Ads

$25.00 CAD STONE WORKED FRONT_SLIT KURTIS

STONE WORKED  FRONT_SLIT KURTISPRINAL BRANDFabric: RAYONAVAILABLE SIZESM_L_XL_XXL

  • 772
  • More
  • 366
  • More
  • 356
  • More
  • 353
  • More
  • 358
  • More
  • 357
  • More
  • 344
  • More
  • 352
  • More
  • 362
  • More
  • 356
  • More
Comments (0)
Login or Join to comment.
  • 20
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, வைகாசி மாதம் 11 ஆம் தேதி மேஷம் -ராசி: நண்பர்களிடத்தில் வாதங்களை தவிர்க்கவும். உடனிருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது. நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும். நினைத்த சில பணிகளில் தாமதம் உண்டாகும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மாற்றம் ஏற்படும். போட்டி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்ரிஷபம் ராசி: சவாலான பணிகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகங்களும், ஒத்துழைப்பும் கிடைக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வழக்குகள் சாதகமாக முடியும். புதிய துறைகளில் ஆர்வம் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். பலம் மற்றும் பலவீனங்களை உணர்வீர்கள். செலவு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுமிதுனம் -ராசி: நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பயணங்களின் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். வெளி வட்டாரத்தில் மதிப்பு உயரும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். அமைதி நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்கடகம் -ராசி: உயர்கல்வி குறித்த சிந்தனை மேம்படும். ஆடம்பரமான செலவுகளை குறைப்பீர்கள். வித்தியாசமான பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். சிற்றின்ப செயல்களில் ஈடுபாடு உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை அறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிடைக்கும். சிந்தனை மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சிவப்புசிம்மம் -ராசி:வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்ப்புகளை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வீடு மாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். கல்விப் பணிகளில் இருந்துவந்த ஆர்வமின்மை குறையும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கன்னி -ராசி: வெளி வட்டாரத்தில் மதிப்பு மேம்படும். தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். புதிய துறை சார்ந்த தேடல் அதிகரிக்கும். சிந்தனையின் போக்கில் மாற்றம் ஏற்படும். நினைவில் கொள்ளக்கூடிய சில நிகழ்வுகள் நடக்கும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்துலாம் -ராசி: குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். இறைப்பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். வெளியூர் பொருட்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். தூக்கமின்மை பிரச்சனை ஓரளவு குறையும். நெருக்கடியான சூழல் மாறும். மனதளவில் இருந்துவந்த கவலைகள் மறையும். சோதனை மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைவிருச்சிகம்- ராசி: நட்பு வட்டாரம் விரிவடையும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். விமர்சன பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது. பலதரப்பட்ட சிந்தனைகளால் இறுக்கமான சூழல் உண்டாகும். செயல்பாடுகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். உதவும் பொழுது சூழ்நிலை அறிந்து செயல்படவும். எதிலும் விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது. ஆக்கப்பூர்வமான நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள்  தனுசு -ராசி: அலுவல் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். வெளியூர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். கால் வலி ஏற்பட்டு நீங்கும். விலகிச் சென்றவர்கள் பற்றிய சிந்தனை உண்டாகும். வியாபாரப் பணிகளில் பொறுமை வேண்டும். சுப காரிய பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். சாதனை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஊதா மகரம் -ராசி:சேமிப்பு சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். வாகன வசதிகள் மேம்படும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் நிறைவேறும். புதுவிதமான இலக்குகள் மனதில் பிறக்கும். சுப காரிய எண்ணங்கள் ஈடேறும். வியாபாரத்தை அபிவிருத்தி செய்வீர்கள். ஆசைகள் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்கும்பம் –ராசி:தாயின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். இணைய பணிகளில் கவனத்துடன் செயல்படவும். மனதில் செல்வச் சேர்க்கை தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். அரசு காரியங்களில் ஆதரவு மேம்படும். கல்விப் பணிகளில் மேன்மை ஏற்படும். மாற்றம் பிறக்கும் நாள்.  அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்மீனம் -ராசி: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவீர்கள். மனதளவில் தெளிவுகளும், புத்துணர்ச்சியும் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். திட்டமிட்ட காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்    இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்
  • 182
Added a post 
ஸ்ரீ குரோதி வருடம் வைகாசி மாதம் 11 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 24.5.2024.சந்திர பகவான் இன்று விருச்சிக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 07.50 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று காலை 10.39 வரை அனுஷம். பின்னர் கேட்டை.ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.‍https://tamilpoonga.com/s/bx_posts_photos/ssww4nfqbajga64hk7cerndegpmemlj3.jpg
  • 189
Good Morning...
