தென்மராட்சி மீசாலை என்றாலே மாம்பழமும்,பலாப்பழமுமே சட்டென்று நினைவில் வரும். பலாப்பழ சீசன் தொடங்கியதும் மீசாலை களை கட்டத் தொடங்கி விடும். அண்மைக்காலங்களாக மீசாலை ஐயா கடையடி பலாப்பழம் விற்கும் இடமாக மாறியுள்ளது.உள்ளூர் பலாப்பழ பிரியர்களும் ,தென்னிலங்கை வியாபாரிகளும், வெளிநாட்டு வாசிகளும் இவ்விடத்தில் வந்து பலாப்பழத்தை வாங்கி செல்கின்றனர்.வைகாசி,ஆனி,ஆடி மாதம் வரை மீசாலை ஐயா கடை பலாப்பழ வாசம் வீசிய படி ஒவ்வொருவரையும் சுண்டி இழுக்கிறது.
மீசாலை வடக்கு மீசாலையை பிறப்பிடமாகவும், வேம்பிராய்ச்சந்தியை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வெற்றிவேலு அரியபூமணி (மலர்) அவர்கள் 17.02.2024 சனிக்கிழமை அமரத்துவமடைந்தார். அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22.02.2024 ( வியாழக்கிழமை ) காலை 10 மணிக்கு வேம்பிராய்ச்சந்தியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று அன்னாரின் பூதவுடல் வேம்பிராய்ச்சந்தி மயானத்திற்கு தகனக்கிரியைக்காக எடுத்து செல்லப்படும். இத்தகவலை உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். மீசாலை வடக்கு ,மீசாலை , வேம்பிராய்ச்சந்தி.குடும்பத்தினர்(0772269885 - சந்திரலிங்கம் )(0770755760 - மோகனதாசன்)
Meesalai
கிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைய நாட்களாக குடும்ப வன்முறைகள் மற்றும் பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறை சம்பவங்கள் அதிகளவில் காணப்படுவதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத் தகவல்கள் மூலம் அறியமுடிகின்றது.கிளிநொச்சி மாவட்டத்தில் அன்மைய நாட்களாக குடும்ப வன்முறைச் சம்பவங்கள் மற்றும் சிறுவர் பெண்கள் மீதான வன்முறை சம்பவங்கள் என்பன அதிகரித்துக் காணப்படுகின்றதுஅதாவது நாட்டில் ஏற்பட்டுள்ள கொறோனா அச்சுறுத்தல் காரணமாக தொழில் வாய்ப்பின்மையால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது போதைப் பொருள் பாவனை சட்டவிரோத கசிப்பு உற்பத்தி என்பவற்றால் கிராமப்புறங்களில் குடும்ப வன்முறைகள் அதிகரித்துக் காணப்படுகின்றனபெண்கள் சிறுவர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளில் அதிகரிப்பால் பெண்கள் குடும்ப வன்முறைகளால் சிறுவர்கள் பெண்கள் மீதான சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.குறிப்பாக குடும்பப் பெண்கள் தாக்கப்படுதல் சிறுவர்கள் குடும்ப உறுப்பினர்களால் தாக்கப்படுதல் போன்ற சம்பவங்கள் தொடர்பில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் நிலைய தகவல் மூலம் அறிய முடிகின்றது. தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில் சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்ட விரோத சட்ட ரீதியற்ற தொழிலுக்கு குறைந்த வேதங்களுடன் சிறுவர்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றனர் குறிப்பாக சட்டவிரோத மண் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற பிரதேசங்களிலேயே அதிகமான சிறுவர்கள் சட்டவிரோத மணல் அகழ்வில் குறைந்த வேதனத்துடன் பயன்படுத்த படுவதுடன் அவர்களை போதை பொருள் பழக்கத்துக்கு உள்ளாகும் நிலமையும் காணப்படுகிறது.
இன்று காலை தர்மபுரம் மத்திய கல்லூரி, பளை உள்ளிட்ட பகுதிகளில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள செல்லும் மக்களிற்காக பெண்கள் வாழ்வுரிமை கழகத்தினால் குடிநீர் போத்தல்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.
கிளிநொச்சி மாவட்டத்திற்கு 30 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி கிடைத்துள்ள நிலையில் அவற்றை செலுத்துவதற்கான நடவடிக்கைகள் சுகாதார தரப்பினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆரம்பத்தில் கிளிநொச்சி மக்கள் தடுப்பூசி தொடர்பில் அக்கறையுடன் செயற்படாத போதிலும் இன்று நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசி பெற்று செல்கின்றனர்.