Ads
New Arrival
New arrival in February
Empty
Added article
மத்திய அரசின் உயரிய விருதுகளான பத்ம விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான பத்ம விருதுகள் 23 பெண்கள் உள்பட 139 பேருக்கு அறிவிக்கப்பட்டது. பத்ம பூஷன் விருதை பொருத்தவரை, கலைத்துறையில் நடிகர் அஜித்குமாருக்கும் விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பெருமைமிகு விருது அஜித்துக்கு வழங்கப்பட உள்ளது அவரது ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.தனக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து அஜித் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், இந்திய குடியரசு தலைவரிடம் இருந்து மதிப்பிற்குரிய பத்ம பூஷன் விருதை பெருவதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். இந்த மதிப்பிற்குரிய மரியாதையை வழங்கிய பிரதமர் மோடிக்கும், குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அங்கீகாரத்தை எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன் என கூறி இருந்தார் அஜித்.இந்த தருணத்தில் தன்னுடைய தந்தை இருந்திருக்க வேண்டும் என ஆசைப்படுவதாக கூறி இருந்த அஜித், என்மீது அளவு கடந்த அன்பை பொழிந்து, பல தியாகங்களையும் செய்த எனது தாய்க்கு நன்றி என்றும் அஜித் அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி 25 ஆண்டுகளாக எனக்கு துணையாக இருக்கும் என் மனைவி ஷாலினிக்கும் நன்றி, எனது மகிழ்ச்சிக்கும் வெற்றிக்கும் காரணமாக ஷாலினி திகழ்கிறார் என்றும் நடிகர் அஜித் அந்த அறிக்கையில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டு இருந்தார்.இன்று மாலை டெல்லியில் நடைபெற உள்ள விழாவில் நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட இருக்கிறது. இந்த பெருமைமிகு விருதை பெற்றுக் கொள்ள நடிகர் அஜித் தன்னுடைய மனைவி ஷாலினி மற்றும் மகள் அனோஷ்கா, மகன் ஆத்விக் உடன் விமானம் மூலம் நேற்று இரவு டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். விமான நிலையத்தில் அஜித்தை பார்த்த ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெற உள்ள விழாவில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு அஜித்துக்கு பத்ம பூஷன் விருதை வழங்க உள்ளார்.
- 105
Added article
தமிழ் சினிமாவில் குறுகிய காலகட்டத்தில் டப்ஸ்மாஷ், குறும்படம் ஆகியவற்றில் நடித்து பெரிய ஹீரோங்களுக்கு ஈடாக பிரபலமானவர் நடிகை அதுல்யா ரவி. அவர் நடித்த பல குறும்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கிய "ஏமாளி" படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.தமிழில் அவருக்கு இன்னும் ஹிட் படங்கள் அமையவில்லை. அதனால் இப்போது தெலுங்கு சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் வைரல் ஆகி வரும் நிலையில் இப்போது அவர் மாடர்ன் உடையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.
- 123
Added article
சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடிக்க உள்ள மூன்று படங்களின் அறிவிப்புகள் வெளியாகின. சிம்பு – ராம்குமார் பாலகிருஷ்னன் இயக்கத்தில் உருவாகும் அவரது 49 ஆவது படம் முதலில் தொடங்கவுள்ளது. ஆனால் இன்னும் படத்தின் திரைக்கதையை இயக்குனர் இறுதி செய்யாததால் படம் மே மாதத்தில்தான் தொடங்கும் என சொல்லப்படுகிறது.இந்த படத்தில் சிம்புவுடன் சந்தானம் ஒரு முக்கியமான வேடத்தில் நடிக்கவுள்ளதாக் தகவல் வெளியானது. அதை இப்போது சிம்பு உறுதிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவர் அளித்த ஒரு நேர்காணலில் “சிம்பு திடீரென்று ஒருநாள் அழைத்து நான் பண்ணும் ஒரு படத்தில் நீங்களும் இருக்கவேண்டும் என்றார். என்னால் அவருக்கு எப்போதும் No சொல்ல முடியாது. எப்போதுமே அவரை நான் அப்படி ஒரு இடத்தில் வைத்துள்ளேன்.” எனக் கூறியுள்ளார். மேலும் அவர் “சிம்பு படத்தில் அவர்கள் கேட்ட தேதிகளில் நான் வேறொரு படத்தில் நடிப்பதாக இருந்தேன். அதன் பிறகு அந்த தயாரிப்பாளரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு சிம்புவோடு நடிக்கவுள்ளேன்” என சிம்பு மீதான நட்பை வெளிப்படுத்தியுள்ளார்.