  • 175
ஜப்பான் பொது வாகன நிறுத்துமிடங்களின் கூரைகளில் மிதக்கும் தோட்டங்களை நிறுவத் தொடங்கியுள்ளது, இந்த பகுதிகளை பசுமையான இடங்களாக மாற்றுகிறது. இந்த தோட்டங்கள் நகர்ப்புற நிலப்பரப்பை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், பல்லுயிர் பெருக்கத்திற்கு முக்கியமான தேனீக்கள் மற்றும் பிற மகரந்தச் சேர்க்கைகளுக்கு முக்கிய வாழ்விடங்களை உருவாக்குகின்றன.இந்த பசுமை முயற்சியானது நகர்ப்புற கான்கிரீட்டின் விளைவுகளை எதிர்கொள்வதையும், வனவிலங்குகளுக்கு அடைக்கலங்களை வழங்குவதையும், காற்றின் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பார்க்கிங் லாட் தோட்டங்கள் நகர்ப்புற நிலைத்தன்மையின் முன்னேற்றத்தை அடையாளப்படுத்துகின்றன, நகர சூழல்களில் இயற்கையை ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகின்றன.
  • 186
பெண்களை யார் வேண்டுமானாலும் அழ வைக்கலாம்ஆனால் ஒரு "ஆணை" அழ வைக்கஉண்மையாக நேசித்த ஒரு "பெண்ணால்" மட்டுமே முடியும்.
  • 189
பிரித்தானியா மாஸ்டர் செஃப் போட்டியில் வெற்றிவாகை சூடிய ஈழத்தமிழன் பிரின். கால்நடை மருத்துவரான 29 வயது பிரின் பிரதாபன், பிபிசி இன் மிகப்பெரிய சமையல் போட்டியின் 20வது தொடரின் முடிவில் வெற்றிபெற்று, "மாஸ்டர்செஃப் சாம்பியன் 2024" என்ற மதிப்புமிக்க பட்டத்தை வென்றுள்ளார்.
  • 198
காலை வணக்கம்
  • 199
Added a news 
சிங்கப்பூரில் கொரோனா புதிய அலை மிக வேகமாக பரவி வருவதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சர் ஒங் யே குங் தெரிவித்துள்ளார்.சிங்கப்பூரில் கடந்த 21ஆம் திகதியுடன் சுமார் ஒரு மாத காலப்பகுதிக்குள் 25 ஆயிரத்திற்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.சிங்கப்பூரில் நாளாந்தம் 250 க்கும் அதிகமான கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே அறுபது வயதுக்கு மேற்பட்டோருக்கு அவசரமாக மேலும் ஒரு கொரோனா தடுப்பூசியை செலுத்துவதற்கும் சிங்கப்பூர் அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது.
  • 334
Added a news 
”ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி ஆகியன எத்தைகைய விவாதங்களை முன்னெடுத்தாலும் இருதரப்பினரும் தோல்வியை தழுவநேரிடும்” என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தொகுதிமாநாடு எதிர்வரும் 26 ஆம் திகதி அநுராதபுரத்தில் இடம்பெறவுள்ளது.ஜனாதிபதி தேர்தல் அல்லது பொதுத்தேர்தல் உள்ளுராட்சிமன்ற தேர்தல் என அனைத்தையும் எதிர்கொள்ளதயாராகவே உள்ளோம். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிளவடையச் செய்வதற்கு பலர் முயற்சித்திருந்த போதிலும் வலுவான கட்சியாக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியன மக்கள் மத்தியில் தோல்வியடைந்த கட்சிகளாகும். இரு கட்சிகளின் தலைவர்கள் எவ்வாறான விவாதங்களை முன்னெடுத்தாலும் அவர்கள் இருவருமே தோல்வியை தழுவநேரிடும். ஏனெனில் இருவரிடமும் பொருளாதார கொள்கை திட்டம் கிடையாது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
  • 336
Added a post 
