இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
தம்பதிகளுக்குள் இருந்த வேறுபாடுகள் விலகும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். சேமிப்பு பற்றிய சில ஆலோசனைகள் கிடைக்கும். வியாபார போட்டிகள் படிப்படியாக குறையும். உறவினர்களின் வருகை ஏற்படும். உயர் அதிகாரிகள் இடத்தில் மதிப்புகள் உயரும். வெற்றி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
ரிஷபம்
வியாபாரத்தில் வேலையாட்கள் மூலம் மாற்றங்களை உருவாக்குவீர்கள். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். கடன் சார்ந்த சில உதவிகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் வழியில் புரிதல்கள் உண்டாகும். சுப காரிய தொடர்பான பயணங்கள் ஈடேறும். உத்தியோக பணிகளில் திறமைகள் வெளிப்படும். பகை விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்
மிதுனம்
குடும்பத்தாரின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். அக்கம் பக்கம் இருப்பவர்களிடம் இருந்த வேறுபாடுகள் விலகும். உடன் இருப்பவர்களின் சுயரூபங்களை அறிவீர்கள். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். பழைய வேலையாட்கள் மாற்றுவது குறித்த எண்ணங்கள் மேம்படும். உத்தியோகத்தில் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு
கடகம்
கல்வி பணிகளில் ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் சாதகமான சூழல் அமையும். மனதில் நேர்மறை சிந்தனைகள் உண்டாகும். அலுவலகப் பணிகளில் அமைதி உண்டாகும். அரசு காரியத்தில் அனுசரித்து செல்லவும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சினம் மறையும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
சிம்மம்
மனதில் புதிய சிந்தனைகள் உருவாகும். பிற இன மக்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். குழந்தைகள் சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். நண்பர்கள் வழியில் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். வியாபாரத்தில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நிர்வாக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். கவனம் வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
கன்னி
கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும். பொன் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். வியாபாரத்தில் தடைபட்ட வரவுகள் வசூலாகும். நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் குறையும். தெளிவு பிறக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு
துலாம்
கடன் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மறைமுக எதிர்ப்புகளை சமாளிப்பீர்கள். இணையம் சார்ந்த துறைகளில் சில மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். கலைத்துறைகளில் மறைமுக விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். இறை காரியத்தில் ஈடுபாடுகள் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில புரிதல்கள் ஏற்படும். எதிர்பாராத சில பொறுப்புகளால் மதிப்புகள் உண்டாகும். எதிர்ப்பு விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு
விருச்சிகம்
புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். இரவு நேர பணிகளில் கவனத்துடன் இருக்கவும். புரியாத சில கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும். செயல்பாடுகளில் இருந்து வந்த கட்டுப்பாடுகள் விலகும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
தனுசு
புதுவித பயணங்கள் மூலம் மனதில் தெளிவுகள் ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும் ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இன்மை ஏற்படும். மற்றவர்கள் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். அன்பு மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்
மகரம்
பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். உயர்கல்வியில் தெளிவான முடிவுகள் பிறக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். அலுவல் பணிகளில் பொறுப்புக்கள் உயரும். சமூக தொடர்பான புதிய கண்ணோட்டங்கள் உருவாகும். அரசு சார்ந்த உதவிகள் சாதகமாகும். வெளிவட்டார தொடர்புகள் விரிவடையும். மறதி விலகும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலம்
கும்பம்
குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் விலகும். தடைபட்டு போன சில காரியங்கள் முடியும். உறவுகள் மத்தியில் அனுசரித்து செல்லவும். வாகனங்களால் சில விரயங்கள் ஏற்படும். வியாபாரத்தில் மாற்றமான சூழல் அமையும். உழைப்புக்கு உண்டான அங்கீகாரங்கள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பணி வாய்ப்புகள் சாதகமாகும். பொறுமை வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெண்மை
மீனம்
மனதில் நினைத்த காரியங்கள் ஈடேறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். தொழில் நிமித்தமான அலைச்சல்கள் மேம்படும். மாணவர்களுக்கு புதுவிதமான சூழல்கள் ஏற்படும். சமூக பணிகளில் விவேகத்துடன் செயல்படவும். உடற்பயிற்சி செயல்களில் விவேகம் வேண்டும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்
விசுவாவசு வருடம் ஆடி மாதம் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 1.8.2025.
இன்று அதிகாலை 05.49 வரை சப்தமி. பின்னர் அஷ்டமி.
இன்று அதிகாலை 02.16 வரை சித்திரை. பின்னர் சுவாதி
இன்று அதிகாலை 05.51 வரை சாத்தியம். பின்னர் சுபம்.
இன்று அதிகாலை 05.49 வரை வணிசை. பின்னர் மாலை 06.48 வரை பத்தரை. பிறகு பவம்.
