல. உங்கள் பலத்தையும் பலவீனத்தையும் புரிந்துகொண்டு கடினமான காலகட்டங்களில் உங்களுடன் இருந்து உங்கள் ஆற்றலை வெளியே கொண்டு வரக்கூடியவர் எவரோ அவரே ‘வாழ்க்கைத் துணை’ என்ற பதத்திற்கு உண்மையான அர்த்தம் கொண்டவர்.புறத்தோற்றம், பணம், உத்தியோகம், வசதி வாய்ப்புக்கள் இதெயெல்லாம் அளவுகோலாக வைத்து வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுத்தவர்கள் பலர் ஒன்று உதை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள் அல்லது நீதிமன்றத்தின் படியேறிக்கொண்டிருக்கிறார்கள்.
  • 114
  • 112
Added article 
பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகன்நாத். இவர், போக்கிரி, பிசினஸ் மேன், டெம்பர் உட்பட பல படங்களை இயக்கியுள்ளார். 2022-ம் ஆண்டில், பான் இந்தியா படமாக ‘லைகர்’ படத்தை இயக்கி இருந்தார். இதில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்திருந்தனர். இதையடுத்து அவர் இயக்கும் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாயின. இந்நிலையில் அதைப் படக்குழு உறுதிப்படுத்தியுள்ளது.தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தை சார்மியுடன் இணைந்து புரி ஜெகன்நாத் தயாரிக்கிறார். இதில் விஜய் சேதுபதி இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடந்துவரும் நிலையில், ஜூன் மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.
  • 130
Added article 
மோகன்லால் நடித்து மார்ச் 27-ல் வெளியான படம், ‘எல் 2: எம்புரான்’. இதை நடிகர் பிருத்விராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில், 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரத்தை மையப்படுத்தி சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. வில்லன் பெயரை ‘பாபா பஜ்ரங்கி' என வைத்துள்ளனர். சில இடங்களில் வரும் வசனங்களுக்கும் காட்சிகளுக்கும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து படத்தில் உள்ள 3 நிமிட சர்ச்சைக் காட்சிகளை நீக்கவும், வில்லன் பெயரை மாற்றவும் தயாரிப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளது.நடிகர் மோகன்லால் வெளியிட்டுள்ள விளக்கத்தில், “எம்புரான் படத்தில் இடம்பெற்றுள்ள சில அரசியல் விஷயங்கள் என் அன்புக்குரியவர்கள் பலருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக அறிந்தேன். எனது எந்தப் படமும் எந்தவொரு அரசியல் இயக்கம், சித்தாந்தம் அல்லது குறிப்பிட்ட பிரிவினர் மீது வெறுப்பைத் தூண்டும் விதத்தில் இல்லை என்பதை உறுதி செய்வது, ஒரு கலைஞனாக எனது கடமை. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு வருந்துகிறேன். சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க முடிவு செய்துள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.
  • 134
  • 135
Added a post 
1. தில்லையில் ஒரு ஆனி மாதம் ஆயில்யம் அன்று சிவபெருமான் அந்தணர் வடிவம் தாங்கி திருநீறு பூசி மாணிக்கவாசகர் தங்கியிருந்த மடத்திற்கு வந்தார்.2. வந்தவர் மாணிக்கவாசகர் பெருமானிடம் தாங்கள் எழுதிய ' திருவாசகத்தை' நீங்கள் ஒருமுறை சொன்னால் அப்படியே ஓலைச்சுவடிகளில் எழுதிக் கொள்கிறேன் என்றார்.3. மாணிக்கவாசகர் அமர்ந்து இருந்தபடியே 51 பதிகங்கள் கொண்ட திருவாசகத்தின் 658 பாடல்களையும் சொல்ல சொல்ல, பெருமான் எழுதிக் கொண்டார்.3. எழுதிக் கொண்ட திருவாசகம் அடங்கிய அத்தனை ஓலைச் சுவடிகளையும் பெருமான் நடராசர் சன்னதி முன்பு வைத்து விட்டு மறைந்து விட்டார்.4. மறுநாள் ஆனி மாதம் மகம் நட்சத்திரத்தன்று ஆலயத்திற்கு வந்த தில்லை வாழ் அந்தணர்கள் எனப்படும் தீட்சதர்கள் கூத்தபெருமான் சன்னதியில் நிறைய ஓலைச்சுவடிகளை கண்டு திகைத்து போயினர்.5. ஓலைச் சுவடிகள் அத்தனையையும் எடுத்து பார்த்த தீட்சதர்கள் கடைசி ஓலையில் " மாணிக்கவாசகர் சொல்ல அழகிய சிற்றம்பலமுடையான்" எழுதியது என கையொப்பம் இடப் பட்டிருந்தது.6. மீண்டும் திகைத்து போய் பெருமான் கருணையை வியந்த அந்தணர்கள் மாணிக்கவாசகர் தங்கி இருந்த இடம் சென்று நடந்தவற்றை கூறி அவரை அழைத்து வந்தார்கள்.7. ஓலைச்சுவடிகளில் உள்ள ஓவ்வொரு திருவாசகப் பாடலையும் பார்த்து, கடைசியில் பெருமானது ஒப்பத்தையும் கண்டு பிரமித்தவராய் " ஆம் அடியேன் சொல்ல எழுதப் பட்டது தான்" என்று சொல்லி வந்தது பெருமான்தான் என நினைந்து உள்ளம் உருகி கண்ணீர் சொரிந்தார்.8. தீட்சதர்கள், மாணிக்கவாசகரிடம் ஓலைச்சுவடியில் உள்ள திருவாசகத்திற்கு பொருள் கூறுமாறு வேண்டினர்.9. மாணிக்கவாசகர் , மந்தகாசப் புன்னகையுடன் நடனக் கோலத்தில் இருக்கும் நடராசப் பெருமானைக் காட்டி " இப் பாடல்கள் அனைத்துக்கும் இவர்தான் பொருள் " என்றார்.10. அப்படி மாணிக்கவாசகர் கூறியதும் பெருமான் அருகே ஒரு ஒளி தோன்றியது. அதை நோக்கிய வண்ணம் உள்ளே சென்ற மாணிக்கவாசகர் சிவபெருமானிடம் இரண்டறக் கலந்து விட்டார்.11. ஆக , ஆனி - மகம் மாணிக்கவாசகரின் குருபூசை நாள் ஆகும்.12 சிறப்பு - 1 நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்தில் திருவாசகத்தின் முதல் பதிகமான சிவபுராணம் தொடங்குவது.13. சிறப்பு - 2 சிவபுராணத்தின் முதல் 6 வரிகள் வாழ்க என முடியும்.14. சிறப்பு - 3 அதை அடுத்த 5 வரிகள் வெல்க என முடியும்.15. சிறப்பு -4 அடுத்த 8 வரிகள் *போற்றி* என முடியும்.16. இவ்வாறு 6-5-8 என அமைந்திருப்பது திருவாசகத்தின் 658 பாடல்களை குறிக்கிறது.17. சிவபுராணத்தின் 32 வது வரியில் மெய்யே உன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன் என பாடி இருப்பார்.