சென்ற ஞாயிறன்று குடும்பத்துடன் ரயிலில் பயணித்து கொண்டிருக்கும் போது வண்டி ஒரு ரயில் நிலையத்தில் நின்றது. (நாம் எல்லாம் ஒதுங்கி நிற்கும் தோற்றத்தில்) ஒருவர் ஏறினார். அவரது தோற்றம் பிச்சைக்காரர், பிளாட்பார்ம் வாசி, குடிகாரர் என்ற ரீதியில் இருந்தது.டிக்கெட் பரிசோதகர் வந்தார். அவரிடம் டிக்கெட் கேட்டார். எல்லோர் பார்வையும் அவரிடம் டிக்கெட் இருக்காது என்ற ரீதியில் தோன்றியது. அவர் அழுக்கு லுங்கியைத் தூக்கி அன்டிராயர் பாக்கெட்டில் கையை விட்டு எடுத்தார் டிக்கெட்டை .. அப்போதும் நம்பிக்கை அற்ற நிலையில் பரிசோதகர் அவர் பாஸெஞ்சருக்கு டிக்கெட் எடுத்திருப்பார் என்ற எண்ணத்தில் இது எக்ஸ்பிரஸ்யா என்றார். அவர் இந்த வண்டிக்குத் தான்யா டிக்கெட் எடுத்திருக்கேன் எனக் கூறி டிக்கெட்டைக் காண்பித்தார். அனைவர் முகமும் அமாவாசை நிலவாய் பிரகாசித்தது.க்ளைமாக்ஸே இனிமேல் தான் ..அவர் யாரையும் சட்டை பண்ணாமல் ஒரு மூலையில் போய் அமர்ந்து பையை பிரித்தார். அப்பொழுதும் எல்லோருக்கும் அவர் பையில் இருந்து அனைவருக்கும் ஒவ்வாத வகையில் வெற்றிலை போடவோ அல்லது உணவினை எடுத்து அருவருப்பாய் உண்ணவோ போகிறார் என்ற எதிர்பார்ப்பு.அவர் பையில் கையை விட்டு எடுத்தது ஒரு புத்தகத்தை. எடுத்தவர் புத்தகத்தினை பிரித்து அவர் முன்பு படித்து விட்டு நிறுத்தியிருந்த பகுதியினை உறுதி செய்து கொண்டு யாரையும் சட்டை செய்யாமல் படிக்கத் தொடங்கினார்.அவர் படித்த புத்தகம் என்ன தெரியுமா?" மனமும் மனிதனும் "அனைவர் முகமும் " ஙே " !!!பயண நேரத்திலும், பயனாய் படிக்கும் அவர் எங்கே? தோற்றப் பிழை செய்து, அவரிடம் தோற்ற கனவான்கள் நாங்கள் எங்கே?நம்மை வென்றவரின் புகைப்படம் 9நாம் தோற்றவரின் புகைபடம் பாருங்க...)
  • 345
Added article 
நடிகர் விசு ஒரு சிறந்த நடிகர், இயக்குனர், எழுத்தாளர், பேச்சாளர். இவரது படங்கள் என்றாலே அதில் குடும்பங்களின் அன்றாடம் நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும் தான் வரும். அதனால் விசு படங்களுககு தாய்க்குலங்களின் பேராதரவும் இன்று வரை உண்டு. அவர் படங்களைளப் பார்த்தே குடும்பங்களில் நடந்த பல சிக்கல்கள் தீர்ந்துள்ளனவாம்.மணல் கயிறு, குடும்பம் ஒரு கதம்பம், வேடிக்கை என் வாடிக்கை, டௌரி கல்யாணம், சம்சாரம் அது மின்சாரம், பெண்மணி அவள் கண்மணி போன்ற படங்களைப் பார்த்தாலே தெரிந்து விடும்.விசு படங்களின் உள்ள இன்னொரு சிறப்பு என்னவென்றால் அவரது கதாபாத்திர தேர்வு ரொம்பவே அருமையாக இருக்கும். கதைகளத்துடன் ஒன்றிப்போகும் கதாபாத்திரங்களாகவே நடிகர்கள் மாறிவிடுவர். இன்னொன்று வசனம். அவரது படங்களில் வசனங்கள் ஆணி அடித்தாற் போல நச் ந்சென்று இருக்கும்.பெண்கள் பற்றி அவர் படம் எடுக்கும்போது ஒரு தந்தை மகளைப் பார்க்கும் பார்வையில் தான் எடுப்பார். விசுவால் எப்படி சராசரி குடும்பத்துக்குள் நடக்கும் சுவாரசியமான விஷயங்களைக் கொண்டு வர முடிகிறது? இதற்கு அவரே ஒரு பேட்டியில் பதில் தெரிவித்துள்ளார்.நான் கதையை சுவாரசியமாக்க இரு நேரெதிர் கேரக்டர்களைக் கொண்டு வருவேன். ஒரு அடங்காப்பிடாரி பணக்கார மருமகளுக்கு ஜோடி ஒரு அப்பாவி. பயந்த நல்ல ஏழையான மாமியார் ஒரு பக்கம் என்றால் அவருக்கு அடக்கமான குணமான மருமகள். ஆனால் அவருக்கோ பணத்திமிர் பிடித்த மோசமான மாமியார். இந்த நால்வரையும் இணைக்கும் கதாபாத்திரத்தில் தான் விசு வருவார்.கதையில் ஒரு எக்ஸ்ட்ரா கேரக்டர் கூட வைப்பார். அந்த கேரக்டர் படத்தின் சக்ஸஸ் காரணமாகவே சேர்க்கப்பட்டு இருக்கும். உதாரணத்திற்கு சம்சாரம் அது மின்சாரம் படத்தில் வரும் மனோரமா கதாபாத்திரத்தைச் சொல்லலாம்.1980களில் தமிழ்நாட்டில் குடும்பங்கள் எப்படி இருந்தன என்பதை கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருப்பார் விசு. நடுத்தர வர்க்கத்து அண்ணன் தங்கைக்கு கல்யாணம் செய்து வைக்கும் கதை. இப்போது பெண்கள் கண்டிஷன் போடுவது போல அந்தக்காலத்தில் கல்யாணத்திற்கு ஆண்கள் கண்டிஷன்கள் போட்டார்கள். திருமணத்திற்குப் பிறகு நடக்கும் களேபரங்கள் தான் கதை. என்று தெரிவித்துள்ளார் விசு.
