அமரர் இராமன் சிவக்குமார்

  • 1 members
  • 1 followers
  • 1732 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
·
Added a news
தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 610 குடும்பங்களைச் சேர்ந்த 2294 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் யாழ் மாவட்ட பிரதி பணிப்பாளர் ரீ.என் சூரியராஜா தெரிவித்தார்.இதன்படி சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 34 குடும்பங்களைச் சேர்ந்த 108 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊர்காவல்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 111 குடும்பங்களைச் சேர்ந்த 475 பேர் வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் பருத்தித்துறை பிரதேச செயலாளர் பிரிவில் 10 குடும்பங்களைச் சேர்ந்த 35 பேரும் நல்லூரில் மின்னல் தாக்கம் காரணமாக 1 குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தெல்லிப்பழை சங்கானை, காரைநகர் சண்டிலிப்பாய், கோப்பாய், மற்றும் யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் பிரிவிலும் தற்பொழுது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக உதவி பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்
  • 19
·
Added a news
........அனைத்து அரச மற்றும் தனியார் பாடசாலைகளினதும் கற்றல் நடவடிக்கையின் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளையுடன் (22) முடிவடைகிறது.இதேநேரம் முஸ்லிம் பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் டிசம்பர் 13ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.அனைத்து பாடசாலைகளிலும் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் ஆரம்பமாகி ஜனவரி 2 ஆம் திகதி வியாழன் அன்று பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
  • 22
·
Added a news
......அரச அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வளவு விரைவாக அதைச் செய்து முடிப்பது அரசாங்க அதிகாரிகள் கடமை என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார்.வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் துறைசார் மீளாய்வுக் கூட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றுக் காலை (20) வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில் இடம்பெற்றது.ஆரம்பத்தில் உரையாற்றிய ஆளுநர், அலுவலர்கள் பொதுமக்களை தனிப்பட்ட ரீதியில் பழிவாங்கும் வகையில் செயற்படக்கூடாது என்றும், அரச அலுவலகங்களை நாடிவரும் பொதுமக்களின் தேவைகளை எவ்வளவு விரைவாக நிறைவேற்றிக் கொடுக்க முடியுமோ அவ்வாறு செய்து முடிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.மக்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்ற முடியாமல் ஆளுநர் அலுவலகத்துக்கு வருகின்றார்கள். அந்த நிலைமையை மாற்றியமைக்கும் வகையில் ஒவ்வொரு அலுவலகங்களும் வினைத்திறனாக பணியாற்றவேண்டும் என ஆளுநர் தெரிவித்தார். மேலும், விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சினையான அவர்களின் உற்பத்திக்கான சந்தை வாய்ப்பு மற்றும் 10 சதவீதக் கழிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனச் சுட்டிக்காட்டிய ஆளுநர், ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் விவசாய உற்பத்திப் பொருள்களை சேகரிக்கக் கூடிய மையங்களை உருவாக்குவது தொடர்பிலும் ஆராயுமாறும் பணித்தார். அத்துடன் சந்தைகளில் பின்பற்றப்படும் கழிவு நடைமுறை தொடர்பாகவும் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தினார்.உள்ளூராட்சி அமைச்சின் கீழான வீடமைப்புத் திட்டத்தில், மீளக்குடியமரும் மக்கள், இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் மக்கள், விதவைகளுக்கே முன்னுரிமையளிக்குமாறும் ஆளுநர் தெரிவித்தார். ஆளணிப்பற்றாக்குறை தொடர்பில் திணைக்களத் தலைவர்களால் இந்தச் சந்திப்பில் சுட்டிக்காட்டப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் மதிப்பீட்டாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்திக்கும் வகையில் 75 பேருக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது. வடக்கு மாகாணத்தில் 17, 138 குடும்பங்களுக்கு காணி இல்லாத நிலைமை இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. அதைப் பூச்சியமாக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் இங்கு குறிப்பிட்டார். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வினைத்திறனை அதிகரிக்கும் வகையில் புதிய தலைவர் செயற்படுவார் என எதிர்பார்ப்பதாக குறிப்பிட்ட ஆளுநர், சட்டத்துக்கு முரணான வகையில் - தவறாகச் செயற்படும் பேருந்துகளின் உரிமங்களை உடனடியான இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் பணித்தார்.இந்தக் கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநருடன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இ.இளங்கோவன், வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் செயலர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஒவ்வொரு மாவட்டங்களினதும் உதவி ஆணையாளர்கள் மற்றும் துறைசார் திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்
  • 29
·
Added a post
அது ஒரு புத்த மடாலயம். அந்த மடாலயத்தின் தலைமை துறவியாக இருந்தவர், மிகவும் அனுபவம் வாய்ந்தவர். அவரிடம் பலரும் துன்பங்களை கடக்கும் வழி உள்ளிட்ட பலவற்றை அறிந்துகொள்வதற்காக வருவார்கள். அன்றும் அவரைப் பார்க்க ஒரு வியாபாரி வந்திருந்தார்.அவர் அந்த துறவியிடம், “சுவாமி.. என்னுடைய மனம் என்னுடைய பேச்சைக் கேட்பதே இல்லை. அதை நான் எவ்வளவு கட்டுப்படுத்தினாலும் அதற்கு பலன் கிடைப்பதில்லை” என்று கூறி அங்கலாய்த்துக் கொண்டார்.அப்போது துறவியின் அருகில் அவர் வளர்த்து வந்த குரங்கு ஒன்று வந்தது. வியாபாரிக்கு உணவளிக்க விரும்பிய துறவி, தன் காலடியில் இருந்த ஒரு கம்பை எடுத்து, குரங்கின் தலையில் ஒரு அடி அடித்து விட்டு, “வந்திருப்பவர்களுக்கு இலை போடு” என்றார். குரங்கு வாழை இலையை எடுத்து வந்து போட்டது.துறவி மீண்டும் தன் கையில் இருந்த கம்பால் குரங்கின் தலையில் அடித்து விட்டு “சாப்பாடு எடுத்து பரிமாறு” என்றார். குரங்கு சாப்பாடு எடுத்து வந்து பரிமாறியது. அதன்பிறகும் அந்த குரங்கின் தலையில் ஒரு அடி வைத்தார், துறவி.இப்போது வியாபாரிக்கு வருத்தமாக இருந்தது. துறவியிடம், “சுவாமி.. நீங்கள் சொல்வதை எல்லாம் அந்தக் குரங்கு செய்துகொண்டுதானே இருக்கிறது. பிறகு எதற்காக அதை அடித்துக்கொண்டே இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.ஆனால் அதற்கு துறவி எந்த பதிலும் சொல்லவில்லை. சற்றே புன்னகைத்துவிட்டு, தன் கையில் இருந்த சிறிய கம்பை, தான் அமர்ந்திருந்த இருக்கையின் கீழ் ஒளித்து வைத்தார்.சற்று நேரம் அமைதியாக இருந்த குரங்கு, இப்போது அங்கும் இங்கும் தாவியது, வியாபாரி சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையில், தன்னுடைய வாலை விட்டு ஆட்டியது. வியாபாரியின் தோளில் அமர்ந்து கொண்டு அவரது காதைப் பிடித்து திருகியது. சாப்பிட்டுக் கொண்டிருந்த இலையை இரண்டாக கிழித்துப் போட்டது.அதன் சேட்டையைப் பொறுக்க முடியாத வியாபாரி, “சுவாமி... இந்தக் குரங்கின் தொல்லை தாங்க முடியவில்லை. அடி போடுங்கள்” என்றார்.உடனே துறவி, தான் மறைத்து வைத்திருந்த கம்பை எடுத்து குரங்கின் தலையில் அடித்தார். அதுபோய் ஒரு மூலையில் அமைதியாக அமர்ந்து கொண்டது.இப்போது துறவி சொன்னார். “இந்தக் குரங்கைப் போலத்தான் மனித மனங்களும். ‘நாம் சொன்னதை எல்லாம் மனம் கேட்டு நடக்கின்றதே’ என்று விட்டு விடக் கூடாது. ஆன்மிகம் எனும் ஆயுதத்தை வைத்து மனதை அடக்க வேண்டும். சற்று ஓய்வு கொடுத்தாலும் மனிதனின் மனம் தாவத் தொடங்கி விடும்” என்றார் துறவி. அதைக்கேட்டு வியாபாரி மனம் தெளிந்து புறப்பட்டார்...
