அமரர் சற்குனம்

  • 1 members
  • 1 followers
  • 1738 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
·
Added a news
கொழும்பு பல்கலைக்கழகத்தின் ஸ்ரீபாலி வளாகத்தை அந்தப் பல்கலைக்கழகத்தின் ஊடக கற்கைகள் பீடமாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கல்வி, விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப அமைச்சர் என்ற வகையில் பிரதமர் ஹரினி அமரசூரியவினால் இந்த அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தினை, பொதுச் சுகாதாரம் மற்றும் குடும்ப மருத்துவத் துறையாக மாற்றுவதற்கான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது.000
  • 12
·
Added a news
 மூன்றாம் காலாண்டில் இலங்கையின் உள்நாட்டுக் கடன் 2.4 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது. அதன்படி, அரசாங்கம் உள்நாட்டுக் கடன் சந்தையில் தொடர்ந்து தங்கியிருப்பதால், மொத்த உள்நாட்டுக் கடன் சுமார் 60 பில்லியன் டொலராக அதிகரித்துள்ளதாக நிதி அமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதி அமைச்சினால் வெளியிடப்பட்ட மூன்றாம் காலாண்டுக்கான கடன் அறிக்கையின்படி, ஜூன் மாத இறுதியில் 57.4 பில்லியன் டொலராக இருந்த இலங்கையின் உள்நாட்டுக் கடன் 59.9 பில்லியன் அமெரிக்க டொலராக உயர்ந்துள்ளது.000
  • 11
·
Added a news
சீரற்ற காலநிலை காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று முதல் மீண்டும் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. வெள்ளப் பெருக்கு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளைக் கருத்திற் கொண்டு கடந்த நவம்பர் 27 ஆம் திகதிமுதல் 6 நாட்களுக்குக் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் இன்றுமுதல் மீண்டும் பரீட்சைகள் இடம்பெறும் எனவும் ஏலவே விநியோகிக்கப்பட்ட பரீட்சை கால அட்டவணைக்கு ஏற்ப இன்றையதினம் பரீட்சை நடத்தப்படும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைக் குறிப்பிட்ட அவர், ஒத்திவைக்கப்பட்ட 6 நாட்களுக்கான பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதிமுதல் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த நவம்பர் 27 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை எதிர்வரும் 21 ஆம் திகதி சனிக்கிழமையும், நவம்பர் 28ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி திங்கட்கிழமையும் இடம்பெறும். அதேநேரம் கடந்த 29ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும், நவம்பர் 30 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 28 ஆம் திகதி சனிக்கிழமையும் நடைபெறும். அத்துடன், டிசம்பர் 2 ஆம் திகதி இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 30 ஆம் திகதி திங்கட்கிழமையும், நேற்றையதினம் இடம்பெறவிருந்த பரீட்சை டிசம்பர் 31 ஆம் திகதி செவ்வாய் கிழமையும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், தொடர்ந்து சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ள பரீட்சார்த்திகள் தங்களுக்கு அருகில் உள்ள பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.000
  • 13
·
Added a news
வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் விடுத்துள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.அது தொடர்பான சட்டத்தை பொலிசார் அமுல்படுத்தியுள்ளதாகவும் பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் - இன, மத பேதங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, வடக்கிலும் தெற்கிலும் உள்ள இலங்கையர்களுக்கு தேசிய ஒற்றுமைக்கான ஆணையை வழங்கியுள்ளோம்.கடந்த சில நாட்களாக, மாவீரர் கொண்டாட்டங்கள் குறித்து சமூகத்தில் பல விவாதங்கள் நடைபெற்று வருகின்றன, இறந்த உறவினர்களை நினைவுகூர உரிமை உள்ளது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பு என்பதால், அந்த அமைப்புக்கு சொந்தமான கொடிகளைக் காட்டிக் கொண்டாடுவதற்கு வாய்ப்பில்லை என நான் கூறிய கருத்தை திரித்து, தவறான அர்த்தம் கொடுக்கும் வகையில் வெளியிடப்பட்டது. இது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடு அளித்துள்ளேன்.