Ads
Semi soft silk saree with blouse $75
semi soft silk saree with blouse
Empty
Added a news
கத்தோலிக்க திருச்சபை தலைவரான போப் பிரான்சிஸ் (வயது 88), மூச்சுக்குழாய் அழற்சி காரணமாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கடந்த வியாழக்கிழமை உடல்நல பாதிப்பு ஏற்பட்ட நிலையில் பிரார்த்தனைக் கூட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தார்.ஆனாலும் தனக்கு மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதாக போப் பிரான்சிஸ் தெரிவித்தார்.இந்நிலையில், இத்தாலி தலைநகர் ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என வாடிகன் அறிக்கை வெளியிட்டுள்ளது.ஏற்கனவே, இதே மருத்துவமனையில் குடல் அறுவை சிகிச்சைக்காக கடந்த 2021, ஜூலை மாதத்தில் போப் பிரான்சிஸ் 10 நாட்கள் அனுமதிக்கப்பட்டார். 2023, ஜூலையிலும் அதே மருத்துவமனையில் அவருக்கு குடலிறக்கத்தை சரிசெய்வதற்கான அறுவை சிகிச்சையும் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.000
- 126
Added a news
யாழில் நேற்றிரவு திடீரென மயங்கி விழுந்த குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பேரின்பன் கோகிலவாசன் (வயது - 59) என்ற நபரே இந்த இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த நபர் மேசன் வேலைக்காக யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதிக்கு வருகை தந்திருந்தார். இந்நிலையில் நேற்றிரவு 11.00 மணியளவில் திடீரென மயக்கமுற்றார். இதன்போது அவசர நோயாளர் காவு வண்டிக்கு தகவல் வழங்கப்பட்டது. இருப்பினும் அங்கு வந்த நோயாளர் காவு வண்டி அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதால் திரும்பி சென்றது.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.000
- 128
Added a news
14 வயது மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இன்றையதினம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவமானது செட்டியார்மடம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த குற்றச்செயலுடன் சந்தேகநபரான 21 வயதுடைய இளைஞர் தலைமறைவாகியுள்ளார். மருத்துவ பரிசோதனைக்காக சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
- 125
Added a news
வடமராட்சி கிழக்கு வத்திராயன் பகுதியில் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் நேற்று (14) திறந்துவைக்கப்பட்டுள்ளது.பொருளாதார நெருக்கடியால் பூர்த்தியடையாமல் காணப்பட்ட வத்திராயன் பொருளாதார அபிவிருத்தி மைய கட்டிடம் முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஆகியோரின் அதிகளவான நிதிப்பங்களிப்போடு பூர்த்தி செய்யப்பட்டு இன்று மக்கள் பாவனைக்காக திறந்துவைக்கப்பட்டதுவத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் செல்வன் தலைமையில் நேற்று காலை ஆரம்பமான நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் கலந்து கொண்டு மண்டபத்தை நாடா வெட்டி திறந்துவைத்தார்.இந்நிகழ்வில் வத்திராயன் கிராம அலுவலர், வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக கணக்காளர், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடகப் பேச்சாளர் சிறிரங்கேஸ்வரன், தேசிய மக்கள் சக்தியின் மருதங்கேணி கிளை பொறுப்பாளர் ஷாம், சிகரம் கல்வி நிறுவனத்தின் இயக்குனர், வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர், மருதங்கேணி சுகாதார பரிசோதகர், வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்000
- 131
Added a news
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (14.02.2025) யாழ். மத்திய கல்லூரிவிளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மகளிர் விவகாரம் புனர்வாழ்வளித்தல் ,சமூக சேவைகள்,கூட்டுறவு ,உணவு வழங்கலும் விநியோகமும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் வர்த்தகமும் வாணிபமும் மாகாண அமைச்சின் செயலாளர் திரு .பொ. வாகீசன்,அவர்களும் சிறப்பு விருந்தினராக FAIRMED செயற்றிட்ட தலைவர் திருமதி.ஞானரதன் பிரியரஜினி,அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.மாற்றுத்திறனாளிகளின் திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது. 7 வகையான மாற்றுத்திறனாளிகள் தெரிவு செய்யப்பட்டு 87 வகையான விளையாட்டுக்கள் நடைபெற்றன.இவ் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கானமாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.000
- 130
Added a post
குரோதி வருடம் மாசி மாதம் 2 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 14.02.2025சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 10.21 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று இரவு 11.41 வரை பூரம். பின்னர் உத்திரம். திருவோணம், அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்..
