Added a news
கடையில் புகுந்த கொள்ளையர்கள், டிரக்கை நேரடியாக கடையின் முன்பகுதியின் மீது மோத வைத்து கதவுகளையும் கண்ணாடிகளையும் உடைத்துள்ளனர். அதன் பின்னர், அவர்கள் வாகனத்தை கைவிட்டு ஓடிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களில் கடை முற்றிலும் சேதமடைந்தது தெளிவாக காணப்படுகிறது. இந்த கொள்ளையில் யாரும் காயமடையவில்லை என பொலிசார் உறுதி செய்துள்ளதுடன் சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் கைது செய்யப்படவில்லை. சந்தேக நபர்கள் குறித்து எந்த விவரங்களும் இதுவரை வெளியிடப்படவில்லை.கொள்ளையர்களைப் பற்றிய தகவல்கள் கிடைத்தால், உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
Added a post
ஓமம் சமையலுக்கு மட்டுமில்லாமல், சில இயற்கை வைத்தியங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. ஓமத்தில் தாமிரம் , அயோடின், மாங்கனீசு, தியாமி, கார்போஹைட்ரேட், கொழுப்பு புரதம், நார்ச்சத்து, டானின்கள், கிளைகோசைடுகள், சபோனின்கள், ஃபிளாவோன், கோபால்ட் மற்றும் ரைபோஃப்ளேவின் போன்ற பண்புகள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் காலையில் ஒரு கப் ஓமம் தண்ணீர் குடிக்கலாம். ஓம தண்ணீர் வாய்வுத் தொல்லைக்கு நல்ல நிவாரணம் தருகிறது. தொண்டை குரல்வளையை சுத்தமாக வைத்துக்கொள்ளவும், நுரையீரலை சுத்தப்படுத்தவும் ஓமம் பயன்படுத்தப்படுகிறது.ஆஸ்துமா நோயாளிகளின் சுவாசப் பிரச்சனைக்கு ஓம தண்ணீர் நல்ல நிவாரணியாக இருக்கிறது.வயிறு வலி, இரப்பைக் குடல் பிரச்சனைகளுக்கும் ஓமம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. ஒம வாட்டர் குடல் நொதிகளை தூண்டி செரிமானத்தை சிறப்பாக செயல்பட வைக்கிறது. முடக்கு வாதம், அழற்சி போன்ற பிரச்சனைகளுக்கும் ஓமம் உதவுகிறது.உடல் எடை குறைக்க நினைப்பவர்களுக்கு ஓமம் பெரிதும் உதவுகிறது. ஓமம் கொழுப்பை கரைக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதோடு இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் உதவுகிறது.ஓம தண்ணீரை மருந்து கடைகளில் வாங்கி குடிப்பதை விட, வீட்டிலேயே செய்து பெரியவர்களுக்கு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.இரண்டு டீஸ்பூன் ஓமத்தை எடுத்து லேசாக வறுத்து, பின் ஒரு கப் தண்ணீரில் இரவு முழுக்க ஊற வைக்க வேண்டும். பின் மறுநாள் காலையில் தண்ணீரில் ஓமத்தை நன்கு நசுக்கி வடிகட்டி, வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும் அல்லது ஓமத்தை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்தும் குடிக்கலாம்.
Added a post
வாழைப்பழம் எல்லாருக்கும் விருப்பமான பழம்தான். ஆனால் வாழைப்பழத் தோலின் பலன்களை நீங்கள் தெரிந்து கொண்டால், அதனை வீசி எறிய யோசிப்பீர்கள். முள்ளை எடுக்க வேண்டுமா? எளிய வழி: முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டுமென்பதில்லை.வாழைப் பழத்தோல் இருந்தா போதும் அன்பர்களே! கைகளிலோ, பாதத்திலோ, மரச்சில்லுகள் அல்லது முள் குத்தினால், வலியில் சுருக்கென்று உயிரே போகும்படி இருக்கும். இதனை எடுக்க முடியாமல் டாக்டரிடம் சென்று , கத்தி காயங்கள் வாங்கியவர்களும் உண்டு. இந்த அவஸ்தை எல்லாம் இனி வேண்டாம்.வாழைப் பழம் கைவசம் இருந்தால் போதுமானது. முள் குத்திய இடத்தில் வாழைப்பழத் தோலினை மெல்ல தடவுங்கள். பின்னர் அந்த இடத்தை சுற்றி அழுத்தம் கொடுத்தால் எளிதில் முள் வெளியே வந்துவிடும்.ட்ரை பண்ணிவிட்டு சொல்லுங்க மக்களே.சோரியாஸிஸ் பிரச்சனையா?