வடக்கில் 244 கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அதில் பத்தில் சில சின்னங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.வடக்கில் நடத்தப்பட்ட கொண்டாட்டங்களின் அடிப்படையில், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி பெரும் எண்ணிக்கையிலான திரிபுபடுத்தப்பட்ட பதில்கள் பரப்பப்பட்டன. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விடுதலைப் புலிகளின் கொண்டாட்டங்களின் புகைப்படங்களைப் பயன்படுத்தி அவை வடக்கில் நடத்தப்பட்டவை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டது.மேலும் அவ்வாறான புகைப்படங்களில் சில வெளிநாடுகளில் இடம்பெற்ற நிகழ்வுகளில் பிடிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.தென்னிலங்கையில் சமூக ஊடகங்களை நடத்தும் ஒழுங்கமைக்கப்பட்ட குழு ஒன்று நாடுகளுக்கு இடையில் முரண்பாடுகளை உருவாக்கும் வகையில் இந்த போலிச் செய்தியை உருவாக்கியுள்ளது.என தெரிவித்தார்000
  • 13
·
Added a news
எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், அரிசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்படும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நீண்டகால வேலைத்திட்டத்தை தயாரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என சங்கத்தின் தலைவர் யு. கே. சேமசிங்க குறிப்பிட்டார்.இந்த நெருக்கடியை ஒடுக்குவதற்கு அரிசி சந்தைப்படுத்தல் வாரியம் ஒரு முறையான திட்டத்தை தயாரிக்க வேண்டும், மேலும், குறுகிய கால தீர்வாக, அரசாங்கம் விரைவில் வெளி நாடுகளில் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டும். கால்நடை தீவன உற்பத்திக்கான அரிசி விநியோகத்தை ஒழுங்குபடுத்துவது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டார்.இந்நிலையில் இறக்குமதி கட்டுப்பாட்டு அனுமதிப்பத்திரம் இன்றி அரிசியை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இறக்குமதி செய்வதற்கான அனுமதியை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.000
  • 15
·
Added a news
2024 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் விண்ணப்பித்த குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் அஸ்வெசும இரண்டாம் கட்டத்திற்காக விண்ணப்பங்களை அனுப்பத் தேவையில்லை என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.குறித்த குடும்பங்களின் விண்ணப்பங்கள் ஏற்கனவே அமைப்பில் உள்ளிடப்பட்டுள்ளதாக நலன்புரிப் பலன்கள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் விண்ணப்பிக்க டிசம்பர் 09 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.இதன்போது, ​​அஸ்வெசும திட்டத்துக்கான விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க முடியாத குடும்பங்கள் மட்டுமே குறித்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியும் என கூறப்பட்டுள்ளது.மேலும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தனித்தனியாக அஸ்வெசும நலன்புரி திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங்களை பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்க முயற்சிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.எனவே குடும்பமாக விண்ணப்பிக்கும் போது அனைத்து உறுப்பினர்களும் பிரதிநிதித்துவம் பெறும் வகையில் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தால் போதுமானது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 14
·
Added a news
யாழ்ப்பாணம், பலாலி சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக பயணிப்பவர்கள், அங்குள்ள அதிகாரிகளால் ஏதாவது அசௌகரியங்களை எதிர்கொண்டால் அது தொடர்பாக முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இதற்கமைய, 077 465 3915 என்ற இலக்கத்துக்கு அழைத்து விமான நிலையத்தின் செயற்பாட்டு முகாமையாளர் அமரதுங்க என்பவரை தொடர்புகொள்ள முடியும்.அல்லது, 021 221 9373 என்ற இலக்கத்துக்கு அழைத்து வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை பதிவு செய்ய முடியும்.மேற்குறிப்பிட்ட தொலைபேசி இலக்கங்களை வடக்கு மாகாண ஆளுநர் அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.00