- 344
Added a news
வடமராட்சி கிழக்கு யா/ஆழியவளை சி.சி.த.க வித்தியாலய வருடாந்த இல்ல மெய்வல்லுநர் போட்டி நேற்று (13.02.2025) வியாழக் கிழமை பாடசாலை மைதானத்தில் பி.ப 01.45 மணியளவில் ஆரம்பமானது.இசைவாத்தியங்கள் முழங்க விருந்தினர்கள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டு பாடசாலை முதல்வர் கந்தசாமி-சிவனேசன் தலைமையில் நிகழ்வு ஆரம்பமானது.இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி பிராந்தியத்தின் சமுதாய மருத்துவ உத்தியோகத்தரும், பழைய மாணவனுமாகிய வைத்திய கலாநிதி வேலுப்பிள்ளை சிவநேசன் கலந்து கொண்டதுடன் கெளரவ விருந்தினராக யா/அல்வாய் சிறிலங்கா வித்தியாசாலை ஆசிரியர் திரு.சு.வேலுப்பிள்ளை ஆகியோர் கலந்து கொண்டனர்நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக ஓய்வு நிலை அதிபர் திரு.பொ.பொன்னம்பலம், ஓய்வு நிலை அதிபர் திரு.வ.நின்மதிராசா, ஆசிரிய ஆலோசகர் திரு.க.பிரபாகரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசில்கள் வழங்கப்பட்டதுடன், வெற்றிக் கோப்பைகளும் விருந்தினர்களால் வழங்கி கெளரவிக்கப்பட்டது.இந்நிகழ்வில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்வி சாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
- 492
Added a news
நாடாளவிய ரீதியில் இன்றுமுதல் தினசரி மின்வெட்டு இருக்காது என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.மேலும், நேற்று மாலை 5:00 மணி முதல் இரவு 9:30 மணி வரை ஒரு மணி நேர மின்வெட்டு நாடாளவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டது.அதற்கமைய, மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை, தலா 4 மணி நேரம் கொண்ட 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, 20 மண்டலங்களாக இந்த மின்வெட்டு மேற்கொள்ளப்பட்டது.கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென நாடு முழுவதும் மின்சாரம் தடைப்பட்டதால், நுரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று ஜெனரேட்டர்களும் செயலிழந்தன.இந்நிலையில் அவை விரைவாக சீர்செய்யப்பட்டு தேசிய மின்கட்டமைப்புடன் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மின்விநியோகம் வழமைக்கு திரும்புவதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது000
- 531
Added a news
யாழ். கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் ஆண்கள், பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு இடம்பெற்றது.வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் வருடாந்த இல்ல மெய்வல்லுநர் திறனாய்வு போட்டியை முன்னிட்டு இன்று (14.02.2025) காலை மரதன் ஓட்ட நிகழ்வு நடைபெற்றுள்ளது.பாடசாலை முதல்வர் யோகலிங்கம் தலைமையில் காலை 06.00 உடுத்துறையில் இருந்து ஆரம்பமான ஆண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு பாடசாலையில் நிறைவு பெற்றதோடு, காலை 06.30 மணியளவில் ஆழியவளையில் ஆரம்பமான பெண்களுக்கான மரதன் ஓட்ட நிகழ்வு கட்டைக்காடு பாடசாலையில் நிறைவுபெற்றது.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள்,பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தி வரவேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 531
Added a news
2,000 வைத்தியர்கள் சுகாதார சேவைகளிலிருந்து விலகிக்கொண்டதாகவும் சுமார் 5,000 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் மருந்து விநியோகத்தர்கள் பற்றாக்குறை ஏற்பட்டு பாரிய சிக்கல்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் சங்கம் சங்கத்தின் செய்தித் தொடர்பாளரான வைத்தியர் சமில் விஜேசிறி மேலும் குறிப்பிட்டுள்ளார்.சேவையிலிருந்து தங்களை விலக்கிக்கொண்ட வைத்தியர்கள் வெளிநாடுகளில் மருத்துவ சேவைகளை வழங்குவதற்கான தகைமைகளை முன்னரே பெற்றுக்கொண்டுள்ளனர். வெளிநாடுகளில் சிறந்த வாழ்க்கைச் சூழல், பொருளாதார வளங்கள் காணப்படுவதால் அவர்கள் அங்கு தொழில் வாய்ப்புகளை தேடுகின்றனர். இதுபோன்ற சூழ்நிலையில், நாட்டில் உள்ள வைத்தியர்களையும் மருத்துவ ஊழியர்களையும் பாதுகாப்பதோடு, நிலையான பொருளாதாரத்தை உறுதிப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சுகாதார சேவையில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நிவர்த்தி செய்ய, அரசாங்கம் ஒரு குறுகிய கால தீர்வினை காண வேண்டும். சுகாதார சேவை மோசமான நிலைக்குச் செல்வதை தடுப்பதற்குத் தேவையான மாற்று வழிகளை வரவு - செலவு திட்டம் அறிமுகப்படுத்தும் என நம்புகிறேன் என்றும் தெரிவித்தள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 535
Added a news
முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்க மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் விசேட சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளனர்.கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றையதினம் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து சுமார் இரண்டு மணித்தியாலங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளது.முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர பிரியதர்சன யாபா, சுசில் பிரேமஜயந்த, மஹிந்த அமரவீர, நிமால் சிறிபால டி சில்வா, உதய கம்மன்பில, நிமால் லன்சா, ராஜித சேனாரட்ன, ருவான் விஜேவர்தன, சாகல ரட்நாயக்க உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் பங்கேற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.இதேவேளை, பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டதாகவும் எதிர்வரும் நாட்களில் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை எனவும், நட்பு ரீதியான கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்சா தெரிவித்துள்ளார். 000
