ஜோதிடம் (Astrology)

  •  ·  Standard
  • 3 members
  • 5 followers
  • 2180 views
Added a post  
  • 163
Added a post  
தற்போது சனிப்பெயர்ச்சி தான் நாட்டில் மிகப் பெரிய பேசுபொருளாக மாறி இருக்கிறது.இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு சனிபகவான் பெயர்ச்சி அடைகிறார். அவ்வாறு பெயர்ச்சி நடைபெறும்போது திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலிலும் மற்றும் நாட்டில் உள்ள பல்வேறு கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். பத்திரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு ராசிக்கும் சனிப்பெயர்ச்சியினால் ஏற்படும் பலன்களை புத்தகமாக வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் பிரபலமான ஜோதிடர்களை அழைத்து சனிப்பெயர்ச்சி பலன்களை பேசவைக்கின்றன.இந்தியாவில் கேரளா தவிர்த்த இதர தென் மாநிலங்களில் திருக்கணிதம், வாக்கியம் என இரண்டு விதமான கணித முறைகளை கொண்ட பஞ்சாங்கங்கள் நடைமுறையில் உள்ளன. இதில் வாக்கிய பஞ்சாங்கம் என்பது ஆரியபட்டீயத்தை அடிப்படையாக கொண்டு வரருசி என்பவரால் ஏற்படுத்தப்பட்ட கடபயாதி வாக்கியங்களை வைத்து கணிக்கப்பட்டதாகும். திருக்கணித பஞ்சாங்கம் என்பது நவீன வானியல் சூத்திரங்களை கொண்டு கணிக்கப்பட்டவை ஆகும். வடமாநிலங்களில் வாக்கிய கணிதத்திற்கு பூர்வ பத்ததி என்று பெயராகும். மேலும் அங்கு சூரிய சித்தாந்த கணிதத்தை கொண்டு சூரிய சித்தாந்த பஞ்சாங்கம் வெளிவருகிறது. கிரகலாகவம் என்னும் கிரந்தத்தின் கணிதங்களை பின்பற்றியும் ஒருசில பஞ்சாங்கங்கள் வெளிவருகிறது. ஆக அங்கு 1.திருக்கணிதம் 2.பூர்வபத்ததி(வாக்கியம்) 3.சூரியசித்தாந்தம் 4. கிரகலாகவம் என நான்கு வகை பஞ்சாங்கங்கள் வெளிவருகின்றன.கடந்த 29-03-2025 அன்று திருக்கணித பஞ்சாங்கப்படி சனி கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைந்திருக்கிறார். ஆனால் வாக்கிய பஞ்சாங்கத்தை பின்பற்றுபவர்களோ அடுத்த வருடம் மார்ச் மாதம் 6ஆம் தேதி தான் சனிப் பெயர்ச்சி, இப்போது கிடையாது என்கிறார்கள். திருநள்ளாறு தேவஸ்தானம் இன்னும் ஒரு படி மேலே சென்று தற்போது சனிப்பெயர்ச்சி இல்லை என அறிக்கையே வெளியிட்டு விட்டார்கள். இதனால் மக்களிடையே மிகுந்த குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஏன் இவ்விரு பஞ்சாங்கங்களிலும் மாறுபட்ட தேதிகளில் பெயர்ச்சி ஏற்படுகிறது என்பதை பற்றிய ஒரு சிறு விளக்கத்தை இங்கே பார்ப்போம்.பொதுவாக சனியின் சஞ்சாரம் திருக்கணிதத்திற்கும் வாக்கிய கணிதத்திற்கும் சுமார் 4 மாதங்கள் வரை வித்தியாசம் ஏற்படும். இது இயல்பானது. திருக்கணிதப்படி மாசி மாதம் 17ஆம் தேதியன்று பூரட்டாதி 3ஆம் பாதத்திற்கு சனி பிரவேசித்து விட்டார். ஆனால் வாக்கியப்படி அடுத்த வைகாசி மாதம் 8ஆம் தேதி தான் பூரட்டாதி 3ஆம் பாதத்தில் பிரவேசிக்கிறார். இரண்டிற்கும் உள்ள வேறுபாடு 4 மாதங்கள் மட்டுமே. அதிலிருந்து சுமார் 40 நாட்களுக்குள் 4ஆம் பாதத்தில் பிரவேசிக்கும்போது ராசி மாற்றம் ஏற்பட்டுவிடும். அதன்படி திருக்கணிதத்தில் பங்குனி 14ஆம் தேதியில் ராசி மாற்றம் ஏற்பட்டுவிட்டது. அப்போது சனிக்கு வக்கிரம் எதுவும் ஏற்படவில்லை. ஏனெனில் சனி நின்ற வீட்டிற்கு 5ல் சூரியன் வரும் போது தான் வக்கிரம் ஏற்படும்.இங்கு இருவரும் ஒரே வீட்டில் இருப்பதால் வக்கிரம் ஏற்படவில்லை. அதனால் எந்த தடையும் இன்றி சனி ராசி மாறி விட்டார்.ஆனால் வாக்கியத்தில் அப்படி இல்லை. வைகாசி 8 ஆம் தேதியில் பூரட்டாதி 3ல் இருந்து 40 நாட்களுக்குள் அதாவது ஆனி 18க்குள் 4ஆம் பாதத் திற்கு வந்திருக்க வேண்டும்.ஆனால் ஆனி 1ஆம் தேதியில் கும்பத்தில் இருக்கும் சனிக்கு 5ல் சூரியன் வந்துவிட்டார். அதுமுதல் சனியின் முன்னோக்கி செல்லும் வேகம் குறைந்து ஆனி 18ல் வக்கிரம் ஆகிவிட்டார். இதனால் அடுத்த ராசிக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. அதன் பின்னர் கார்த்திகை 1ல் வக்கிர நிவர்த்தி அடைந்து படிப்படியாக முன்னோக்கி சென்று மாசி 22ல் (6-3-2026) தான் மீனராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். திருக்கணிதப்படி ஆனி 29ல் வக்கிரம். அதற்குள் சனி மீன ராசியில் சுமார் 8 பாகை முன்னே சென்று விட்டார். அதனால் வக்கிரம் அடைந்தும் கூட மீனத்திலேயே பின்னோக்கி வந்து பின் வக்கிர நிவர்த்தி அடைந்து முன்னோக்கி செல்கிறார். இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் ஏன் இரண்டிற்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்பட்டது என்று.சிலர் இதற்கு முன்பெல்லாம் இரண்டு பெயர்ச்சிக்கும் இவ்வளவு வித்தியாசம் ஏற்படவில்லை.