- 124
Added a news
பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைமறைவாக இருப்பதாகவும், அவரது குடும்பத்தினர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவத்தில் உள்ள முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்து வருவதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பெஹல்காம் தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு பின், திடீரென பாகிஸ்தான் ராணுவ தலைவர் தலைவராகி இருப்பதாகவும், அவர் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி, அவரது குடும்பம் ஏற்கனவே பாகிஸ்தானை விட்டு வெளியேறி வேறு நாட்டில் தஞ்சம் அடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள பல முக்கிய அதிகாரிகள் ராஜினாமா செய்துள்ளதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட உயர் அதிகாரிகள், 500க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
- 129
Added a news
கனடாவில் வன்கூவரில் இடம்பெற்ற விழாவில் கார் மோதியதில் பலர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். கனடாவின் இடம்பெற்றுள்ள இந்த துயர சம்பவம் தொடர்பில் தாம் வருந்துவதாக மன்னர் சார்லஸ் குறிப்பிட்டுள்ளார்.இது தொடர்பில் மன்னர் சார்லஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,வன்கூவரில் நிகழ்ந்த தாக்குதலில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து அறிந்த நானும் எனது மனைவியும் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளோம். இத்தகைய ஒரு துயர சம்பவத்தால் உயிரிழந்த அனைவருக்கும் எங்கள் இதயப்பூர்வமான பிரார்த்தனைகள் உரித்தாகட்டும். இந்த சம்பவம் கனடாவில் பலருக்கும் மிகவும் வேதனையை உருவாக்கியுள்ள நேரத்தில், எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.வன்கூவர் சம்பவத்தில் 5 வயது குழந்தை உட்பட 11 பேர் உயிரிழந்த நிலையில், காரை ஓட்டி சென்ற 30 வயது நபர், கனடா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 141
Added a news
பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கு உட்பட்ட பளை பிரதேசத்தில் உள்ள பொதுச் சந்தை மற்றும் பேருந்து தரிப்பிடம் போன்ற இடங்களில் நேற்று (27) காலை பதற்றமான நிலை காணப்பட்டது.இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,பளை பேருந்து தரிப்பிடத்தில் உள்ள பொது மலசல கூடமானது பராமரிப்பின்றி அசுத்தமான நிலையில் காணப்படுகின்றது. அதாவது மலசலகூடம் நிரம்பிய நிலையில் காணப்படுவதுடன் அதனை பிரதேச சபை சுத்தம் செய்யாமல் மரப்பலகைகள் மற்றும் கடதாசி தாள்கள் போன்றவற்றை கொண்டு மூடியுள்ளனர் இதனால் பேருந்து தரிப்பிடம் முழுவதும் துர்நாற்றம் வீசிய வண்ணம் உள்ளதுமலசல கூடத்தின் பின்புறப் பகுதி பல காலமாக சுத்தம் செய்யாமல் காணப்படுவதால் அங்கு நீர் தேங்கி நிற்பதுடன் மரங்கள் புற்கள் மற்றும் கழிவு நீர் என்பன அதிக அளவு காணப்படுவதால் நுளம்புகள் பெருகும் அபாயகரமாக காணப்படுகின்றது.