சோரியாஸிஸ் போன்ற சரும நோய்களுக்கு சருமம் சிவந்து தடித்து காணப்படும். இதனால் எரிச்சல் உண்டாகி, பேட்ச் , பேட்சாக இருக்கிறதா? இனி சருமம் பாதித்த இடங்களில் வாழைப்பழத் தோலினை தேயுங்கள். எரிச்சல் நின்று, சருமம் இயல்பு நிலைக்கு வரும். சருமத்தில் ஈரப்பதம் அளித்து, அரிப்பினை தடுக்க சிறந்த வழி இது.மருக்கள் காணாமல் போகச் செய்ய :மருக்கள் இருந்தால் அது சரும அழகையே பாதிக்கும். இதனைப் போக்க மிக எளிய வழி இதுதான். வாழைப் பழத் தோலினை மருக்கள் மீது தேயுங்கள். பின், வாழைப்பழத் தோலினை மருக்கள் மீது வைத்து ஒரு துணியினால் கட்டி ஒரு இரவு முழுவதும் வைத்திருங்கள். நாளடைவில் மருக்கள் மாயமாய் மறைந்துவிடும்.சரும அலர்ஜியா?ஏதாவது சிறு பூச்சி கடித்தால், அல்லது வேறு பிரச்சனைகளால், சருமம் தடித்து, அரிப்பு ஏற்படும். எரிச்சலும் ஆகும். இதற்கு முதலுதவியாய் வாழைப்பழத் தோலினை ட்ரை பண்ணுங்க. வாழைப்பழத் தோலை ஃப்ரிட்ஜில் வைத்து, அதன் பின் அதனை எரிச்சல் மற்றும் அரிப்பு இருக்கும் இடத்தில் தடவுங்க. விரைவில் நிவாரணம் கிடைக்கும்.முகப்பருவை எதிர்க்கிறது:முகப்பருவை எளிதில் போக்க இன்ஸ்டென்டாய் வாழைப்பழம் இருந்தால் போதும். வாழைப் பழத் தோலில் இருக்கும் ஒரு என்சைம் சருமத்தின் துவாரங்களில் சென்று பாதிக்கப்பட்ட இடத்தில் செயல் புரிகிறது. இதனால் முகப்பருக்கள் குறைந்து, அதனால் ஏற்படும் தழும்புகளும் மறையும்.வெண்மையான பற்கள் பெற :மஞ்சள் கறை இல்லாமல் வெண்மையான பற்கள் பெற எல்லாருக்கும் ஆசை. இதற்காக, பற்களை ப்ளீச் செயும் பேஸ்ட், ஜெல் என வாங்கி பல் கூச்சத்தையா பெற வேண்டும். இயற்கையான ப்ளீச்சான நம்ம வாழைப்பழத் தோல் இருக்கு பாஸ். அதை எடுங்க. தினமும் பல் விளக்கிய பின், காலையிலும் இரவிலும், வாழைப் பழத் தோலினைக் கொண்டு உங்கள் பற்களை தேயுங்கள். அப்புறம் பாருங்க. பற்கள் மின்னும்.காயங்கள் ஏற்பட்டுள்ளதா?பட்ட காலிலேயே படும் என்று சும்மாவா சொன்னாங்க. காயம் வந்த அது ஆறதுக்குள்ள அங்கேயே திரும்ப அடிபடும். இதை நிறைய பேர் அனுபவப்பட்டிருப்பார்கள். வாழைப்பழத் தோலிலுள்ள சில காரணிகள் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. இதுக்கு சிம்பிள் வழி தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடுங்க. அதன் தோலை காயத்துக்கு பூசுங்க. உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. காயமும் விரைவில் ஆறிடும்.வீணாய் வீசி எறியும் வாழைபழத் தோலில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என ஆச்சரியப்படுகிறீர்கள்தானே. சிறு ஆணியும் பல் குத்த உதவும் என்பதை மறக்காதீர்கள். வாழைப்பழத் தோலினை வீசி எறியும் முன் மேலே சொன்ன எதற்காவது உபயோகப்படுமா என யோசித்துவிட்டுப் பின் எறியுங்கள்.
Added article
பழம்பெரும் நடிகர் ‘அவர்கள்’ ரவிக்குமார் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 71. அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.ரவிக்குமாரின் பூர்வீகம் கேரள மாநிலம், திருச்சூர். ஆனால் இவர் பிறந்தது சென்னையில் தான். மலையாளத்தில் 'லக்ஷமிபிரபு' என்ற படத்தில் சிறு வேடத்தில் தோன்றினார். அதன்பின் மலையாளத்தில் பல படங்களில் ஹீரோ, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். இவர் 70-களில் பல மலையாள படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.'உல்லாச யாத்ரா' என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் பாலசந்தர் இயக்கிய 'அவர்கள்' படத்தின் மூலம் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சுஜாதா ஆகியோர் உடன் இணைந்து நடித்து தமிழில் நடிகராக அறிமுகமானார்.
