Feed Item
Added a news 

 

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல்மூல வாக்குச் சீட்டுகளை எதிர்வரும் ஏப்ரல் 5 ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.  

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குப்பதிவு எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22, 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் நடைபெற உள்ளது.  

குறித்த நாட்களில் வாக்களிக்க முடியாத அரச பணியாளர்களுக்காக ஏப்ரல் 28 மற்றும் 29 ஆகிய திகதி மேலதிக நாட்களாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்தநிலையில், அஞ்சல் மூல வாக்குச்சீட்டுக்களை அச்சிடும் பணிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, தேர்தல்கள் தொடர்பான அச்சிடல் பணிகள் நிறைவடையும் வரையில் அரசாங்க அச்சக திணைக்கள பணியாளர்களின் விடுமுறைகளை இரத்து செய்வதற்கான உள்ளக சுற்றுநிருபமொன்று வெளியிடப்பட்டுள்ளதாகவும், அரச அச்சகமா அதிபர் பிரதீப் புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.

000

  • 557