  • 70
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 6ஆம் தேதி  மேஷம் -ராசி: வீட்டை விரிவு படுத்துவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். குழந்தைகள் வழியில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். கால்நடை பணிகளில் மேன்மை ஏற்படும். வாக்குறுதி அளிப்பதைத் தவிர்ப்பது நல்லது. எளிதில் முடிய வேண்டிய சில பணிகள் அலைச்சல்களுக்கு பின்பு முடியும். அரசால் ஆதாயம் ஏற்படும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் ரிஷபம் ராசி: சில திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். இணைய துறைகளில் புதிய வாய்ப்பு கிடைக்கும். சகோதரர்கள் பக்க பலமாக இருப்பார்கள். கமிஷன் தொடர்பான துறைகளில் லாபம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். வித்தியாசமான அணுகுமுறைகள் மூலம் நினைத்ததை முடிப்பீர்கள். மனதளவில் தைரியம் மேம்படும். அனுபவம் மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மிதுனம் -ராசி: தடைப்பட்ட சுபகாரிய பேச்சு வார்த்தைகள் முடிவு பெறும். மனை விற்றல் வாங்கலில் லாபம் மேம்படும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். வீடு பராமரிப்பு செலவுகள் ஏற்படும். தள்ளிப்போன சில வேலைகள் முடிவு பெறும். நட்பு வட்டம் விரிவடையும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்  கடகம் -ராசி: இறை சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் இருந்துவந்த தடை தாமதங்கள் குறையும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சகோதரர்களின் உதவி கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். பொருளாதார நிலையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்பட்டு நீங்கும். பணி தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் சிம்மம் -ராசி:வியாபார பணிகளில் கனிவான பேச்சுக்கள் நன்மையைத் தரும். பயணங்களின் போது விழிப்புணர்வு வேண்டும். பணி சார்ந்த மறைமுகமான எதிர்ப்புகளை அறிந்து கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் கன்னி -ராசி: பிற மொழி பேசும் மக்களால் ஆதாயம் உண்டாகும். வெளிநாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். உறவினர்கள் மத்தியில் மதிப்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளுக்கு சாதகமான சூழல்கள் அமையும். உத்தியோகத்தில் சில சூட்சமங்களைப் புரிந்து கொள்வீர்கள். குழந்தைகளின் கல்வி சார்ந்த சிந்தனைகள் மேம்படும். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம் -ராசி: உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் மாற்றத்தை ஏற்படுத்தும். பூர்வீக வீட்டினை சீர் செய்வதற்கான வாய்ப்பு அமையும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் கைகூடும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். அரசுப் பணியாளர்களுக்கு மேன்மை ஏற்படும். தடைகள் மூலம் புதிய அனுபவங்கள் ஏற்படும். இறை சார்ந்த பணிகளில் மதிப்பு கிடைக்கும். சுபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் விருச்சிகம்- ராசி: குடும்ப உறுப்பினர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செயல்படவும். பணி நிமித்தமான பயணங்கள் ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்று வருவீர்கள். சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். நண்பர்களிடம் இருந்துவந்த மனக்கசப்புகள் குறையும். ஆராய்ச்சி சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தந்தை வழி சொத்துக்கள் மூலம் ஆதாயம் உருவாகும். கனிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் தனுசு -ராசி: புதிய செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பார்த்த சில முடிவுகள் தாமதமாகக் கிடைக்கும். கூட்டாளிகளுடன் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்துச் செல்லவும். வியாபார பணிகளில் திடீர் லாபம் ஏற்படும். நெருக்கமானவர்களால் சில நெருக்கடிகள் உண்டாகும். பணிகளில் சற்று விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. இரக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் மகரம் -ராசி:சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். பயணம் மூலம் புதிய அறிமுகங்கள் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். சவாலான பணிகளையும் சாதாரணமாகச் செய்து முடிப்பீர்கள். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாகச் செயல்படுவார்கள். தவறிப்போன சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் கும்பம் –ராசி:சொத்து வழக்குகளில் சாதகமான முடிவுகள் ஏற்படும். உடன் பிறந்தவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். எதிர்பார்த்து இருந்துவந்த சில உதவிகள் மூலம் மாற்றங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களுடன் வெளியூர் பயணங்கள் சென்று வருவீர்கள். வியாபார பணிகளில் முன்னேற்றமான சூழல் அமையும். ஆதரவு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு மீனம் -ராசி: வருமான முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திப்பீர்கள். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான தருணங்கள் அமையும். நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். பொழுதுபோக்கு சார்ந்த செயல்களில் ஆர்வம் அதிகரிக்கும். இலக்கியம் சார்ந்த துறைகளில் ஈடுபாடு ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெண்மை  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 89
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 6 ஆம் தேதி வியாழக்கிழமை 21.11.2024சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 09.51 வரை சஷ்டி. பின்னர் சப்தமி.இன்று இரவு 08.38 வரை பூசம். பின்னர் ஆயில்யம்.மூலம் பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 774
Good Morning...