Added a post
பரஞ்சோதி முனிவர் இயற்றிய 'திருவிளையாடல் புராணம்' ஈசன் நிகழ்த்திய அறுபத்து நான்கு திருவிளையாடல்களை விளக்குவதாகும். இதில் நாற்பத்தி ஏழாவது படலம் 'கரிக்குருவிக்கு உபதேசம் செய்த படலம்' ஆகும்.மதுரை மீனாட்சியம்மன் திருக்கோவிலில் ஆவணி மூலத் திருவிழாவில் கரிக்குருவிக்கு உபதேசம் செய்த திருவிளையாடல் நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெறுகிறது.இந்த திருவிளையாடல் மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் ஏன் நடத்தப்படுகிறது. வாருங்கள் அதைப் பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளுவோம்.இராஜராஜ பாண்டியனுக்குப் பின்னர் அவருடைய மகனான சுகுண பாண்டியன் என்பவர் மதுரையை நல்லாட்சி செய்து வந்தார். அவருடைய ஆட்சிக் காலத்தில் முற்பிறவியில் நல்ல செயல்களைச் செய்த ஒருவன் தனது சில தீவினைகளின் காரணமாக மதுரைக்கு அருகில் ஒரு ஊரில் கரிக்குருவியாகப் பிறந்தான்.கரிக்குருவியை காகங்கள் தலையில் கொத்தித் துன்புறுத்தி வந்தன. வலிமை இல்லாத கரிக்குருவியால் தன்னைத் தாக்கித் துன்புறுத்திய காகங்களை எதிர்க்க முடியவில்லை. இதனால் கரிக்குருவி அந்த பகுதியை விட்டு அகன்று அருகில் இருந்த ஒரு காட்டுப்பகுதியில் வசிக்கத் தொடங்கியது.ஒருநாள் கரிக்குருவி ஒரு மரத்தின் கிளையில் அமர்ந்திருக்கையில், சிவனடியவர் ஒருவர் தன் சீடர்களுடன் அங்கே வந்து மரத்தடியில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அவர் தனது சீடர்களிடம் “மூர்த்தம் தலம் தீர்த்தம் என அனைத்து சிறப்புகளையும் உடைய மதுரையம்பதியில் எழுந்தருளியுள்ள சொக்கநாதரை வழிபட்டால் அவர் தன் பக்தர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நற்கதி அளித்து அருளுவார்” என்று சொக்கநாதரின் பெருமைகளை எடுத்து உரைத்துக் கொண்டிருந்தார்.சிவனடியவர் கூறியதைக் கேட்ட கரிக்குருவிக்கு தானும் சொக்கநாதரை வழிபட்டு நற்கதி அடைய வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.உடனே கரிக்குருவி பறந்து சென்று மதுரையை அடைந்து பொற்றாமரைக் குளத்தில் தன் உடல் படும்படியாக நனைத்து மேலெழும்பிப் பறந்து பிரகாரத்தைச் சுற்றி வந்து மீனாட்சி அம்மன் சன்னிதிக்குள்ளும் சுந்தரேஸ்வரர் சன்னிதிக்குள்ளும் இருந்த உத்திரத்தின் மீது அமர்ந்து மனமுருகி தரிசனம் செய்தது. தொடர்ந்து மூன்று நாட்கள் இவ்வாறு தரிசித்த அந்த கரிக்குருவியைப் பற்றி அம்பாள் சொக்கநாதரிடம் “இந்த கரிக்குருவி நம்மை தரிசிக்கக் காரணம் யாது?” என வினவினாள்.“இந்த கரிக்குருவி முற்பிறவியில் செய்த தவறினால் இப்பிறவியில் கரிக்குருவியாகப் பிறந்தும் முற்பிறவியில் செய்த ஒரு நன்மையால் இப்பிறவியில் மதுரையம்பதியைப் பற்றியும் பொற்றாமரைக் குளத்தைப்பற்றியும் அறிந்தும் தனது பிறவித் துன்பத்தை நீக்கிக் கொள்ள நம்பிக்கையோடு நம்மை வழிபட்டு வருகிறது“ என்றார். மேலும் இதன் பலனாக ஈசன் அக்கரிக்குருவிக்கு ஆயுள்விருத்தியையும் பிறவித்துன்பத்தை நீக்கியருளும் மிருத்யுஞ்சய மந்திரத்தையும் உபதேசித்தார். ஞானம் பெற்ற கரிக்குருவியானது ஈசனை துதித்து வழிபட்டது.
