ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்

  • More
Ads
Add your Post

உங்கள் தகவல்களை இங்கு  பதிவு செய்யலாம்.

கற்பித்தல் மற்ற எல்லா தொழில்களையும் உருவாக்கும் ஒரு தொழில்
  • 382
கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். - ஜிக்ஜேக்ளர்
  • 374
ஒரு நல்ல ஆசிரியர் பதில்களை விட அதிகமான கேள்விகளைக் கேட்கிறார். - ஜோசப் ஆல்பர்ஸ்
  • 363
சாதாரண ஆசிரியர் கூறுகிறார். நல்ல ஆசிரியர் விளக்குகிறார். உயர்ந்த ஆசிரியர் நிரூபிக்கிறார். சிறந்த ஆசிரியர் ஊக்கமளிக்கிறார். - வில்லியம் ஆர்தர் வார்டு
  • 370
நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். - மாவீரன் அலெக்சலாண்டர்
  • 371
Info
Space Name:
ஆசிரியர்கள் தின வாழ்த்துகள்
Category:

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 5ம் தேதி "உலக ஆசிரியர்கள் தினம்" கொண்டாடப்படுகிறது. மற்றவர்களின் குழந்தைகள் முன்னேற உழைப்பவர்களாக இருக்கிறார்கள் ஆசிரியர்கள். ஊதியம் வாங்கி கொண்டு தான் வேலை பார்க்கிறோம் என்ற உணர்வையும் தாண்டி, பல தியாகங்களை செய்து அர்ப்பணிப்புடன் தங்கள் மாணவர்களின் உயர்வுக்கு காரணமாகவும் அமைகிறார்கள் பல ஆசிரியர்கள்.

எனவே ஆசிரியர்களின் பொறுப்புகள், உரிமைகள் மற்றும் மதிப்பை பெருமைப்படுத்தும் வகையில் உலக ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் முக்கிய காரணியாக இருக்கும் கல்வியை வழங்கி தங்கள் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகின்றனர் உலகம் முழுவதும் உள்ள ஆசிரியர்கள். இந்தியா, அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் உட்பட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் சர்வதேச ஆசிரியர்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


வரலாறு :

கல்வி பணிகளில் ஆசிரியர்களின் பங்களிப்புகள், சாதனைகள் மற்றும் சமூகம் மீதான ஆசிரியர்களின் அக்கறை உள்ளிட்டவற்றை கவுரவிக்கும் வகையில் உலக ஆசிரியர் தினத்தை கொண்டாடுவதற்கான பரிந்துரையை அடுத்து கடந்த 1994ம் ஆண்டு உலக ஆசிரியர் தினம் அக்டோபர் 5ம் தேதி அனுசரிக்கப்படும் என்று ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) அறிவித்தது. அக்டோபர் 5ம் தேதி உலகம் முழுவதுமுள்ள ஆசிரியர்களை பெருமைப்படுத்த சர்வதேச தினமாக தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்னவென்றால், 1966ம் ஆண்டில், ஒரு சிறப்பு அரசாங்கங்களுக்கிடையேயான மாநாட்டின் போது ஆசிரியர்களின் நிலை குறித்த யுனெஸ்கோ பரிந்துரையை அம்மாநாட்டில் ஏற்று கொள்ளப்பட்டதே.


செப்டம்பர் 5ல் இந்தியாவில் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்படுவதை போல சீனாவில் செப்டம்பர் 10, ஈராக்கில் மார்ச் 1, மலேசியாவில் மே 16, சிங்கப்பூரில் செப்டம்பர் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை, ஸ்பெயினில் நவம்பர் 27 ஆசிரியர்கள் தினம் தனிப்பட்ட முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. இருப்பினும் பெரும்பாலான நாடுகள் 1994ல் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட அக்டோபர் 5ஐ உலக ஆசிரியர் தினமாக கொண்டாடுகின்றன.

Members
Administrators
Comments (0)
    புதிய சமூகம்