  • 14
·
Added a news
லங்கை போக்குவரத்து சபையின் நெடுந்தூர பேருந்துகளில் கடமை புரிவோர், பொய்களைச் சொல்லி பயணிகளை ஏமாற்றி அலைக்கழிப்பதாக பாதிக்கப்பட்ட ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில் -கடந்த டிசம்பர் 1 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் வவுனியா பிரதான பேருந்து நிலையத்தில், BN - NB - 9185 என்ற இலக்க அரச பேருந்து ஒன்று தரித்திருந்தது. நான் யாழ்ப்பாணம் செல்ல வேண்டிய தேவை இருந்ததால் அவர்களிடம் வினவிய வேளை அந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லும் என கூறி, என்னை பேருந்தில் ஏறுமாறு கூறினார்கள். அந்தப் பேருந்து நிலைய நான் பணத்தினை கொடுத்து பற்றுச் சீட்டினை பெற்றுக் கொண்டேன்.பேருந்தில் ஏறி அமர்ந்த வேளை, தொடர் பிரயாணம் காரணமாக நான் கண்ணயர்ந்து விட்டேன். சிறிது நேரம் கழித்து கண் விழித்தவேளை பேருந்து கிளிநொச்சியை வந்தடைந்து. என்னை கிளிநொச்சியில் இறங்குமாறு கூறினார்கள். நான் யாழ்ப்பாணத்திற்கு தானே பற்றுச்சீட்டு பெற்றுள்ளேன். ஆகையால் என்னை யாழ்ப்பாணத்தில் தானே இறக்க வேண்டும் எனக்கூறினேன்.அதற்கு அவர்கள் இந்த பேருந்து யாழ்ப்பாணம் செல்லாது. பின்னால் வருகின்ற பேருந்தில் சொல்லி இருக்கின்றோம். அதில் ஏறுங்கள் அவர்கள் உங்களை யாழ்ப்பாணத்தில் இறங்குவார்கள். இந்த பற்றுச்சீட்டை பயன்படுத்தி செல்லலாம் என எனக்கு கூறினர். அந்த பேருந்து கிளிநொச்சி டிப்போவிற்கு சொந்தமானது என்றபடியால் டிப்போவிற்கு சென்றது.நானும் இறங்கி வீதியில் நின்றவேளை சிறிது நேரம் கழித்து கண்டி பேருந்து ஒன்று யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்தது. நானும் அந்த பேருந்தில் ஏறிவிட்டு, முன்னர் எடுத்த பற்றுச்சீட்டினை காண்பித்தேன். அதற்கு அவர்கள் இல்லை நீங்கள் பற்றுச்சீட்டு பெறவேண்டும் என்று கூறினர். நான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பின்னர் மீண்டும் 260 ரூபா செலுத்தி பற்றுச்சீட்டினை பெற்றுக்கொண்டு யாழ்ப்பாணம் நோக்கி பயணித்தேன். மொத்தமாக 766 ரூபாவை இந்த பயணத்திற்காக செவழித்தேன்.இவ்வாறான செயற்பாடுகள் கொழும்பு பேருந்துகளிலும் இடம்பெறுவதாக பின்னர் அறிந்து கொண்டேன். கொழும்பில் இருந்து புறப்படும் கொழும்பு - வவுனியா இடையேயான போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள், யாழ்ப்பாணம் நோக்கி பயணிப்பதாக பொய்கூறி பயணிகளை ஏற்றிவிட்டு அவர்களை வவுனியாவில் இறக்கிவிட்டு அலைக்கழிப்பதுடன் அதிக செலவுகளையும் ஏற்படுத்துகின்றனர்.இவ்வாறு பயணம் செய்கின்றவர்கள் மேலதிக பணம் இல்லாவிட்டால் அவர்கள் நடுத்தெருவில் நிற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இன்றைக்கு நாடு இருக்கின்ற பொருளாதார நெருக்கடியில் ஒரு பயணத்திற்காக இரண்டு தடவை பற்றுச்சீட்டினை பெறுவதென்பது ஒரு மோசமான விடயம். இவ்வாறான செயற்பாடுகளானது அரச போக்குவரத்து சபையானது மக்கள் மீது அக்கறை காட்டாமையையும், ஏமாற்றுவதையும் எடுத்துக்காட்டுகின்றது.இதுகுறித்து முறைப்பாடுகள் செய்தாலும் அவர்கள் எந்த அளவிற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆட்சியில் ஊழல் மோசடிகளுக்கு இடமில்லை என்று கூறினாலும் இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் தான் உள்ளன. எனவே இதற்கு இலங்கை போக்குவரத்து சபை நேரம் வடக்கு மாகாண ஆளுநரும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 14
·
Added a news