இது மாணிக்கவாசகர் 32 வயதில் முக்தி அடைந்ததை சூட்சமமாக குறிக்கும்.18. திருவாசகத்தின் 18 வது வரியான அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது படிப்பவர் அனைவரையும் உருக்குவதாக இருக்கும்.19. ரமண மகிஷி , திருவண்ணாமலையில் தமது தாயார் உடல் நலமின்றி இருந்த கடைசி நாளில் அன்னை அருகே அமர்ந்து தொடர்ந்து திருவாசகம் படித்தார். அன்று இரவே அவரது அன்னை முக்தி அடைந்தார்.20. காஞ்சி மகா பெரியவரிடம் குழந்தை இல்லாத ஒரு தம்பதி சென்று தங்கள் குறையை கூறினர்.பெரியவர் திருவாசகப் புத்தகத்தை கொடுத்து ஒரு குறிப்பிட்ட பதிகத்தை தினம் படிக்க சொன்னார்.அவர்களுக்கு வரிசையாக 6 குழந்தைகள் பிறந்தன.21. இறந்த வீட்டில் கட்டாயம் சிவபுராணம் படிக்க வேண்டும்."புல்லாகி, பூடாகி, புழுவாய், மரமாகி, பல் விருகமாகி, பறவையாய் , பாம்பாகி , கல்லாய், மனிதராய், பேயாய், கணங்களாய்" என சுவை நிறைந்த திருவாசகத்தின் பெருமைகளை சொல்லிக் கொண்டே போகலாம்.சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார் செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ஓம் நமச்சிவாய..திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம்...!மூலமும் உரையும்...நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க! (சிவபுராணம்)நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!(“நமச்சிவாய” என்னும் ஐந்து எழுத்து வாழ்க! நாத தத்துவத்தில் விளங்கும் உன் திருவடி வாழ்க!)இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!(கண் இமைக்கும் பொழுதின் அளவு கூட, என் நெஞ்சைவிட்டு நீங்காதவனாகி உன் தாள் வாழ்க)கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!(திருப்பெருந்துறையில் எழுந்தருளி என்னை (மாணிக்கவாசகர்) ஆட்கொண்ட நாதனாகிய உன் மாணிக்க மணிகளின் மலர் அடி வாழ்க!)ஆகமம் ஆகி நின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!ஆகமமாகிய ஞான நூலின் பொருளாக இருந்து, என்னை அணுகி (அண்ணிப்பான்) அருள் புரிபவனாகிய உன் திருவடி வாழ்க!)ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க!(ஏகன் = நீயே ஒருவனாகவும், நீயே பல உருவங்களாகவும் இருந்து எல்லாப் பொருள்களிலும் தங்கும் இறைவனான உன் திருவடி வாழ்க!)
  • 147
Added a post 
1. வாழ்த்துக்கள் என்பது தவறு."வாழ்த்துகள் "என்பதே சரி. " க் " வரக்கூடாது.2. வாழ்க வளமுடன் என்பது தவறு." வாழ்க வளத்துடன் " என்பதே சரி.3." நிகழும் மங்களகரமான ஆண்டு " என்று அழைப்பிதழில் அச்சிடுவது தவறு. "மங்கலமான " என்பதே சரி." மங்கள இசை " என்றால் ஒப்பாரி. அதாவது கடைசிப் பயணத்தின் போது இசைப்பது." மங்கல இசை " என்றால் தொடக்கம். ( துவக்கம் என்பது தவறு ).4. நச்சுன்னு ஒரு பாட்டு, நச்சுன்னு பேசு, என்பது தவறு. நச்சு என்றால் நஞ்சு (விஷம்) (விடம்).நச்சுன்னு ஒரு பாட்டு என்றால் விஷம் போன்ற ஒரு பாட்டு என்று பொருள்.நறுக்கென்று என்பதே நச்சுன்னு என்று மருவி வந்துள்ளது.நான் நறுக்கென்று சொல்லி விட்டேன்.சுருக்கென்று எடுத்துக் கொள்க.விளக்கம்.....இசை நிகழ்ச்சியில் கடைசியில் பாடும் பாட்டுக்கு " மங்களம் "என்பர். கச்சேரியை முடிப்பதற்கு மங்களம் பாடு என்பர்.ஒரு நூல் (புத்தகம்) எழுதிய ஆசிரியர் அதை எழுதி முடிக்கும் போது கடைசிப் பக்கத்தில் " சுப மங்களம் " என்று முடிப்பார். இனிதே முடிவுற்றது என்று பொருள்.ஆரியர்கள் தங்களுக்குப் பிறக்கும் குழந்தை பெண்ணாகப் பிறந்து இனி குழந்தையே வேண்டாம் என்று முடிவெடுத்தால் அப் பெண் குழந்தைக்கு "மங்களா " என்று பெயர் சூட்டுவர்.திருவள்ளுவர் தம் குறளில் ,மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன் நன்கலம் நன்மக்கள் பேறு - என்று பாடியிருக்கிறார். காண்க - மங்கலம். ( மங்களமில்லை )
  • 165
Added a post 
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்துக்கு செல்பவர்கள் அண்ணாமலையாரின் அருளைப் பெறுவது எந்த அளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு முக்கியமானது இடைக்காடர் சித்தரின் அருளையும் சேர்த்து பெறுவதாகும். மூன்றாம் நூற்றாண்டில் அவதரித்ததாக கணிக்கப்பட்டுள்ள இடைக்காடர் சித்தர் சுமார் 600 ஆண்டுகள் வாழ்ந்ததாக சுவடிகளில் குறிப்புகள் உள்ளன.திருவண்ணாமலை ஆலயத்தில் அருள் அலைகள் நிரம்பி இருப்பதற்கு அங்கு அவரது ஜீவ சமாதி அமைந்திருப்பது மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இன்றும் திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தர் அருள்புரிந்து வருகிறார்.பொதுவாக பழமையான சிவாலயங்களில் சித்தர்கள் எந்த இடத்தில் அடங்கி இருக்கிறார்கள் என்பது தெரியாது. கருவறையில் சித்தர்கள் அடங்கி இருப்பார்கள் என்று பொதுவாக கூறப்பட்டாலும் அந்த ஜீவ ஒடுக்கத்தை கண்டுபிடிப்பது என்பது சாதாரண விஷயமல்ல.இடைக்காடர் திருவிடைமருதூரில் சமாதியில் வீற்றிருப்பதாக போகர் தனது ஜனன சாகரத்தில் கூறியுள்ளார். சிலர் சிவகங்கை இடைக்காட்டூர் ஆழிகண்டீசுவரர் ஆலயத்தில் இடைக்காடர் சித்தர் ஜீவ சமாதி ஆகி இருப்பதாக சொல்கிறார்கள். இந்த ஆலயத்தில் இடைக்காடர் தவக்கோலத்தில் இருப்பதாக அந்த பகுதி மக்கள் நம்புகிறார்கள்.ஆனால் இடைக்காடர் திருவண்ணாமலையில்தான் அடங்கி இருக்கிறார் என்பது 99 சதவீத சித்த ஆய்வாளர்களின் கருத்தாகும். நிஜானந்த போதம் என்னும் நூலில் இடைக்காடர் திருவண்ணாமலையில் சமாதி அடைந்ததாக கூறப்பட்டுள்ளது. ஆகையால் திருவண்ணாமலையில் இடைக்காடரின் ஜீவ சமாதி உள்ளது என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் இல்லை.ஆனால் திருவண்ணாமலை தலத்தில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி அல்லது ஒளி சமாதி எங்கு உள்ளது என்பதில்தான் மாறுபட்ட தகவல்கள் நீடித்து கொண்டே இருக்கின்றன. திருவண்ணாமலையில் இடைக்காடர் சித்தரின் ஜீவ சமாதி 5 இடங்களில் இருப்பதாக பேசப்படுகிறது.1. அண்ணாமலையாரின் கருவறையே இடைக்காடரின் ஜீவ சமாதி என்று ஒரு சாரார் சொல்கிறார்கள். திருவண்ணாமலை கோவிலின் கருவறை 4-ம் நூற்றாண்டில் உருவானது. அந்த கருவறை சுற்றுச் சுவர்களில் ஏராளமான ஆடுகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. எனவே அந்த கருவறைக்குள்தான் இடைக்காடர் அடங்கி இருப்பதாக நம்புகிறார்கள்.2. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் 2-ம் பிரகாரத்தில் நடராஜர் சன்னதி நுழைவாயில் இருபுறமும் இரண்டு பெரிய அறைகள் உள்ளன. வடக்கு புறம் உள்ள அறையின் அருகே ஒரு சுரங்க பாதை செல்கிறது. அந்த சுரங்க பாதை மலைக்குள் ஊடுருவி செல்வதாகவும், அந்த சுரங்கப் பாதைக்குள்தான் இடைக்காடரின் ஜீவ சமாதி இருப்பதாகவும் சிலர் சொல்கிறார்கள்.3. திருவண்ணாமலை கோவிலின் 3--ம் பிரகாரத்தில் ஒரு மண்டபம் உள்ளது. அந்த மண்டபத்துக்கு அருணை யோகீஸ்வரர் மண்டபம் என்று பெயர். அந்த மண்டபம்தான் இடைக்காடர் ஜீவசமாதி என்று சில ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மண்டபத்தின் கீழ் இடைக்காடரின் சிலை உள்ளது. எனவே அவர் அந்த மண்டபத்தில் சூட்சும வடிவில் புதைந்திருப்பதாக கருதப்படுகிறது.4. திருவண்ணாமலை மலையின் மேற்கு பகுதியில் இடைக்காடர் ஜீவசமாதி இருப்பதாக மற்றொரு கருத்து உள்ளது. அங்கு பாத வடிவம் உள்ளது. எனவே அதுதான் இடைக்காடர் ஜீவசமாதியான இடம் என்று சொல்கிறார்கள்.5. திருவண்ணாமலை ஆலயத்தில் 6-வது பிரகாரத்தில் பிரம்மலிங்கம் பின்புறம் சுற்றுச்சுவரில் ஒரு பெரிய குகை போன்ற அமைப்பு உள்ளது. 7 அடி நீளமும், 2 அடி அகலமும் கொண்ட அந்த இடம்தான் இடைக்காடர் சித்தர் ஒளிசமாதி பெற்ற இடமாக கருதப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அந்த இடம் தான் இடைக்காடரின் ஒளிசமாதி அமைந்து இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்ல தொடங்கி உள்ளனர்.திருவண்ணா மலையில் இடைக்காடரின் ஜீவசமாதி அமைந்திருக்கும் இடமாக இந்த இடம்தான் சமீபத்தில் அதிகமான ஆய்வாளர்களால் உறுதிபடுத்தப் பட்டுள்ளது. எனவே இந்த இடத்துக்கு வந்து நெய்தீபம் ஏற்றி வழிபடுவதை பக்தர்கள் வழக்கத்துக்கு கொண்டு வந்துள்ளனர்.திருவண்ணாமலை பெரிய தெருவில் இடைக்காடர் சித்தர் குடில் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு இடைக்காடர் சித்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இதை நிறுவிய கோவிந்தராஜ் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திர தினத்தன்று இடைக்காட்டருக்கு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடத்தி வருகிறார்.திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இடைக்காடர் ஒளிசமாதியாக அமைந்திருப்பது பற்றி அவர் பல ஆண்டுகளாக ஆய்வு செய்து நிறைய தகவல்களை சேகரித்து உள்ளார். அவர் சொல்கிறார்....இடைக்காடர் சித்தரால்தான் திருவண்ணாமலை கோவில் உருவானது. அதற்கான சான்றுகள் ஆலயம் முழுக்க பரவலாக உள்ளன. திருவண்ணாமலை ஆலயத்துக்குள் இருக்கும் தூண்களில் காணப்படும் சிற்பங்களை நீங்கள் உன்னிப்பாக கவனித்தால் நிறைய இடங்களில் ஆடுகளின் சிற்பம் செதுக்கப்பட்டிருப்பதை காண முடியும். திருமஞ்சன கோபுரத்தில் நிறைய ஆடுகள் சிற்பம் இருப்பதை இப்போதும் பார்க்கலாம். அவையெல்லாம் இடைக்காடரை பிரதிபலித்துக் கொண்டிருக்கின்றன.