அமரர் பிலோமினா தம்பிப்பிள்ளை

  • 1 members
  • 1 followers
  • 1847 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
·
Added a news
கனடாவின் துணை பிரதமர் கிறிஸ்டியா பிரீலேண்ட் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். நிதி மந்திரி பதவியையும் அவர் ராஜினாமா செய்துள்ளார். இது குறித்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கனடா தற்போது ஒரு பாரிய சவாலை சந்தித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கனடாவின் எதிர்காலம் தொடர்பான திட்டங்களில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும், தனக்கும் இடையே பல்வேறு கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஜஸ்டின் ட்ரூடோ தன்னை வேறு இலாகாவிற்கு மாற்ற வேண்டும் என்றும் விரும்பியதாக குறிப்பிட்டுள்ள அவர், ஜஸ்டின் ட்ரூடோவின் மந்திரிசபையில் இருந்து விலகுவதே நேர்மையான மற்றும் சாத்தியமான ஒரே வழி என்று முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் போட்டியிடுவேன் என்றும் கிறிஸ்டியா பிரீலேண்ட் கூறியுள்ளார்.
  • 135
·
Added a post
படத்தில் காணும் இந்த மனிதருக்கு நானும் நீங்களும் உட்பட முழு உலகமும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளோம்.ஆம், நீங்கள் எந்த ஒன்றையும் தேடிப் படிக்க ஆர்வம் கொள்ளும் போதெல்லாம் கூகிளில் நுழைந்து ஒரு பட்டனைத் தட்டினால் புத்தக இறாக்கை அப்படியே உங்கள் தலையில் வந்து விழுவது போல மொத்த அறிவுக் களஞ்சியமும் வந்து உங்கள் கண் முன் அடுக்கடுக்காக நிற்குமோ, அந்த இலவச கலைக்களஞ்சியமான (Wikipedia) வை எமக்காக வடிவமைத்தவர் இவர்தான்.ஆம், (Wikipedia) வின் நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் நினைத்திருந்தால் இந்த களஞ்சிய தளத்தை வைத்து பில்லியன் கணக்கான பணத்தை சம்பாதிருக்க முடியும், அவருக்கு வந்த விளம்பர ஓபர்களை பயன்படுத்திபேஸ்புக் நிறுவனர் மார்க் போன்றவர்கள் போல இந்த உலகையே ஆட்டிப்படைக்கும் மிகப்பெரிய பணக்காரர்களின் வரிசையில் நின்றிருக்கலாம்.ஆனால் தனக்கு வந்த அனைத்து விளம்பரங்களையும் ஏற்க மறுத்தார், முழு உலகுமே பயன் பெரும் இந்த மாபெரும் கலைக்களஞ்சியம் என்றென்றும் இலாப நோக்கற்ற தளமாகவே இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இந்த மண்ணில் வாழும் முன்மாதிரிமிக்க மனிதர்கள் தர வரிசையில் தானும் ஒருவராகவே இருக்க வேண்டும் என்பதிலும் விடாப்பிடியாக இருந்தார்.கல்விக்கும் தேடலுக்குமான முதல் தர தளமாக விளங்கும் விக்கிபீடியாவை பணம் பார்க்கும் நிறுவனங்கள் மற்றும் விளம்பர ஏஜென்சிகளுக்கும் தாரை வார்க்க மறுத்தே வந்தார்.சமீபத்தில் "Wikipedia Zero" என்ற விஷேட கலைக்களஞ்சியத்தை வடிவமைத்து ஆரம்பித்து வைத்த அவர், உலக மூலை முடுக்களிலெல்லாம் இன்டர்நெட் பேக்கேஜுக்கு பணம் செலுத்த முடியாத,வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமான உலக மக்களின் அறிவுப் பசியை போக்கவும் கலைத் தாகத்தை தீர்க்கவும் வசதியை ஏற்படுத்தி வைத்தார்.இதன் மூலம் அவர்கள் உலகெங்கிலும் உள்ள மொபைல் நிறுவனங்களிடமிருந்து விக்கிபீடியாவிற்கான இலவச (access) களை பெற்றுக்கொள்ளலாம்.இன்னும் இந்த பூமிக் கிரகத்தில் நன்மையை மாத்திரம் நாடும் நல்லுள்ளம் கொண்ட மனிதர்கள் வாழுகிறார்கள் என்பதை ஜிம்மி வேல்ஸ் நிரூபித்துள்ளார்.ஒரு பட்டனை தட்டுவதன் மூலம் அறிவியல் பொக்கிஷங்கள் அனைத்தையும் நம் கண் முன்னே கொண்டு வந்து வைத்த இவருக்கு எங்கே நீங்களும் ஒரு வாழ்த்தைத் தெரிவிக்கலாமே.ஒருவன் தனது மொத்த பரம்பரைக்கும் சேர்த்து சொத்து, செல்வம் சேர்க்கும் போது ஒருவன் இந்த உலகம் உள்ளவரை அனைத்து மக்களும் பயன்படுமாறு ஏதோ ஒன்றை இவ்வுலகிற்கு கொடுத்து தனது பெயரை மட்டும் மக்களின் மனதில் என்றும் நிலைத்திருக்கக் கூடியவாறு செதுக்கி செல்கிறான்.