2025 ஆம் ஆண்டிலிருந்து பூமியில் மீண்டும் பனியுகம் தொடங்க இருப்பதால் பூமியின் அழிவு காலம் ஆரம்பமாக இருப்பதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.பூமியின் பல பாகங்கள் அடர்ந்த பனிக்கட்டியால் மூடப்படும் வாய்ப்பு இருப்பதால் மக்கள் கடும் சிரமத்தை சந்திப்பார்கள் என கூறப்படுகிறது.இதற்கு காரணம் புவி வெப்பமயமாதல் என்கின்றனர் விஞ்ஞானிகள். பூமியில் பனிப் புயல்கள் ஏற்படும், விளைச்சல் குறைந்து பஞ்சம் ஏற்படும், பல நகரங்கள் நீரில் மூழ்கும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.2050 ஆம் ஆண்டுக்கு முன்பே உலகம் பனியுகத்தை அடையலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.000
  • 14
·
Added a news
நாட்டில், டெங்கு அச்சுறுத்தலை இல்லாதொழிக்கும் நோக்கில் நிலையான வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க அரசாங்கம் கியூபா அரசாங்கத்துடன் கலந்துரையாடி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.கியூபாவுடனான டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் குறித்து, நீண்ட காலமாகவே கலந்துரையாடல் இடம்பெற்று வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.தற்போதுள்ள நீர் மட்டம் முழுமையாக வடிந்தவுடன் சுகாதார அமைச்சினால் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இந்தநிலையில், டெங்கு கொசுவை கட்டுப்படுத்த கியூபாவில் இருந்து BTI பக்டீரியா மாதிரிகளை இறக்குமதி செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.BTI பக்டீரியாவைப் பயன்படுத்தி டெங்குப் பிரச்சினையை முற்றாக ஒழிக்க முடியாது என்றாலும், அதனைக் கட்டுப்படுத்துவதற்கு இது ஒரு சிறந்த முறையாகும் என ஜயதிஸ்ஸ விளக்கமளித்துள்ளார்.கியூபாவிடமிருந்து பி.டி.ஐ பக்டீரியாவை, நன்கொடையாக பெற்றுக்கொள்ள அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.000
  • 14
·
Added a news
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலை உருவாகியுள்ளது என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் விஞ்ஞான பிரிவு விரிவுரையாளர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.குறிப்பாக தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் வரவு செலவுத் திட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் பெரும் சவால் நிலை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. உழைக்கும் போது செலுத்தும் வரியை குறைப்பதாக உறுதியளிக்கப்பட்டது.கல்வி, சுகாதாரம் மற்றும் உணவுப் பொருட்களுக்கான வட் வரியிலிருந்து விடுவிப்பதாக உறுதியளிக்கப்பட்டது.எனினும், சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுக்களின்படி இவ்வாறு வரிகளை குறைப்பதற்கான சாத்தியங்கள் வெகு குறைவு என சுட்டிக்காட்டியுள்ளார்.அரசாங்கம் வருமான இலக்குகளை பூர்த்தி செய்தால் வரிகளை குறைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.எனினும் வரிகளை குறைத்தால் சர்வதேச நாணய நிதியத்தின் வருமான இலக்குகளை அடைவதில் சவால்களை எதிர்நோக்க நேரிடும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.அடுத்த ஆண்டுக்கான வருமான இலக்குகளை அடைவதற்கு அரச செலவுகளை கட்டுப்படுத்துவது மட்டும் போதுமானதல்ல எனவும் வரிகளை தொடர்ந்தும் அறவீடு செய்ய நேரிடும் எனவும் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார். 00
  • 14
·
Added a news
தென்கொரியாவில் (South Korea) நேற்று (03) இரவு தொலைக்காட்சியில் தோன்றி, அவசர இராணுவ சட்டத்தை அறிவித்த அந்த நாட்டு ஜனாதிபதி யூன் சாக் யோல், சில மணி நேரத்தில், அந்த அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளார்.முன்னதாக, இந்த அவசர நிலை அறிவிப்புக்கு கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டன.அத்துடன் . எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்த சில மணி நேரங்களில், அவசர நிலை அறிவிப்பை திரும்பப் பெறுவதாக ஜனாதிபதி அறிவித்துள்ளார்.கொரியாவில் அடுத்த ஆண்டுக்கான பாதீட்டை தாக்கல் செய்வதில் அரசாங்கத்துக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை.இதன் காரணமாக அங்குத் தொடர்ந்து நாடாளுமன்றம் முடங்கி வருகிறது. இந்த நிலையிலேயே, கம்யூனிச சக்திகளிடம் இருந்து நாட்டை பாதுகாக்க அவசர நிலையை நடைமுறைபடுத்துவதாக ஜனாதிபதி யூன் சுக் அதிரடியாக அறிவித்திருந்தார்.