  • 344
  • 360
Added a post 
ஒரு நாட்டில் மன்னன் நாட்டில் பத்து பேரை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு பசுவும் பத்தாயிரம் பணமும் கொடுத்து! நன்கு வளர்த்து வர சொன்னான்.ஒரு மாதம் கழித்து ! மாட்டிடம் இருந்து பால் கறந்து அரண்மனையில் இருக்கும் தொட்டியை அந்த பேர் பால் கறந்து நிரப்ப வேண்டும் என்று ஆணை!அதே போல் பத்து பேருக்கும் பத்து மாடுகளும் பத்தாயிரம் கொடுக்கப்பட்டது.இதை வாங்கிய ஒருவன் வீட்டுக்கு தேவையான பொருட்களை அந்த பணத்தில் வாங்கி செலவழித்து விட்டான். ஒரு மாதம் ஓடியது அரண்மனைக்கு பால் கறந்து கொண்டு சொல்லும் நாளும் வந்தது. காலையில் எழுந்து பால் கறந்து காய்ச்சி குடித்து விட்டான்.அங்கே வந்த மனைவி ,,,,,,,,, யோவ் இப்ப அரண்மனை தொட்டியில் எப்படியா பால் ஊற்ற போகிறாய் என்று கேட்க!அதற்கு அவன் சிரித்து கொண்டே சொன்னான் நான் என்ன நம் மன்னன் போல் முட்டாளா!எல்லாரும் பால் ஊற்றுவார்கள் நான் மட்டும் நீரை பிடித்து தொட்டியில் ஊற்றுவேன்! நான் ஒருவன் நீர் ஊற்றுவதால் யாருக்கு தெரிய போகிறது என்று சொல்லிவிட்டு! தண்ணீரை பாத்திரத்தில் எடுத்து போய் தொட்டியில் ஊற்றினான்!மன்னன் வந்து தொட்டியை திறந்து பார்க்க ! ஒரே அதிர்ச்சி ! தொட்டியில் பாலே இல்லை! வெறும் தண்ணீர் தான் இருந்தது.பத்து பேரும் பாலுக்கு பதில் தண்ணீர் தான் ஊற்றி இருக்கின்றனர்!