  • 164
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, மார்கழி மாதம் 2ஆம் தேதி மேஷபம் ராசி: புதிய யுக்திகளால் தடைப்பட்ட பணிகளைச் செய்து முடிப்பீர்கள். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவது தொடர்பான முயற்சிகள் கைகூடும். நவீன தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வெளியூர் பயணங்களில் இருந்துவந்த தடைகள் மறையும். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகப் பணிகளில் திருப்தியான சூழல் உண்டாகும். நட்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : சந்தனம் ரிஷபம் ராசி: உத்தியோக பணிகளில் அலைச்சலும், ஆதாயமும் ஏற்படும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். பயனற்ற வாதங்களைக் குறைத்துக் கொள்ளவும். பார்வை தொடர்பான இன்னல்கள் குறையும். வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் வேண்டும். இடமாற்றம் சார்ந்த எண்ணம் கைகூடும். ரகசியமான செயல்பாடுகள் மூலம் லாபம் உண்டாகும். பணிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை மிதுனம் -ராசி: முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். மற்றவர்கள் மீதான கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரப் பணிகளில் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பயனற்ற சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்படும். பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். தற்பெருமை சிந்தனைகளை குறைத்துக் கொள்வது நல்லது. சமூகப் பணிகளில் தனிப்பட்ட கவனம் ஏற்படும். விவேகம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்  கடகம் -ராசி: உத்தியோகப் பணிகளில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வியாபார பணிகளில் சாதகமான சூழல்கள் ஏற்படும். சமுகப் பணிகளில் சில மாறுபட்ட அனுபவம் ஏற்படும். நெருக்கமானவர்களுடன் அனுசரித்துச் செல்லவும். வழக்கு தொடர்பான விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை சிம்மம் -ராசி:கால்நடை தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகள் சாதகமாகும். உடல் ஆரோக்கியம் சார்ந்த இன்னல்கள் குறையும். கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் மறையும். திறமைக்கு உண்டான மதிப்புகள் கிடைக்கும். இணையம் தொடர்பான பணிகளில் புதிய வாய்ப்புகள் அமையும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கன்னி -ராசி: தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களின் ஒத்துழைப்பு மேம்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான சூழல் அமையும். எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சிறு தூர பயணம் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். புதிய நபர்களின் அறிமுகம் உருவாகும். மேன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் துலாம் -ராசி: தகவல் தொடர்பு துறைகளில் சில மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு மேம்படும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் மேம்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். ஆர்வம் மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் விருச்சிகம்- ராசி: உத்தியோக பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். மற்றவர்கள் செயல்பாடுகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். சமூகப் பணியில் இருப்பவர்களுக்கு புதுமையான சூழல் உண்டாகும். சிந்தித்துச் செயல்பட வேண்டிய நாள்.  அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் தனுசு -ராசி: கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். கல்விப் பணிகளில் மேன்மை உண்டாகும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். தவறிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். பழகும் தன்மையில் சில மாற்றம் ஏற்படும். தோற்றப்பொலிவு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். உதவி கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சை மகரம் -ராசி:பயணம் செய்வதில் புதிய அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். நுட்பமான சில விசயங்களை புரிந்துகொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு மறையும். மனதளவில் புதிய பக்குவம் உருவாகும். சக ஊழியர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாகும். பக்தி மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கும்பம் –ராசி:உலக வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டங்கள் உருவாகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். புதுவிதமான செயல் திட்டம் அமைப்பது பற்றிய எண்ணம் மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். நுண் கலைகள் மீதான ஆர்வமும், விரயமும் உண்டாகும். உடன்படிக்கை தொடர்பான விஷயங்களில் சிந்தித்துச் செயல்படவும். தடை மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் மீனம் -ராசி: தொழில் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். விருப்பமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கடன் சார்ந்த பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். சுபகாரியங்களை முன் நின்று செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணைவர் வழியில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்துவந்த தடைகள் மறையும். போட்டி மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 157