Added a post
ஒரு அங்காடி வாசலில் ஒரு இளம் தம்பதிக்குள் சின்ன வாக்குவாதம்.மனைவியை உள்ளே அனுப்பிவிட்டு, வாசலில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்த கணவனைக் கவனித்த 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர்,இவ்விளைஞனை அணுகி," தம்பி! நான் கேட்பதைத் தவறாக எண்ணிக் கொள்ளாதீர்,ஏன் மனைவியைக் கடிந்து கொண்டீர்கள் என தெரிந்து கொள்ளலாமா?" எனக் கேட்டார்."ஒன்னுமில்லை அங்கிள். சும்மாதான். நானும்கூட வந்து சாமான் வாங்கணுமாம்,எனக்கே அசதியா இருக்கு. இந்த லேடிஸே இப்படிதான் அங்கிள். சும்மா கடுப்பேத்திகிட்டு".முதியவர் சிறு புன்னகையோடு, " தம்பி! முன்பெல்லாம் நான் எங்கே போனாலும் என் மனைவியோடதான் போவேன்.ஆனா இப்ப அவங்க இறந்து 5 மாசமாச்சி.எங்க ரெண்டு பேருக்கும் ஏறக்குறைய ஒரே வயசு.ரெண்டு பேருமே ஆசிரியர்கள். பணி ஓய்வுக்குப் பிறகு ஒன்னாவே ஊர்லே எல்லா புண்ணியஸ்தலத்துக்கும் போனோம்.எங்களோட 3 பிள்ளைங்களும், கல்யாணம் பண்ணி தனித்தனியா இருக்கிறதாலே, நாங்க தனியா எங்க வீட்லே இருந்தோம்.என் மனைவிக்குத் துர்திஷ்டவசமா இனிப்புநீர், ரத்தக்கொதிப்புனு நோய்கள் இருந்திச்சி. தினமும் மருந்து சாப்பிடணும். அவங்க அவ்வளவு திடகாத்திரமா இல்லாததாலே நான் தான் அவங்களை முழுமையா கவனிச்சிகிட்டேன்.இப்ப அவங்க இல்லை, நான் ரொம்ப தனிமையாக உணர்கிறேன்.என் பகல்கள் ரொம்ப நீளமாயிச்சு, இரவுகள் ரொம்பவும் வெறுமையாச்சு.அவங்களோட ஒவ்வொரு பொருளும் அவங்களை எனக்கு நினைவுபடுத்திகிட்டே இருக்கு.அவங்க சாப்பிட்டு முடிக்காத அந்த மருந்துங்கக் கூட என்னைக் கவலைப்படுத்துது.அவங்க handphone நம்பர் இருக்கு, ஆனா நான் அழைச்சா இனி பேச மாட்டாங்க, whatsupp பண்ணா படிக்க மாட்டாங்க...முன்னே என் படுக்கையிலே ஒரு பக்கம் நானும் மறுபக்கம் அவங்களும் படுத்திருப்போம்... இப்ப நான்அதே படுக்கையிலே நடுவில தனியா படுத்திருக்கேன்...சமையலறைக்குத் தனியா போறேன், சமையலுன்னு பேர்ல எதையோ பண்றேன், வாய்க்கு ருசியா சமைச்சித் தர அவங்க இல்லை...கோயிலுக்கு இப்ப ஒன்னா போக அவங்க இல்லை...விழியோரம் நீர் தேங்க, அதான் தம்பி, அவங்க இருக்கும்போதே அவங்களை அதிகமாக நேசிக்கணும்,அதிகமாக போற்றணும்.இன்னிக்குத் தினமும் என் மனைவியோட கல்லறைக்குப் போறேன்.எனக்காக எல்லாத்தையும் தயார் பண்ண நீ முன்னுக்கே போயிட்டியாம்மா? இதோ நான் பின்னாலேயே வந்துகிட்டு இருக்கேன்னு சொல்வேன்.சரி தம்பி, நான் வரேன் என்று புறப்பட்ட பெரியவரையே வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான் அந்த இளம் கணவன்.பேரங்காடிக்கு உள்சென்று மனைவியைத் தேட ஆரம்பித்தான்.ஆம், நம் மனைவிதானே எப்படி நடந்தாலும் பரவாவில்லை என கணவனும்,நம் கணவன் தானே எப்படி பேசினாலும் பரவாவில்லை என மனைவியும் எண்ணக்கூடாது.புதிதாக அறிமுகமாகும் ஒருவரிடமே,hi sir how r u? Nice to meet u என்கிறோம்.இடையில் இரும்புகிறோம்,தும்புகிறோம் I'm sorry sir என்கிறோம்.பேச்சுக்கிடையில் ஒரு தொலைப்பேசி அழைப்பு வருகிறது, உடனே excuse me sir சொல்றோம்.அந்த நபரைச் சந்தித்தே 10-20 நிமிடம்தான் ஆகியிருக்கும்.அதன்பின் அவரைச் சந்திப்போமா என்றே தெரியாது. ஆனாலும் எவ்வளவு மரியாதை தருகிறோம்?வாழ்நாள் முழுதும் நம்மோடு வாழ்கிற மனைவியை கணவன் மதிக்கிறானா?இல்லை மனைவிதான் கணவனை மதிக்கிறாளா?பதில் 100 க்கு 90 சதவீதம், இல்லைதான்.பொண்டாட்டி சமைத்து போடுறதை, கணவன் பிரமாதமுன்னு பாராட்டுறதுமில்லை,அசதியாக வேலை முடிந்து வீடு திரும்பும் கணவன்கிட்ட, ஏங்க, ரொம்ப வேலையா, காலையிலேர்ந்து நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணேங்கனு மனைவியும் சொல்றதில்லை.இதெல்லாம் சொல்லணும்.அப்படி ஒருத்தர் உணர்வை இன்னொருத்தர் புரிஞ்சிகிட்டு வாழ ஆரம்பிச்சா வாழ்க்கை இனிக்கும்..