  • 419
Added a post 
இரு நண்பர்கள் பாலைவனத்தில் மாட்டிக்கொண்டார்கள், ஊருக்குள் செல்லும் வழி தேடி பயணம் செய்தனர். வெயிலும் பாலைவன சுடுமணலும் அவர்களின் பயணத்தைக் கடுமையாக்கின.கையில் வைத்திருந்த உணவையும் தண்ணீரையும் பகிர்ந்து சாப்பிட்டார்கள்.ஒரு கட்டத்தில் இருவரில் பணக்கார நண்பன், தன் உணவை ஏன் மற்றவனோடு பகிர்ந்து சாப்பிட வேண்டும் என்று எரிச்சல் கொண்டான்.அதனால் தன் ஏழை நண்பனுக்குப் பகிர்ந்து தராமல் அதிக உணவைத் தானே சாப்பிடத் தொடங்கினான்.தண்ணீரையும் அவன் ஒருவனே குடித்து வந்தான். இதைக் கண்ட அந்த ஏழை நண்பன் கோபம் கொள்ளவே இல்லை.பாலைவனத்தில் ஓரிடத்தில் ஈச்சை மரம் இருந்தது. அம்மரத்திலிருந்து விழுந்த பழங்களை ஏழையானவன் ஓடிப்போய்ப் பொறுக்கினான்.உடனே பணக்காரன், அவை யாவும் தனக்கே சொந்தமானவை என்று சொல்லிப் பறித்தான்.உன்னிடம்தான் தேவையான உணவு இருக்கிறதே. பிறகு ஏன் இதைப் பறிக்கிறாய் எனக்கு கேட்டான் ஏழை.அப்படியானால் நான் உணவை வைத்துக்கொண்டு உன்னை ஏமாற்றுகிறேன் என்று குற்றம் சொல்கிறாயா?என்று சொல்லி கோபத்தில் ஏழையின் முகத்தில் ஓங்கி அடித்தான் பணக்காரன்.அந்நேரமே இருவரும் பிரிந்து நடக்கத் தொடங்கினர். வலியும் அவமானமும் கொண்டவனாக பாலைவன மணலில்,"இன்று என் நண்பன் என்னை அடித்து விட்டான்" என்று பெரிதாக எழுதி வைத்துவிட்டு நடந்தான் ஏழை.ஓரிரு நாட்கள் இருவரும் தண்ணீர் கிடைக்காமல் பாலைவனத்தில் அலைந்து திரிந்தார்கள்.அப்போது ஓரிடத்தில் சிறிதளவு தண்ணீர் இருப்பதைக் கண்டு ஓடிச் சென்று குடிக்க முயன்றான் பணக்காரன்.திடீரென நண்பனின் நினைவு வந்தது. இவ்வளவு காலம் பழகிய நண்பனை ஒரு கஷ்டம் வந்ததும் ஏமாற்றி விட்டோமே என்று உணர்ந்து நண்பனைச் சத்தமிட்டு அழைத்தான்.குரல் கேட்டு ஓடோடி வந்த ஏழை நண்பன் அங்கே தண்ணீர் இருப்பதைக் கண்டு ஆச்சர்யமடைந்தான்.இதிலுள்ள தண்ணீரை ஒருவர் மட்டுமே குடிக்க முடியும். நீயே குடித்துக்கொள் என்றான் பணக்காரன்.உடனே ஏழை தாகம் மிகுதியில் தண்ணீரை முழுவதும் குடித்து விட்டு நண்பனை அணைத்துக்கொண்டு நன்றி தெரிவித்தான்.பின்னர் இருவரும் ஒன்றாக நடக்கத் தொடங்கினர். ஏழை நண்பன் அங்கிருந்த ஒரு கல்லில்,"என் நண்பன் இன்று மறக்க முடியாத ஓர் உதவி செய்தான்" என்று எழுதி வைத்தான்.உடனே வானத்திலிருந்து ஒரு தேவதூதன் தோன்றி ஏழையிடம், அவன் உன்னை அடித்தபோது அதை மணலில் எழுதி வைத்தாய்.உதவி செய்தபோதோ அதைக் கல்லில் எழுதி வைக்கிறாய். அது ஏன்? என்று கேட்டான்.நடந்த தவறுகள் காற்றோடு போக வேண்டியவை. அதனால் அதை மணலில் எழுதினேன்.ஆனால் செய்த நன்றியை என்றும் மறக்கக் கூடாது. ஆகவே அதைக் கல்லில் எழுதி வைத்தேன் என்றான் ஏழை.ஒருவர் நமக்குச் செய்த தீமைகளை மறந்து அவர் செய்த நன்மைகளை நினைவில் வைத்திருந்தால் உறவுகள் மேம்படும்.வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல; நல்ல உறவுகளை...! 
