Feed Item
Added a news 

கொடையாளர்களால் கிடைக்கின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி கல்வியில் முன்னேறவதுடன் சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் என  கிளிநொச்சி வலயக்கல்விப்பணிப்பாளர் க.அ. சிவனருள்ராஜா  தெரிவித்துள்ளார்கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் கிராமத்தில் அமைந்துள்ள டாக்டர் சாம் கல்வி நிலையத்தின் ஆறாம் ஆண்டு நிறைவு விழாவும் திறன் வகுப்பறை திறப்பு விழாவும் மாணவர்களை கௌரவிக்கின்ற நிகழ்வும் இன்று(20-11-2022) நடைபெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார் தொடர்ந்து உரையாற்றுகையில் டாக்டர் சாம் கல்வி நிலையத்தில் கடந்த ஆறு வருடங்களாக ஒரு நவீன கற்றல் முறைகளை கொண்டு குறித்த பிரதேசத்தில் மேற்படி முன்பள்ளி இயங்கி வருவதுடன் தரம் 06 தொடக்கம் 11 வரையான வகுப்புக்களை கொண்ட மாணவர்களுக்கான இலவச கல்வி மற்றும் மதிய உணவு என்பவற்றையும் வழங்குகின்ற ஒரு நிலையமாக காணப்படுகின்றதுமிகவும் பின் தங்கிய பிரதேசத்தில் இருக்கின்ற மக்களுக்கு சேவையாற்றுகின்ற எண்ணத்தோடு இங்கே உருவாக்கப்பட்டு இருக்கின்ற இந்தகல்வி நிலையத்தினை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இந்த காலத்திலே அத்துடன் இவர் போன்ற கொடையாளர்களால் வழங்கப்படுகின்ற உதவிகளை சரியாக பயன்படுத்தி சமூகத்தில் நல்ல மனிதர்களாக வளர வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்                                        இன்று காலை 9 மணிக்கு டாக்டர் ஷாம் கல்வி நிலைய மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம விருந்தினராக கிளிநொச்சி வடக்கு வலயக் கல்விப்  பணிப்பாளர் க.அ சிவனருள் ராஜா மற்றும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி போலீஸ் நிலையத்தின் நிலைய பொறுப்பதிகாரி சரத் மற்றும் குமரபுரம் இந்து மகாவித்தியாலயத்தின் அதிபர் என். நடேச மூர்த்தி  தொழிலதிபர் எஸ் சபேசன்  கல்வி நிலைய மாணவர்கள்   பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.

  • 350