Added a post
சூரியகாந்தி விதைகள் அதிகப்படியான ஊட்டச்சத்துகள் நிறைந்த விதைகளில் ஒன்று. இவை உங்கள் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான கொழுப்புகள்,பல வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை. பொதுவாக சூரியகாந்தியில் இரண்டு வகைகள் உள்ளன.அதில் ஒன்று எண்ணைக்காகவும் மற்றொன்று விதைகளுக்காகவும் பயிரிடப்படுகின்றன.முக்கியமாக சூரியகாந்தி விதைகள் நோயைத் தடுக்கவும் போராடவும் உதவுகின்றன. ஏராளமான அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் நல்ல சிறந்த மூலமாகும். சூரியகாந்தி விதைகளில் அடங்கியுள்ள செலினியம் வீக்கத்தையும், நோய்த் தொற்றையும் எதிர்த்துப் போராடுவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.விதைகளில் வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம் நிறைந்துள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் உங்கள் உடலில் ஏற்படக்கூடிய செல்களின் ஃப்ரீ ரேடிக்கல்சேதத்தில் இருந்து காக்கிறது. இந்த விதைகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மட்டும் இல்லாமல் நாள்பட்ட நோய்களும் வராமல் தடுக்கிறது.சூரியகாந்தி விதைகளில் இரத்தக்குழாய் சுருக்கங்களை உண்டாக்கக்கூடிய நொதிகளை அழிக்கக்கூடிய கலவை உள்ளது. இது இரத்த நாளங்களை தளர்த்துவதால் இரத்த அழுத்தம் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தையும் குறைக்கிறது. விதைகளில் உள்ளமெக்னீசியம் தமனிகளின் சுவருக்கு எதிரான இரத்த அழுத்தத்தை தடுக்கிறது.தினசரி ஒரு கைப்பிடி அளவு சூரியகாந்தி விதைகளை சாப்பிட்டு வந்தால் ஆறு மாதங்களில் 10 சதவிகிதம் உணவிற்கு முன் உள்ள இரத்த சர்க்கரை அளவு குறையும். பல ஆய்வுகளில் இந்த விதைகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.முக்கிய குறிப்பு : மருத்துவரிடம் தகுந்த ஆலோசனைப் பெற்று பின்னர் இதை சாப்பிடவும்.
Added a post
ஒரு பிச்சைக்காரனுக்கு சொத்து என்று பார்த்தால் அழுக்கு பிடித்த உடையும் கரி பிடித்த ஒரு பிச்சை ஓடும் தான்இந்த சூழ்நிலையில் தினமும் எல்லா இடத்திலும் அவன் அந்த பிச்சை ஓட்டை நீட்டி எல்லோரிடமும் பிச்சை கேட்பது அவன் வழக்கம்..ஒருநாள் ஒரு கடைக்காரரிடம் இப்படி தன் பிச்சை ஓட்டைஅவருக்கருகில் நீட்டி பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தான்முதலில் முகம் சுழித்த அவர், சற்று நிதானத்துக்கு வந்து அவனையும், அந்த ஓட்டையும் மாறிமாறி பார்க்க தொடங்கிசட்டென்று அவனிடமிருந்த அந்த பிச்சை ஓட்டை பிடுங்கி ஆராய்ந்தார்..'நீ எவ்வளவு காலமா பிச்சை எடுக்கற?" எனக்கேட்க,'எனக்கு நெனவு தெரிஞ்ச காலத்துல இருந்தே இதாங்க சாமி'என்றான் பிச்சைக்காரன்'சரி நீ இந்தப் பிச்சை ஓட்டை எவ்வளவு காலமா வச்சிருக்க?' எனக்கேட்க..'எங்க அப்பா,தாத்தா, தாத்தாவுக்குத் தாத்தா, தாத்தான்னு பலதலைமுறைக்கு முன்னாடில இருந்தே............ஒரு மகான்கிட்ட பிச்சை கேட்டப்போ அவர் இந்த ஓட்டைக் கொடுத்து இதை வச்சுப் பொழைச்சிக்கன்னு குடுத்தாராம்' என்று சொல்லஉடனே அந்த கடைக்கார்"அடப்பாவி! பரம்பரை பரம்பரையாய் இந்த ஓட்டை வச்சுப் பிச்சைதான் எடுக்கறீங்களா?" எனக்கடைக்காரர் ஆச்சர்யத்தோடு கேட்க,..அந்த பிச்சைக்காரனுக்குப் புரியவில்லைகடைக்காரர் அமைதியாக தான் வைத்திருந்த சிறுகத்தியால் அந்தப் பிச்சை ஓட்டைச் சுரண்டத் தொடங்கினார்பிச்சைக்காரன் துடிதுடித்து "சாமி எங்கிட்ட இருக்கற ஒரே சொத்து அந்த ஓடுதான் பிச்சை போடாட்டியும் பரவால்ல அந்த ஓட்ட குடுத்துடுங்க" என பரிதாபமாக கேட்ககடைக்காரர் நிறுத்தவே இல்லை ஓட்டைச் சுரண்டிக்கொண்டே இருந்தார்அந்த ஓட்டின் மீதிருந்த கரியெல்லம் உதிர்ந்துமெள்ள மஞ்சள் நிறத்தில் பளீரிட்டுப் பிரகாசிக்க துவங்கியது தங்கம்.பிச்சைக்காரன் கையில் தங்க ஓட்டைக் கொடுத்த கடைக்காரர் வேதனையுடன்"மகான் கொடுத்த தங்க ஓட்டை வச்சுக்கிட்டு,சிறப்பாக வாழ்ந்து பலரையும் வாழ வைக்க வேண்டிய நீங்க கடைசியில, அதை பிச்சை எடுக்க உபயோகப் படுத்திட்டீங்களே.?" என சொன்னார்..