வட கொரியாவின் கொம்யூனிஸ்ட் சக்திகளின் அச்சுறுத்தல்களில் இருந்து தென் கொரியாவைப் பாதுகாக்கவும், தேச விரோத சக்திகளை ஒழிக்கவும் தாம் அவசரக்கால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்துவதாக, தொலைக்காட்சி உரையில் ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்.எதிர்க்கட்சிகளுக்கு மக்களின் வாழ்வாதாரம் மீது அக்கறை இல்லை.. சிறப்பு விசாரணைகள் மற்றும் நீதி விசாரணையில் இருந்து தங்கள் தலைவரைக் காப்பாற்றுவதற்காக மட்டுமே இப்போது நாடாளுமன்றத்தை முடக்கி வருகிறார்கள் என்றும் அவர் குற்றம் சுமத்தியிருந்தார்.தென் கொரியாவில் (South Korea) தற்போது அவசரகாலநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தும் வகையில் இராணுவ சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்துள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி யூன் சுக் யோல் அறிவித்துள்ளார்.இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி, தென் கொரியாவில் தற்போது இடம்பெற்று வரும் கம்யூனிச அமைப்புக்களின் கிளர்ச்சிகளிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வடகொரிய (North Korea) ஜனாதிபதி, கிம் ஜோங் உன்னால் தூண்டி விடப்பட்டதாக கூறப்படும் கிளர்ச்சியை முறியடிக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் யூன் சுக் யோல் குறிப்பிட்டுள்ளார்.இதனையடுத்து, தென் கொரியாவின் தலைநகர் சியோல் உட்பட பல நகரங்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இந்த நிலையில், சியோலில் உள்ள தேசிய நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே மனிதக் கேடயம் அமைக்க முயற்சிக்கும் மக்கள் மீது இராணுவத்தினர் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இருப்பினும், தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் பிறப்பித்துள்ள இந்த அறிவிப்புக்கு அந்நாட்டு நாடாளுமன்றில் பெரும்பான்மையுடனான எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதேவேளை, அவர் இவ்வறிவிப்பை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே அந்நாட்டு மக்கள் நாடாளுமன்றத்திற்கு முன் குவிந்துள்ளதுடன் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 13
·
Added a news
இந்தியப் பெருங்கடல் தீவான டியாகோ கார்சியாவில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிக்கியிருந்த புலம்பெயர்ந்த இலங்கையர் குழுவொன்று, இங்கிலாந்துக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.16 குழந்தைகள் உட்பட 60 பேரடங்கிய இலங்கைத் தமிழர்கள் குழுவொன்றே, இவ்வாறு இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த 2021 நவம்பர் மாதம் முதல் இந்த குழுவினர் டியாகோ கார்சியா தீவில் அடிப்படை வசதிகளின்றி மிகவும் மோசமான நிலையில் வசித்து வந்துள்ளனர்.இவ்வாறு, இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இலங்கை தமிழர், அந்நாட்டில் 6 மாத காலம் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்கு தேவையான நிதி வசதியையும் அந்நாட்டு வெளிவிவகார அமைச்சு வழங்க தீர்மானித்துள்ளது.இவர்கள் தீவிலிருந்த காலப்பகுதியில், பல உண்ணாவிரதங்கள் மற்றும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டதாகவும், அதில் சிலர் சிகிச்சைக்காக ருவாண்டாவுக்கு மாற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முகாமுக்குள் பாலியல் வன்கொடுமைகள் மற்றும் துன்புறுத்தல் போன்ற குற்றச்சாட்டுகளும் பதிவாகியுள்ளதாக ‘பிபிசி’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.000
  • 14
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 19 ஆம் தேதி புதன்கிழமை 4.12.2024சந்திர பகவான் இன்று தனுசு ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 01.08 வரை திரிதியை. பின்னர் சதுர்த்தி.இன்று மாலை 05.40 வரை பூராடம். பின்னர் உத்திராடம்.ரோகிணி மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம். 