இப்பகுதிகளிலே ஈக்கள் அதிகளவு காணப்படுவதுடன் அந்த ஈ மரக்கறி சந்தை மீன் சந்தை என்பவற்றில் வந்து நிற்பதால் வியாபாரிகள் தமது வியாபார நடவடிக்கையின் போது கொள்வனவாளர்கள் வியாபாரப் பொருட்களை கொள்வனவு செய்யும் போது ஈக்கள் நிற்பதால் அசுத்தமான பொருட்கள் என மரக்றி மீன்கள் என்பவற்றை கொள்வனவு செய்ய அச்சப்படுகின்றனர்.மேலும் மீன் சந்தை சுற்றியுள்ள வடிகால் முழுவதும் நீர் தேங்கி நிற்பதுடன் புற்கள், மரங்கள் என்பன வளர்ந்து காணப்படுகின்றது. மற்றும் மீன் சந்தையின் கழிவு பொருட்கள் அங்கங்கே காணப்படுவதால் பொருட்களாலும் துர்நாற்றம் வீசுகின்றது இதனால் சந்தைக்குள் வரும் வாடிக்கையாளர்கள் பல சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர் =மேலும் மக்கள் பிரதேச சபை இவ்வாறு பல தடவை தமக்கு வாக்குறுதி கொடுத்தும் தாம் தொடர்ந்து ஏமாற்றப்பட்டு வருவதாகவும் பிரதேச சபையில் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் கூறுகின்றனர்.மேலும் பொதுச்சந்தை கட்டடத் தொகுதியின் நடுப்பகுதியில் தற்பொழுது பெய்த மழை காரணத்தால் நீர் தேங்கி நிற்பதுடன் சந்தைக்குள் வரும் வாடிக்கையாளர்கள் இது நீரினால் பாரிய சிரமத்தினை எதிர்நோக்கி வருகின்றனர்.000
- 243
Added a news
யாழில் காய்ச்சாத காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். இதன்போது 2 ஆம் குறுக்கு தெரு, கொழும்புத்துறை பகுதியை சேர்ந்த கமலநாதன் ராஜபத்மினி (வயது 56) எனாபவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த பெண்ணுக்கு கடந்த 26 ஆம் திகதி காலை காய்ச்சல் ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றையதினம் மாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.000
- 254
Added a news
அதிகாலை வேளைகளில் வெளிமாவட்ட சேவையில் அல்லல்படும் அரச/தனியார் உத்தியோகத்தர்களின் அல்லலை மேலும் அதிகரிக்கும் செயலில் இ.போ.ச கிளிநொச்சி டிப்போ பேருந்துகள் செயற்பட்டு வருகின்றதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.வட்டக்கச்சி மாத்திரம் செல்லும் ஓர் பேருந்து வட்டக்கச்சி பெயர் பலகையை மறைவான இடத்தில் வைத்தவாறு அக்கரைப்பற்று பெயர்ப்பலகையுடன் பயணிகளை ஏற்றுகிறது.மிகவும் குறைந்த வேகத்தில் நகரும் இப்பேரூந்துகள் A - 9 வீதியில் வவுனியா வரை செல்லக்கூடிய பயணிகளை தனது மாய வலைக்குள் வீழ்த்தி தனது டிப்போவுக்கான வருமானத்தை அதிகப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகிறதா என்ற ஐயப்பாட்டினை தோற்றுவிப்பதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.இதனால் இறுதியில் நேரம் பிந்தி சேவைக்கு சென்று அறிக்கையிடுவதால் தமது சொந்த விடுப்புக்கு பங்கம் ஏற்படுவதாக, குறித்த பேருந்தில் பயணிக்கும் அரச/தனியார் நிறுவனங்களில் பணி புரியும் ஊழியர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.000
- 221
Added a news