- 534
Added a news
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் பிரிவினைவாதிகளுடன் ஒன்றிணைந்து இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதிக்கு எழுத்து மூலமாக அறிவிப்போம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்..பிரிவினைவாதத்துக்கு எதிரான கூட்டணியினர் கொழும்பில் உள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதரகத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் இலங்கையின் இறையாண்மைக்கும், சுயாட்சிக்கும் சவால் விடுக்கும் வகையில் செயற்பட்டுள்ளார்.நாட்டின் உள்ளக விவகாரங்களில் தலையிட்டுள்ளார். அத்துடன் வியன்னா ஒப்பந்தத்தையும் மீறியுள்ளார்.எமது அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின் போது அமெரிக்க தூதுவர் முறையற்ற வகையில் செயற்பட்டார். அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கினார்.ஆகவே இவரை மீண்டும் அமெரிக்காவுக்கு அழைத்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு அமெரிக்க ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.பாலினம் தொடர்பில் ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிப்பதற்காக அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனம் பல மில்லியன் டொலர்களை செலவழித்துள்ளாக அமெரிக்காவின் புதிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.இலங்கையின் கலாச்சாரத்தை சீரழிப்பதற்காகவே இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஆகவே இவ்விடயம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், நிதி பெற்றுக் கொண்டவர்களின் விபரங்களை பகிரங்கப்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறோம் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது000
- 538
Added a news
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தேர்தல் செயற்பாடுகளுக்கும் நிதியளித்துள்ளதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது இந்த நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டது. இந்த நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அந்த நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகரிடம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்திடமிருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உட்பட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நிதி பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.இந்த குற்றச்சாட்டு குறித்து நாட்டின் இரண்டாம் பிரஜையான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பிரதமர் கடந்த காலங்களில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் பௌத்த மதம், பாலினம் விவகாரத்தில் அவர் முற்போக்கான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து பிரதமர் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்000
- 535
Added a news
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உரிய தினத்தில் நடத்துமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நேற்றையதினம் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கடிதம் ஒன்றை கையளித்துள்ளன.பதிவு செய்யப்பட்ட 13 கட்சிகளின் செயலாளர்கள் இந்த கடிதத்தில் கையொப்பமிட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் பாதீடு விவாதம் மற்றும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை என்பன நடைபெறவுள்ளன.எனவே, இவற்றைக் கருத்திற் கொண்டு உரிய தினத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்குமாறு அந்த கடிதத்தில் கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
- 534
Added a news
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு குறித்து பிரதமர் நாட்டுக்கு உண்மையை பகிரங்கப்படுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.யு.எஸ்.எய்ட் நிறுவனம் இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், பாகிஸ்தான், இந்தோனேசியா ஆகிய நாடுகளில் அரசாங்கங்களை மாற்றுவதற்கும், தேர்தல் செயற்பாடுகளுக்கும் நிதியளித்துள்ளதாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி உத்தியோகபூர்வமாக குறிப்பிட்டுள்ளார்.2022 ஆம் ஆண்டு போராட்டத்தின் போது இந்த நிறுவனம் நேரடியாகவும், மறைமுகமாகவும் போராட்டக்காரர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட்டது. இந்த நிறுவனத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அந்த நிதி பயன்படுத்தப்பட்ட விதம் குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சபாநாயகரிடம் எழுத்துமூலமாக அறிவித்துள்ளார்.அமெரிக்காவின் யு.எஸ்.எய்ட் நிறுவனத்திடமிருந்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உட்பட முன்னாள் ஜனாதிபதி, பிரதமர் ஆகியோர் நிதி பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.இந்த குற்றச்சாட்டு குறித்து நாட்டின் இரண்டாம் பிரஜையான பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாட்டுக்கு உண்மையை குறிப்பிட வேண்டும். பிரதமர் கடந்த காலங்களில் சமஷ்டியாட்சி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டார். அத்துடன் பௌத்த மதம், பாலினம் விவகாரத்தில் அவர் முற்போக்கான நிலைப்பாட்டையே கொண்டுள்ளார். ஆகவே இவ்விடயம் குறித்து பிரதமர் உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும் என்றார்000
- 537