  • 114
  • 114
·
Added a news
அனைத்து கோழி ஏற்றுமதிகளையும் நிறுத்திவிட்டதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது.நியூஸிலாந்தின் தென் தீவில் உள்ள கோழிப் பண்ணை ஒன்றில் பறவைக் காய்ச்சல், நோய்க்கிருமி மாறுபாடு கண்டறியப்பட்டதை அடுத்து கோழி ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.ஒரு கிராமப்புற கோழி பண்ணையில் ui7N6 துணை வகை பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, நியூசிலாந்து அரசாங்கம், அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.இது உலகளவில், மனிதர்களில் பரவுவதற்கான அச்சத்தை எழுப்பிய ui7N6 விவகாரத்திலிருந்து வேறுபட்டது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.  
  • 163
  • 162
  • 162
·
Added a news
....தென் கொரியாவின் ஜனாதிபதி யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) அவசரகால இராணுவச் சட்டத்தை பிரகடனப்படுத்தியுள்ளார்.*தென்கொரிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி, அந்நாட்டில் அவசர நிலையை அறிவித்து ராணுவச் சட்டம் பிரகடனப்படுத்தப் பட்டுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன
  • 260
·
Added a news
இப்போது ஜனாதிபதியாக இருக்கின்ற அனுர குமார திசாநாயக்க அவர்கள் ஜேவிபி MP ஆக இருந்தவேளையில் ஏன் இது ஒழிக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினாரோ அதே காரணங்களைத் தான் நாமும் முன்பிருந்தும், இப்போதும் வலியுறுத்துகிறோம். ஈராண்டுகளுக்கு முதல் இந்தப் போராட்டத்துக்கு அழைத்தவர் இப்போது இடம்பெற்றுள்ள கைதுகள் பற்றி மௌனமாக இருக்கிறார்.கைதுகளுக்கான காரணங்கள் சட்டத்தில் உள்ள ஏனைய பிரிவுகள், ஊடக அறிக்கையில் காவற்துறை குறிப்பிட்டுள்ள குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் வழக்குத் தாக்கல் செய்யப்படட்டும்.ஆனால் இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டம் மூலம் இடம்பெறும் கைதுகள் ஆபத்தானவை. அதை நாம் காலாகாலமாக அனுபவித்து வந்திருக்கிறோம்.இதேவேளை 60 வயது நிரம்பிய அம்மா ஒருவர் திருகோணமலையில் பயங்கரவாதத் தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.60 வயதான அவர் பயங்கரவாததை எப்படி ஊக்குவித்திருப்பார் என்பதோ அல்லது அவர் சாட்சியாகத் தான் அழைக்கப்பட்டாரோ தெரியவில்லை.ஆனால், இந்தச் சட்டத்தை ஆட்சி பீடத்தில் உள்ளவர்கள் கடந்த காலங்களில் எப்படியெல்லாம் எதேச்சாதிகாரத்தோடு பயன்படுத்தினார்கள் என்பதை அறிந்தே JVP யினர் ஆட்சிக்கு வரும்வரை அதை எதிர்த்து வந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
  • 475
·
Added a news
ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை வழங்குவதற்கான தனது முந்தைய முடிவை அரசாங்கம் மாற்றியமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுஅத்துடன் அவர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு பதிலாக, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான எரிபொருள் ஒதுக்கீட்டைப் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றதுவாகனங்களை வழங்குவது தேசிய மக்கள் சக்தியின் (NPP) கொள்கைகளுக்கு முரணாக இருக்கலாம் என்ற கவலையைத் தொடர்ந்து இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட்டது.இந்த நடவடிக்கை எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டது, அவர்களில் சிலர் ஆளும் கட்சி எம்.பி.க்களுக்கு உத்தியோகபூர்வ வாகனங்களை ஒதுக்கினால் இதே போன்ற சலுகைகளை கோருவோம் என்று எச்சரித்தனர்.எவ்வாறாயினும், அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கான உரிமையை தக்க வைத்துக் கொள்வார்கள்.இது தொடர்பில் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவிக்கையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வரியில்லா வாகன அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடைமுறையை அரசாங்கம் இனி தொடராது என்று தெரிவிக்கப்பட்டுளதுஇந்த நன்மையை இலகுபடுத்துவதற்காக ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்படுவது வழமையாக இருப்பினும் தமது அமைச்சு அவ்வாறான பிரேரணையை முன்னெடுக்காது என அமைச்சர் விஜேபால விளக்கமளித்துள்ளார். மேலும், அமைச்சர்களுக்கான புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதில்லை என அரசாங்கம் தீர்மானித்துள்ளது.மாறாக, தற்போது அமைச்சர்கள் மற்றும் பல்வேறு அமைச்சுகள் பயன்படுத்தும் V8 வாகனங்களை ஏலம் விட அரசு திட்டமிட்டுள்ளது.இதேவேளை "செலவு குறைந்த, எரிபொருள் சிக்கனமான மற்றும் குறைந்த பராமரிப்பு தேவைப்படும் வாகனங்களை கொள்வனவு செய்வதனை நாங்கள் இலக்காகக் கொண்டுள்ளோம்" என்று அமைச்சர் விஜேபால கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது000 
