இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
மேஷம்
குடும்ப உறுப்பினர்களிடம் சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். நேரம் தவறி உணவு உண்பதை தவிர்க்கவும். தொழில் சம்பந்தமான முடிவுகளில் நிதானம் வேண்டும். கல்வி பணிகளில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். பலதரப்பட்ட சிந்தனைகளின் மூலம் மனதில் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு உண்டான அங்கீகாரங்கள் கால தாமதமாக கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு
ரிஷபம்
சுப காரியங்களுக்கான எண்ணங்களில் வெற்றி கிடைக்கும். பலதரப்பட்ட மக்களின் அறிமுகம் உண்டாகும். மனதளவில் தன்னம்பிக்கை பிறக்கும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். வெளியூர் பயணம் தொடர்பான வாய்ப்புகள் ஈடேறும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். வரவு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை
மிதுனம்
கால்நடைகளின் மீதான ஆர்வம் அதிகரிக்கும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் உண்டாகும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். எண்ணிய சில உதவிகள் சாதகமாக அமையும். மனதிற்கு நெருக்கமானவர்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். வழக்கு சார்ந்த விஷயங்களில் சில புரிதல்கள் ஏற்படும். செயல்பாடுகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்
கடகம்
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகளின் மீது ஆர்வமும், விருப்பமும் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். லாபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
சிம்மம்
புதிய வீடு மற்றும் மனை வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் மேன்மை உண்டாகும். தாய்மாமன் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரம் தொடர்பான பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கீர்த்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
கன்னி
நிர்வாகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். திட்டமிட்ட காரியங்களில் எதிர்பார்த்த வெற்றிகள் சாதகமாகும். எதையும் சமாளிக்கும் மன தைரியம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுதூரப் பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் ஏற்படும். பரிவு வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பச்சை
துலாம்
உறவினர்களின் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்களின் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். துரிதமான செயல்பாடுகளின் மூலம் எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். சாமர்த்தியமான பேச்சுக்களின் மூலம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மற்றவர்களின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். பாசம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : ஊதா
விருச்சிகம்
மற்றவர்களின் பணிகளையும் சேர்ந்து பார்க்க வேண்டிய சூழ்நிலைகள் அமையும். வாழ்க்கை துணைவர் பிடிவாதமாக இருப்பார்கள். திட்டமிட்டது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் அமையும். எந்தவொரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். பயனற்ற பழக்கவழக்கங்களை குறைத்துக் கொள்வது நல்லது. வியாபாரம் தொடர்பான ரகசியங்களை பகிர வேண்டாம். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். சலனம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம்
தனுசு
உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உண்டாகும். எதிர் பாலின மக்கள் தொடர்பான விஷயத்தில் சற்று விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். தொழில் சார்ந்த முயற்சிகளில் விவேகம் வேண்டும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளின் வழியில் விட்டுக்கொடுத்து செல்லவும். புதுவகையான உணவுகளை உண்பதில் ஆர்வம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள்
மகரம்
மூத்த உடன்பிறப்புகள் சாதகமாக செயல்படுவார்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். சபை நிமிர்த்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு, புகழ் அதிகரிக்கும். நிம்மதி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்
கும்பம்
மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகம் சார்ந்த பணிகளில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். மனை தொடர்பான கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். பாராட்டு கிடைக்கும் நாள்.
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை
மீனம்
உயர் அதிகாரிகளின் மூலம் மறைமுகமான ஆதாயம் கிடைக்கும். கல்வி தொடர்பான விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். வெளியூரில் இருந்து மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். பழைய நினைவுகளால் ஒருவிதமான பதற்றம் ஏற்பட்டு நீங்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாகச் செயல்படுவார்கள். இயந்திரம் தொடர்பான பணிகளில் கவனத்துடன் செயல்படவும். உறவினர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். ஓய்வு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்
- 542