திருவண்ணாமலை மலை உச்சியில் இருக்கும் அல்லிக்குளம் அருகேதான் இடைக்காடர் முதன் முதலில் தியானம் செய்த இடம் உள்ளது. ஆண்டுக்கு ஒருதடவை நாங்கள் அங்கு சென்று பூஜை நடத்தி வருவதை வழக்கத்தில் வைத்து உள்ளோம்.திருவண்ணாமலை ஆலயத்துக்குள் கோசாலை அருகே இருக்கும் இடம்தான் இடைக்காடர் ஒளிசமாதி ஆன இடமாகும். அங்கு தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் நல்லது.இடைக்காடர் திருவாதிரை நட்சத்திரத்தில் அவதரித்தவர். எனவே திருவாதிரை தினத்தன்று பலரும் அங்கு வந்து வழிபடுவதை காணலாம். சமீப காலமாக திருவாதிரை நட்சத்திரகாரர்களும் இங்கு தேடி வந்து வழிபடுகிறார்கள்.இடைக்காடரின் இந்த ஒளிசமாதியில் ஒரே ஒரு நெய்தீபம் ஏற்றி வைத்து மனமுருக வழிபட்டாலே நீங்கள் கேட்டதை எல்லாம் இடைக்காடர் நிச்சயம் தருவார். புரட்டாசி மாதம் திருவாதிரை தினத்தன்று இங்கு பூஜைகள் நடத்தும்போது ஜோதி தானாக எரியும் அதிசயம் நடைபெறும். அதோடு அன்றைய தினம் மழை பெய்யும். இவையெல்லாம் இடைக்காடர் இப்போதும் இருக்கிறார் என்பதற்கான உதாரணங்களாகும்.திருவண்ணாமலை தளத்தில் இடைக்காடர் செய்திருக்கும் திருப்பணிகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கின்றன. கருவறை லிங்கம் 160 அடி ஆழத்துக்கு ஒரே தூணால் அமைந்துள்ளது. இதை ஏற்படுத்தியதே இடைக்காடர்தான்.திருவண்ணாமலையில் மலையை சுற்றி கிரிவலம் வரும்போது இடுக்கு பிள்ளையார் கோவிலை பார்த்திருப்பீர்கள். இந்த இடுக்கு பிள்ளையார் ஏராளமானவர்களின் உடல் பிரச்சினையை தீர்த்து வருகிறார். இதை உருவாக்கியது இடைக்காடர் சித்தர்தான். இதுபோன்று ஏராளமானவற்றை இடைக்காடர் உருவாக்கி தந்துள்ளார்.சித்தப்புருசர்கள் ஒரு இடத்தில் தோன்றி, இன்னொரு இடத்தில் தங்களை அடக்கி கொள்வார்கள். அந்த வகையில் இடைக்காட்டூரில் தோன்றிய இடைக்காடர் திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் அடங்கி அருள் பாலித்து வருகிறார்.இடைக்காடர் நவக்கிரகங்களில் புதன் பகவானை பிரதிபலிப்பவர். எனவே இவரை முறைப்படி வழிபட்டால் ஜாதகத்தில் புதன் பகவானால் ஏற்படக்கூடிய தோஷங்கள் அனைத்தும் நீங்கி நல்ல பலன்கள் கிட்டும். வியாபாரிகள், மாணவர்கள், பெண்கள், ஆசிரியர்கள் இடைக்காடரை வழிபட்டால் பிரச்சினைகள் நீங்கி பலன் பெற முடியும். இடைக்காடருக்கு பிடித்தது பச்சை நிறமாகும். எனவே அவருக்கு பச்சை நிறத்தில் வஸ்திரம் அணிவித்து வழிபடலாம்.இடைக்காடரை புதன்கிழமை வழிபட்டால் எளிதில் அவரின் அருளை பெற முடியும். அதுவும் அவர் ஒளிசமாதியாகி இருக்குமிடத்தில் புதன்கிழமை வழிபட்டால் பரிபூரண அருளை பெறலாம்.பவுர்ணமி நாட்களில் இப்போதும் இடைக்காடர் கிரிவலம் வருவதாக சொல்கிறார்கள். நமக்கு எதிரே வலது பக்கமாக அவர் வருவார். எனவே நாம் இடைக்காடரை நினைத்தபடி கிரிவலம் சென்றால் அவரை எந்த ரூபத்திலாவது பார்க்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.இடைக்காடர் இதுவரை ஒரு கோடி தடவைக்கு மேல் கார்த்திகை தீப தரிசனம் செய்துள்ளார் என்று குறிப்புகள் உள்ளன. அப்படியானால் இவர் எத்தனை தடவை கிரிவலம் சென்றிருப்பார் என்பதை யூகித்துக் கொள்ளலாம். அந்த சித்தப்புருஷரின் உடலைத் தழுவி வரும் காற்று நம்மீது பட்டால் நாம் தோஷங்கள் நீங்கி புத்துணர்ச்சி பெற முடியும் என்பது ஐதீகம் ஆகும்.இத்தகைய சிறப்புகள் நிறைந்த இடைக்காடரின் அருளை பெற சில குறிப்பிட்ட வழிபாடுகள் உள்ளன. திருவண்ணாமலை தளத்துக்கு செல்பவர்களில் 99 சதவீதம் பேருக்கு அந்த ரகசிய வழிபாடு இதுவரை தெரியாமலேயே உள்ளது. அதை தெரிந்து கொண்டு இடைக்காடரை வழிபட்டால் இமாலய அளவுக்கு பலன்கள் பெற முடியும்.
  • 172
Added a post 
கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ள திருச்சேறை கோவில் கடன் பிரச்சனை தீர்க்கும் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.தென்கரையில் அமைய பெற்ற 127 தலங்களுள் 95வது தலமாக விளங்குகிறது திருச்சேறை. கும்பகோணம் - திருவாரூர் மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ தொலைவில் உள்ளது.இங்கே உள்ள கடன் தீர்க்கும் ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் மிகவும் விஷேசமானது.ஆனால் அதை மட்டும் வணங்கினால் போதாது கருவறையில் இருக்கும் செந்நறியப்பர் என்று சொல்லப்படும் சாரபரமேஸ்வரையும் சேர்த்து வணங்க வேண்டும்.ஆலயத்தில் அருளாட்சி செய்யும் ஞானவல்லி எனப்படும் ஞானாம்பிகயை கும்பிட வேண்டும்.இங்குள்ள பைரவர் மிகவும் விசேஷமானவர். இவர் சிவனை வழிபட்டவர்.அதற்கு அடையாளமாக இவரது இடது மேற்கரத்தில் சூலம் போட்ட மணியினை தாங்கியிருக்கிறார்.கடன்கள், பிறவி கடன்கள் முதலியவை நீங்க அருள் செய்வதால் இத்தலத்தை கடன் நிவர்த்தி தலம் என்கிறார்கள்..