வாக்கிய கணிதத்தில் பிழை ஏற்பட்டதால் தான் கடந்த 2,3 பெயர்ச்சிகளில் இதுபோல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்படுகிறது என்று சொல்கிறார்கள். திருக்கணிதம் துல்லியமானது. வாக்கியம் இன்னும் துல்லியப் படுத்தப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனாலும் பெயர்ச்சியில் வரும் இந்த வேறுபாடு இப்போது தான் ஏற்பட்டதல்ல. காலம் காலமாக நடைமுறையில் இருக்கும் ஒன்று தான். கடந்த 60 ஆண்டுகளில் இவ்வாறு வேறுபாடு ஏற்பட்ட காலங்களை பார்த்தால் உங்களுக்கே தெரியும்.கடந்த 8-4-1966ல் திருக்கணிதப்படி கும்பராசியில் இருந்து மீனத்திற்கு பெயர்ச்சி ஆன போதிலும், வாக்கியப்படி 11-3-1967ல் தான் பெயர்ச்சி ஆனது. இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் சுமார் 1 வருடம். அதுபோல் 15-6-1968ல் திருக்கணிதப்படி மேஷத்திற்கு பெயர்ச்சி; வாக்கியப்படி 27-4-1969ல் தான் பெயர்ச்சி. இரண்டிற்கும் சுமார் 10 மாதம் வித்தியாசம். ஆனால் அடுத்த ராசியான ரிஷபத்திற்கு பெயர்ச்சியான தேதியை பார்த்தால் திருக்கணிதம் 27-4-1971; வாக்கியம் 3-6-1971. இரண்டிற்கும் வித்தியாசம் சுமார் 40 நாட்கள் மட்டுமே. அதுபோல் 1973ல் 30 நாள்; 1975ல் 26 நாள்;1977ல் 20 நாள்;1979ல் 28 நாள்;1982ல் 25 நாள் மட்டுமே இரண்டிற்கும் வித்தியாசம் ஏற்பட்டது. அதன் பின்னர் 1984 முதல் 1996 வரையிலான காலத்தில் ஏற்பட்ட பெயர்ச்சிகளில் மீண்டும் சுமார் 10 மாதம் முதல் ஒரு வருடம் வரை வித்தியாசம் ஏற்பட்டது. பிறகு 1998,2000 ஆகிய வருடங்களில் இந்த வித்தியாசம் 2 மாதமாக குறைந்தது. பின்னர் 2002,2004,2006 ஆகிய வருடங்களில் 10 மாதங்களுக்கு மேல் வித்தியாசம் ஏற்பட்டு,2009,2011,2014 ஆகிய வருடங்களில் 18 முதல் 46 நாட்களாக குறைந்தது.2017 முதல் 2028 வரை இந்த வித்தியாசம் மீண்டும் அதிகரித்து 2030ல் குறைய உள்ளது.எனவே சனிப் பெயர்ச்சியில் வாக்கியத்திற்கும் திருக்கணிதத்திற்கும் ஏற்படும் வித்தியாசமானது எப்போதும் நடைமுறையில் இருக்கக்கூடிய வித்தியாசமே ஆகும் என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள்.ஆகவே, அவரவர் எந்த கணித முறையை கடைப்பிடிக்கிறீர்களோ அதன்படி சனிப்பெயர்ச்சிக்கான தேதியையும் பலன்களையும் அறிந்துகொண்டு அதற்கேற்றபடி நடந்து கொள்வதே சாலச்சிறந்ததாகும்.அதை விடுத்து திருக்கணிதக்காரர்கள் வாக்கியத்தை குறை சொல்வதும், வாக்கியக்காரர்கள் திருக்கணிதத்தை குறை சொல்வதும் நல்ல ஜோதிடருக்கு அழகல்ல.
  • 166
  • 195
Added a post  
மேஷம்வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். பிடிவாதமின்றி சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்துச் செயல்படவும். வெளி வட்டாரங்களில் அமைதியைக் கையாள்வது நல்லது. உடன் பிறந்தவர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் ரிஷபம்மனதிற்கு பிடித்தவர்களிடம் சிறு சிறு விவாதங்கள் வந்து செல்லும். ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பணியை சேர்ந்து பார்க்க வேண்டிய சூழல் ஏற்படும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாக நிறைவு பெறும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் மிதுனம்செல்வச் சேர்க்கை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். இணைய பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உருவாகும். வியாபார பணிகளில் முதலீடுகள் மேம்படும். துறை சார்ந்த சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். ஆன்மிகப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய துறை சார்ந்த வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். கல்வியில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பயணம் சார்ந்த எண்ணங்கள் ஈடேறும். சிரமம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு சிம்மம்எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் மூலம் நன்மைகள் ஏற்படும். வெளிவட்டாரத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணைவருடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மயில்நீலம் கன்னிஎண்ணிய செயல்கள் நிறைவு பெறுவதில் அலைச்சல்கள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்து செல்லவும். கால்நடை செயல்பாடுகளில் கவனம் வேண்டும். கடன் தொடர்பான செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். உத்தியோக பணிகளில் கவனத்துடன் செயல்பட வேண்டும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை துலாம்கணவன் மனைவிக்கு இடையே விவாதங்கள் தோன்றி மறையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களின் வட்டம் அதிகரிக்கும். வியாபார பணிகளில் இழுபறியான வரவுகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் படிப்படியாக குறையும். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை விருச்சிகம்எதிர்பாராத வரவுகள் உண்டாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய வேலை நிமித்தமான எண்ணங்கள் கைகூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்புகள் உருவாகும். உடன் இருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். நிலுவையில் இருந்து வந்த பொருட்கள் விற்பனையாகும். உத்தியோகத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். பாசம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் தனுசுசுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். மனதில் இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். முதலீடு தொடர்பான விஷயங்கள் மூலம் லாபங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகள் நிறைவேறும். மேல்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். பகை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்தொழில் சார்ந்த கல்விகளில் சாதகமான சூழல்கள் உருவாகும். தொழில் நிமித்தமான பயணங்கள் கைகூடும். மனை சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். புதிய முதலீடுகளில் ஆய்வு செய்து மேற்கொள்வது நல்லது. சொந்த ஊர் சார்ந்த சிந்தனைகள் உருவாகும். உறவினர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். கட்டிடப் பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கும்பம்எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பாராத திடீர் மாற்றங்கள் மூலம் மேன்மை ஏற்படும். கடினமான காரியத்தையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்புகள் சாதகமாகும். உத்தியோக பிரச்சனைகள் குறையும். அரசு பணிகளில் அனுசரித்துச் சென்றால் ஆதாயம் ஏற்படும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மீனம்பழைய பிரச்சனைகளுக்கு சில முடிவுகளை எடுப்பீர்கள். ஆரோக்கியம் தொடர்பான செயல்களில் கவனம் வேண்டும். வாக்குறுதிகள் அளிக்கும் போது கவனம் வேண்டும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்குள் புரிதல் வேண்டும். புதிய அறிமுகம் உண்டாகும். திடீர் வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். உத்தியோக பணிகளில் துரிதம் உண்டாகும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
  • 426
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 1.4.2025. சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார். இன்று காலை 10.04 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி. இன்று மாலை 03.22 வரை பரணி. பின்னர் கிருத்திகை. அஸ்தம், சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 429
Added a post  
மேஷம்எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். நண்பர்களைப் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். புதிய பணி நிமித்தமான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்ரிஷபம்உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். தேவையற்ற வாதங்களினால் விரயங்கள் நேரிடலாம். மனதில் அந்நிய தேச பயணம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். பலதரப்பட்ட சிந்தனைகளால் தூக்கம் இன்மை ஏற்படும். எதிர்பாராத சில பயணம் மூலம் மாற்றம் உண்டாகும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்புமிதுனம்மனதளவில் புதிய தன்னம்பிக்கை பிறக்கும். பெற்றோர்களின் ஆதரவுகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பொதுப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் அதிகரிக்கும். தன்னம்பிக்கை மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்கடகம்ஆன்மிக செயல்பாடுகளில் தெளிவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உற்பத்தி சார்ந்த துறைகளில் மேன்மை உண்டாகும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்சிம்மம்நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவுகள் பிறக்கும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். தொழில் நிமித்தமான முயற்சிகள் கைகூடும். தடைப்பட்ட ஒப்பந்தங்கள் சாதகமாக அமையும். உத்தியோகப் பணிகளில் மதிப்புகள் மேம்படும். எதிலும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையுடன் செயல்படவும். தடங்கல் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்கன்னிஅரசு சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். எதிர்பாராத பொருள் வரவுகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான அலைச்சல் மேம்படும். வாக்குறுதிகள் அளிக்கும் பொது சிந்தித்துச் செயல்படவும். வாடிக்கையாளர்களிடம் கனிவு வேண்டும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளி வட்டாரங்களில் பொறுமையை கடைபிடிக்கவும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சைதுலாம்வெளிப்படையான குணத்தின் மூலம் பலரின் நம்பிக்கைகளை பெறுவீர்கள். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். இழந்து போன பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். கூட்டாளிகளிடத்தில் அனுசரித்து செல்லவும். திடீர் செலவுகள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்விருச்சிகம்மறதி சார்ந்த பிரச்சனைகள் குறையும். புதுவிதமான ஆலோசனைகள் மனதில் மாற்றத்தை உருவாக்கும். எதிர்ப்புகளின் தன்மைகளை புரிந்து கொள்வீர்கள். உபரி வருமான தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். சந்தைப்படுத்தும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் உண்டாகும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சைதனுசுஎதிலும் வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நல்லது. சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயம் உண்டாகும். லாபத்தை மேம்படுத்தும் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம்மகரம்மனதில் எண்ணிய எண்ணம் நிறைவேறும். இயற்கை மருத்துவம் சார்ந்த விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். வாகன பயணங்களால் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோக பணிகளில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். கல்வியில் இருந்து வந்த ஆர்வமின்மை குறையும். சிக்கல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்கும்பம்செயல்பாடுகளில் இருந்து வந்த சோர்வுகள் நீங்கி சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியுடனும் செயல்படுவீர்கள். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் மேன்மையான வாய்ப்புகள் கிடைக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். குழந்தைகளின் சுபகாரியம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். எதிர்ப்பு குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஊதாமீனம்சவாலான வாதங்களையும் சாதுரியமாக வெற்றி கொள்வீர்கள். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்து இருந்து வந்த உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் வழியில் மதிப்புகள் ஏற்படும். புதிய ஒப்பந்தங்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடத்தில் ஆதரவு ஏற்படும். மனதளவில் உற்சாகம் பிறக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • 588
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 17 ஆம் தேதி திங்கட்கிழமை 31.3.2025சந்திர பகவான் இன்று மேஷ ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 12.27 வரை துவிதியை. பின்னர் திரிதியை.இன்று மாலை 04.58 வரை அஸ்வினி. பின்னர் பரணி.உத்திரம், அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 559
Added a post  
மேஷம்இழுபறியான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உபரி வருமானம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் சுதந்திரப்போக்கு அதிகரிக்கும். ரகசியமான சில ஆராய்ச்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். வேள்விப் பணிகளில் ஈடுபாடுகள் உண்டாகும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு ரிஷபம்மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் உயர்வுகள் ஏற்படும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் இருக்கக்கூடிய கவலைகள் குறையும். வாகனப் பயணங்களில் நிதானம் வேண்டும். பயம் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்மிதுனம்சேமிப்புகளை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். வீடு மற்றும் வாகனத்தை சீர் செய்வீர்கள். உயர் அதிகாரிகளின் நம்பிக்கையை பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செய்கின்ற முயற்சியில் அலைச்சல் இருந்தாலும் புதிய ஆதாயம் கிடைக்கும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீலம்கடகம்மனதில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். சிறு தூர பயணங்களால் மனதில் தெளிவுகள் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கடினமான வேலைகளையும் எளிமையாகச் செய்து முடிப்பீர்கள். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்சிம்மம்குடும்பத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். தனம் தொடர்பான நெருக்கடிகள் ஏற்படும். வியாபார பணிகள் மந்தமாக நடைபெறும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். எளிதில் முடிய வேண்டிய பணிகள் தாமதமாகி நிறைவு பெறும். வாக்குறுதிகளை குறைத்துக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் ஆர்வமின்றி செயல்படுவீர்கள். பணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சைகன்னிகணவன், மனைவிக்கு இடையே புரிதல்கள் உண்டாகும். வெளிப்படையான குணத்தின் மூலம் அறிமுகங்கள் உருவாகும். சகோதர வகையில் ஆதரவுகள் கிடைக்கும். வர்த்தகத் தொழிலில் மேன்மை ஏற்படும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். எதிர்பாராத சில நிகழ்வுகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைதுலாம்வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப சாதகமான சூழ்நிலைகள் அமையும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலைகள் காணப்படும். பூர்வீக சொத்துக்களில் சில மாற்றங்கள் செய்வதற்கான சூழல்கள் உருவாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம்விருச்சிகம்உங்கள் கருத்துக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். பலம் மற்றும் பலவீனங்களைப் புரிந்து கொள்வீர்கள். கலை சார்ந்த துறைகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் லாபங்கள் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் சில சூட்சுமங்களை கற்றுத் தருவார்கள். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழ்நிலைகள் சாதகமாக அமையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்தனுசுஆரோக்கியம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கூட்டணிகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியான பணிகளில் அனுசரித்துச் செல்வதன் மூலம் மேன்மை ஏற்படும். புதிய மனை வாங்குவது தொடர்பான எண்ணம் மேம்படும். தாய் வழி உறவுகள் மூலம் ஆதாயம் உண்டாகும். தாமதம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மகரம்பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். முத்திரை பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தோற்றத்தில் மாற்றம் ஏற்படும். ஆன்மிக எண்ணங்களில் நிபுணத்துவம் வெளிப்படும். நற்செயல் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு கும்பம்மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். நிதானமான பேச்சுக்கள் உங்கள் மீதான நன்மதிப்பை மேம்படுத்தும். விரும்பிய உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். வியாபார பணிகளில் முதலீடுகள் அதிகரிக்கும். மனதிற்குப் பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். அடிப்படை கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சுமீனம்வியாபாரம் நிமித்தமான செயல்பாடுகளில் சற்று கவனம் வேண்டும். வெளியிடங்களில் கோபத்தை விட விவேகத்தை கையாளவும். உணர்ச்சி வேகமின்றி பொறுமையுடன் செயல்படவும். உங்களை பற்றிய கண்ணோட்டத்தில் மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு பற்றிய எண்ணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு அவ்வப்போது ஞாபக மறதி ஏற்பட்டு நீங்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • 638
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 16 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 30.3.2025.சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 02.50 வரை பிரதமை. பின்னர் துவிதியை.இன்று மாலை 06.37 வரை ரேவதி. பின்னர் அஸ்வினி.பூரம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 637
Added a post  
மேஷம்குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். வரவுக்கு ஏற்ப செலவுகள் நீடிக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் உழைப்புகள் மேம்படும். தாய்மாமன் வழியில் செலவுகள் ஏற்படும். தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் ஏற்படும். விமர்சன பேச்சுக்களை வெளிவட்டாரத்தில் தவிர்க்கவும். நட்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ரோஸ்ரிஷபம்சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். பெண்கள் வழியில் அனுசரித்துச் செல்லவும். சுபகாரியங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். நினைத்த காரியம் எளிதாக நிறைவேறும். எதிரிகள் விலகிச் செல்வார்கள். வியாபாரத்தில் சில சலுகைகளால் ஆதாயம் அடைவீர்கள். உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டாகும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மிதுனம்வியாபாரத்தில் அறிமுகம் உண்டாகும். ஆன்மிகப் பணிகளில் தெளிவுகள் ஏற்படும். வெளியூர் பயண வாய்ப்புகள் கைகூடும். நீதித்துறைகளில் புதிய அனுபவம் உருவாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த சில வரவுகள் சாதகமாகும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம்கடகம்நெருக்கமானவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் மேன்மையான சூழல் நிலவும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் ஏற்படும். விலகிச் சென்றவர்கள் பற்றிய எண்ணம் மேம்படும். பிள்ளைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்ப நலனில் அக்கறை செலுத்தவும். திட்டவட்டமாக சில முடிவுகளை எடுப்பீர்கள். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பழுப்புசிம்மம்அலுவலகத்தில் பொறுப்புகள் மேம்படும். சிந்தனைப் போக்கில் குழப்பம் உண்டாகும். எதிலும் பதற்றம் இன்றி செயல்படவும். வியாபாரத்தில் கனிவு வேண்டும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். மறதியால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : நீலம்கன்னிமனதில் வித்தியாசமான கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். மனதில் இருந்து வந்த ஆசைகள் நிறைவேறும். நெருக்கடியான சில பிரச்சனைகள் குறையும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நண்பர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். அன்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைதுலாம்செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் படிப்படியாக குறையும். அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். காதணிகள் சார்ந்த செயல்களில் ஈடுபாடுகள் உண்டாகும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். தடங்கல் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்விருச்சிகம்வியாபாரம் நிமித்தமாக சில நுட்பங்களை புரிந்துகொள்வீர்கள். உயர் கல்வியில் இருந்துவந்த தடைகள் விலகும். சமயோசிதமாக செயல்பட்டு நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புதிய மனை வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். குழந்தைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளைதனுசுமனதில் சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். தாய்மாமன் வழியில் சுபச்செய்தி கிடைக்கும். குடும்ப விஷயமாக அலைச்சல் உண்டாகும். நிலுவையில் இருந்து வந்த வரவுகள் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பணியாளர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். ஆதாயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சைமகரம்எதிலும் ஈடுபாட்டுடன் செயல்படுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வரவுகள் தேவைக்கு இருக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். சகோதர வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டுத் தேவைகள் பூர்த்தியாகும். தாமதம் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்கும்பம்பொன், பொருட்ச்சேர்க்கை உண்டாகும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். குடும்பத்தில் சுபச்செலவு அதிகரிக்கும். சிலர் நகை, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள். செயல்களில் தனித்திறமை வெளிப்படும். கொடுக்கல், வாங்கலில் உண்டான சங்கடம் தீரும். இன்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்மீனம்எந்த செயலிலும் பொறுமையுடன் செயல்படவும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். வாடிக்கையாளர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். பழைய நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க வேண்டாம். அலுவலக ரகசியங்களில் கவனத்துடன் இருக்கவும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
  • 882
  • 841
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 15 ஆம் தேதி சனிக்கிழமை 29.3.2025.சந்திர பகவான் இன்று மீன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 05.12 வரை அமாவாசை. பின்னர் பிரதமை.இன்று இரவு 08.15 வரை உத்திரட்டாதி. பின்னர் ரேவதி.மகம், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 852
Added a post  
மேஷம்ஆலய வழிபாட்டில் ஆர்வம் ஏற்படும். சிலரின் சந்திப்புக்களால் மாற்றம் ஏற்படும். வாகன பழுதுகளை சரிசெய்யும் எண்ணம் தோன்றும். வர்த்தக செயல்பாடுகளில் கவனம் வேண்டும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் அகலும். உத்தியோகத்தில் சில மாற்றமான சூழல் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்ரிஷபம்இழுபறியான பணிகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருந்து வந்த குழப்பம் நீங்கும். காப்பீட்டு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகங்கள் ஏற்படும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் ஆதரவு மற்றும் ஒத்துழைப்புகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்மிதுனம்குடும்பத்தில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப்பெறுவீர்கள். திடீர் பயணங்கள் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். சுபகாரியங்கள் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபார ரீதியான செயல்பாடுகளில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்புகடகம்எடுத்த காரியத்தை எளிதில் செய்து முடிப்பீர்கள். தேக ஆரோக்கியம் மேம்படும். பழைய கடன் பாக்கிகளை கனிவாக பேசி வசூலிப்பீர்கள். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்புகள் வந்து போகும். கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதிற்கு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். சொத்து சம்பந்தப்பட்ட செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள்சிம்மம்மனதில் இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். வாக்குறுதிகள் அளிப்பதை குறைத்துக் கொள்வது நல்லது. எதிர்பாராத செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். சக ஊழியர்களிடம் விவாதங்களை குறைத்துக்கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புகன்னிபுதிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணிகளில் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மனை பணிகளில் இலாபம் மேம்படும். மனதிற்குப் பிடித்த செயல்களை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு புதிய நம்பிக்கையை உருவாக்கும். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சுதுலாம்உத்தியோக பணிகளில் மேன்மையான சூழ்நிலைகள் காணப்படும். பொருளாதார பிரச்சனைகள் குறையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் உண்டாகும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். எதிர்காலம் குறித்த சில புரிதல்கள் உண்டாகும். மருத்துவத் துறைகளில் திறமைக்கு உண்டான பாராட்டுகள் கிடைக்கும். செயல்பாடுகளில் அனுபவ அறிவு வெளிப்படும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்புவிருச்சிகம்நண்பர்களின் ஆதரவு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். பொருளாதாரத்தில் ஏற்ற இறக்கமான சூழ்நிலைகள் காணப்படும். மனதில் புது விதமான சிந்தனைகள் தோன்றும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான முயற்சிகள் கைகூடும். பணிபுரியும் இடத்தில் சஞ்சலமான சிந்தனைகள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்தனுசுபுதிய மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உறவினர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதுவிதமான சிந்தனைகளால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். பெரியோர்களின் ஆலோசனைகள் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும். கால்நடைகள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மகரம்இல்லத்தில் நல்ல காரியம் நடைபெறும். ஆதாயம் தரும் வேலைகளில் ஈடுபாடு உண்டாகும். மனதில் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில் வளர்ச்சிக்கு நண்பர்கள் உதவி செய்வர். குழந்தைகளால் மகிழ்ச்சியான சூழல் ஏற்படும். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். வெளிவட்டத்தில் பாராட்டுக்கள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெண்மைகும்பம்திடீர் வரவுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடு அவசியம். பொருளாதார உயர்வால் வாழ்க்கைத் தரம் உயரும். தந்தை வழியில் வீண்செலவுகள் ஏற்படும். புதிய பொருட்ச்சேர்க்கை உண்டாகும். எதிர்கால முதலீடுகள் மேம்படும். கலைத்துறைகளில் மேன்மை உண்டாகும். குடும்பத்தில் வளைந்து கொடுத்துச் செல்லவும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சைமீனம்அதிகாரப் பொறுப்பில் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உணவு தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். பயணம் தொடர்பான செயல்களில் புதுமையான அனுபவம் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மாணவர்களுக்கு விளையாட்டு சார்ந்த உதவிகள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
  • 1229
Added a post  
குரோதி வருடம் பங்குனி மாதம் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை 28.3.2025. சந்திர பகவான் இன்று கும்ப ராசியில் பயணம் செய்கிறார். இன்று இரவு 07.24 வரை சதுர்த்தசி. பின்னர் அமாவாசை. இன்று இரவு 09.44 வரை பூரட்டாதி. பின்னர் உத்திரட்டாதி. ஆயில்யம், மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 1195
Added a post  