மூத்த ஊடகவியலாளர் தராகியின் 20 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (28) இலங்கையின் ஊடகப் பரப்பில் இருக்கும் சக ஊடகவியலாளர்களால் யாழ்ப்பாணத்தில் நினைவு கூரப்பட்டது.யாழ்ப்பாணம் ஊடக அமையம், கிழக்கிலங்கை ஊடகவியலாளர்கள் ஒன்றியம், தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - பிரதான வீதியில் அமைந்துள்ள ஊடகவியலாளர்களுக்கான நினைவுத் தூபியில் தராகி சிவராமின் நினைவேந்தல் இடம்பெற்றது.இதன்போது ஊடகவியலாளர் தராகி சிவராம் மற்றும், ஊடகவியலாளர் செல்வராஜா ரஜிவர்மன் ஆகியோரின் உருவப்படத்திற்கு சுடரேற்றி மலர் அஞ்சலி செலுத்தி நினைவு கூறப்பட்டது.மேலும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி ஊடகவியலாளர்களால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளப்பட்டது.குறிப்பக 41 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் இருக்கும் நிலையில் இன்றுவரை அவர்களுக்கான நீதி எந்தவொரு அரசுகளாலும் வழங்கப்படாதிருக்கின்ற நிலையில் நீதியை வழங்குமாறு இந்த நினைவு நாளில் வலுயுறுத்தப்பட்டது.இதன்போது ஊடகவியாளர்கள், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.இன்றைய நினைவேந்தல் போது பொலிஸார் மற்றும் புலனாய்ப்பிரிவினரின் கடும் அச்சுறுத்தல் காணப்பட்டமை குறிப்பிடதக்கது000
- 245
Added a news
நேற்றையதினம் வெளியாகிய 2024ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி 55 3ஏ சித்திகளையும், 55 2ஏ சித்திகளையும், 19 ஏ 2 பி சித்திகளையும் பெற்று யாழ். இந்துக் கல்லூரி சாதனை படைத்துள்ளது.அந்தவகையில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 22 3ஏ சித்திகளும், 13 2ஏ சித்திகளும், 06 ஏ 2பி சித்திகளும், பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 3ஏ சித்திகளும், 16 2ஏ சித்திகளும், 11 ஏ 2பி சித்திகளும், வணிகத் துறையில் ஒரு 3ஏ சித்தியும், இரண்டு 2ஏ சித்திகளும், இரண்டு ஏ 2பி சித்திகளும், கலைப்பிரிவில் இரண்டு 2ஏ சித்திகளும், பொது பிரிவில் மூன்று 3ஏ சித்திகளும், ஒரு 2ஏ சித்திகளும், உயிரியல் தொழில்நுட்ப பிரிவில் ஒரு 3ஏ சித்தியும், இயந்திரவியல் தொழில்நுட்ப பிரிவில் ஒரு 3ஏ சித்தியும் பெற்று சாதனை படைத்துள்ளது.உயிரியல் விஞ்ஞான பிரிவுஜமுனானந்தா பிரணவன் 3ஏ, ஜமுனானந்தா சரவணன் 3ஏ, ராஜன் ஆபிராம் 3ஏ, சிறிசுந்தரராஜா ஸ்ரீகாந்த் 3ஏ, டெனி கொன்ஸ்ரன்ரைன் லொஹான் ஸ்ரென்விஜ் 3ஏ, சதீஸ்குமார் லதீசனன் 3ஏ, ஜெசிதரன் லதுர்சன் 3ஏ, சிவயோகன் விஷ்ணுஜன் 3ஏ, சிவரஞ்சன் மாதுளன் 3ஏ, முரளிமோகன் மிருணளன் 3ஏ, சிவகுமாரன் சங்கீதனன் 3ஏ, சோதிநாதன் வசீகரன் 3ஏ, தேவானந் ஆனந்தராஜ் 3ஏ, சாந்தகுமார் கவின் 3ஏ, ரமணீதரன் ரதுக்சன் 3ஏ, சந்திரகுமாரன் சங்கீதம் 3ஏ, விஜயகுமார் ஆகாஷ் 3ஏ, லட்சுமிகாந்தன் லிசோகன் 3ஏ, சுபாஷ்கரன் கஜாணன் 3ஏ, கிருஷ்ணவசீகரன் தீனுசன் 3ஏ, கணநாதன் தருண் 3ஏ, விக்னேஷ்வரமூர்த்தி பரத்வாசன் 3ஏ, சிவஞானம் துளசிகன் 2ஏ பி, சுகந்தன் சபிஷன் 2ஏ பி, சுபாஷ்கரன் கஜன் 2ஏ பி, நவரத்தினராசா நிருத்திகன் 2ஏ பி, சிவகுமார் ஹரீசான் 2ஏ பி, உதயாதரன் கிருபரன் 2ஏ பி, சாந்தகுமாரன் கலியுகன் 2ஏ பி, கருணாகரன் மயூரேஷ் 2ஏ பி, சுதன் விஷ்ணு 2ஏ பி, பரமானந்தம் நிகேசன் 2ஏ சி, கேதீஸ்வரன் கரிஜன் 2ஏ சி, அன்ரனிசில்வா டனுசன் 2ஏ சி, மகேஷ்வரன் கஜன் 2ஏ சிபௌதீக விஞ்ஞான பிரிவு மலர்வண்ணன் அகரன் 3ஏ, சதீஸ்குமார் அபிசகேதிவர் 3ஏ, குருபரன் சங்கரன் 3ஏ, ரெஜினோல்ட்ஸ்கரன் ஜெருஷன் 3ஏ, சுரேந்திரநாதன் லாவண்யன் 3ஏ, சிறீஸ்கந்தராசா கஜலக்சன் 3ஏ, அன்ரனிஜோர்ஜ் பிரின்ஸியம் 3ஏ, பரமேஸ்வரன் சுடரழகன் 3ஏ, செல்வநாயகம் தமீசன் 3ஏ, சண்முகனேசன் குணாளன் 3ஏ, சுஜீவகுமார் சிவேதயன் 3ஏ, செந்தில்குமார் நிதர்சன் 3ஏ, சத்தியசீலன் தேனுஜன் 3ஏ, ஜெகதீசன் ஆர்த்திகன் 3ஏ, ஜெயபாலன் துஷியந் 3ஏ, குகநாதன் டிரோசென் 3ஏ, சிறிகிருஷ்ணகாந்தன் புதுமிகன் 3ஏ, கணேஷ்வரன் அனுசன் 3ஏ, முருகானந்தன் சங்கமன் 3ஏ, விக்னராஜா திரேஷன் 3ஏ, தவபாலன் பகீரதன் 3ஏ, கிருபாகரன் பிரணவன் 3ஏ, அருள்நேசன் மகிந்தன் 3ஏ, ரவிச்சந்திரன் சோபிதன் 3ஏ, நிரஞ்சன் சாகித்தியன் 3ஏ, புவனேந்திரன் சஞ்சீவன் 3ஏ, கோபாலகிருஷ்ணன் கஜதக்சன் 3ஏ, சிவகுமாரன் அபினாஷ் 2ஏ பி, நக்கீரன் ஆதித்தியன் 2ஏ பி, முகுந்தன் பிரணவன் 2ஏ பி, ஹெய்ஞ்சர்லஸ் ஹெட்ரியன் 2ஏ பி, சந்திரகாந்தன் நந்தலாலன் 2ஏ பி, ராசேஷ்வரன் மகிழ்ரஞ்சன் 2ஏ பி, விஜயசந்திரன் சிறிகஜன் 2ஏ பி, செல்வமகேசன் அபிரூபன் 2ஏ பி, பிரணவசொருபன் குருஷேத்திரன் 2ஏ பி, புஷ்பராஜ் கிருஷாந் 2ஏ பி, பரஞ்சோதி விஷ்ணுஜன் 2ஏ பி, சரவணபவன் செரோன் 2ஏ பி, தயாபரகுருக்கள் யதுசனன் 2ஏ பி, அரவிந்தன் அபேர்நாத் 2ஏ பி, உதயதேவன் 2ஏ சி, சதாநந்தன் ஜுஜிந்தன் 2ஏ சிபொது பிரிவு - ஜெயமோகன் பபிசன் 3ஏ, ஜெயராசன் அபிநயன் 3ஏ, ரகுமார் தருண் 3ஏ, சிறிதரன் தர்மிகன் 2ஏ பிவணிகப்பிரிவு - விஜயசுந்தரம் வரணன் 3 ஏ, காந்தரூபன்சஞ்சய் 2 ஏ பி, குகநாதன் மிதுசன் 2 ஏ சிஉயிரியல் தொழில்நுட்பம் - ஜெகதீஸ்வரன் துஷாந் 3ஏஇயந்திரவியல் தொழில்நுட்பம் - சற்குணராசா சந்தோஷ் 3ஏகலைப் பிரிவு - முருகமூர்த்தி நயனன் 2ஏ பி, யோகசீலன் சாருஜன் 2ஏ பி000
- 244
Added a post
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்முடிவுகளை எடுப்பதில் கவனம் வேண்டும். வியாபாரம் நிமிர்த்தமான பயணங்களை மேற்கொள்வீர்கள். நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். மனதில் புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே பொறுமை அவசியம். கலைத்துறையில் முயற்சிகள் ஈடேறும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். வரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் ரிஷபம்நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். அலைபாயும் சிந்தனைகளால் சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும். உயர் அதிகாரிகளின் மறைமுகமான ஒத்துழைப்பு கிடைக்கும். ஆடம்பரமான விஷயங்களில் மனம் லயக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு