·   ·  2224 posts
  •  ·  5 friends
  • I

    9 followers

இதை அனைவரும் படிங்க... நடைமுறையில் செய்து பாருங்கள்

உங்க குழந்தைகள் மீது உங்களுக்கு கொள்ளைப்பிரியமா?

a) தயவு செய்து, வேர்க்கடலை, வேர்க்கடலை உருண்டை வாங்கி கொடுங்கள். சாக்லட்டுகள் போன்றவற்றை வாங்கி கொடுத்து, சாப்பிட பழக்கம் செய்யாதீர்கள்.

b) பேரீச்சம்பழம் தினமும் ஸ்நாக்சாக கொடுங்கள். கீரை வாரம் 3முறை பருப்புக்கூட்டாகவும், ராகியை சேமியாவாக, கொழுக்கைட்டையாக, ரொட்டியாக வாரம் இருமுறை கொடுக்கவும்.

ஆப்பிள், ஆரஞ்சை விட பப்பாளி, கொய்யாவில் சத்துக்கள் அதிகம் தினமும் சாப்பிடக்கொடுங்கள். நெல்லிக்காயை சாப்பிட சொல்லுங்கள்.

உங்கள் மனைவியின் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்டவரா நீங்கள்?

a) தயவு செய்து மண் சட்டியும், இரும்புக்கடாயும், மரச்செக்கு எண்ணெயும் வாங்கிக் கொடுக்கவும்.

b) தினமும் 5பேரிச்சம்பழம் குறைந்த பட்சம் சாப்பிட அன்பாக சொல்லுங்கள், கட்டாயப்படுத்துங்கள்.

c) கருப்பு அரிசி, கருப்பு எள், கருப்பட்டி, கருப்பு உளுந்து, மண் பானை தண்ணீர் சாப்பிட வலியுறுத்துங்கள்.

உங்கள் கணவர் மீது அதிக அக்கறை கொண்ட மனைவியா நீங்கள்?

a)தயவு செய்து பிரிட்ஜில் வைத்த குழம்பு வகை,மாவு வகைகளை கொடுக்காதீர்

b)சீரகத்தண்ணீர்,சோம்புத்தண்ணீர் குடிக்கக்கொடுக்கவும்.

c)நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுப்பழக்கங்களை முடிந்த அளவிற்க்கு பயன்படுத்துவோம்

இழந்த ஆரோக்கியத்தை முழுமையாக மீட்டெடுக்க முடியாது என்றாலும் குறைந்தபட்சம் 50% ஆரோக்கியத்தை மீட்டெடுக்க முடியும். அதற்கு நாம் நம் முன்னோர்களின் பயன்பாட்டில் இருந்த உணவுப் பழக்கத்தை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்துவன் மூலம் சாத்தியமாகும்.

இரவு 10,00 மணி முதல் காலை 5,00 மணி வரை கட்டாயம் உறங்க வேண்டும்.

  • 393
  • More
Comments (0)
Login or Join to comment.