  • 777
·
Added article
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அவரது மனைவி சாய்ரா பானுவும் விவாகரத்து செய்வதாக நேற்று அறிவித்தனர். இதனையடுத்து இந்திய திரையுலகமே அதிர்ச்சியடைந்தது. இருவருக்கும் ஏன் விவாகரத்து என்பது குறித்து பலரும் பல விஷயங்களை யூகங்களாக சொல்லிவருகின்றனர். இருந்தாலும் ரஹ்மான் வீட்டில் இப்படி ஒரு புயலா என்ற அதிர்ச்சி ரசிகர்களிடம் இருக்கத்தான் செய்கிறது.ரஹ்மான் கடந்த 1995ஆம் ஆண்டு சாய்ரா பானுவை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு கதிஜா, ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 29 வருடங்கள் ரஹ்மானும், சாய்ராவும் இணைந்து வாழ்ந்துவந்த சூழலில் திடீரென நேற்று இரவு சாய்ரா பானு ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில், 'ஏ.ஆர்.ரஹ்மானை விட்டு பிரிவதாக’ தெரிவித்திருந்தார். அது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய சூழலில்; சாய்ரா அறிக்கை வெளியிட்ட சிறிது நேரத்தில் ரஹ்மானும் அந்த விவாகரத்தை உறுதி செய்தார்.
  • 926
·
Added a post
மனிதனின் ஈரலுக்கு கீழ் அமைந்திருக்கும் இந்த பித்தப்பை உணவு செரிமானத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. மனிதனின் பித்த நீரை சேமித்து வைத்துக்கொள்ளும் ஒரு தனி அறை தான் இந்த பித்தப்பை. நாம் உண்ணும் உணவு செரிப்பதற்கு தேவையான அமிலத்தை நம்முடைய ஈரல் சுரக்கும் நிலையில் அந்த அமிலம் பலவகை பொருட்களால் ஆனது. கொழுப்பு, பித்த, உப்பு ஆகியவை கலந்து இருக்கும் நிலையில், அதை குடல் வழியாக நம் உணவோடு பித்தப்பை சேர்த்து விடும்.உடல் பருமன் அதிகம் உள்ளவர்களுக்கு கொழுப்பு அதிகமாக உருவாவதால் பித்தப்பை காலியாக இல்லாமல் கல் சேர்ந்து விடும். இதனை குமட்டல், வாந்தி போன்ற பிரச்சனைகளில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.பித்தப்பை கல்லை அகற்றுவதற்கு ஆப்பிள் ஜூஸ் அல்லது ஆப்பிள்களை சாப்பிட்டு வந்தால் சரியாகும். மேலும் ஆலிவ் எண்ணெய் அல்லது எள் எண்ணெய் ஆகியவற்றுடன் எலுமிச்சை சாறு கலக்கி குடித்தால் பித்த குழாய் வழியாக கற்கள் வெளியேறிவிடும்.  
  • 932
·
Added a news
கனடாவில் இருந்து குறிப்பிடத்தக்களவு குடியேறிகள் வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.கனடாவில் குடியேறும் நபர்கள் 25 ஆண்டுகளுக்குள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. சுமார் 25 வீதமானவர்கள் இவ்வாறு நாட்டை விட்டு வெளியேறுவதாக தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு வெளியேறுவோரில் மூன்றில் இரண்டு பங்கினர் முதல் ஐந்தாண்டு காலப்பகுதியிலேயே கனடாவை விட்டு வெளியேறி விடுவதாக தெரிவிக்கப்படுகிறது. கனடிய குடி வரவு நிறுவகம் மற்றும் கனடிய பேரவையினால் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த 30 ஆண்டுகளாக திரட்டப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 2020ம் ஆண்டில் பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் கனடாவை விட்டு வெளியேறியுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது. 