  • 176
Added a post 
  • 179
Added a post 
தற்போது சனிப்பெயர்ச்சி தான் நாட்டில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி அடைகிறார். அவ்வாறு பெயர்ச்சி நடைபெறும்போது திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலிலும் மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பத்திரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்களை புத்தகமாக வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் பிரபலமான ஜோதிடர்களை அழைத்து சனிப்பெயர்ச்சி பலன்களை பேசவைக்கின்றன.இந்தியாவில் கேரளா தவிர்த்த இதர தென் மாநிலங்களில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு விதமான கணித முறைகளை கொண்ட பஞ்சாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஆரியபட்டீயத்தை அடிப்படையாக கொண்டு வரருசி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கடபயாதி வாக்கியங்களை வைத்து கணிக்கப்பட்டதாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது நவீன வானியல் சூத்திரங்களை கொண்டு கணிக்கப்பட்டவை ஆகும். வடமாநிலங்களில் வாக்கிய கணிதத்திற்கு பூர்வ பத்ததி என்று பெயராகும். மேலும் அங்கு சூரிய சித்தாந்த கணிதத்தை கொண்டு சூரிய சித்தாந்த பஞ்சாங்கம் வெளிவருகிறது. கிரகலாகவம் என்னும் கிரந்தத்தின் கணிதங்களை பின்பற்றியும் ஒருசில பஞ்சாங்கங்கள் வெளிவருகிறது. ஆக அங்கு 1.திருக்கணிதம் 2.பூர்வபத்ததி(வாக்கியம்) 3.சூரியசித்தாந்தம் 4. கிரகலாகவம் என நான்கு வகை பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.கடந்த 29-03-2025 அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களோ அடுத்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் தேதி தான் சனிப் பெயர்ச்சி, இப்போது கிடையாது என்கிறார்கள். திருநள்ளாறு தேவஸ்தானம் இன்னும் ஒரு படி மேலே சென்று தற்போது சனிப்பெயர்ச்சி இல்லை என அறிக்கையே வெளியிட்டு விட்டார்கள். இதனால் மக்களிடையே மிகுந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏன் இவ்விரு பஞ்சாங்கங்களிலும் மாறுபட்ட தேதிகளில் பெயர்ச்சி ஏற்படுகிறது என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கத்தை இங்கே பார்ப்போம்.பொதுவாக சனியின் சஞ்சாரம் திருக்கணிதத்திற்கும் வாக்கிய கணிதத்திற்கும் சுமார் 4 மாதங்கள் வரை வித்தியாசம் ஏற்படும். இது இயல்பானது. திருக்கணிதப்படி மாசி மாதம் 17ஆம் தேதியன்று பூரட்டாதி 3ஆம் பாதத்திற்கு சனி பிரவேசித்து விட்டார். ஆனால் வாக்கியப்படி அடுத்த வைகாசி மாதம் 8ஆம் தேதி தான் பூரட்டாதி 3ஆம் பாதத்தில் பிரவேசிக்கிறார். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு 4 மாதங்கள் மட்டுமே. அதிலிருந்து சுமார் 40 நாட்களுக்குள் 4ஆம் பாதத்தில் பிரவேசிக்கும்போது ராசி மாற்றம் ஏற்பட்டுவிடும். அதன்படி திருக்கணிதத்தில் பங்குனி 14ஆம் தேதியில் ராசி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அப்போது சனிக்கு வக்கிரம் எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சனி நின்ற வீட்டிற்கு 5ல் சூரியன் வரும் போது தான் வக்கிரம் ஏற்படும்.இங்கு இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் வக்கிரம் ஏற்படவில்லை. அதனால் எந்த தடையும் இன்றி சனி ராசி மாறி விட்டார்.ஆனால் வாக்கியத்தில் அப்படி இல்லை. வைகாசி 8 ஆம் தேதியில் பூரட்டாதி 3ல் இருந்து 40 நாட்களுக்குள் அதாவது ஆனி 18க்குள் 4ஆம் பாதத் திற்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் ஆனி 1ஆம் தேதியில் கும்பத்தில் இருக்கும் சனிக்கு 5ல் சூரியன் வந்துவிட்டார். அதுமுதல் சனியின் முன்னோக்கி செல்லும் வேகம் குறைந்து ஆனி 18ல் வக்கிரம் ஆகிவிட்டார். இதனால் அடுத்த ராசிக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் கார்த்திகை 1ல் வக்கிர நிவர்த்தி அடைந்து படிப்படியாக முன்னோக்கி சென்று மாசி 22ல் (6-3-2026) தான் மீனராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். திருக்கணிதப்படி ஆனி 29ல் வக்கிரம். அதற்குள் சனி மீன ராசியில் சுமார் 8 பாகை முன்னே சென்று விட்டார். அதனால் வக்கிரம் அடைந்தும் கூட மீனத்திலேயே பின்னோக்கி வந்து பின் வக்கிர நிவர்த்தி அடைந்து முன்னோக்கி செல்கிறார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் இரண்டிற்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டது என்று.சிலர் இதற்கு முன்பெல்லாம் இரண்டு பெயர்ச்சிக்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்படவில்லை.வாக்கிய கணிதத்தில் பிழை ஏற்பட்டதால் தான் கடந்த 2,3 பெயர்ச்சிகளில் இதுபோல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். திருக்கணிதம் துல்லியமானது. வாக்கியம் இன்னும் துல்லியப் படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் பெயர்ச்சியில் வரும் இந்த வேறுபாடு இப்போது தான் ஏற்பட்டதல்ல. காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். கடந்த 60 ஆண்டுகளில் இவ்வாறு வேறுபாடு ஏற்பட்ட காலங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.கடந்த 8-4-1966ல் திருக்கணிதப்படி கும்பராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆன போதிலும், வாக்கியப்படி 11-3-1967ல் தான் பெயர்ச்சி ஆனது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சுமார் 1 வருடம். அதுபோல் 15-6-1968ல் திருக்கணிதப்படி மேஷத்திற்கு பெயர்ச்சி; வாக்கியப்படி 27-4-1969ல் தான் பெயர்ச்சி. இரண்டிற்கும் சுமார் 10 மாதம் வித்தியாசம். ஆனால் அடுத்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சியான தேதியை பார்த்தால் திருக்கணிதம் 27-4-1971; வாக்கியம் 3-6-1971. இரண்டிற்கும் வித்தியாசம் சுமார் 40 நாட்கள் மட்டுமே. அதுபோல் 1973ல் 30 நாள்; 1975ல் 26 நாள்;1977ல் 20 நாள்;1979ல் 28 நாள்;1982ல் 25 நாள் மட்டுமே இரண்டிற்கும் வித்தியாசம் ஏற்பட்டது. அதன் பின்னர் 1984 முதல் 1996 வரையிலான காலத்தில் ஏற்பட்ட பெயர்ச்சிகளில் மீண்டும் சுமார் 10 மாதம் முதல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்பட்டது. பிறகு 1998,2000 ஆகிய வருடங்களில் இந்த வித்தியாசம் 2 மாதமாக குறைந்தது. பின்னர் 2002,2004,2006 ஆகிய வருடங்களில் 10 மாதங்களுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட்டு,2009,2011,2014 ஆகிய வருடங்களில் 18 முதல் 46 நாட்களாக குறைந்தது.2017 முதல் 2028 வரை இந்த வித்தியாசம் மீண்டும் அதிகரித்து 2030ல் குறைய உள்ளது.எனவே சனிப் பெயர்ச்சியில் வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் ஏற்படும் வித்தியாசமானது எப்போதும் நடைமுறையில் இருக்கக்கூடிய வித்தியாசமே ஆகும் என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள்.ஆகவே, அவரவர் எந்த கணித முறையை கடைப்பிடிக்கிறீர்களோ அதன்படி சனிப்பெயர்ச்சிக்கான தேதியையும் பலன்களையும் அறிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வதே சாலச்சிறந்ததாகும்.அதை விடுத்து திருக்கணிதக்காரர்கள் வாக்கியத்தை குறை சொல்வதும், வாக்கியக்காரர்கள் திருக்கணிதத்தை குறை சொல்வதும் நல்ல ஜோதிடருக்கு அழகல்ல.