Added a post
நமக்கு ஏற்படக்கூடிய பிரச்சனைகளுக்கு காரணம் நம்முடைய கர்ம வினைகள் தான். நம்முடைய கர்ம வினைகளை தீர்க்கக் கூடிய தெய்வமாக திகழ்பவர்தான் சிவபெருமாள். அதனால் சிவபெருமானை நாம் தஞ்சம் அடைந்து விட்டோம் என்றால் அவரின் அருளால் நம்முடைய கர்ம வினைகள் முதலில் தீரும். அப்படி தீரக்கூடிய கர்ம வினைகளால் நம்முடைய பிரச்சினைகளும் தீரும். இருப்பினும் ஒரு சில ஆலயங்களுக்கு நாம் சென்று வழிபாடு செய்யும்பொழுது அந்த கர்ம வினைகள் விரைவிலேயே தீர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். அப்படிப்பட்ட ஒரு கோவிலை பற்றி தான் இப்பொழுது தெரிந்துக் கொள்ளப் போகின்றோம்.இந்த கோவில் இந்தியாவில் - தமிழ்நாட்டில் - காஞ்சிபுரத்தில் இருக்கிறது. சின்ன காஞ்சிபுரம் என்று கூறக்கூடிய இடத்தில் இந்த சிவபெருமானின் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் இருக்கக்கூடிய சிவபெருமானுக்கு வழக்காத்தீஸ்வரர் என்ற திருநாமம் இருக்கிறது. பொதுவாக இந்த ஆலயத்திற்கு சென்று வழிபாடு செய்பவர்களுடைய வழக்குகளில் சாதகமான தீர்ப்பு உண்டாகும் என்று பரவலாக அறியப்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. வழக்குகள் மட்டுமல்லாமல் நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளும் தீர வேண்டும் என்றால் இந்த ஆலயத்திற்கு சென்று இங்கு இருக்கக்கூடிய சிவபெருமானை வழிபாடு செய்ய வேண்டும். அப்படி வழிபாடு செய்வதற்கென்று சில வழிமுறைகளும் இருக்கின்றன.இந்த வழிபாட்டை திங்கட்கிழமை அன்று தான் செய்ய வேண்டும். முதல் நாளே வீட்டில் ஒரு வெள்ளை நிற பேப்பரில் உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறதோ அவை அனைத்தையும் பட்டியலிட்டு எழுதிக் கொள்ளுங்கள். மறுநாள் திங்கட்கிழமை அன்று காலையில் அந்த பேப்பரை எடுத்துக்கொண்டு நேராக இந்த ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இந்த அந்த ஆலயத்தில் வீற்றிருக்கக் கூடிய சிவபெருமானுக்கு முன்பாக 16 அகல்விளக்குகளில் 16 தீபங்களை ஏற்ற வேண்டும். முடிந்தவர்கள் அந்த 16 தீபங்களையும் மாவிளக்கு தீபமாக ஏற்றலாம்.அதே போல் உங்களால் இயன்ற சிவபெருமானுக்கு உகந்த பொருட்களை வாங்கி கொடுக்கலாம். உதாரணமாக வில்வ இலைகள், மலர்கள், அபிஷேகத்திற்குரிய பொருட்கள் என்று தங்களால் எதுவெல்லாம் வாங்கித் தர இயலுமோ அவை அனைத்தையும் வாங்கி கொடுத்துவிட்டு நாம் எழுதி வைத்திருந்த அந்த பிரச்சினையை நிறைந்த கடிதத்தையும் சிவபெருமானின் பாதத்தில் வைத்து தரும்படி கேட்டுக் கொள்ள வேண்டும். பிறகு சிவபெருமானை 16 முறை வலம் வந்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இப்படி தொடர்ச்சியாக 16 திங்கட்கிழமைகள் அந்த ஒரே கடிதத்தை வைத்து சிவபெருமானை வழிபாடு செய்ய சிவபெருமானின் அருளால் அந்த கடிதத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக தீர ஆரம்பிக்கும்.வழக்குகளோ, பிரச்சனைகளோ, கஷ்டங்களோ எதுவாக இருந்தாலும் சிவபெருமானிடம் சமர்ப்பணம் செய்து விட்டால் போதும் அவரின் அருளால் அனைத்தும் நீங்கி நிம்மதியான வாழ்க்கையை வாழ முடியும்.