  • 940
·
Added a news
 இஸ்ரேல்-பாலஸ்தீன போர் தீவிரமடைந்து வருகிறது. ஹமாஸின் தலைவர் அடுத்தடுத்து கொல்லப்பட்டுள்ள நிலையில், காசாவில் போர் பதற்றம் ஓரளவுக்கு குறைந்திருக்கிறது. இந்நிலையில், காசா சென்ற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, ஹமாஸ் மீண்டும் அதிகாரத்திற்கு வராது என்று கூறியுள்ளார்.பாலஸ்தீனத்தை உடைத்து இஸ்ரேல் உருவாக்கப்பட்டதிலிருந்து மத்திய கிழக்கில் பதற்றம் நிலவி வருகிறதது. பதற்றம் உச்சம் எட்டும்போது அது உயிர் பலிகளை ஏற்படுத்துகிறது. இஸ்ரேலின் ஆக்கிரமிப்புக்கு ஆயுதம் தாங்கிய ஹமாஸ் அமைப்பு பதிலடி கொடுப்பதும், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா வந்து நிற்பதும் தொடர் கதையாக இருந்து வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் நடத்திய தாக்குதல் காரணமாக இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது போரை அறிவித்து.போரில் ஹமாஸ் முழுமையாக அழிக்கப்படும் என்றும் உறுதி பூண்டிருந்தது. இஸ்ரேல் கூறியபடி கடந்த ஓராண்டு காலத்தில் ஹமாஸ் தலைவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்பட்டனர். அதேநேரம் மறுபுறம் பொதுமக்களும் இஸ்ரேல் தாக்குதலால் கொல்லப்பட்டிருக்கின்றனர். சுமார் 45,000 பேர் பாலஸ்தீனத்தில் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பல ஆயிரம் பேர் படுகாயமடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் இடம் பெயர்ந்துள்ளனர்.ஹமாஸ் தலைவர்கள் கொல்லப்பட்ட பிறகும் போர் நிறுத்தப்படாமல் தொடர்வது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி இருக்கையில் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு காசாவுக்கு சென்றிருக்கிறார். போர் தொடங்கியதிலிருந்து காசாவுக்கு அவர் செல்வது இதுவே முதல்முறையாகும். அவருடன் பாதுகாப்பு துறை அமைச்சரும் காசாவுக்கு சென்றிருக்கின்றார்.காசாவில் பேட்டியளித்த நெதன்யாகு, "ஹமாஸின் சகாப்தம் முடிந்துவிட்டது. இனி அவர்களால் அதிகாரத்திற்கு வர முடியாது" என்று கூறியுள்ளார். அதேபோல இஸ்ரேலிலிருந்து கடத்தப்பட்ட பணயக்கைதிகள் பத்திரமாக மீட்கப்படுவார்கள் என்றும், அவர்களை மீட்பவர்களுக்கு ரூ.41 கோடி வழங்கப்படும் என்று கூறியுள்ளார். இன்னும் 101 பணயக்கைதிகள் மீட்கப்படாமல் இருக்கின்றனர். போரின் தாக்கம், உயிரிழப்புகள், பொருளாதார பாதிப்பு, மனித உரிமை மீறல் உள்ளிட்டவை குறித்து இஸ்ரேல் மீது ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
  • 945
·
Added a news
‛‛நடிகை கஸ்தூரிக்கு ஜாமீன் வழங்க வேண்டும். அவருக்கு ஆட்டிஸம் பாதிப்போடு கூடிய ஒரு மகன் இருக்கிறார். இப்பாதிப்புக்கு உள்ளான குழந்தைகளுக்கும் அவர் தம் பெற்றோருக்கும் அன்றாட வாழ்க்கை என்பதே ஒரு நித்திய சவால். நானும் கஸ்தூரியை போல ஒரு சிறப்பு அம்மா தான். எனக்கும் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட ஒரு மகன் இருக்கிறான்'' என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜிஆர் சுவாமிநாதனின் மனைவி காமாட்சி சுவாமி நாதன் உருக்கமாக நீதிமன்றத்துக்கு கோரிக்கை வைத்துள்ளார்.தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை கஸ்தூரி மீது சென்னை எழும்பூர் உள்பட மாநிலத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகை கஸ்தூரியிடம் விசாரணைக்கு ஆஜராகும்படி எழும்பூர் போலீசார் சம்மன் வழங்க சென்றனர். அப்போது வீட்டில் அவர் இல்லை. வீடு பூட்டப்பட்டு கிடந்தது.இதையடுத்து சம்மனை வீட்டில் ஒட்டிய போலீசார், கஸ்தூரியை தேட தொடங்கினர். தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு சென்னை எழும்பூர் தனிப்படை போலீசார் கஸ்தூரியை கைது செய்தனர். ஹைதராபாத்தில் கஸ்தூரியை சுற்றிவளைத்து போலீசார் கைது செய்தனர். அதன்பிறகு அவரை சென்னைக்கு போலீசார் அழைத்து வந்தனர்.நீதிபதி ரகுபதி ராஜா முன்பு போலீசார் ஆஜர்ப்படுத்தினர். இதையடுத்து நடிகை கஸ்தூரியை நீதிமன்ற காவலில் வரும் 29ம் தேதி வரை அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கஸ்தூரி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டபோது நடிகை கஸ்தூரி நீதிபதியிடம் சொந்த ஜாமீனில் விடுவிக்கும்படி கோரிக்கை வைத்தார்.முன்னதாக 2 குழந்தைகள் வீட்டில் தனியாக இருப்பாங்க.. நான் சிங்கிள் மதர் என்று கூறி வாதம் வைத்து இருந்தார் கஸ்தூரி. இருப்பினும் அவருக்கு நீதிமன்ற காவல் வழங்கப்பட்டது. ஏற்கனவே நடிகை கஸ்தூரி சார்பில் இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு செய்தார். அந்த மனு தள்ளுபடியான நிலையில் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 
  • 949
·
Added a news
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆண்டுதோறும் பல செயற்கைக்கோள்களை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் ஏவி வருகின்றது.அதேவேளை, தனியார் நிறுவனங்களின் ராக்கெட்டுகள் மூலமும் செயற்கைக்கோள்கை ஏவும் முயற்சியில் இஸ்ரோ இறங்கியுள்ளது.அந்த வகையில், உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான அமெரிக்காவை சேர்ந்த எலான் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்நிறுவனத்திற்கு சொந்தமான ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் இஸ்ரோ செயற்கைக்கொளை விண்ணில் ஏவியுள்ளது.ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் இஸ்ரோவின் தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் – என்2 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.இஸ்ரோவுக்கும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கும் இடையே வர்த்தக ரீதியில் செயற்கைக்கோள் ஏவப்படுவது இதுவே முதல்முறையாகும்..