  • 182
Added a post 
  • 187
Added article 
கலைவாணரின் மகன் நல்லதம்பி கூறுகிறார் “என்ஜினியரிங் படிக்க ஆசைப்பட்டேன். ஆனா பணவசதி இல்ல. எம்.ஜி.ஆருகிட்ட போய் உதவி கேட்கலாமுன்னு போயிருந்தேன். ‘எவ்வளவு தேவை?’ன்னு கேட்டார்.‘3 ஆயிரம் தேவைப்படுது’ன்னு சொன்னேன். கேட்ட தொகைக்கு உடனே ஏற்பாடு செஞ்சுட்டு ‘காலேஜுல சேர்றதற்கு முன்னால என்னைய வந்து பார்த்துட்டுப் போ’ன்னு சொன்னார்.காலேஜ் அட்மிஷன் கிடைச்ச பிறகு எம்.ஜி.ஆர் கிட்ட விசயத்தைச் சொல்லலாமுன்னு போனதுமே வீட்டுல இருந்தவங்க டிபன் சாப்பிடச் சொல்லிட்டாங்க. சாப்பிட்டு காத்திருந்தேன்.அரசியல் காரணமா 1967ல எம்.ஜி.ஆர் ரொம்ப பிஸியா இருந்தார். குளிச்சு முடிச்சுட்டு ஏழு மணிக்கு அவர் ரூமுக்கு வந்தார். வந்ததும் யார் வெளியே உட்கார்ந்திருக்கிறா’ன்னு கேட்டார்.‘கலைவாணர் பையன் வந்திருக்கிறார்’ன்னு வீட்டுல இருந்தவங்க சொன்னதும், உடனே வரச்சொன்னார்.நான் அவர் ரூமுக்குப் போனதும் முதல்ல ‘டிபன் சாப்பிட்டியா?’ன்னு கேட்டார். அடுத்து ‘காலேஜ்ல இடம் கிடைச்சாச்சா?’ன்னு கேட்டார்.‘இடம் கிடைச்சிடுச்சு. சேரப் போறேன். அதான் அதுக்கு முன்னால உங்கள பாத்துட்டுப் போலாம்னு வந்தேன்’ன்னு சொன்னேன்.‘முன்ன உங்கப்பா எவ்வளவு இன்கம் டாக்ஸ் கட்டுனாருன்னு தெரியுமா?’ன்னு கேட்டார். ‘எனக்குத் தெரியாது’ன்னு சொன்னேன்.‘ஒன்றரைக்கோடி ரூபாய் வரி கட்டினாரு. அப்படின்னா அவர் எவ்வளவு சம்பாதிச்சிருப் பாரு?’ன்னு கேட்டார்.‘பல கோடி ரூபா இருக்கும்’னு சொன்னேன்.‘இப்ப உங்ககிட்ட எவ்வளவு இருக்கு?’ன்னு கேட்டார்.‘ஒன்னும் இல்லையே’ன்னு சொன்னேன்.‘செல்வம் அழியும். ஆனா கல்வி அழியாது. அதனாலதான் கல்விக்கு உதவி செஞ்சிருக்கு றேன். அது உன்னைய கடைசிவரைக்கும் காப்பாத்தும். கைவிடாதுன்னு சொன்னார்.அவர் சொன்ன மாதிரியே நான் படிச்சு முடிச்சு வேலைக்குப் போய் நல்லா சம்பாதிச்சேன். இப்பவும் எனக்கு மாசாமாசம் பென்ஷன் வருது.....
  • 208
  • 207
மனதை நெகிழ வைத்த புகைப்படம்
  • 213
  • 211
Added a news 
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர்.சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார்.தந்தையார் முச்சக்கர வண்டி ஓடுனராகவும் தாயார் குடும்ப பெண்ணகவும் கொண்ட பெரிய அளவிலால பின்புலங்கள் இல்லாத குடும்த்தில் பிறந்த குறித்த குழந்தையானது இதுவரை ஏடு தொடக்கப்பாடாத நிலையில் இவ்வாறு அதிசிறந்த ஞாபக சக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் யாழ் ஊடக அமையத்தில் இவ்விடையம் குறித்து ஊடக சந்திப்பொன்றை பெற்றோர் இன்றையதினம் முன்னெடுத்திருந்ததுடன்குறித்த சிறுமியின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.00
  • 313
Added a news 
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.  முன்பதாக முதலாம் தவணையின் முதல் கட்டம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிறைவடைந்தது. மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டது. இதேவேளை, நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றையதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  நோன்பு பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.இன்றையநாளுக்கான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 351
Added a news 
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளராக இருத்தல் கூடாது.தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது.விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதி சான்றிதழல் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.தகுதி சான்றிழை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது https://www.elections.gov.lk/ என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  00
  • 349
Added a news 
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஹோமாகம கொடகம பகுதியில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடுமையான தலையீட்டினால் தான் அண்மையில் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. பாணந்துறை பகுதியில் மின்பிறப்பாக்கியின் மீது குரங்கு தாவியதால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் கருத்து நிராகரிக்கத்தக்கது.இந்த மின்விநியோக துண்டிப்பால் இலங்கை மின்சார சபை 830 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.மின்சார சபையின் இந்த நட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பின்னர் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.இதேவேளை சர்வதேச நாணய நிதியமும் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளது.ஆட்சிக்கு வந்தவுடன் 30 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதி தற்போது மறக்கப்பட்டுள்ளது.30 வருடகாலமாக அரசியில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தான் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் மக்கள் மனங்களில் வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தியே மக்கள் விடுதலை முன்னணி 3 சதவீத வாக்கினை 42 சதவீதமான அதிகரித்துக் கொண்டது. ஆகவே அரசியலில் ஏதும் நடக்கலாம்.'' என கூறியுள்ளார்.  000
  • 350
Added a news 