Added a news
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக நிராகரிக்கப்பட்ட 37 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டது. பிறப்புச் சான்றிதழின் மூலப்பிரதி இணைத்தல், சத்தியக் கடிதம் தொடர்பான பிரச்சினை மற்றும் பிறப்புச் சான்றிதழின் நகல் தொடர்பான பிரச்சினை என்பவற்றால் நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் தொடர்பான தமது தீர்ப்பை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று அறிவித்தது.இதேவேளை பிறப்புச் சான்றிதழின் நகல் பிரதிகளைச் சமர்ப்பித்தமைக்காக நிராகரிக்கப்பட்ட வேட்பு மனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் ஆயம் நிராகரித்துள்ளது. அதேநேரம் சமாதான நீதவானின் சான்றுப்படுத்துதல் தொடர்பான பிரச்சினை, சத்திய கடிதப் பிரச்சினை போன்ற காரணங்களால் 37 வேட்பு மனுக்களை நிராகரிப்பதற்குத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கி, நீதியரசர் மொஹமட் லஃபார் தாஹீர் தீர்ப்பை அறிவித்தார்.அதற்கமைய அவ்வாறு நிராகரிக்கப்பட்ட வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக் கொள்ளுமாறு தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு நீதியரசர்கள் ஆயம் உத்தரவிட்டுள்ளது.தங்களின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கு எதிராக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை குழுக்களின் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீதிப்பேராணை மனுக்கள் மேன்முறையீட்டு நீதிமன்ற பதில் தலைவர் மொஹமட் லஃபார் தாஹீர் மற்றும் கே.பி.பெர்னாண்டோ ஆகிய நீதியரசர் அடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று (04) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 000
Added a news
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். இந்தியப் பிரதமருக்கான உத்தியோகபூர்வ வரவேற்பு நிகழ்வு நாளை காலை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதியுடனும், ஏனைய பல தரப்பினருடனும் கலந்துரையாடல்களை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்புகளின் போது எரிசக்தி, டிஜிட்டல் மயமாக்கல், பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் இந்தியாவுடனான கடன் மறுசீரமைப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் ஆகியவை ஏற்படுத்திக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. திருகோணமலையில், இந்திய ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத் திட்டம், வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தைக் கட்டுப்படுத்தக்கூடிய ஐயாயிரம் மெட்ரிக் டன் தம்புள்ள களஞ்சிய வளாகத்தின் நிர்மாணம், ஐயாயிரம் வணக்கஸ்தலங்களின் கூரைகளில் சூரிய மின்னுற்பத்தி தகடுகளை நிறுவும் திட்டம் என்பன இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியினால் இணையவழி ஊடாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளன. அத்துடன், அவர் அனுராதபுரத்துக்கு விஜயம் மேற்கொள்ளவிருப்பதுடன் இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்புடன் நிறுவப்பட்ட மஹவ-அனுராதபுரம் தொடருந்து சமிக்ஞை கட்டமைப்பு மற்றும் மறுசீரமைக்கப்பட்ட தொடருந்து பாதையைத் திறந்து வைக்கவுள்ளார். ஏப்ரல் 06 ஆம் திகதி பிற்பகல் இலங்கைக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்யும் இந்தியப் பிரதமர், நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்வார் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.000
Added a news
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகைக்காக இந்தியாவில் இருந்து 4 உலங்கு வானூர்திகள் இலங்கை வந்தடைந்துள்ளன.இலங்கை உணவகம்பிரதமர் மோடி 2 நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தர உள்ளார்.இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்ததைத் தொடர்ந்து, நாளை காலை சுதந்திர சதுக்கத்தில் வரவேற்கப்பட்ட பின்னர், ஜனாதிபதிக்கும் இந்தியப் பிரதமருக்கும் இடையே இருதரப்பு கலந்துரையாடல் நடைபெறும்.இந்த நிலையில் இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது பயன்படுத்துவதற்காக நான்கு MI 17 ரக உலங்கு வானூர்திகள் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.அத்துடன் 40 இந்திய விமானப்படை வீரர்களும் இலங்கை வருகைத்தந்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 00
