Empty
சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 963
ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனான ரிஷப் பண்ட் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.அதன்படி முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக சுரேஷ் ரெய்னா 54 ரன்கள் குவித்தார். மொயீன் அலி 36 ரன்கள், அம்பதி ராயுடு 23 ரன்கள், ரவீந்திர ஜடேஜா 26 ரன்கள் (நாட் அவுட்) அடித்தனர். அதிரடியாக ஆடிய சாம் கர்ரன் 15 பந்துகளில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 34 ரன்கள் விளாசினார். இதையடுத்து 189 ரன்கள் என்ற இலக்கை நோக்கி டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா, ஷிகர் தவான் ஆடினர். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 138 ரன்கள் சேர்த்தனர், பிரித்வி ஷா 38 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியில் டெல்லி அணி 3 விக்கெட்டுகளை இழந்து வெற்றிக்கு தேவையான ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
- 948
மும்பை இந்தியன்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 159 ரன்கள் அடித்தது. ஆர்சிபி அணி 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து, 2 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
- 959
ஆர்சிபி அணி: 1. விராட் கோலி, 2. ராஜத் படிதார், 3. ஏபிடி, 4. மேக்ஸ்வெல், 5. டேனில் கிறிஸ்டியன், 6. வாஷிங்டன் சுந்தர், 7. கைல் ஜேமிசன், 8. ஹர்ஷல் பட்டேல், 9. முகமது சிராஜ், 10, ஷாபாஸ் அகமது. 11. சாஹல்.
- 681
மும்பை இந்தியன்ஸ் அணி: 1. ரோகித் சர்மா, 2. கிறிஸ் லின், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்டு, 7. குருணால் பாண்ட்யா, 8. ராகுல் சாஹர், 9. மார்கோ ஜான்சென், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.
- 672
மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதற்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
- 687
நாளை ஐபிஎல் 2021 போட்டிகள் தொடங்க உள்ளது. தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன. இந்தமுதல் போட்டி நாளை சென்னையில் நடைபெற உள்ளது.
- 707
இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் புனேவில் நடந்த முதல் ஒருநாள் போட்டியின் போது ஸ்ரேயஸ் ஐயரின் இடது தோள்பட்டையில் தசை கிழிந்தது. இதனால், அவர் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) 2021 போட்டிகளில் கலந்துக் கொள்வது கேள்விக்குறியாகி இருக்கிறது. இதனால் டெல்லி தலைநகரங்கள் (டிசி) முழு ஐபிஎல்-க்கும் புதிய கேப்டனை நியமிக்க வேண்டும் அல்லது அவர் உடல்தகுதி பெற்று அணிக்கு திரும்பும் வரை, டெல்லி கேபிடல்ஸ் (Delhi Capitals) அணியின் புதிய கேட்பனை நியமிக்க வேண்டும்.
- 669