- · 5 friends
-
I
ஊசியின்மூலம் குருநானக் சொன்ன செய்தி - குருநானக்
ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டில் குருநானக் தங்க நேர்ந்த போது ஒரு ஊசியை அளித்துவிட்டுக் கிளம்பினார். இதனை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள்! நீங்கள் என்னை அடுத்தமுறை பார்க்கும்போது திருப்பி அளித்துவிடுங்கள்,” என்றார்
குருநானக் கிளம்பியபோது அந்த ஊசியைப் பற்றி அவர் தன் மனைவியிடம் கூறிக்கொண்டு இருந்தார். அவர் மனைவி உடனே அந்த மனிதரை கடிந்து கொண்டார்.
“ஏன் இப்படி முட்டாள்தனமாக குருவிடம் இருந்து ஊசியை வாங்கினீர்கள்? அவரோ வயதானவர். ஒருவேளை அவரை நீங்கள் சந்திக்கும் முன்னே அவர் இறந்துவிட்டால் என்ன செய்வீர்கள்?
அவருக்கு ஏதாவது நாம் அர்ப்பணிப்பாக வழங்கிவிடலாம். ஆனால், அவரிடமிருந்து நாம் எதையும் வாங்கிடக் கூடாது. இதைப் போன்றவர்களிடமிருந்து நாம் எதையும் வாங்கிடக் கூடாது. அவர் இறந்துவிட்டால் அது நமக்கு எப்போதும் கடனாக இருந்துவிடும்.
இந்த கர்மவினையை நாம் எப்போதும் அழித்திட இயலாது. இதனால் நீங்கள் ஆயிரம் பிறவிகள் எடுத்திட வேண்டியிருக்கும். அது நமக்கு நன்மை அல்ல. எப்படியாவது அவரைத் தேடிக் கண்டுபிடித்து அதனை அவரிடம் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்,” என்றார்.
அதனால் அந்த மனிதர் குருநானக்கை பின்தொடர ஆரம்பித்தார். 2 மாதத் தேடலுக்குப் பிறகு அவர் குருநானக்கைக் கண்டுபிடித்தார்,
“குருவே இந்த ஊசியை திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள்! நீங்களோ வயதானவர். ஒருவேளை நீங்கள் இறந்துவிட்டால் என்னால் இந்த ஊசியை எடுத்துக்கொண்டு சொர்க்கத்தைத் தேடி வர இயலாது.
என்னால் இதை உங்களிடம் திருப்பித்தர இயலாமல் போய்விட்டால் நான் என்ன செய்வேன்? நான் எப்போதும் உங்களுக்குக் கடன்பட்டவனாகி விடுவேன்,” என்றார் அந்த செல்வந்தர்.
அதற்கு குருநானக் “சரி! அப்படியானால் இந்த ஊசியை சொர்க்கத்திற்கு எடுத்துச்செல்ல இயலாது என்பது உனக்குத் தெரியும். ஊசியைக் கூட எடுத்துச்செல்ல இயலாது என்பது உனக்குத் தெரியும்போது நீ சேர்த்து வைத்திருக்கிறாயே இந்தப் பெரும் சொத்து, இதனை என்ன செய்யப் போகிறாய்? அதில் இருந்தும் எதையும் எடுத்துச் செல்ல இயலாதே,” என்றார்.
அந்த மனிதருக்கு குருநானக் சொல்ல வந்த செய்தி புரிந்துவிட்டது. உடனே அவர் குருநானக்கின் பாதங்களில் விழுந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியதும் தனக்குத் தேவையானதை மட்டும் வைத்துக்கொண்டு பிறவற்றை மக்களின் நன்மைக்காக அளித்திட்டார்.
- · Yathusan
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
- ·