ஏற்படும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : நீலம் மிதுனம்செல்வச்சேர்க்கைக்கான வாய்ப்புகள் அமையும். தந்தையின் ஆரோக்கியம் மேம்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் சாதகமாகும். வீடு மாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடும். பழைய நினைவுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். சிற்பத்துறைகளில் சாதகமான சுழல் அமையும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கடகம்சமூகம் தொடர்பான நிகழ்வுகளால் மனதில் மாற்றம் ஏற்படும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். நெருக்கடியான சில பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். பணிபுரியும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரம் நிமிர்த்தமான இடமாற்றம் குறித்த எண்ணங்கள் மேம்படும். முயற்சிகளில் புதிய அனுபவம் ஏற்படும். பெருமை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்சிம்மம்பிடிவாத குணத்தினை குறைத்துக் கொள்ளவும். குழந்தைகளால் மதிப்பு உயரும். விலகி இருந்தவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். பயம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கன்னிபுதிய இடங்களுக்கு சென்று வருவதற்கான முயற்சிகள் மேம்படும். மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படும். உணவு சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்தோடு இருக்க வேண்டும். சிந்தனையின் போக்கில் கவனம் வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் பொறுமை வேண்டும். தாமதம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் துலாம்சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வருமானத்தினை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரத்தில் முதலீடுகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் விருச்சிகம்வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுகளில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. ஆரோக்கியத்தில் இருந்துவந்த இன்னல்கள் விலகும். பிடிவாதப் போக்கை குறைத்து கொள்ளவும். இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொதுகாரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் தனுசுவாகனம் வசதிகள் மேம்படும். எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் உண்டாகும். பயணங்களால் புதிய அனுபவம் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். பொன், பொருட்சேர்க்கை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை மகரம்முக்கிய பிரமுகர்களின் சந்திப்பு ஏற்படும். புதிய வேலை சார்ந்த எண்ணங்கள் உண்டாகும். தள்ளிப்போன சில காரியங்கள் கைகூடும். அதிரடி மாற்றங்களால் லாபத்தை மேம்படுவீர்கள். கடன் பற்றிய