இன்று அதிகாலை 02.16 வரை சித்தயோகம் பின்பு காலை 06.02 வரை அமிர்த யோகம். பின்னர் சித்தயோகம்.
நல்ல நேரம்:
பகல் : 12.15 முதல் 01.15 மணி வரை
பகல் : 01.45 முதல் 02.45 மணி வரை
மாலை : 04.45 முதல் 05.45 மணி வரை
மாலை : 06.30 முதல் 07.30 மணி வரை
ஒரு முனிவரும் அவர் சிஷ்யனும் பயணித்து கொண்டு இருந்தார்கள் அப்போது அவர்கள் ஒரு காய்கறி தோட்டத்தை கடந்து சென்று இருக்கையில், அங்கே அந்த தோட்டத்தில் விவசாயி பூசணி அறுவடை செய்து கொண்டு இருந்தார் ,அதை பார்த்த சிஷ்யன் குருவிடம் "குருவே பூசணி எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா சிறு கோடியில் தான் காய்க்கிறது அதோ ஆலமரம் எவ்ளோ பெரிசா இருக்கு ஆனா அதன் காய் ஏன் சிறிதாய் காய்க்கிறது "என்று கேட்டான் ,பதில் ஒன்றும் கூறாமல் குரு நடந்து கொண்டு போனார்
நெடு தூரம் பயணித்த காரணத்தால் குருவுக்கு ஓய்வு தேவை பட்டது அவர் சிஷ்யனை பார்த்து வா சிஷ்யா சிறுது நேரம் அந்த ஆலமரத்தின் அடியில் ஒய்வு எடுப்போம் என்று சொன்னார் , சிஷ்யனுக்கும் ஒய்வு தேவை பட்டதால் அவனும் சரி என்று சொல்ல இருவரும் மரத்தடியில் அமர்ந்தார்கள்.அசதி அதிகமா இருந்ததால் சிஷ்யன் சிறுது நேரத்தில் உறங்கி விட்டான் , முனிவர் த்யானம் பண்ண ஆரம்பித்தார் , கொஞ்ச நேரம் கடந்து போக "அம்மா " என்று ஒரு சத்தம் ,முனிவர் கண் திறந்து பார்க்கையில் அவர் சிஷ்யன் தலையை தேய்த்து கொண்டு இருந்தான் , என்ன ஆச்சு என்று விசாரிக்க சிஷியன் சொன்னான் குருவே நான் நல்ல நித்திரையில் இருக்கும் பொது இந்த காய் என் தலையில் விழுந்து விட்டது ,நல்ல வேலை சிறு வலி தான் காயம் ஒன்றும் இல்லை . முனிவர் சிரித்து கொண்டே " நீ கேட்டது போல் இந்த ஆலமரத்தில் பூசணி அளவு காய் காய்த்து இருந்தால் இந்நேரம் உன் மண்டை ரெண்டாக பிளந்திருக்கும் " என்றார் .
நம்மை படைத்த கடவுளுக்கு தெரியும் யார் யாரை எங்கே வைக்கணும் என்று ...
பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு.
கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பா கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.
இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது. குறைந்தது மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து நிச்சயமாக நிவாரணம் கிடைக்கும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு + அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது
முடக்கற்றான் சூப்:
தேவையான பொருட்கள்:
முடக்கற்றான் கீரை - 1 கப்
துவரம் பருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் - 3
புளி - எலுமிச்சை அளவு
பெருங்காயம் - சிறிதளவு
பூண்டு - 1
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.
தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம்
2 கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் சுட்டு சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதாரணத் தோசைமாவுடன் (ஒரு பெரிய கிண்ணம் அளவு) கலந்து, தோசை சுட்டால், கசப்பு சிறிதும் தெரியாது.
நல்ல காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும். மலச்சிக்கல், வாயு, வாதம், குணமாக -: வாரம் ஒருமுறை முடக்கற்றான் இரசம் வைத்துச் சாப்பிட்டு வந்தால்உடலிலுள்ள வாய்வு கலைந்து வெளியேறி விடும். வாய்வு, வாதம், மலர்ச்சிக்கள் சம்பந்தப் பட்ட எல்லாக் கோளாறுகளும் நீங்கும்.ரசம் தயாரிக்க ஒரு சின்ன டிப்ஸ் கை பிடியளவுமுடக்கற்றான் இலை, காம்பு, தண்டு இவைகளை ஒரு டம்ளரளவு தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து அந்த நீரை மட்டும் வடித்து, சாதாரண புளி இரசம் வைப்பது போல் அந்த நீரில் புளி கரைத்து, மிளகு, பூண்டு,சீரகம் சேர்த்து இரசம் தயாரிக்க வேண்டும்.
