Srikanth

  •  ·  Premium
  • 1 friends
  • 2 followers
  • 1208 views
Added a news  
ஆயிரம் தமிழ் சொற்களுக்கு அதன் ஆங்கில அர்த்தங்களை சாதாரணமாக கூறி சாவகச்சேரியை சேர்ந்த இரண்டரை வயது சிறுமி ஒருவர் அசத்தியுள்ளர்.சிறுமியின் குறித்த அசாத்திய திறனை கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்கான முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டுள்ளனர்.சாவகச்சேரியை சேர்ந்த ஜெயகரன் தர்ஷ்விகா என்ற இரண்டரை வயது சிறுமி காலநிலை, விலங்குகள், மின்னியல் சாதனங்கள், தொழில்கள் உள்ளிட்ட 1000 இற்கும் அதிகமான பெயர்களை தமிழில் கேட்கும் போது அவற்றுக்கான ஆங்கில அர்த்தங்களை மிகவும் அசாத்தியமாக கூறுகின்றார்.தந்தையார் முச்சக்கர வண்டி ஓடுனராகவும் தாயார் குடும்ப பெண்ணகவும் கொண்ட பெரிய அளவிலால பின்புலங்கள் இல்லாத குடும்த்தில் பிறந்த குறித்த குழந்தையானது இதுவரை ஏடு தொடக்கப்பாடாத நிலையில் இவ்வாறு அதிசிறந்த ஞாபக சக்தியை கொண்டுள்ளமையானது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் யாழ் ஊடக அமையத்தில் இவ்விடையம் குறித்து ஊடக சந்திப்பொன்றை பெற்றோர் இன்றையதினம் முன்னெடுத்திருந்ததுடன்குறித்த சிறுமியின் அசாத்திய திறனை வெளிக்கொண்டு வருவதுடன் அந்த ஆற்றலை உலக சாதனைப் புத்தகத்தில் பதியப்படுவதற்கான முயற்சியை பெற்றோர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.00
  • 299
Added a news  
அரச மற்றும் அரச அனுமதியின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் 2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பமாகின்றது.  முன்பதாக முதலாம் தவணையின் முதல் கட்டம் மார்ச் மாதம் 14 ஆம் திகதி நிறைவடைந்தது. மார்ச் மாதம் 17 ஆம் திகதி ஆரம்பமான கல்வி பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை காரணமாக இந்த விடுமுறை வழங்கப்பட்டது. இதேவேளை, நாட்டில் உள்ள சகல முஸ்லிம் பாடசாலைகளுக்கும் இன்றையதினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.  நோன்பு பண்டிகையை முன்னிட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.இன்றையநாளுக்கான கற்றல் செயற்பாடுகள் இடம்பெறும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் எனக் கல்வி அமைச்சு முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.000
  • 337
Added a news  
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வாக்களிக்கவுள்ள விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது வாக்குச் சீட்டை அடையாளமிடுவதற்கு வாக்கெடுப்பு நிலையத்திற்கு உதவியாளர் ஒருவரை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விசேட தேவையுடைய வாக்காளர்களுடன் வாக்கெடுப்பு நிலையத்திற்கு செல்லும் உதவியாளர்கள், 18 வயதை பூர்த்தி செய்த ஒருவராக இருத்தல் வேண்டும் என்பதோடு தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளராக இருத்தல் கூடாது.தேர்தலில் போட்டியிடவுள்ள அரசியல் கட்சி ஒன்றின் அதிகாரமளிக்கப்பட்ட முகவராகவோ வாக்கெடுப்பு நிலையத்தின் முகவராகவோ இருத்தல் கூடாது.விசேட தேவையுடைய வாக்காளர்கள் தங்களது உதவியாளர்களை உடன் அழைத்துச் செல்ல தகுதி சான்றிதழல் ஒன்றை உரிய வாக்கெடுப்பு நிலையத்தின் அலுவலருக்கு சமர்ப்பித்தல் வேண்டும்.தகுதி சான்றிழை பெற்றுக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை கிராம அலுவலர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும் அல்லது https://www.elections.gov.lk/ என்ற தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  00
  • 335
Added a news  
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு பின்னர் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது என்று ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.ஹோமாகம கொடகம பகுதியில் நடைபெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரசாரத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது - இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கடுமையான தலையீட்டினால் தான் அண்மையில் மின் கட்டணம் குறைக்கப்பட்டது.கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது. பாணந்துறை பகுதியில் மின்பிறப்பாக்கியின் மீது குரங்கு தாவியதால் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டதாக மின்சாரத்துறை அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். அமைச்சரின் கருத்து நிராகரிக்கத்தக்கது.