  • 951
முருங்கை ஆரோக்கிய பாடல்கள்
  • 948
·
Added a news
யாழ் பண்ணை கடற்பரப்பில்
  • 1048
·
Added a news
புதிய நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் நாளைய தினம் பங்குபற்றவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் காலை 9 மணிக்கு நாடாளுமன்ற வளாகத்திற்கு வருகை தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.அறிவித்தலொன்றை விடுத்து நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹனதீர இதனைத் தெரிவித்துள்ளார்பத்தாவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வு நாளை முற்பகல் 10 மணிக்கு ஆரம்பிக்கப்படவுள்ளது.
  • 1056
·
Added a news
கடந்த நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் சகல இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்க ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் பெறுபேறுகள் சகல இனங்களுக்கும் இடையிலான நல்லிணக்க ஒருமைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அவர் யாழ்ப்பாண ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து இதனைக் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெற்றமையானது, தமிழ் மக்கள் புதிய எதிர்காலம் ஒன்றை எதிர்பார்ப்பதைக் காட்டுகிறது. = அதனை நாங்கள் வரவேற்கின்றோம். சகல இனங்களும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து செயற்படுகின்றார்கள் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது.  இது நாட்டின் எதிர்காலத்துக்கு பாரிய பங்களிப்பை வழங்கும் என நாங்கள் நம்புகிறோம். சீனா இலங்கையின் நீண்ட கால நண்பனாகும்.  கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கை மக்களின் ஆணையை சீனா மதிக்கிறது. அதே போன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கூறிய விடயத்தை ஊடகங்கள் வாயிலாக அறியக் கிடைத்தது.  இந்தியாவும் இலங்கையும் நெருங்கிய அண்டைய நாடுகளாகும். அவரது விஜயத்தினூடாக இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார ஒத்துழைப்புகளை மேம்படுத்த முடியும்.  புதிய அபிவிருத்திகளைக் காண்பதற்கு நாம் ஆர்வத்துடன் உள்ளோம். அதே போன்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவை பொருத்தமான சந்தர்ப்பத்தில் சீனாவுக்கும் வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகின்றோம். இது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒருமைப்பாடு மற்றும் பொருளாதார மேம்பாடு ஆகியவற்றுக்கு வழிவகுக்கும் என நாம் நம்புகிறோம். பொருளாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் சீனா இலங்கைக்கு அதிகூடிய வாய்ப்புகளை வழங்கியுள்ளது. இலங்கை மக்களின் ஆற்றலும் திறமையும் வளர்க்கப்பட வேண்டும் என்பதே சீனாவின் நிலைப்பாடாகும் என இலங்கைக்கான சீன தூதுவர் கீ சென்ஹொங் (Qi Zhenhong) தெரிவித்துள்ளார்000
  • 1058
·
Added a news
பஸ் கட்டணத்திற்கு பதிலாக அதிக பணம் அறவிடப்பட்டால் முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு அறிவித்துள்ளது.1955 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறைப்பாடு செய்ய முடியும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.கொழும்பு - கோட்டையில் இருந்து கெக்கிராவ நோக்கி பயணித்த பயணி ஒருவரிடம் கப்பம் பெற்ற சம்பவம் ஒன்று நேற்று பதிவாகியிருந்தது.இந்நிலையில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மக்களுக்கு இதனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 1062
·
Added a news
வாஸ்கோடகாமா என்ற அதி சொகுசு பயணிகள் கப்பல் இன்று (20) காலை கொழும்பு, துறைமுகத்தை வந்தடைந்தது.689 பயணிகள் மற்றும் 460 பணியாளர்களுடன் குறித்த கப்பல் இந்தியாவில் இருந்து நாட்டுக்கு வருகை தந்துள்ளது.இது ஜெர்மனி, பிரிட்டன் மற்றும் இந்தியாவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் திருகோணமலைக்கு செல்லும் பயணிகளை சுமந்து வந்துள்ளது.போர்த்துகல் கொடியுடன் வந்துள்ள இந்த பயணிகள் கப்பல் நாளை இரவு இந்தோனேஷியா நோக்கி புறப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.000
  • 1063
·
Added a news
கிழக்கு வங்காள விரிகுடாவில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் எதிர்வரும் 23 ஆம் திகதி தாழமுக்கம் ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார் இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் - இது எதிர்வரும் 25 ஆம் திகதி அன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் அதேவேளை 26 ஆம் திகதி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலையின் படி இது ஒரு புயலாக மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. தற்போதைய நிலையின் படி இதன் நகர்வு பாதை கிழக்கு மாகாணத்திற்கு அருகாக நகர்ந்து, பின்னர் வடக்கு மாகாணத்தை அண்மித்து (தற்போதுள்ள நிலையில் இது கரையைக் கடக்கும் போது இதன் உள் வளையத்திற்குள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களும், வெளிவளையத்துக்குள், முல்லைத்தீவு, மன்னார், வவுனியா மாவட்டங்களும் அடங்குகின்றன) தமிழ்நாட்டின் கடலூர் புதுச்சேரிக்கிடையில் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குறிப்பாக எதிர்வரும் 26 மற்றும் 27 ஆம் திகதிகளில் மிக மிக கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில இடங்களில் 26 மற்றும் 27 ஆம் திகதிகளை உள்ளடக்கிய 48 மணி நேரத்தில் 350 மி. மீ. இனை விட கூடுதலாக மழைவீழ்ச்சி கிடைக்கும் வாய்ப்புள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் தற்போது கிடைத்து வரும் தொடர்ச்சியான மழை காரணமாக நிலம் நிரம்பு நிலையை எட்டியுள்ளது. சில பகுதிகளில் வெள்ள அனர்த்த நிலமைகள் ஏற்பட்டுள்ளன. எனவே கிடைக்கவுள்ள கனமழை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளிலும் வெள்ள அனர்த்தத்தை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மிகவும் அவதானமாக இருப்பது அவசியம். விவசாயிகளும் இக்கனமழையை கருத்தில் கொண்டு தங்களுடைய விவசாய நடவடிக்கைகளில் குறிப்பாக நெற் செய்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது அவசியம். எதிர்வரும் 26 மற்றும் 27ம் திகதிகளில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காற்று மணிக்கு 60 தொடக்கம் 80 கி.