  • 478
·
Added a news
 உடன் அமுலுக்கு வரும் வகையில் 54 சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.அதற்கமைய 5 பிரதி பொலிஸ்மா அதிபர்கள் (DIG), 35 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் (SSP), 7 பொலிஸ் அத்தியட்சகர்கள் (SP), 7 உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் (ASP) இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅந்த வகையில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பிரதிப் பணிப்பாளராக இருந்த மகளிர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எச்.டபிள்யூ.ஐ.எஸ். முத்துமால குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.மேற்படி பதவியிலிருந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஈ.எம்.எம்.எஸ். தெஹிதெனிய, நுகேகொடை பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.000
  • 480
·
Added a news
2024 (2025) கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் கால எல்லை எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அவர் குறிப்பிட்டுள்ளார்.2024 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் 2024 நவம்பர் 05 முதல் நவம்பர் 30 வரை கோரப்பட்டிருந்தது.இது தொடர்பில் 1911 என்ற இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களை பெற முடியும் என பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது000
  • 481
·
Added a news
மாகாண சபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வை நீக்குவதற்கு முயற்சிக்கப்படுமாயின், அது தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கும் செயல் என்பதை அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என்று ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.ஆட்சிப்பீடமேறியுள்ள தற்போதைய அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் 13 ஆம் திருத்தச் சட்டம் நீக்கப்படும் என்று ஆளுங்கட்சி முக்கியஸ்தர்களுள் ஒருவரான ரில்வின் சில்வாவினால் அண்மையில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில்,ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்காவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகத்தினால் குறித்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தற்போதைய அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டுள்ள மாகாணசபைகளை அடிப்படையாகக் கொண்ட அதிகாரப் பகிர்வு என்பது, இதுவரை காலமும் கௌரவமான அரசியல் உரிமைகளை இந்த நாட்டிலே பெற்றுக்கொள்வதற்காக தமிழ் மக்கள் எதிர்கொண்ட அவலங்களுக்கு கிடைத்துள்ள சிறிதளவான பரிகாரமாகவே நோக்கப்படுகின்றது.மாகாணசபை முறைமையினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதில் இருந்து ஆரம்பித்து முன்னோக்கி நகர்வதன் மூலமே தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கான தீர்வை காண முடியும் என்பதை ஈ.பி.டிபி. கட்சியினாராகி நாமும் கடந்த 35 வருடங்ளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றோம்.கடந்த காலங்களில் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகளையும் நாம் மேற்கொணாடிருந்தமையை நீங்கள் அறிந்திருப்பீர்கள். குறிப்பாக 2010 - 2015 காலப் பகுதியிலும் 13 ஆம் திருத்தச் சட்டத்தினை வலுவிழக்கச் செய்யும் முயற்சியை மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்த அப்போதைய ஆட்சியாளர்கள் முன்னெடுத்திருந்த நிலையில், அரசாங்கத்தின் அங்கமாக நாம் இருந்தபோதிலும், ஆளும் தரப்பில் அப்போதிருந்த தென்னிலங்கையை சேர்ந்த முற்போக்காளர்களான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒன்றிணைத்து எமது ஆட்சேபனையை வெளிப்படுத்திய நிலையில் அந்த முயற்சி கைவிடப்பட்டிருந்தது.அண்மையில் சிநேகிதபூர்வமாக உங்களை சந்தித்த வேளையிலும், 13 ஆம் திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தினையும், அதனை கட்டம் கட்டமாக நடைமுறைப்படுத்துவது சாத்தியமான பொறிமுறையாக இருக்கும் என்பதையும் தெளிவுபடுத்தியிருந்தோம். அத்துடன், அண்மையில் நடைபெற்ற தேர்தல்களில் தமிழ் மக்களின் கணிசமான ஆதரவு உங்களுக்கு கிடைத்திருக்கின்ற நிலையில், அவர்களின் உணர்வுகளை பாதிக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட மாட்டீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.