  • 421
Added a news 
தற்போது வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் தாழமுக்கம் உருவாகியுள்ளதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களமும், இந்திய வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளன.தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனையொட்டிய மேற்கு - மத்திய வங்காள விரிகுடா கடற் பிராந்தியத்தில் நேற்றிரவு தாழமுக்க நிலையொன்று உருவாகியுள்ளது.இது வடகிழக்கு திசையில் நகர்ந்து, படிப்படியாக வலுவடைந்து நாளை ஒரு தாழமுக்கமாக வலுவடைந்து, எதிர்வரும் 25ஆம் திகதியளவில் ஒரு சூறாவளியாக உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.இந்த சூறாவளிக்கு Oman நாட்டினால் பரிந்துரை செய்யப்பட்ட Remal (Pronounce as Re-Mal) எனும் பெயர் இதற்கு வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.இது எதிர்வரும் 25ஆம் திகதியளவில் வடக்கு ஒரிசா அல்லது மேற்கு வங்கம் பகுதியினூடாக (பாலச்சூர் - கொல்கத்தா) ஊடறுத்துச் செல்லலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.இதேவேளை, இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி,  இலங்கையின் தென்மேற்கு கடல் பிராந்தியம் மற்றும் தென்கிழக்கு அரேபிய கடற் பிராந்தியத்தில் காற்றானது மணிக்கு 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசுவதுடன், பலத்த மழையும் கடற் கொந்தளிப்பும் காணப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இதன் காரணமாக மீனவர் மற்றும் கடல் சார் தொழிலாளர்கள் சிவப்பு நிறம் தீட்டப்பட்ட பிராந்தயங்களில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாம் எனவும், திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்பை அவதானமாக செவிமடுத்து செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 000
  • 462
Added a news 
சிறந்த எதிர்காலத்திற்காக இன்றே தியாகம் செய்வோம் என்ற கௌதம புத்தரின் போதனையின் அடிப்படையில் ஞானம் பெறுவதற்காக அவர் கொண்டிருந்த உறுதிப்பாட்டை, ஒரு நாடாக தற்போதைய நெருக்கடியான நிலையிலும் வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள விசாக பூரணைதின வாழ்த்துச் செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.இனம், மதம், சாதி, கட்சி வேறுபாடின்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து கட்டியெழுப்பும் நாட்டை தொடர்ந்து முன்னோக்கிக் கொண்டு செல்ல வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.அதற்கு புத்தரின் போதனைகள் வழிகாட்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். அத்துடன் விரைவான பௌதிக வளர்ச்சியை நோக்கி நகரும் உலகில் மன வளர்ச்சியுடன் கூடிய ஆன்மீக மற்றும் கண்ணியமான மனிதனை உருவாக்குவது அவசியமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.00
  • 463
Added a news 
விசாக பூரணை தினத்தை முன்னிட்டு நாடாளாவிய ரீதியில் விசாக தோரணைகள், தானசாலைகள் உள்ளிட்ட சர்வமத நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.இதற்காக நாடு முழுவதும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறைமா அதிபர் தேஷபந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்.இதற்காக 18 ஆயிரத்திற்கும் அதிகமான காவல்துறையினர் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அத்துடன் நாடு முழுவதும் 419 வெசாக் வலயங்களும் 321 விசாக தோரணைகளும் அமைக்கப்பட்டுள்ளன. விசாக பூரணை தினத்தை முன்னிட்டு இன்றும் நாளையும் 3,000 இற்கும் அதிகமான தானசாலைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.அவற்றின் சுகாதாரத் தரம் தொடர்பில் முழுமையாக ஆய்வு செய்யப்படும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000 
  • 462
Added a news 
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக நாளை வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ளார்.அதன்படி 3 நாள்கள் விஜயமாக வடக்கிற்கு வரும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க,  யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் வவுனியா மாவட்டங்களில் உரித்து தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உரிமங்களை வழங்கி வைக்கவுள்ளார்.அத்தோடு வடக்கில் இளைஞர்களுடன் ஜனாதிபதி விசேட சந்திப்பொன்றிலும் கலந்து கொள்ளவுள்ளார்.இவ்வாறு 10 முக்கிய நிகழ்வுகளில் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளதுடன், வடக்கில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலும் இவ்விஜயத்தின் போது விசேட அவதானம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 463
Added a news 