மீ. வரையான வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் உள் நிலப்பகுதிகளில் காற்று 50 தொடக்கம் 70 கி.மீ. வேகத்தில் வீசும் வாய்ப்புள்ளது. எனவே கடுமையான காற்று வேகத்தினால் பாதிக்கப்படக் கூடிய மரங்கள் மற்றும் பழைய கட்டிடங்கள் தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியம். இதன் காரணமாக எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை இலங்கையின் வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்பதனால் மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்ப்பது சிறந்தது. இத்தாழமுக்கம் புயலாக மாறாது விட்டாலும் மேலுள்ள அதி தீவிர வானிலை நிகழ்வுகள் மற்றும் கடற் கொந்தளிப்பான நிலைமைகள் நிகழும். எனவே முன்கூட்டிய பாதுகாப்பு தயார்ப்படுத்தல் முறைமைகளைப் பின்பற்றுவது எமக்கு ஏற்படும் பாதிப்புக்களை கணிசமாகக் குறைக்கும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் நிர்வாக அதிகாரிகள் இந்த தாழமுக்கம்/புயல் தொடர்பாக அவதானம் செலுத்துவது சிறந்தது. எனத் தெரிவித்தார்.00
  • 1064
·
Added a news
நாடாளுமன்ற உறுப்பினருக்கு வழங்கப்படுவது சம்பளம் அல்ல கொடுப்பனவு என இலங்கை நாடாளுமன்றத்தின் செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.பிரதான சிங்கள ஊடகமொன்றின் நிகழ்ச்சி ஒன்றில் இணைந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சுமார் 54,000 ரூபாய் கொடுப்பனவு வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.மேலும் கருத்து தெரிவித்த அவர் -அதற்கு மேலதிகமாக, வருகை கொடுப்பனவாக நாடாளுமன்றக் கூட்டங்கள் நடைபெறும் நாட்களில் 2,500 ரூபாவும் மற்றும் கூட்டத்தொடர் இல்லாத நாட்களில் குழுக்களில் கலந்துகொள்வதற்கு 2,500 ரூபாவும் உதவித்தொகையாக வழங்கப்படும்.தூரத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் நிலையில் அது சூத்திரத்தின்படி கணக்கிடப்படும்.அதுமட்டுமல்லாமல், நாடாளுமன்றத்தில் இருந்து 40 கிலோமீட்டருக்குள் வீடு இல்லாதவர்கள் விண்ணப்பித்து மாதிவெலயில் அமைந்துள்ள எம்பி குடியிருப்புக்களை பெற்றுக் கொள்ளலாம்.மாதிவெலயில் இவ்வாறான 108 வீடுகள் உள்ளன. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரின் வேண்டுகோளுக்கு இணங்க முதலில் கோரிக்கைகள் முன்வைக்கப்படும் வரிசையில் வீடுகள் வழங்கப்படும்.வீட்டு வாடகையாக 2,000 ரூபாய் செலுத்தப்படும். மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணத்தை தொடர்புபட்ட உறுப்பினர் செலுத்த வேண்டும்.” என கூறினார்.மேலும், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மருத்துவ வசதிகளை பெற்று கொடுப்பதன் மூலம் கொடுப்பனவுகளில் இருந்து தொகையை குறைக்க நாடாளுமன்றம் மற்றும் நாடாளுமன்ற அலுவல்களைகள் அமைச்சு இணைந்து வசதிகளை வழங்கியுள்ளதாக தெரிவித்த செயலாளர் நாயகம், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட ஊழியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளையும் குறித்த அமைச்சு ஏற்கும் எனவும் வெளிப்படுத்தினார்000
  • 1065
·
Added a news
மோட்டார் திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் உட்பட 8 பேரை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே அறிவித்துள்ளார்.இலங்கை சுங்கத்தினால் அனுமதி பெறப்படாத சுமார் 400 சொகுசு கார்கள் போலியான முறையில் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.இதன்காரணமாக அரசாங்கத்திற்கு 500 கோடி ரூபாவுக்கு மேல் நட்டம் ஏற்பட்டுள்ளதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை எதிர்வரும் 29ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பிரதான நீதவான் உத்தரவிட்டுள்ளார்.அதேவேளை, இலங்கை சுங்கத்தால் அனுமதிக்கப்படாத சொகுசு மொண்டெரோ ஜீப்கள், லேண்ட் க்ரஷர் ரக கார்கள் உட்பட 400 கார்கள் மட்டுமே சுங்கத்தின் கட்டுப்பாட்டில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.கடந்த காலங்களில் இலங்கை சுங்கத்தால் அனுமதி பெறாத வாகனங்களை போலியான முறையில் பதிவு செய்து, அரசாங்கத்திற்கு வரி வருமானம் கிடைக்காமல் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பில் பல முக்கிய உண்மைகள் வெளியாகியுள்ளன புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்கு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.000
  • 1064
·
Added a news
இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி, நியூசிலாந்து அணி 21 ஓவர்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடிய போது போட்டியில் மழை குறுக்கிட்டது.இதனையடுத்து மழை தொடர்ச்சியாக பெய்து வருவதால் போட்டியை கைவிட நடுவர்கள் தீர்மானித்துள்ளனர்.இதையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரை இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.000
  • 1066
·
Added a news
இந்திய மீனவர்களின் படகுகள் புதிய ஆட்சியில் கடற்படையினரின் பயன் பாட்டிற்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. இலங்கை கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டிய சமயம் பிடிக்கப்பட்ட இந்திய மீன்பிடிப் படகுகளே கடற்படையினரின் பாவனைக்கு வழங்குமாறு கடற்றொழில் திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.இலங்கை கடற்பரப்பிற குள் எல்லை தாண்டிய சமயம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டு மன்னார் மற்றும் மயிலிட்டித் துறைமுகங்களில் தரித்து நிற்கும் நல்ல நிலையில் உள்ள படகுகளையே கடற்படையினரிடம் கையளிக்குமாறு கடற்றொரில் நீரியல்வளத் துறை பணிப்பாளர் 2024-11-13 திகதிய கடிதம் மூலம் பணித்துள்ளார்.கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் எல்.ஜி.ஆர்.இசுராணி ஒப்பமிட்டு இந்த உத்தரவை மாவட்டங்களிற்கு அனுப்பி வைத்துள்ளார். இதற்கமைய மன்னாரில் இருந்து 5 படகுகளும் யாழ்ப்பாணத்தில் இருந்து 8 படகுகளும் என மொத்தம் 13 படகுகள் கடற்படையினரின் பாவனைக்காக வழங்கப்படவுள்ளது.கடற்படையினரன் பாவனைக்கென வழங்கவுள்ள படகுகளில் IND/TN/08/MM.346, IND/TN/08/MM.1872, IND/TN/08/MM/1436, IND/TN/06/MM/6824, IND/TN/10/MM/693, IND/TN/10/MM/405, IND/TN/10/MM/2573, IND/TN/11/MM/857, IND/TN/11/MM/298, IND/TN/11/MM/28 ஆகிய படகுகளுடன் IND/TN/16/MM/1872, IND/TN/16/MM/1861 இலக்க படகுமாகவே இந்த 13 படகுகளும் கடற்படையின் பயன்பாட்டிற்கு வழங்கப் பணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.000