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதயகுமார பெரேரா அறிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான தயாரிப்பாளர்களும் மதுபான போத்தல்களின் மூடியின் கீழும் ஒட்டப்பட்ட லேபிளின் மேலும் உற்பத்தி திகதியை அச்சிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டிக்கர் தொடர்பாக நம்பிக்கையில்லா நிலைமையே இந்த புதிய நடைமுறை மூலம் வெளிப்படுவதாக மதுவரித் திணைக்கள தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.பெருந்தொகை அந்நிய செலாவணியை செலவிட்டு பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் போத்தல்களில் உற்பத்தி திகதியை அச்சிடுமாறு பணிப்புரை விடுத்துள்ளமை பாதுகாப்பு ஸ்டிக்கர் நடைமுறையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அடையாள முறைமையை மீறுவதற்கு மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு உரிமை கிடையாது என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.தயாரிப்பு திகதியைக் அச்சிடுவதற்கு, மதுபான உற்பத்தியாளர்கள் அதிகளவு செலவிட நேரிடும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 000
  • 353
Added a news 
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று ட்ரம்ப் பதில் அளித்தார்.பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இப் பயணத்தின் நோக்கமாகும்.சவுதி அரேபியா மற்றும் கட்டாரில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.000
  • 352
Added a news 
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாகியுள்ளன.இத் தீ விபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகின்றது. மேலும் இத் தீ விபத்துக்கான காரணம் இது வரை வௌிவராத நிலையில், பொலிஸார் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்கள் காரணமாக ஐரோப்பாவில் டெஸ்லா கார்களின் வீழ்சியை சந்தித்து வருவதோடு இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
  • 350
Added a post 
மேஷம்வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் அமைதியைக் கையாள்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பணியை சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் மிதுனம்செல்வச் சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். சிரமம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம்எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம் கன்னிஎண்ணிய செயல்கள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கால்நடை செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம்கணவன் மனைவிக்கு இடையே விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் படிப்படியாக குறையும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை விருச்சிகம்எதிர்பாராத வரவுகள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நிலுவையில் இருந்து வந்த பொருட்கள் விற்பனையாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பாசம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் தனுசுசுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். முதலீடு தொடர்பான விஷயங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மேல்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பகை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்தொழில் சார்ந்த கல்விகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் கைகூடும். மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் ஆய்வு செய்து மேற்கொள்வது நல்லது. சொந்த ஊர் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். உறவினர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கும்பம்எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோக பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்துச் சென்றால் ஆதாயம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மீனம்பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். திடீர் வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • 440
Added a post 
குரோதி வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.4.2025. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.04 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று மாலை 03.22 வரை பரணி. பின்னர் கிருத்திகை. அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 443
  • 450
Added a post 
அகவழிபாடு (தன்நலம் சார்ந்தது) விஷ்ணு லட்சுமி தரிசனம் பூர்த்தி கொடுக்கும், புறவழிபாடு (பிறர்நலம் சார்ந்தது) சிவதரிசனம் அதை கொடுக்கும், பற்றுள்ள லோக சந்தோஷ வாழ்க்கை லட்சுமி பூஜை கொடுக்கும் தேவையை பூர்த்தி செய்யும் . பற்றற்ற பந்தம் அருளுக்கும் மோட்ச வாழ்க்கையை சிவ வழிபாடு கொடுக்கும் . வாழ்பவரை கேட்டால் குறிப்பாக இளைய வயதினர் (45 வயதிற்குள் என வைத்துக் கொள்ளலாம்) வாழ்க்கை வாழ்வதற்கே என கூறுவர், வாழ்ந்து முடித்தவர் மோட்ச வாழ்வையே விரும்புவர்,மனம் சலித்து போனவர். வாழ்வை வெறுத்தவர்கள், வேதனை அடைந்து சோர்ந்து போனவர்கள் பித்து பிடித்து உணவு உடை வெறுத்து இந்த உலகமே மாய லோகம் இங்கு மீண்டும் பிறந்து விடக்கூடாது என வேதனைபடும் நிராசையாளர்கள் சிவ வழிபாட்டில் நிறையபேர் இருப்பார்கள் . இதில் எந்த வயதினரும் அடங்குவர் . சிவ வழிபட்டாளர்கள் பொதுவாக சந்தோஷங்களை குறைத்துகொள்பவர்களாகவோ தர்ம ஈடுபாடு அதிகம் உள்ளவர்களாகவோ. வேதாந்தம் பேசுபவர்களாகவும். இளமை போராட்டத்தை பக்தி நெறியில் தனித்து கொள்பவர்களாகவும் இருப்பார்கள்.