இந்த மின்விநியோக துண்டிப்பால் இலங்கை மின்சார சபை 830 கோடி ரூபா நட்டத்தை எதிர்கொண்டுள்ளது.மின்சார சபையின் இந்த நட்டத்தை முகாமைத்துவம் செய்வதற்கு உள்ளூராட்சிமன்றத் தேர்தலுக்கு பின்னர் மின்கட்டணத்தை அதிகரிப்பதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.இதேவேளை சர்வதேச நாணய நிதியமும் மின் கட்டணம் அதிகரிப்பு தொடர்பான யோசனையை முன்வைத்துள்ளது.ஆட்சிக்கு வந்தவுடன் 30 சதவீதத்தால் மின்கட்டணத்தை குறைப்பதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதியளித்தார். அந்த வாக்குறுதி தற்போது மறக்கப்பட்டுள்ளது.30 வருடகாலமாக அரசியில் ஈடுபட்டுள்ள மக்கள் விடுதலை முன்னணி இம்முறை தான் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றியுள்ளது.பொருளாதார ரீதியில் மக்கள் நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் மக்கள் மனங்களில் வெறுப்பு மற்றும் கோபத்தை ஏற்படுத்தியே மக்கள் விடுதலை முன்னணி 3 சதவீத வாக்கினை 42 சதவீதமான அதிகரித்துக் கொண்டது. ஆகவே அரசியலில் ஏதும் நடக்கலாம்.'' என கூறியுள்ளார்.  000
  • 336
Added a news  
இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து மதுபான போத்தல்கள் மற்றும் கேன்களில் உற்பத்தித் திகதி அச்சிடல் கட்டாயமானது என மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் யூ.எல். உதயகுமார பெரேரா அறிவித்துள்ளார்.இன்றைய தினம் முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து மதுபான தயாரிப்பாளர்களும் மதுபான போத்தல்களின் மூடியின் கீழும் ஒட்டப்பட்ட லேபிளின் மேலும் உற்பத்தி திகதியை அச்சிட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இதேவேளை, மதுபான போத்தல்களில் பாதுகாப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்டிக்கர் தொடர்பாக நம்பிக்கையில்லா நிலைமையே இந்த புதிய நடைமுறை மூலம் வெளிப்படுவதாக மதுவரித் திணைக்கள தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.பெருந்தொகை அந்நிய செலாவணியை செலவிட்டு பாதுகாப்பு ஸ்டிக்கர்கள் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் போத்தல்களில் உற்பத்தி திகதியை அச்சிடுமாறு பணிப்புரை விடுத்துள்ளமை பாதுகாப்பு ஸ்டிக்கர் நடைமுறையின் நம்பகத்தன்மையை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதாக குறிப்பிட்டுள்ளன.நாடாளுமன்றினால் அங்கீகரிக்கப்பட்ட இந்த பாதுகாப்பு அடையாள முறைமையை மீறுவதற்கு மதுவரித் திணைக்கள ஆணையாளருக்கு உரிமை கிடையாது என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.தயாரிப்பு திகதியைக் அச்சிடுவதற்கு, மதுபான உற்பத்தியாளர்கள் அதிகளவு செலவிட நேரிடும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் தெரிவித்துள்ளனர். 000
  • 339
Added a news  
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஒரு டிரில்லியன் டொலர்களை அமெரிக்க நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளதாக சவுதி அரேபிய அரசு தெரிவித்திருந்த நிலையிலேயே டொனால் ட்ரம்பின் பயண அறிவிப்பு வெளியாகியுள்ளது.அமெரிக்காவின் ஓவல் அலுவலகத்தில் நடந்த நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்திடும் விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அடுத்த மாதம் கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) மற்றும் சவுதி அரேபியாவுக்குச் செல்லும் திட்டத்தை தெரிவித்தார்.ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டபடி மே மாதத்தில் இப் பயணம் நடக்குமா என்று கேட்டபோது, அது அடுத்த மாதம் நடக்கலாம், ஒருவேளை சிறிது தாமதமாகலாம் என்று ட்ரம்ப் பதில் அளித்தார்.பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு போன்ற துறைகளில் வளைகுடா நட்பு நாடுகளுடன் அமெரிக்க உறவுகளை வலுப்படுத்துவதே இப் பயணத்தின் நோக்கமாகும்.சவுதி அரேபியா மற்றும் கட்டாரில் அமெரிக்காவின் முக்கிய இராணுவத் தளங்கள் உள்ளன, மேலும் பிராந்திய இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்காவுக்கு ஐக்கிய அரபு இராச்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.000
  • 338
Added a news  
