Feed Item
Added a post 

மேஷம்

கணவன், மனைவிக்கு இடையே புரிதல் ஏற்படும். தள்ளிப்போன சில விஷயங்கள் சாதகமாக முடியும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். ஆன்மிக பணிகளில் ஆர்வம் உண்டாகும். வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உழைப்பிற்கு உண்டான மதிப்புகள் மேம்படும். மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். உறுதி வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

ரிஷபம்

தேக ஆரோக்கியமும், பொலிவும் கூடும். அலைபாயும் மனதினால் சில சங்கடங்கள் தோன்றும். உடன் இருப்பவர்களை அனுசரித்து செல்லவும். தம்பதிகளுக்குள் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும். பொது பிரச்சனைகளில் விவேகத்துடன் செயல்படவும். நீண்ட நாள் எதிர்பார்ப்புகளில் பொறுமை வேண்டும். பெருமை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்

மிதுனம்

சிறு சிறு பணிகளிலும் அலைச்சல் அதிகரிக்கும். குழந்தைகள் வழியில் அனுசரித்து செல்லவும். வாகனத்தில் மிதவேகம் நல்லது. வியாபாரத்தில் லாபங்கள் முயற்சிக்கு ஏற்ப கிடைக்கும். புதுவிதமான பொருட்கள் மீது ஈர்ப்புகள் உண்டாகும். அலுவலகத்தில் விமர்சன கருத்துக்களை தவிர்க்கவும். எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். சுகம் மேம்படும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 7

அதிர்ஷ்ட நிறம் : ஊதா

கடகம்

பயணங்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். உத்தியோகத்தில் புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். பெரிய மனிதர்களின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். உயர்வு நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம்

சிம்மம்

சகோதர வகையில் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். திடீர் செலவுகளால் சில நெருக்கடிகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். பங்குதாரர்களால் ஆதாயம் உண்டாகும். அரசுதொடர்பான காரியம் இழுபறிக்குப் பின்னர் முடியும். உத்தியோகத்தில் சக பணியாளர்களின் ஆதரவு கிடைக்கும். தெளிவு பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

கன்னி

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். மனதில் திருப்தியான சூழல் அமையும். இழுபறியான சில வரவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்சனைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். சுபம் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 2

அதிர்ஷ்ட நிறம் : பச்சை

துலாம்

மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உருவாகும். குடும்பத்தினருடன் சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் நிமிர்த்தமான புதிய முயற்சிகளில் கவனம் வேண்டும். நிலுவையில் இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். உடல் ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கம் உண்டாகும். இரக்கம் வேண்டிய நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிகப்பு

விருச்சிகம்

மனதளவில் புதுவிதமான சிந்தனைகள் அதிகரிக்கும். கடன் உதவிகள் சாதகமாகும். செயல்பாடுகளில் அனுபவம் மேம்படும். துணைவர் வழி உறவுகளால் ஆதரவு மேம்படும். குழந்தைகள் வழியில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறைகளால் மேன்மை ஏற்படும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் சாதகமாகும். அலைச்சல் நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள்

தனுசு

தொழில் தொடங்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுபகாரிய முயற்சிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நெருக்கமானவர்கள் மூலம் அனுகூலமான பலன்கள் ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் மாற்றம் உண்டாகும். நண்பர்கள் வழியே நல்ல செய்தி வரும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். நிதிநிலையில் முன்னேற்றம் ஏற்படும். பயம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

மகரம்

உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். வாழ்க்கைத்துணையுடன் இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். பூர்வீக சொத்துகளில் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பீர்கள். பணி செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். அவசர முடிவுகளை தவிர்க்கவும். அமைதி பிறக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 3

அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள்

கும்பம்

பேச்சுக்களின் பொறுமையை கடைபிடிக்கவும். தாய்வழி உறவுகள் மூலம் ஒத்துழைப்புகள் மேம்படும். கடன் சார்ந்த உதவிகள் கிடைக்கும். வரவுகளால் நெருக்கடிகள் குறையும். பூர்வீக சொத்துக்களில் பொறுமை வேண்டும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். உத்தியோகம் மாற்றம் தொடர்பான முயற்சிகள் அதிகரிக்கும். நீண்டநாள் பிரச்சனைகளுக்கு முடிவுகள் உண்டாகும். குழப்பம் விலகும் நாள்.

அதிர்ஷ்ட எண் : 6

அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை

மீனம்

விளையாட்டு விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். மனதில் நினைத்த செயல்களை செய்து முடிப்பீர்கள். புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும். திடீர் பயணம் மூலம் மாற்றம் ஏற்படும். அக்கம், பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். விலை உயர்ந்த பொருட்கள் மீதான ஈர்ப்புகள் அதிகரிக்கும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சாதனை நிறைந்த நாள்.

அதிர்ஷ்ட எண் : 9

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு

ஆறுமுக நாவலர் வாழ்க்கை வரலாறு | History of Arumuga Navalar | TamilPoonga
  • 383