மலம் சரிவரபோக ஒரு கைப்பிடியளவு முடக்கற்றான் இலையை வெள்ளைப் பூண்டுபற்களில் ஐந்து நசுக்கி இதில் போட்டு அரைது தேக்கரண்டி அளவு மிளகைஒன்றிரண்டாகஉடைத்து அதையும் சேர்த்து, இரண்டு டம்ளர் அளவு தண்ணீர்விட்டுஅடுப்பில் வைத்து ஒரு டம்ளர் அளவிற்கு சுண்டக் காய்ச்சியகஷாயத்தை வடிகட்டிவிடியற் காலையில் சாப்பிட்டு விட்டால் பலமுறை பேதியாகும். அதிகமான பேதியினால் ஒரு எலுமச்சப் பழசாறு சாப்பிட்டால் பேதி உடனே நின்று விடும். இரசம் சாதம்மட்டும் சாப்பிடலாம்.
மாதந்தோறும் ஒழுங்காக மாதவிலக்கு ஏற்ப்பட முடக்கற்றான் இலையை வதக்கி அடிவயிற்றில் கட்டிவந்தால் மாத விலக்கு பெண்களுக்கு ஒழுங்காக வரும்.
மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி சுண்ணாம்பு, பாஸ்பரம் படிவங்கள்தான் பாரிச வாயு எனும் கைகால் முடக்கு வாதம் ஆகும்.
இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடமஊறியதும் குளிக்கவும். இதுபோல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துவரவும் பின் முடி கொட்டுவது நின்று விடும் நரை விழுவதை தடுக்கும்.கருகருவென முடி வளர தொடங்கும்
இதன் இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கீல்களில் வரும் வாதத்திற்கு வீககத்திற்க்கு வைத்துக் கட்ட குணமாகும் .
ஒருமுறை இந்த கஷாயத்தை குடிங்க...... ஒட்டுமொத்த சளியும் மலத்தின் வழியே வந்துவிடும்! இருமல் நின்று விடும்!
ஒருமுறை மட்டும் இந்த நாட்டு வைத்திய கஷாயத்தை நீங்கள் குடித்து வரும் பொழுது ஓட்டு மொத்த சளியும் மலம் வழியே உடனடியாக வந்துவிடும். மேலும் இருமலும் நின்று விடும்.
தேவையான பொருட்கள்:
1. கொத்தமல்லி விதை ஒரு ஸ்பூன்
2. மிளகு 10
3. மஞ்சள்
4. பால்
5. பனங்கற்கண்டு.
செய்முறை:
1. முதலில் கொத்தமல்லி விதைகளை ஒரு ஸ்பூன் அளவிற்கு எடுத்துக் கொள்ளுங்கள்.
2. மிளகு 10 எடுத்துக் கொள்ளுங்கள்.
3. இப்பொழுது இரண்டையும் சேர்த்து உரலில் நன்கு இடித்துக் கொள்ளுங்கள்.
4. இப்பொழுது அடுப்பில் பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் பாலை சேர்த்து கொதிக்க விடவும். அரை டம்ளர் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
5. பால் நன்கு கொதித்த உடன் கால் டீஸ்பூன் அளவிற்கு மஞ்சள் தூளை போட்டுக் கொள்ளுங்கள்.
6. இப்பொழுது நாம் பொடி அனைத்தையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
7. பாலை நன்கு கொதிக்க விடவும்.
8. பின் பாலை வடிகட்டி ஒரு டம்ளரில் எடுத்துக் கொள்ளுங்கள்.
9. அதில் தேவையான அளவிற்கு பணங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளுங்கள்.
10. இப்பொழுது இதனை நீங்கள் குடித்து வந்தால் ஒரே முறையில் உங்களது ஒட்டுமொத்த சளி மலம் வழியே வந்துவிடும் . அதேபோல் மிளகு இதில் சேர்த்து இருப்பதால் இருமலை நிறுத்தி விடும்.
முஞ்சிகேசர் இந்த பெயரை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருக்கலாம். சென்னை காளிகாம்பாள் கோவில் அருகே இருக்கும் கச்சாலீஸ்வரர் எனும் பழமையான கோவிலில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டில் சுமார் 10,15 பழமையான சிவன் கோவில்களில் முஞ்சிகேச முனிவருக்கு சந்நிதி உண்டு. பஞ்ச சபைகளில் மூத்த சபையாக விளங்கும் திருவாலங்காடு ரத்தின சபை சிவன் கோவில் அருகே இவரது ஜீவசமாதி தனி கோவிலாக இருக்கிறது.
இந்த முஞ்சிகேசமுனிவர் யார்?
சிவனின் கழுத்தில் இருக்கும் கார்கோடகன் எனும் பாம்பு ஒருநாள் சிவனின் கையிலேயே விஷத்தை கக்கி விடுகிறான்.அதனால் சிவனின் சாபத்தை கார்கோடகன் பெற்றான். தனது தவறை பின்னர் உணர்ந்து வருந்தி, திருந்திய கார்கோடகன் ஈசனிடம் மன்னிப்பு கேட்க அந்த சாபத்திற்கு பிராயச்சித்தமாக பூமிக்கு சென்று பல சிவ ஷேத்ரங்களை வழிபட சொல்லி கார்கோடகனுக்கு சிவன் கட்டளை இட்டார்.