Added a news
நேற்றையதினம் சென்னையில் இருந்து காங்கேசன்துறைக்கு, 10 பேர் அடங்கிய 2 பாய்மரப்படகுகள் மாலை 7.30 மணியளவில் வந்தடைந்த நிலையில் இன்று காலை 10.30 மணியளவில் மீண்டும் காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் நோக்கி பயணத்தை ஆரம்பித்துள்ளன.400 கிலோமீற்றர் தூரத்தினை இலக்காக்கொண்டு "Royal madras yacht club" அங்கத்தவர்களால் சென்னையில். ஆரம்பிக்கப்பட்ட இப்படகுப் பயணம் நாகப்பட்டினத்தினை அடைந்து அங்கிருந்து காங்கேசன்துறையை வந்தடைந்தனர்.இன்று மீண்டும் நாகப்பட்டினம் நோக்கி புறப்படுகின்ற இப்படகு பின்னர் பூம்புகாரை அடைந்து அங்கிருந்து பாண்டிச்சேரியை சென்றடைந்து அங்கிருந்து கோவளத்தினையும் இறுதியில் மீண்டும் சென்னையை சென்றடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
Added a news
யாழ். வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் லொறி சாரதி ஒருவரின் செயலால் ஆசிரியர்கள், மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது இன்று(4) காலை 07.00 மணியளவில் மருதங்கேணி தெற்கு பகுதியூடாக பாடசாலை செல்லும் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்றும் பேருந்தானது பயணித்தது.மருதங்கேணி பகுதியில் புதிதாக அமைக்கப்படும் மாடி வீட்டிற்கு ஓடுகளை இறக்குவதற்காக லொறி ஒன்று வீதியை மறித்து நிறுத்தப்பட்டது இதனால் பேருந்து மற்றும் ஏனைய வாகனங்கள் குறித்த பகுதியால் பயணிக்க முடியாத சூழ் நிலை உருவானது.உடனடியாக லொறியை அப்புறப்படுத்துமாறு சாரதிக்கு கூறிய போதும் அவர் அதனை அகற்றாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார் இதனால் மாணவர்கள், ஆசிரியர்களை ஏற்ற முடியாமல் பேருந்தானது மாற்று வழியால் திரும்பிச் சென்றதுடன் ஆசிரியர்கள், மாணவர்கள் சிலர் பாடசாலைக்கு தாமதமாக செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது.தூர பிரதேசத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் குறித்த லொறி சாரதியின் நடவடிக்கையால் பேருந்து இன்றி பாடசாலைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.000
Added a news
குருக்கள் ஒருவர் நாக பாம்பினை கைகளால் பிடித்தபோது அந்த பாம்பு தீண்டி உயிரிழந்துள்ளார். இதன்போது புத்தூர், சிவன்கோவில் வீதியை சேர்ந்த கணேசக்குருக்கள் கௌரிதாசன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த குருக்கள் அராலி பகுதியில் உள்ள வாலையம்மன் கோவிலில் பூஜை செய்து வந்துள்ளார். கடந்த 31ஆம் திகதி இரவு பூஜையை முடித்துவிட்டு கோவிலுக்கு அருகேயுள்ள வீட்டிற்கு சென்று முற்றத்தில் இருந்துள்ளார். இதன்போது அங்கு வலையில் சிக்கியிருந்த நாகபாம்பை கைகளால் பிடித்துள்ளார். இதன்போது பாம்பு அவரை தீண்டியது.இந்நிலையில் வீட்டில் உள்ளவர்களை அழைத்து போத்தல் ஒன்றினை வாங்கி பாம்பினை போத்தலினுள்ளே விட்டுவிட்டு, தன்னை பாம்பு தீண்டிய விடயத்தை கூறிவிட்டு அதன் விசத்தை இல்லாது செய்யவும் தனக்கு தெரியும் என கூறியுள்ளார்.இருப்பினும் அவர்களின் வற்புறுத்தலினால் 1ஆம் திகதி அதிகாலை 1 மணியளவில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.000
Added a news
சமூக சேவைகள் திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட 2025 ஆண்டிற்கான அங்கவீனமுற்ற நபர்களுக்கான (மாற்றுத் திறனாளிகளுக்கான) தேசிய மட்ட விளையாட்டுப் போட்டி இன்றையதினம் 03.04.2025 மகிந்த ராஜபக்ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.தேசிய மட்டத்தில் 25 மாவட்டத்திலிருந்தும் இதில் போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தனர். 06 தங்கப் பதக்கத்தையும் , 10 வெள்ளிப் பதக்கத்தையும் பெற்று கிளிநொச்சி மாவட்டம் தேசிய மட்டத்தில் முதலாமிடத்தினைப் பெற்றுக் கொண்டது.குறித்த விளையாட்டுப் போட்டியில் கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து 21 மாற்றுத்திறனாளிகள் பங்குபற்றியிருந்தனர். குறித்த நிகழ்வில் கிராமிய அபிவிருத்தி சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர், அமைச்சின் செயலாளர் மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் பங்குபற்றியிருந்தனர்.000