Feed Item

இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.

மேஷம்

பிடிவாதப் போக்கினை குறைத்துக் கொள்ளவும். ஜாமீன் விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். பிள்ளைகளால் மதிப்பு உயரும். விலகிச் சென்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் மாற்றங்கள் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் மேம்படும். நலம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள்

ரிஷபம்

உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். மற்றவர்களின் பேச்சுக்களை பொறுமையாக கையாளவும். வியாபாரத்தில் அலைச்சல்கள் உண்டாகும். எதிலும் அலட்சியமின்றி செயல்படவும். ஜாமீன் விஷயங்களைத் தவிர்க்கவும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மிதுனம்

மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். எதிர்காலம் சார்ந்த முதலீடுகளை மேற்கொள்வீர்கள். அக்கம், பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு பெருகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட காலப் பிரச்சனைகள் ஓரளவு குறையும். உதவி கிடைக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்

உறவினர்களுடன் சிறு சிறு விவாதங்கள் வந்து போகும். முயற்சிகளுக்கு ஏற்ப புதிய வேலைகள் சாதகமாகும். வெளிவட்டாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். விவசாயம் தொடர்பான பணிகளில் பொறுமை வேண்டும். பங்குதாரர்களிடம் அனுசரித்துச் செல்லவும். அரசு வழியில் ஆதாயம் ஏற்படும். நெருக்கமானவர்களின் மூலம் ஒத்துழைப்பு ஏற்படும். சுகம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

சிம்மம்

எதிலும் சிக்கனமாக செயல்படுவீர்கள். தெய்வீகம் சார்ந்த பணிகளில் ஈடுபாடு ஏற்படும். உடன் இருப்பவர்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் எதிர்பாராத சில வாய்ப்புகள் கிடைக்கும். வருவாயை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் அதிகரிக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

கன்னி

உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கியம் சார்ந்த செயல்களில் கவனம் வேண்டும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். சிந்தனைகளில் சில குழப்பங்கள் உண்டாகும். புதுவிதமான இடங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். நெருக்கடியாக இருந்துவந்த சில பிரச்சனைகள் குறையும். நன்மை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

துலாம்

முயற்சிக்கு ஏற்ப வரவுகள் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். அரசுப் பணிகளில் சிறு சிறு அலைச்சல்கள் ஏற்படும். ஆன்மிகம் தொடர்பான காரியங்களில் ஈடுபாடு ஏற்படும். புதிய துறை சார்ந்த தேடல்கள் அதிகரிக்கும். ஊக்கம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

விருச்சிகம்

தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். ஆன்மிகப் பணியில் ஆர்வம் உண்டாகும். தடைப்பட்ட சில விஷயங்கள் நிறைவு பெறும். வீடு, மனை விற்பதில் லாபம் உண்டாகும். வியாபாரத்தில் தொடர்புகள் விரிவடையும். உத்தியோகப் பணிகளில் துரிதம் ஏற்படும். உழைப்புக்கான மதிப்பு தாமதமாக கிடைக்கும். சில அனுபவங்களின் மூலம் புதிய பாதைகள் புலப்படும். திறமை வெளிப்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்

தனுசு

திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படும். தொலைதூர உறவினர்களின் சந்திப்பு உண்டாகும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். உயர் அதிகாரிகளால் சிறு சிறு அலைச்சல்கள் உண்டாகும். வியாபாரத்தில் விவேகத்துடன் செயல்படவும். புதிய முதலீடு சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். துணைவரின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். சிரமம் மறையும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 4

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மகரம்

மறைமுகமான சில விமர்சனங்கள் தோன்றி மறையும். நெருக்கமானவர்களின் இடத்தில் அனுசரித்துச் செல்லவும். கடின உழைப்பிற்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில புதிய பயணங்கள் உண்டாகும். சக ஊழியர்களால் சிறு சிறு வருத்தங்கள் நேரிடும். பிறமொழி மக்களைப் பற்றிய புரிதல் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 8

அதிர்ஷ்ட நிறம் : நீலம்

கும்பம்

எதையும் சமாளிக்கும் மனவலிமை உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகம் ஏற்படும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். கலை சார்ந்த பணிகளில் திறமைகள் வெளிப்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் நிமிர்த்தமான உதவிகள் சாதகமாகும். அசதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

மீனம்

செயல்பாடுகளில் அனுபவம் வெளிப்படும். பேச்சுக்களின் மூலம் காரிய அனுகூலம் ஏற்படும். குழந்தைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். பணி சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். கற்றல் திறனில் சில மாற்றங்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 5

அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

  • 594