உலக பொருளாதார பேரவை ‘பயணம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு குறியீடு 2024’ என்ற தலைப்பில் உலக நாடுகளின் சுற்றுலா செயல்பாடுகளை தரவரிசைபடுத்தியுள்ளது.இந்தப் பட்டியலில் இலங்கை 76 ஆவது இடத்தை பிடித்துள்ளது.  குறிப்பாக, இலங்கை சுற்றுலா சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பு, கலாசார வளங்கள் மற்றும் பொழுதுபோக்கு அல்லாத செயற்பாடுகள் பிரிவுகளில் மோசமான மதிப்பெண் பெற்றுள்ளது.அதே நேரத்தில் போட்டித்தன்மை மிக்க விலை மற்றும் பயணம், சுற்றுலா சமூக பொருளாதார தாக்கம் ஆகியவற்றில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளது.இந்நிலையில், இந்தப் பட்டியலில் 2021 ஆம் ஆண்டு 74-வது இடத்தில் இருந்த இலங்கை, தற்போது 119 நாடுகளில் தரவரிசையில் 76 ஆவது இடத்துக்கு சரிந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு இலங்கை 77 ஆவது இடத்தை பிடித்திருந்தது. இதேவேளை, இலங்கையின் போட்டியாளர்களான வியட்நாம் (59வது), தாய்லாந்து (47வது), இந்தோனேசியா (22வது) மற்றும் மலேசியா (35வது) ஆகியவை சுட்டெண்ணில் இலங்கைக்கு மேலே தரவரிசையில் உள்ளன. மேலும், தெற்காசியாவில் இந்தியா (39வது) முதலிடத்திலும், இலங்கை இரண்டாவது இடத்திலும் உள்ளது.இந்தப் பட்டியலில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்பெயின், ஜப்பான், பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 461
Added a news 
திருகோணமலை - ஈச்சிலம்பற்று, வட்டவன் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற கார் விபத்தில்  சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.6 வயதுடைய நிதர்சன் ஆதித்யா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்தோடு, இச் சிறுமியின் சகோதரனான 4 வயதுடைய நிதர்சன் அதிரேஸ் எனும் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.இவ்வாறு படுகாயமடைந்த சிறுவன் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈச்சிலம்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்..யாழ்ப்பாணம் - பருத்தித்துறையைச் சேர்ந்த கணவன், மனைவி இருவரும் இரண்டு பிள்ளைகளுடன் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கையிலேயே, குறித்த கார் வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது. எனினும் கணவன், மனைவி இருவரும் காயங்களின்றி உயிர் தப்பியுள்ளனர்.உயிரிழந்த சிறுமியின் சடலம் மூதூர் தள வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது00
  • 465
நீங்கள் எப்போதும் கோபமாக இருந்தால்?
  • 524
Added a post 
வரலாற்றில் இன்று வைகாசி 231911 – நியூயார்க் பொது நூலகம் பொதுமக்களுக்குத் திறக்கப்பட்டது.1915 – முதலாம் உலகப் போர்: இத்தாலி கூட்டுப் படைகளுடன் இணைந்தது.1932 – பிரேசிலில் அரசுத்தலைவர் கெட்டூலியோ வர்காசுக்கு எதிரான போராட்டங்களில் நான்கு மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.1939 – அமெரிக்கக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் இசுக்குவாலசு சோதனை ஓட்டத்தின் போது நியூ ஹாம்சயர் கரையில் மூழ்கியதில், 24 பேர் உயிரிழந்தனர்.1945 – இரண்டாம் உலகப் போர்: சுத்ஸ்டாப்பெல் தலைவர் ஐன்ரிச் இம்லர் நேச நாடுகளின் கைதியாக இருந்த போது தற்கொலை செய்து கொண்டார்.1948 – இஸ்ரேலுக்கான அமெரிக்கத் தூதுவர் தோமசு வாசென் எருசலேம் நகரில் கொலை செய்யப்பட்டார்.1949 – பனிப்போர்: மேற்கு செருமனி என்ற நாடு அமைக்கப்பட்டது.1951 – திபெத்தின் விடுதலைக்கான 17 அம்ச உடன்பாட்டில் திபெத்தியர்கள் கட்டாயமாகக் கையெழுத்திட வைக்கப்பட்டார்கள்.1958 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செயற்கைக்கோள் எக்ஸ்புளோரர் 1 தனது பூமியுடனான தொடர்பை இழந்தது.1960 – சிலியில் முதல் நாள் நிகழ்ந்த நிலநடுக்கத்தை அடுத்து ஏற்பட்ட ஆழிப்பேரலையால் 61 பேர் உயிரிழந்தனர்.1992 – இத்தாலியின் மாஃபியாக்களுக்கு எதிரான நீதிபதி கியோவானி பால்க்கோனி, அவரது மனைவி உட்பட ஐவர் சிசிலியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டனர்.1993 – எரித்திரியா ஐக்கிய நாடுகள் அவையில் இணைந்தது.1995 – ஜாவா நிரலாக்க மொழியின் முதற் பதிப்பு வெளியானது.1998 – வட அயர்லாந்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பில் பெல்பாஸ்ட் உடன்பாட்டை 75% மக்கள் ஏற்றுக் கொண்டனர்.2006 – அலாஸ்காவின் சுழல்வடிவ எரிமலை கிளீவ்லாந்து வெடித்தது.2008 – இலங்கை, கிளிநொச்சி மாவட்டம், முறிகண்டி அக்கராயன் வீதியில் இலங்கைப் படையினர் நடத்திய கிளைமோர் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.2008 – அனைத்துலக நீதிமன்றம் "நடுப் பாறைகள்" என்ற குன்றை மலேசியாவுக்கும், வெண்பாறைத் தீவை சிங்கப்பூருக்கும் கையளித்துத் தீர்ப்புக் கூறியது. இதனை அடுத்து இரு நாடுகளுக்கு இடையில் இருந்து வந்த 29-ஆண்டு கால பிணக்கு தீர்க்கப்பட்டது.2014 – காங்கோ சனநாயகக் குடியரசின் முன்னாள் ஆயுதக் குழுத் தலைவர் செருமைன் கட்டாங்கா புரிந்த போர்க்குற்றங்களுக்காக அவருக்கு பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றம் 12 ஆண்டுகால சிறைத்தண்டனை விதித்தது.2016 – இஸ்லாமிய அரசு தீவிரவாதிகளால் யெமன், ஏடன் நகரில் நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைத் தாக்குதல்களில் 45 இராணுவத்தினரும், சிரியாவில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 184 பேரும் கொல்லப்பட்டனர், 200 பேர் வரையானோர் காயமடைந்தனர்.