சிந்தனைகள் ஏற்படும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் கும்பம்கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். தாய்மாமன் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். பணப்புழக்கம் சூழலுக்கு ஏற்ப சாதகமாக இருக்கும். நீண்ட தூரப் பயணம் சார்ந்த எண்ணங்கள் கைகூடும். ரகசியமான சில முதலீடுகள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல்கள் உண்டாகும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மீனம்நினைத்த பணிகளில் தாமதம் உண்டாகும். குடும்பத்தினருடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்படும். கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. பொன், பொருட்சேர்க்கை உண்டாகும். கல்விப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வாக்கு வன்மையால் மேன்மை உண்டாகும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
- 389
Added a post
விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 15 ஆம் தேதி திங்கட்கிழமை 28.4.2025.திதி : இன்று அதிகாலை 01.31 வரை அமாவாசை. பின்னர் இரவு 11.26 வரை பிரதமை. பிறகு துவிதியை..நட்சத்திரம் : இன்று அதிகாலை 01.02 வரை அஸ்வினி. பின்னர் இரவு 11.34 வரை பரணி. பிறகு கிருத்திகை.நாமயோகம் : இன்று அதிகாலை 12.45 வரை பிரீதி. பின்னர் இரவு 09.40 வரை ஆயுஷ்மான். பிறகு சௌபாக்கியம்.கரணம் : இன்று அதிகாலை 01.31 வரை நாகவம். பின்னர் பிற்பகல் 12.19 வரை கிமிஸ்துக்கினம். பிறகு இரவு 11.06 வரை பவம். பின்பு பாலவம்.அமிர்தாதியோகம்: இன்று காலை 11.24 சித்த யோகம். பின்னர் மரண யோகம்.நல்ல நேரம்காலை : 06.30 முதல் 07.30 மணி வரை பகல் : 01.30 முதல் 02.30 மணி வரை மாலை : 04.30 முதல் 05.30 மணி வரை இரவு : 07.30 முதல் 08.30 மணி வரை
- 412
Added a post
சென்னை இன்று மிகப்பெரிய மாநகரமாக விளங்க காரணம், பல சிறு சிறு கிராமங்களின் இணைவு தான்... சிறுதுளி பெருவெள்ளம் என்பது போல் பல கிராமங்கள் இணைந்து சென்னை பிரமாண்டமாய் உருவெடுத்துள்ளது...அப்படி இணைந்த கிராமங்களின் பெயர்கள் உருவானதின் பின்னணியை தெரிந்து கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே...* 108 சக்தி ஸ்தலங்களில் 51வது ஊர். ஆகையால் ஐம்பத்து ஒன்றாம் ஊர் என்று அழைக்கப்பட்டு, பின்னாளில் இவ்வூர் அம்பத்தூர் என மாறியது...* Armoured Vehicles And Depot of India என்பதின் சுருக்கமே ஆவடி(AVADI)...* chrome leather factory இப்பகுதியில் அதிக அளவில் இருந்ததால் இப்பகுதி குரோம்பேட்டை என அழைக்கப்படலாயிற்று...* 17,18ம் நுற்றாண்டுகளில் நவாப் ஒருவரின் ட்டுப்பாட்டில் இருந்தது இப்பகுதி. அவருடைய குதிரைகளின் பசியை போக்கும் நந்தவனமாக இது விளங்கியதால், garden of horses என்னும் பொருள் படும் Ghoda bagh என்று உருது மொழியில் பெயர் வைத்தார். பின்னாளில் அதுவே கோடம்பாக்கமாக மாறியது...* மகப்பேறு என்பதே மருவி முகப்பேர் ஆனது...* தென்னை மரங்கள் நிரம்பிய பகுதி அது. ஆகையால் தென்னம்பேட்டை என பெயர் வைத்தார்கள். பிற்பாடு அது தேனாம்பேட்டையாக மாறிப்போனது...