  • 1094
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 5ஆம் தேதி  மேஷம் -ராசி: வியாபார ரீதியான பயணங்கள் ஏற்படும். ஆசிரியர்களின் ஆலோசனை மாற்றத்தை உருவாக்கும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். ஆரோக்கியம் குறித்த சிந்தனைகள் மேம்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அரசால் ஆதாயம் உண்டாகும். தன வரவுகளில் திருப்தி உண்டாகும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் ரிஷபம் ராசி: மனதில் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். குடும்பத்தாரின் ஒத்துழைப்புகள் மேம்படும். விளையாட்டுக்களில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் மேம்படும். பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். பத்திரம் சார்ந்த விஷயங்களில் மேன்மை ஏற்படும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு மிதுனம் -ராசி: எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். முயற்சிக்கு உண்டான பலன்கள் தாமதமாக கிடைக்கும். வியாபார ரீதியான கொள்முதலில் சிந்தித்துச் செயல்படவும். கனிவான பேச்சுக்களால் நன்மதிப்பு உருவாகும். அலுவலகப் பணிகளில் ஏற்ற இறக்கமான சூழல் உண்டாகும். காலம் தவறி உணவு உண்பதைத் தவிர்க்கவும். கீர்த்தி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சந்தனம்  கடகம் -ராசி: திடீர் செலவுகளால் சேமிப்பு குறையும். சமூகப் பணிகளில் சில புரிதல் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடத்தில் அனுசரித்துச் செல்லவும். தர்மப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். விதண்டாவாத பேச்சுக்களைத் தவிர்க்கவும். புதிய முயற்சிகளில் விவேகத்துடன் செயல்படவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். மறதி மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை சிம்மம் -ராசி:குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதரர்கள் வழியில் சிறு சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். பூர்வீக வீட்டினை சீரமைத்து விரிவுபடுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இருந்துவந்த சில வழக்குகளில் தெளிவுகள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உடன் இருப்பவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தடங்கல் குறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கன்னி -ராசி: நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். ஆராய்ச்சிப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். புதுவிதமான தேடல்கள் அதிகரிக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். திடம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் துலாம் -ராசி: எதிலும் பொறுமையுடன் செயல்படவும். வீடு வாகன பராமரிப்பு செலவுகள் உண்டாகும். சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்துச் செல்லவும். வியாபாரம் நிமித்தமான பயணம் மேம்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் விருச்சிகம்- ராசி: வெளிப்படையான சில பேச்சுக்களால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களுடன் சிறு தூரப் பயணங்கள் சென்று வருவீர்கள். செயல்களில் இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். வர்த்தகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு மேம்படும். மனை மீதான கடன் உதவிகள் கிடைக்கும். சுபகாரியங்களை முன் நின்று நடத்துவீர்கள். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு தனுசு -ராசி: பயனற்ற சிந்தனைகளைத் தவிர்க்கவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் சூழ்நிலை அறிந்து செயல்படவும். விவசாயத் துறைகளில் பொறுமை வேண்டும். வெளியூர் பயணங்களில் மாற்றம் ஏற்படும். புதிய முதலீடுகளைத் தவிர்க்கவும். மற்றவர்களின் செயல்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. வேலையாட்களிடம் அனுசரித்துச் செல்லவும். அமைதி வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மகரம் -ராசி:மனம் விரும்பியபடி செயல்படுவீர்கள். சிந்தனைகளில் தெளிவு ஏற்படும். கலகலப்பான சூழலால் மகிழ்ச்சி உண்டாகும். எதிலும் சிக்கனமாகச் செயல்படுவது சார்ந்த முடிவுகள் உண்டாகும். சுற்றுலா செல்வது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கல்வியில் மேன்மை ஏற்படும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். பழைய சிக்கல்கள் குறையும். பெருமை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் கும்பம் –ராசி:சேமிப்பு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். பயனற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். உத்தியோகப் பணிகளில் சில மாற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். விவசாயப் பணிகளில் மேன்மை உண்டாகும். மறைமுகமான எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். சிக்கல் விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம் -ராசி: மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். குழந்தைகளின் எண்ணங்களைப் புரிந்து கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். தொழில் ரீதியான தொடர்புகள் அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் சாதகமான சூழல் அமையும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உதவி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 1172
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 5 ஆம் தேதி புதன்கிழமை 20.11.2024சந்திர பகவான் இன்று கடக ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 09.41 வரை பஞ்சமி. பின்னர் சஷ்டி. இன்று இரவு 07.54 வரை புனர்பூசம். பின்னர் பூசம். கேட்டை, மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.   
