சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை 10 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மணீஷ் பாண்டே கடைசி வரை போராடியும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிடம் தோற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் எடுத்தது. சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு 188 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. மணீஷ் பாண்டே இறுதி வரை ஆட்டமிழக்காமல் 61 ரன்கள் எடுத்தார். இதனால் கொல்கத்தா அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- 964