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள டெஸ்லா டீலர்ஷிப் விற்பனையகத்தில் நேற்றைய தினம் ஏற்பட்ட தீ விபத்தில் 17 டெஸ்லா கார்கள் தீக்கிரையாகியுள்ளன.இத் தீ விபத்து ஏற்பட்டபோது விற்பனையகத்தில் யாரும் இல்லை எனக் கூறப்படுகின்றது. மேலும் இத் தீ விபத்துக்கான காரணம் இது வரை வௌிவராத நிலையில், பொலிஸார் இது குறித்த தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.இதனிடையே, டெஸ்லா கார் விற்பனையகத்தில் ஏற்பட்ட தீவிபத்து பயங்கரவாத தாக்குதல் என உலகின் மிகப் பெரும் செல்வந்தரும், டெஸ்லா நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் குற்றம்சாட்டியுள்ளார்.எலான் மஸ்க்கின் அரசியல் விமர்சனங்கள் காரணமாக ஐரோப்பாவில் டெஸ்லா கார்களின் வீழ்சியை சந்தித்து வருவதோடு இத்தாலி முழுவதும் டெஸ்லா வாகனங்கள் சேதப்படுத்தப்படும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
  • 336
Added a news  
யாழ்ப்பாணத்தில் தடுப்பூசி ஏற்றிய ஆண் குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் குழந்தை 28.03.2025 அன்று இரவு உயிரிழந்துள்ளது. திருநெல்வேலி, கலாசாலை வீதியை சேர்ந்த மதீபன் மதுரன் என்ற 3 மாதங்கள் நிரம்பிய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,கடந்த 26ஆம் திகதி, குழந்தைக்கு 2 மாதங்களில் போட வேண்டிய தடுப்பூசி போடப்பட்டது. இந்நிலையில் 27 ஆம் திகதி குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் குழந்தை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி 28 ஆம் திகதி இரவு உயிரிழந்தது.குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளுக்காக சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.000
  • 584
Added a news  
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய எண்ணெய் மீது 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இரண்டாம் நிலை வரிகளை விதிப்பதாக அச்சுறுத்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  ஒரு மாதத்திற்குள் யுக்ரைன் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் உடன்படவில்லை என்றால், ரஷ்ய எண்ணெய் மீது வரிகளை விதிப்பதாக ட்ரம்ப் கூறியுள்ளார். இந்த விடயத்தில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமின் புடின் மீதும் டொனால்ட் டிரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.00
  • 573
Added a news  
 எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.  உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.  குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரச பணியாளர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதி மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, தேர்தல்கள் தொடர்பான அச்சிடல் பணிகள் நிறைவடையும் வரையில் அரசாங்க அச்சக திணைக்கள பணியாளர்களின் விடுமுறைகளை இரத்து செய்வதற்கான உள்ளக சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.000
  • 546
Added a news  
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பதற்காக விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும் என பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி பால்ராஜ் தெரிவித்துள்ளார்.சமூக ஊடகங்கள் மூலம், வேட்பாளர்கள் வன்முறை, அடக்குமுறை, அவமதிப்பு மற்றும் பாலியல் துன்புறுத்தல் குறித்து உற்றுநோக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் வேலைத்திட்டம் பல தரப்பினரின் பங்களிப்புடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.“அவளின் பயணத்தை ஆதரிப்போம்” என்ற கருப்பொருளில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.000
  • 528
Added a news  
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் எம்.எஸ். தோனிக்கு, ராஜஸ்தான் றோயல்ஸ் அணியுடன் மோதுவதற்கு முன்னதாக, பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா 'ஐபிஎல் 18' நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்துள்ளார்.ஐபிஎல்லில் 18 ஆண்டுகள் பங்கேற்றதைக் குறிக்கும் வகையில், தோனிக்கு இந்த நினைவுப் பரிசு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த நினைவுப் பரிசு ஐபிஎல்லில் தோனியின் எதிர்காலம் குறித்த சந்தேகத்தை எழுப்பியுள்ளது.இந்த ஆண்டு 44 வயதை எட்டவுள்ள தோனியை, சிஎஸ்கே அணி தக்கவைத்துக் கொண்டது. ஆனால் அவரது உடல் தகுதி அந்த அளவுக்கு இல்லை என பரவலாக விமர்சனங்கள் கழுந்துள்ளது.மேலும், சமீபத்தில் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனி தன்னை 9 ஆவது இடத்திற்குத் தாழ்த்திக் கொண்டார்.இதனால் தோனி அணியின் வெற்றிக்கு பங்களிக்க முடியுமா என்ற சந்தேகம் இரசிகர்களுக்கு ஏற்பட்டது.எனினும் இதுவரை, ஐபிஎல் மற்றும் சிஎஸ்கே அணியில் தனது எதிர்காலம் குறித்து தோனி எந்த தகவலையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.000