சிவதத்துவம் மோட்சத்திற்குரியது, எனவே தனித்த அலங்காரமற்ற சிவலிங்கத்தை கண்டு வணங்குபவர்கள் நிச்சயம் உலகியல் வாழ்வியல் இருந்து சந்தோஷங்களை நிராகரிப்பதோ அல்லது பெற தவறும் நிலையோ உண்டாகும் . எனவே சிவ ப்ரியர்களில் நன்கு சந்தோஷமாக வாழவேண்டும் என்று நினைப்பவர்கள் சிவசக்தி சேர்ந்த ஆலயத்தில் அலங்காரம் நிறைந்த லிங்க தரிசனத்தை கண்டு வழிபடவேண்டும் . அலங்காரம் இல்லையென்றாலும் அலங்கரிக்கும் வரை நீங்கள் காத்திருந்தே வழிபட வேண்டும், அல்லது அலங்கரிக்கும் சூழல் அவ்வாலயத்தில் இல்லையெனில் நீங்கள் மாலை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கிச் சென்று அலங்கரித்தாவது வழிபடவேண்டும்,அப்போது தான் நன்மை, இல்லையெனில் மோட்ச வரம் கிட்டும் (துன்பப்பட்டு. எல்லா அனுபவங்களையும் கண்டு மோட்சம் பெறுவது), அலங்கார சிவதரிசனம் கண்டால் வாழும் வரம் கிட்டும், (தேவைகள் பூர்த்தி அடைந்து சந்தோஷ வாழ்வு கிட்டும்) லட்சுமி கடாட்சரமாக வாழலாம் . பாவிகளுக்கு சிவாலயத்தில் எந்நேரமும் இடமில்லை ,மீறினால் துன்ப வாழ்வே உண்டாகும் .பாவிகளுக்கு சிவராத்திரியும். பிரதோஷ வேளையிலும்,ஜென்ம நட்சத்திர வேளையும். தமிழ் மாத முதல் நாளும். கிரஹண வேளையில் மட்டுமே அனுமதி, அவ்வேளையில் சிவதரிசனம் கண்டால் அவர்கள் பாவம் களைய வழி கிடைக்கும், பாவிகள் சிவாலயத்தில் வேண்டுதல் வைக்க கூடாது . குறிப்பாக பிரதோஷ வேளையில் அவ்வாறு வேண்டுதல் வைப்பது முறையல்ல, (தான் பாவியா இல்லையா என்பதை அவரவர் அனுபவ வாழ்க்கையை வைத்து முடிவு செய்யப்பட வேண்டும்) தர்மவான்கள். புண்ணியர்கள். அன்பை வளர்க்க கூடியவர்கள். கள்ள கபடு அற்றவர்கள். சுத்த சைவர்கள். பிறநலம் கொண்டவர்கள் அனைவரும் எப்பொழுதும் எவ்வேளையும் சிவசக்தி தரிசனம் செய்யலாம் சொர்ண சக்தி. சுபிக்ஷ சக்தி பெறலாம் . சிவ தரிசனம் புண்ணிய தரிசனம் . இதை பெற புண்ணியம் நாமும் செய்ய வேண்டும், அப்போதுதான் சிவபலன் கிட்டும்,இந்த தகுதி இருந்தால்தான் வாழும் வரம் பெற்று சம்சாரியாய் ஆவோம், இல்லையேல் சன்யாசம் கலந்த சம்சார வாழ்க்கையே ஏற்படும் .லட்சுமிபதி கடாட்சம் தர்மத்திலும். ஆலய தரிசனத்திலும் தாண்டவமாடும், ஆனால் வீட்டில் ஆடாது, நித்திரை லட்சுமியே தாண்டவமாடுவாள்.எனவே சிவ தரிசனம் கண்டு பலன் பெற துடிப்பவர்கள் புண்ணிய தர்மங்களை செய்து செல்லுங்கள் செல்வ சந்தோஷத்தை ஆளுங்கள் .உயிரே சிவம். உடலே விஷ்ணு. உயிருக்கு தேவை மோட்சம். உடலுக்கு தேவை சந்தோஷம், யாருக்கு எது தேவையோ அதை பரிபூரணமாய் நாடுங்கள், இரண்டும் தேவையெனில் ஒவ்வொரு காலகட்டத்தில் அதை வரமாக பெறுங்கள், வரம் பெற ஏதுவாக ஆரம்பத்தில் இருந்தே தர்மம் செய்யுங்கள், அப்போதுதான் மோட்ச லட்சுமியும் கிடைப்பாள், கூடவே சுபிக்ஷ லட்சுமியும் கிடைப்பாள், மனம் செம்மையானால் அங்கு ஐஸ்வர்ய லட்சுமி குடி கொள்வாள் .
  • 451
Added article 
நடிகர் அமிதாப்பச்சன் ஒரு நேரத்தில் சொந்தமாக படங்கள் தயாரித்து நஷ்டமடைந்து கடுமையான கடன் தொல்லைக்கு ஆளானார்.அமிதாப்பச்சன் ரூ.90 கோடி கடன் கொடுக்க வேண்டியிருந்தது. தினம் தினம் கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டிற்கு வந்தனர். இக்கடனில் இருந்து மீண்டு வந்துள்ள அமிதாப்பச்சன் தனது 80 வயதை கடந்த பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.தனது கடன் தொல்லை குறித்து ஒரு முறை அமிதாப்பச்சன் அளித்திருந்த பேட்டியில், ''எனது 44 வருட சினிமா வாழ்க்கையில் நான் நிதி நெறுக்கடியில் சிக்கி இருந்த காலம் தான் மிகவும் இருண்டகாலமாகும்.கடன்காரர்கள் தினம் தினம் வீட்டு வாசலில் வந்து நின்றனர். அவர்கள் மிரட்டல் விடுத்தனர். கடுமையான வார்த்தைகளால் திட்டினர். எனது வீட்டை கூட பிடுங்க முயன்றனர்.`பணம் வேண்டாம்; எனக்கு வேலை கொடுங்கள்' .... டிரைவருக்கு சம்பளம் கொடுக்கக்கூட என்னிடம் பணம் இல்லை. இதனால் ஒரு முறை யாஷ் சோப்ரா வீட்டிற்கு முகத்தை மூடும் வகையில் தொப்பி அணிந்து கொண்டு நடந்தே சென்றேன்.`கோன் பனேகா குரோர்பதி' நிகழ்வில் அமிதாப் பச்சன்`கோன் பனேகா குரோர்பதி' நிகழ்வில் அமிதாப் பச்சன்யாஷ் சோப்ராவிடம் சென்று எனது நிலையை எடுத்துக் கூறியதும் காலி காசோலையை கொடுத்து எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக்கொள்ளும்படி சொன்னார். ஆனால் நிதியுதவி வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.எனக்கு வேலை கொடுங்கள். அதன் மூலம் கிடைக்கும் சம்பளத்தை பெற்றுக் கொள்கிறேன் என்று தெரிவித்தேன். உடனே மொஹாபதியன் படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். அதன் பிறகு கோன் பனேகா குரோர்பதி கைகொடுத்தது'' என்று தெரிவித்தார்.கை கொடுத்த `கோன் பனேகா குரோர்பதி'அந்த நேரத்தில் கோன் பனேகா குரோர்பதி கை கொடுத்ததால்தான் இது வரை அந்த நிகழ்ச்சியை விடாமல் தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார். தந்தைக்காக படிப்பை விட்lடார்அபிஷேக் பச்சன். அமிதாப்பச்சன் நிதி நெருக்கடியில் சிக்கி இருந்தபோது அவரது மகன் அபிஷேக் பச்சனின் படிப்பும் பாதிக்கப்பட்டது. அபிஷேக் பச்சன் அந்நேரம் அமெரிக்காவின் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார்.இது குறித்து அபிஷேபச்சன் ஒரு முறை அளித்திருந்த பேட்டியில், ''நான் போஸ்டன் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தபோது எனது தந்தை படம் தயாரித்து கடுமையான நிதி நெருக்கடிக்கு ஆளானார். உடனே குடும்பத்திற்கு உதவுவதற்காக நான் படிப்பை பாதியில் விட்டுவிட்டு ஓடிவந்தேன்'' என்று குறிப்பிட்டு இருந்தார்.ஒரு நேரத்தில் ரூ.90 கோடி கடனில் இருந்த அமிதாப்பச்சன் தற்போது 3 ஆயிரம் கோடி அளவுக்கு சொத்து சேர்த்திருக்கிறார். அவரது கடினமான உழைப்புதான் இந்த அளவுக்கு அவரால் சொத்து சேர்க்க உதவியது.பாலிவுட்டில் எந்த நடிகரும் இந்த அளவுக்கு தோல்வியை சந்தித்து மீண்டு வந்தது கிடையாது.
  • 456