* சையிது ஷா பேட்டை தான் சைதாபேட்டை என அழைக்கப்படுகிறது...* முற்காலத்தில் வேதஸ்ரேணி என அழைக்கப்பட்டது தற்போதைய வேளச்சேரி...* உருது வார்த்தையான che bage (six gardens என்பது இதன் பொருள்) என்பதிலிருந்து உருவானது தான் சேப்பாக்கம்...* சௌந்தர பாண்டியன் பஜார் என்பதின் சுருக்கமே பாண்டி பஜார்...* கலைஞர் கருணாநிதி நகரை சுருக்கி கே.கே. நகர் என அழைக்கிறோம்...* சிவபெருமானுக்கு உகந்த வில்வமரங்கள் அதிகம் இருந்ததால் மகாவில்வம் என அழைக்கப்பட்ட இப்பகுதி, பின்பு மாவில்வம் என்றாகி, காலப்போக்கில் எப்படியோ மாம்பலமாகி விட்டது...* பல்லவர்கள் ஆட்சி செய்ததால் பல்லவபுரம் என்றழைக்கப்பட்ட இடம் தான் பல்லாவரம்...* சென்னை மாகாண முதல்வராக இருந்த பனகல் ராஜாவின் நினைவாக இவ்விடம் பனகல் பார்க் என அழைக்கப்படுகிறது...* நீதி கட்சி தலைவர் சர். பி.டி.தியாகராஜன் செட்டியின் பெயராலேயே இப்பகுதி தியாகராய நகர் என அழைக்கப்படுகிறது(தி.நகர்)...* புரசை மரங்கள் மிகுதியாக இப்பகுதியில் இருந்ததால், இப்பகுதி புரசைவாக்கம் ஆனது...* அதிக அளவில் மல்லிகை பூக்கள் பயிரிடப்பட்ட பகுதி இது. திருக்கச்சி நம்பி ஆழ்வார் தினமும் இங்கிருந்து பூக்களை பறித்துக்கொண்டு சென்று காஞ்சி வரதராஜபெருமாளை வழிபட்டு வந்தார். அதனால் இவ்விடம் சமஸ்கிருதத்தில் புஷ்பகவல்லி என்றும், தமிழில் பூவிருந்தவல்லி என்றும் அழைக்கப்படுகிறது. பின்னாளில் இது பூந்தமல்லியாக மாறியது. வல்லி என்பது தெய்வத்தை குறிக்கும் ஒரு பெயர்...* 17ம் நூற்றாண்டில் இங்கு வாழ்ந்து வந்த ஒரு முஸ்லீம் துறவி ‘குணங்குடி மஸ்தான் சாகிப்’. இவரது சொந்த ஊர் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளதொண்டி. ஆகையால் அப்பகுதி மக்கள் அவரை தொண்டியார் என அழைத்தனர். அந்த ஏரியா தான் தற்போதைய தண்டயார்பேட்டை...* முன்பு இப்பகுதி ஆடு மாடுகள் மேயும் திறந்தவெளியாக இருந்துள்ளது. அதனாலேயே மந்தைவெளி என்றழைக்கபடுகிறது...* மயில் ஆர்ப்பரிக்கும் ஊர் என்பதே மயிலாப்பூர் என மாறிப்போனது...* பல்லவர்கள் காலத்தில் போர்கள் நடத்த இவ்விடத்தையே பயன்படுத்தியதால், இப்பகுதி போரூர் எனப்படுகிறது...* சில நூறு வருடங்களுக்கு முன்பு இப்பகுதி முழுவதும் மூங்கில் மரங்கள் இருந்தது. அதனாலேயே பெரம்பூர் எனப்படுகிறது...* திரிசூல நாதர் ஆலயம் இருப்பதால் இந்த ஏரியா திரிசூலம் என்று அழைக்கப்படுகிறது...* பார்த்தசாரதி கோவிலின் எதிர்ப்புறம் இருக்கும் குளத்தில் நிறைய அல்லிகள் பூக்கும். அதன் காரணமாக இப்பகுதிக்கு திருஅல்லிக்கேணி எனபெயர் உருவாக்கி, பின்பு திருவல்லிக்கேணியாகி, தற்போது triplicane என மாற்றம் கண்டுள்ளது...* தாமஸ் பாரி என்பவர் இப்பகுதில் வணிகம் செய்துவந்தார். மக்கள் மத்தியில் மிகவும் மதிப்பு பெற்றிருந்த அவரின் பெயராலேயேஇப்பகுதி பாரிமுனை (பாரிஸ் கார்னர்) ஆனது...* வள்ளி சேரி பாக்கம் என்பதே மருவி பின்னால் வளசரவாக்கம் என மாறியது.
- 417