  • 545
Added a post 
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, வைகாசி மாதம் 10 ஆம் தேதி மேஷம் -ராசி: மற்றவர்களின் செயல்பாடுகளில் குறை கூறுவதை தவிர்க்கவும். வாகன பராமரிப்பு தொடர்பான செலவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளுடன் அளவுடன் இருக்கவும். திடீர் செலவுகளின் மூலம் கையிருப்பு குறையும். சூழ்நிலை அறிந்து முடிவுகளை எடுப்பது நல்லது. எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் உண்டாகும். சாந்தம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்ரிஷபம் ராசி: வெளியூர் பயணங்களின் மூலம் ஆதாயம் அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உறவினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான நல்ல செய்திகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். கலகலப்பான பேச்சுக்களால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைமிதுனம் -ராசி: கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். கணவன், மனைவிக்குள் அனுசரித்துச் செல்லவும். போட்டிகளில் ஈடுபாடு உண்டாகும். சஞ்சலமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். உத்தியோகம் ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். விருத்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்கடகம் -ராசி: உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். புதுவிதமான எண்ணங்கள் பிறக்கும். சக ஊழியர்களிடத்தில் நிதானம் வேண்டும். எதிர்பார்த்த சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைசிம்மம் -ராசி:நெருக்கமானவர்களின் சந்திப்புகள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராக அமையும். தாய் வழி உறவுகளிடத்தில் மதிப்பு உண்டாகும். வாகன மாற்றம் குறித்த சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் வழியில் அனுசரித்துச் செல்லவும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம் கன்னி -ராசி: சொத்து பிரச்சனைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உடனிருப்பவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். திட்டமிட்ட காரியம் கைகூடும். சிறு தூரப் பயணங்களால் மனதில் மாற்றம் உண்டாகும். முயற்சி மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு துலாம் -ராசி: வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் இருந்துவந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக அமையும். யோகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சைவிருச்சிகம்- ராசி: விமர்சனப் பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உறவினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சார்ந்த சிந்தனைகள் ஏற்படும். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். மறைமுக தடைகளால் செயல்களில் தாமதம் ஏற்படும். வீடு மாற்றம் சார்ந்த எண்ணம் மேம்படும். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். பரிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு தனுசு -ராசி: கனிவான பேச்சுக்கள் நன்மையை ஏற்படுத்தும். வியாபாரத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பொன், பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் இருந்தாலும் சமாளிப்பதற்கான சூழல் அமையும். உடல் நலத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். பிரீதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மகரம் -ராசி:மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். கொடுத்த வாக்குறுதிகளை செயல்படுத்துவீர்கள். பெற்றோர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆபரணச் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். பணிபுரியும் இடத்தில் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம்கும்பம் –ராசி:பயணங்களால் ஆதாயம் ஏற்படும். வியாபார இடமாற்றம் குறித்த சிந்தனை உண்டாகும். தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். சுவையான உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புமீனம் -ராசி: கலை துறைகளில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். புதிய முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். நீண்ட தூர பயண வாய்ப்புகள் கைகூடும். உத்தியோக ரீதியான பயணங்கள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் அமையும். எதிலும் தன்னம்பிக்கையுடன் ஈடுபடுவீர்கள். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை   இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 551
  • 525
ராசிபலன்
  • 526
திருக்குறள்
  • 526
காலை வணக்கம்
  • 526