  • 1184
·
Added a post
வீடு நமக்குச் சொந்தமானவுடன் இந்த ஆவணங்களை நாம் நம் பீரோவில் வைத்து விட வாய்ப்பு உண்டு. ஆனால் அப்படி வைக்கும்போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய சில கோணங்கள் உண்டு. சிலர் இந்த ஆவணங்கள்மீதும் வேறு பல பொருட்களை அடுக்கி விடுவர். இதன் காரணமாக அந்த ஆவணங்கள் ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டுவிட வாய்ப்புண்டு. அதுவும் வீட்டின் தாய்ப்பத்திரம் மிகவும் பழமையானதாக இருந்தால் இது மேலும் மோசமான விளைவுகளைக் கொடுக்கும்.பாதுகாப்பு என்று நினைத்துக் கொண்டு சிலர் இந்த ஆவணங்களை லாமினேட் செய்து விடுகிறார்கள். இதனால் ஆவணங்கள் பாதுகாப்புடன் இருக்கலாம். ஆனால் பின்னர் ஏதாவது சட்டச் சிக்கல் வந்தாலோ, வீட்டை அடமானம் வைத்து வங்கிக் கடன் பெற நினைத்தாலோ அப்போது சிக்கல் ஏற்படலாம்.வங்கி லாக்கரில் வீடு தொடர்பான ஆவணங்களை வைப்பது நல்லது. அப்படி வைக்கும்போது லாக்கரில் பல பொருள்களை வைக்க வேண்டியிருந்தால் வீட்டு ஆவணங்களை மடித்து வைக்கக் கூடாது.பரிந்துரைக்கத்தக்க இன்னொன்று, வீட்டு ஆவணங்களை ஸ்கேன்செய்து வைத்துக் கொள்ளுங்கள். காலப்போக்கில் ஆவணங்களில் உள்ள எழுத்துகள் மங்கிக் காணப் பட்டால் ஸ்கேன் பிரதி உதவும். இப்படி ஸ்கேன் செய்த ஆவணங்களை உங்களுக்கு நம்பகமான குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு (அது உங்கள் வாழ்க்கைத் துணைவ ரோ, மகன், மகளாகவோ இருக்கலாம்) மின்னஞ்சலில் அனுப்பி விடுங்கள்.வீட்டில் மரப் பெட்டிகளில் ஆவணங்களை வைக்க வேண்டாம். எளிதில் தீப்பற்றக் கூடிய எதற்குள்ளும் ஆவணங்களை வைக்காதீர்கள். இந்த ஆவணங்களை நாம் கையாளும் வாய்ப்பு மிக மிகக் குறைவு என்பதால் கரையான் அரிக்க முடியாத இடங்களில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். ஸ்டீல் பீரோவுக்குள் வைத்தால்கூட பாச்சா உருண்டைகளை அவற்றின் அருகே போடுவது நல்லது. வீடு தொடர்பான விற்பனைப் பத்திரம், வில்லங்கமில்லா சான்றிதழ், தாய்ப்பத்திரம் போன்ற அடிப்படையான முக்கிய ஆவணங்களை ஒரு பகுதியாகவும், வீடு தொடர் பான இதர ஆவணங்களை (செலவு செய்த பட்டியல், வழக்கமான ரசீதுகள்) போன்ற வற்றை தனித்தனியாகப் பிரித்தும் பாதுகாக்கலாம். முதலில் கூறிப்பிட்டவற்றுக்கு மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தேவை.என்ன காரணத்திற்காகவோ வீட்டு ஆவணங்களில் ஒன்றிரண்டை வெளியே எடுக்க நேர்ந்தால் மீண்டும் அதை அதற்கான இடத்தில் வைத்துவிட வேண்டும். வங்கி லாக்கரில் இந்த ஆவணங்களை வைத்தால் அந்த லாக்கர் தொடர்பான அடிப்படை விஷயங்களை (லாக்கர்எண் உட்பட) நெருங்கிய உறவினர்களுக்குத் தெரியப்படுத்தி விடுங்கள்.எங்கே வைக்கிறோம், எந்நிலையில் பராமரிக்கிறோம் என்பதில் கவனம் செலுத்த வில்லை என்றால் தேவைப்படும் சமயத்தில் ‘‘அந்த முக்கியமான ஆவணம் எங்கே போய்த் தொலைந்தது?’’ என்று பற்களை நரநரக்கும் நிலை தோன்றுவதைத் தவர்க் கலாம். “ஐயோ கொஞ்சம் கவனம் செலுத்தி இருந்தால் ஆவணங்களுக்கு இந்தக் கதி நேர்ந்திருக்காதே’’ என்று வருத்தப்படும் நிலையையும் தவிர்க்கலாம்.
  • 1207
Good Morning...
  • 1202