  • 558
Added a news  
மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்கள் தொடர்பில் அமெரிக்க புவியியலாளர்கள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.இதன்படி, உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கமானது, 334 அணுகுண்டுகளை போல சக்தி வாய்ந்தது என அமெரிக்க புவியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.334 அணுகுண்டுகள் அளவிற்கு சக்தி வாய்ந்த இந்த நிலநடுக்கங்கள் பெரும் அழிவை தரக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.மியன்மாரில் கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அந்த நாட்டில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன.மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான நய்பிடாவில் (Naypyidaw) நேற்று (30) 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.மியன்மாரில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்ததுடன், பல உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன.இதுவரை, 1,600 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 3,400 இற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.000
  • 554
Added a news  
உக்ரைன் மீது இன்றும் ரஷ்யா மிக மோசமான தாக்குதல்களை மேற்கொண்டுள்ளாக உக்ரேனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் தனது எக்ஸ் தளத்தில் ஒரு காணொளியை பதிவிட்டுள்ளார். குறித்த பதிவில், "துரதிர்ஷ்டவசமாக, இன்று ஏற்கனவே ரஷ்யா அதிகமான தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது. பல பகுதிகயில் சாதாரண கட்டிடங்கள் மற்றும் பொதுமக்கள் மீது பீரங்கி மற்றும் ட்ரோன் வெடிபொருட்களை ரஷ்யா வீசியது.ரஷ்ய தாக்குதல்களின் புவியியல் மற்றும் மிருகத்தனம், எப்போதாவது மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் இரவும் பகலும், புடின் இராஜதந்திரத்தைப் பற்றி கவலைப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.பல வாரங்களாக, நிபந்தனையற்ற போர்நிறுத்தத்திற்கான அமெரிக்க முன்மொழிவு உள்ளது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும், இந்த முன்மொழிவுக்கு பதிலளிக்கும் விதமாக, ரஷ்ய ட்ரோன்கள், குண்டுகள், பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் பாலிஸ்டிக் தாக்குதல்கள் உள்ளன.ரஷ்யா அதிகரித்த அழுத்தத்திற்கு தகுதியானது - போரை நடத்துவதற்கும், போரை மட்டுமே விரும்பாத அமைப்பை நிலைநிறுத்துவதற்கும் அதன் திறனை உடைக்கக்கூடிய அனைத்து கடுமையான நடவடிக்கைகளும் மற்றும் ரஷ்யாவிற்கு எதிரான தடைகள் அவசியம்.உக்ரைனுக்கு அதிக வான் பாதுகாப்பு அவசியம். அனைத்து கூட்டாளிகளிடையேயும் அதிக ஒத்துழைப்பும் ஒற்றுமையும் அவசியம்” என்று குறிப்பிட்டுள்ளார்000
  • 520
Added a news  
தற்போது நிலவும் வெப்பமான வானிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.வடக்கு, வடமத்திய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று (31) மனித உடலால் உணரப்படும் அளவிற்கு வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை நிலவக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இது குறித்து மேலும் விளக்கிய, வளிமண்டலவியல் திணைக்களத்தின் கடமை நேர வானிலை ஆய்வாளர் மலித் பெர்னாண்டோ,“இந்த நிலைமை அடுத்த சில நாட்களிலும் எதிர்பார்க்கப்படலாம்.”இதற்கு பிரதான காரணம் பருவகால சூழ்நிலையாகும். இது வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் எதிர்பார்க்கப்படுகிறது.வெப்பநிலை மனித உடலால் உணரப்படும் அளவிற்கு இருக்கும், எனவே மக்கள், வெட்டவெளிகளில் வேலை செய்பவர்கள், போதியளவு திரவங்கள் மற்றும் நீரை அருந்த வேண்டும்.முடிந்த போதெல்லாம், நிழலான இடத்தில் ஓய்வெடுக்கவும். நீங்கள் வெளிர் நிற ஆடைகளை அணியலாம். “நோயுற்றவர்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும்.” என்றார்.000 
  • 431