அதேவேளை, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள உங்களுக்கு, புதிய அரசியலமைப்பு தொடர்பாக சிந்திப்பதற்கு முன்னர் தற்போதைய அரசியலமைப்பினை முழுமையாக நடைமுறைப்படுத்தி பாதுகாக்க வேண்டிய தார்மீக கடமை இருப்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.ஆக, உங்களுக்கு இருக்கும் தார்மீக கடப்பாட்டின் அடிப்படையிலும், தேர்தல் காலத்தில் எமது மக்களுக்கு நீங்கள் வழங்கிய உத்தரவாதத்தின் அடிப்படையிலும், 13 ஆம் திருத்தச் சட்டத்தினை தொடர்ந்தும் பாதுகாப்பதோடு மாகாணசபைகளுக்கான தேர்தலை கூடிய விரைவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
  • 486
·
Added a news
பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான பிரான்ஸ் அரசாங்கம் இந்த வார இறுதியில் பதவி நீக்கம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதை அடுத்து இந்த எதிர்பார்ப்பு மேலோங்கியுள்ளது. பிரான்ஸ் தற்போது கடுமையான பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இந்த நிலையில், அங்கு அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுக்கு அனுமதி வழங்கப்படுமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறானதொரு பின்னணியில், மைக்கேல் பார்னியர் தமக்கான சிறப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தி சட்டமூலமொன்றை நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார். இதனையடுத்து, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, பிரதமர் மைக்கேல் பார்னியர் தலைமையிலான அரசாங்கம் பதவி நீக்கம் செய்யப்படுமாயின் 1962 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நம்பிக்கையில்லா பிரேரணை மூலம் வெளியேற்றப்பட்ட முதல் பிரான்ஸ் அரசாங்கமாக இது கருதப்படும்.000
  • 489
·
Added a news
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு மற்றும் விசாரணை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. குறித்த விசேட வேலைத்திட்டமானது அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும்.  பிரதான மொத்த விற்பனை நிலையங்கள் மற்றும் களஞ்சியசாலைகள் தற்போது சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. காலாவதியான மற்றும் தகவல்கள் மாற்றப்பட்ட பொருட்கள் சந்தையில் விநியோகிக்கப்படுதல் மற்றும் நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய அநீதிகளைத் தவிர்ப்பதனை நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கு மேலதிகமாக ஆடைகள், மின்சாதனங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தொடர்பிலும் அதிக கவனம் செலுத்துமாறு விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.000
  • 490
·
Added a news
சீரற்ற காலநிலை காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நாளைமுதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை கடந்த 25ஆம் திகதி ஆரம்பமாகிய நிலையில், கனமழை காரணமாக 27ஆம் திகதிமுதல் பரீட்சை நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.அதன்படி நாளை முதல் மீண்டும் பரீட்சை ஆரம்பிக்கப்படும் எனவும், நாளைய தினம் இடம்பெறவுள்ள பாடங்களின் படி பரீட்சைகள் வழமை போன்று நடைபெறும் எனவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.பரீட்சை நடைபெறாத நாட்களில் நடத்தப்பட்ட பாடங்களை எதிர்வரும் நாட்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.
  • 495
·
Added a news
அடுத்த ஆறு மாதங்களில் தேங்காய் விலை அதிகரிப்பு பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சமன் தேவகே குறிப்பிட்டுள்ளார்.அண்மைக்காலமாக சந்தையில் தேங்காய் விலை வேகமாக அதிகரித்து வருகின்றது. பகுதிகளில் தேங்காய் ஒன்று 180 முதல் 200 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது.சில இடங்களில் தேங்காய் ஒன்று 220 ரூபாய் வரை அதிக விலைக்கு விற்கப்படுகின்றது.தென்னை ஏற்றுமதி மற்றும் பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாக சுமார் 100 கோடி தேங்காய் அறுவடையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபை தெரிவித்துள்ளது.இந்தநிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 000
  • 492