மேஷம்சேமிப்பு மேம்படுத்துவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். சிந்தனைகளில் இருந்து வந்த குழப்பம் விலகும். சுயதொழில் சார்ந்த பயணம் கைகூடும். உடன் பிறந்தவர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். சுபகாரியங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். தாமதம் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு ரிஷபம்சமூக பணிகளில் மதிப்பும், மரியாதையும் உயரும். இழுபறியான சில வழக்குகள் முடிவுக்கு வரும். மனதளவில் இருந்து வந்த கவலைகள் நீங்கும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றுவீர்கள். தனவரவு தாராளமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். வியாபாரம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் மிதுனம்எதையும் செய்ய முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். சகோதர வாழ்க்கையில் ஒத்துழைப்பு மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் திறமைகள் வெளிப்படும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் முயற்சிக்கேற்ப திருப்பங்கள் உண்டாகும். பழைய பிரச்சனைகளுக்கு வித்தியாசமான முறையில் தீர்வு காண்பீர்கள். ஆதரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம்பொதுவாழ்வில் புதிய அனுபவம் ஏற்படும். இடமாற்றம் செய்யும் எண்ணத்தை தவிர்ப்பது நல்லது. வாக்குறுதிகள் அளிப்பதில் சிந்தித்துச் செயல்படவும். விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். முன்கோபம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். செயல்பாடுகளில் மாற்றம் ஏற்படும். வியாபார வரவுகளில் தாமதம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் சிம்மம்மனதில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும். புதிய வேலை நிமித்தமான முயற்சிகள் ஈடேறும். போட்டிகளில் பங்குபெற்று திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் அனுசரித்து நடந்துகொள்ளவும். எதிர்பாராத சில உதவிகள் மூலம் மாற்றங்கள் பிறக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கன்னிபொருளாதார நிலை உயரும். புகழ்மிக்கவர்களின் ஆதரவுகளால் சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய பணியாளர்களை சேர்ப்பதில் ஆர்வம் உண்டாகும். புதிய நபர்களின் சந்திப்புகள் ஏற்படும். வருமான உயர்வை பற்றி சிந்திப்பீர்கள். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். துணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம்விளையாட்டு துறைகளில் ஆதாயம் உண்டாகும். குழந்தைகளின் எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலைத்துறைகளில் ரசனை திறன் மாற்றமடையும். தாய்மாமன் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சாதுரியமாக செயல்பட்டு செல்வாக்கை பெருக்கிக் கொள்வீர்கள். சாஸ்திரம் தொடர்பான குழப்பங்கள் நீங்கும். சமூக பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை ஏற்படும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளீர்நீலம்  விருச்சிகம்உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் கிடைக்கும். அரசு பணிகளில் இருந்து வந்த இழுபறியான சூழல் மறையும். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். இறைவழிபாடு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். மனதில் நினைத்த எண்ணங்கள் கைகூடுவதற்கான சூழல்கள் அமையும். பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம் தனுசுபுதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். திட்டமிட்ட காரியங்களை எண்ணிய விதத்தில் முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான உத்திகளை கையாண்டு வெற்றி அடைவீர்கள். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் திறமைகள் வெளிப்படும். தெளிவு பிறக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை மகரம்குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்புகள் ஏற்படும். இழுபறியான வரவுகள் கிடைக்கும். ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தோற்றப்பொலிவில் மாற்றம் உண்டாகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். மனதை உறுத்திய கவலைகள் குறையும். பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடைகளை தகர்த்தெறியும் மனப்பக்குவம் ஏற்படும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் கும்பம்விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். வரன்கள் முடிவடைவதில் தாமதங்கள் உருவாகலாம். மறதியால் சிறு சிறு பிரச்சனைகள் நேரிடும். உடல் நலனில் கவனம் வேண்டும். நண்பர்களால் காரிய அனுகூலம் உண்டாகும். பொதுக் காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். உத்தியோகத்தில் அலைச்சல் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். கவலை மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் மீனம்எந்த ஒரு செயலிலும் ஆர்வமின்மையுடன் செயல்படுவீர்கள். மனதில் புது விதமான சிந்தனைகள் ஏற்படும். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். கால்நடைகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : நீலம்
  • 1039