அவ்வாறு பல ஷேத்ரங்களை வழிபட்ட பின்னர் நிறைவாக திருவாலங்காட்டில் என்னை நோக்கி தவமிருக்கும் சுனந்த முனிவர் எனும் மகா முனிவரை நீ பணிந்து வணங்க வேண்டும். அவரின் ஆசியும், கடைக்கண் பார்வையும் உன் மீது பட்ட அந்த நொடியில் உன் சாபம் நீங்கும் அந்த நொடியே நான் அங்கு தோன்றுவேன் என்று சிவபெருமான் சொல்ல அதன் படி கார்கோடகன் கார்கோடக முனிவராக இந்த பூமிக்கு வந்து பல சிவ ஷேத்ரங்களை வழிபடுகிறார்.
கார்கோடகன் வழிபட்ட இடம் தான் கோடன் பாக்கம் ஆகி அது பின்னர் கோடம்பாக்கமாக மாறியது. கோடம்பாக்கத்தின் ஒரு பகுதி பின்னர் வடபழனி ஆனது. கோடம்பாக்கத்தில் இருக்கும் வேங்கீஸ்வரம் கோவில் கார்கோடக முனிவர், பதஞ்சலி, வியாக்ரபாதர் முதலான பல முனிவர்களால் வழிபடப்பட்ட ரொம்ப பழமையான கோவில்.நிறைவாக திருவாலங்காடு வந்த கார்கோடகனுக்கு சுனந்த முனிவரின் ஆசி கிடைத்து அதனால் கார்கோடகனின் சாபம் நீங்கியது.
சுனந்த முனிவர் சரி...... இந்த முஞ்சிகேச முனிவர் யார்?
சுனந்த முனிவர் கடுந்தவம் செய்து அதனால் அவரின் தலைமீது முஞ்சிபுல் எனப்படும் ஒருவகை புல் படர்ந்து, வளர்ந்தது. இதன் காரணமாக தான் அவர் முஞ்சிகேசர் எனும் பெயர் பெற்றார். கேசம் என்றால் தலை. 20 ம் நூற்றாண்டில் கூட ரமணமகரிஷி போன்ற மகான்கள் உடலில் புற்று மண் மூடும் அளவு தவம் செய்து ஈசனின் தரிசனத்தை பெற்று இருக்கிறார்கள்.
அன்று சிவனுக்கும், காளிக்கும் நடந்த நடன போட்டியை நேரடியாக இருந்து பார்த்தவர் முஞ்சிகேச முனிவர். விஷ்ணு வாமன அவதாரம் எடுத்த பொழுது அவருக்கு நடந்த உபநயன சடங்கில் முஞ்சிகேச முனிவர் கலந்து கொண்டார் என்றும் சொல்லப்படுகிறது.
🚩கார்கோடகனுக்கு ஏற்பட்ட சாபத்தையே போக்கிய அந்த முஞ்சிகேச முனிவர் எத்தகைய ஒரு தபஸ்வியாக, ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டும்.கம்பீரமாக திருவாலங்காட்டில் முஞ்சிகேச முனிவர் வீற்று இருக்கிறார்.
🚩சென்னையில் இருந்து 70 கிலோமீட்டர் தூரத்தில் தான் திருவாலங்காடு. ராகு, கேது தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள் முஞ்சிகேச முனிவரின் ஜீவசமாதிக்கு சுத்தமான மரச்செக்கு நல்லெண்ணெய்யை சிறிது காணிக்கையாக கொடுத்து அங்கே சில நிமிடங்கள் அமர்ந்து தியானம் செய்யுங்கள். நிச்சயமாக உங்களின் ராகு, கேது தோஷம் சரியாகும்.
இவரின் ஜீவசமாதி தோராயமாக 15 ஆயிரம் ஆண்டுகள் என்று அறியப்படுகிறது.
ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறி சென்று விட்டது.
அப்பொழுது, அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதை பார்த்த நாய், ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.
அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.
சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு, எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.
சுவைத்து கொண்டே சத்தமாக, சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்" என்று கூறியது.
இதைக் கேட்ட சிங்கம் "அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது" என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.
இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.
சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.
உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.
அதை கவனித்த நாய், எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.
குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, "இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்" என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.
தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, "இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே" என்று உரக்க கூறியது.
இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.
நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.
"கடுமையாக உழைப்பதை (Hard Work) விட திறமையாக உழைக்கக் (Smart Work) கற்று கொள்ள வேண்டும்".