ஸ்ரீ குரோதி வருடம் மார்கழி மாதம் 2 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 17.12.2024சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 01.11 வரை துவிதியை. பிறகு திருதியை.இன்று அதிகாலை 03.17 வரை திருவாதிரை. பின்னர் புனர்பூசம்.அனுஷம், கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 172
·
Added a news
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (17) நாட்டின் கிழக்கே நிலை கொண்டுள்ள நிலையில், படிப்படியாக மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணித்தியாலங்களில் இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் தமிழக கடற்கரையை நோக்கி நகரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ,தேவேளை, வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மாகாணங்களிலும், மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.  மேற்குக் கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவு மழை பெய்யக்கூடும். வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும் மற்றும் மாத்தளை, திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். மேலும், மத்திய, சப்ரகமுவ, மற்றும் தென் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் அபாயத்தைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது000
  • 244
·
Added a news
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களின் வருமானம் மற்றும் செலவு அறிக்கைகள் இன்று முதல் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இவற்றுடன் தொடர்புடைய அறிக்கைகள் அனைத்து மாவட்டச் செயலகங்களிலும் இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திலும் பகிரங்கப்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தின்படி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இம்மாதம் 6ஆம் திகதியுடன் முடிவடைந்தது.000
  • 260
·
Added a news
வானுட்டு தீவில் 7.3 மெக்னிடியூட் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படத்தையடுத்து, வானுவாட்டு தீவைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலின் தெற்கே ஓசியானியாப் பகுதியில் அமைந்துள்ளது வானுட்டு தீவு.  தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய இந்த நாட்டுக்கு 54 கிலோமீற்றர் தொலைவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 7.3 7.3 மெக்னிடியூட் ஆகப் பதிவாகி உள்ளது. வீடுகள் அதிர்வதை உணர்ந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிச் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.  இந்த நிலநடுக்கமானது போர்ட்- விலாவிற்கு மேற்கே 30 கிலோமீற்றர் தொலைவில் 43 கிலோமீற்றர் ஆழத்தில் தாக்கி உள்ளது. இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து வானுவாட்டு தீவைச் சுற்றியுள்ள தீவுகள் மற்றும் நியூசிலாந்துக்குச் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.000
  • 266
·
Added a news
யாழ்ப்பாண மாவட்டத்தில் எலிக் காய்ச்சலினால் 85 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.  யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த நோயினால் பீடிக்கப்பட்டவர்களில் 21 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும் 11 பேர் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையிலும் சிகிச்சைபெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு 9 நோயாளர்களும் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு 4 நோயாளர்களும் எலிக்காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எலிக்காய்ச்சல் நோய் வராமல் தடுப்பதற்காக விவசாயிகளுக்கும், கடல்நீர், ஏரி மீன்பிடித்தொழிலாளர்களுக்கும் தடுப்பு மருந்து வழங்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதேநேரம் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சகல உள்ளூராட்சி மன்றங்களிலும் பணியாற்றும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்குத் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கால்நடைகளுக்குக் குறித்த தொற்று ஏற்பட்டுள்ளதா? என்பதைக் கண்டறிய குருதி மாதிரிகளை ஆய்வு செய்வதற்குக் கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களத்தின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும் யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
  • 262
·
Added a news
பருத்தித்துறை பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டுள்ள எலிகாச்சல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் சுகாதாரத் தரப்பினருடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என பருத்தித்துறை பிரதேச செயலாளர் சிவ பாலசுந்தரம் சத்தியசீலன் தெரிவித்தார்.பருத்தித்து துறை பிரதேச செயலகத்தில் நேற்று இடம் பெற்ற துறைசார் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடலின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,எமது பிரதேச செயலாளருக்கு உட்பட்ட பகுதிகளில் எலிக்காய்ச்சல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகிறது. இந்த நடவடிக்கையில் சுகாதாரத் தரப்பினர்களுடன் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் இணைந்து தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். ஏனெனில் சுகாதாரத் துறையில் பணியாளர்களின் எண்ணிக்கை குறைவாக காணப்படுகின்ற நிலையில் விரைவான செயற்பாடுகளுக்கு அவர்களுடன் நாமும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றார்.இதன் போது கருத்து தெரிவித்த பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி,எமது பகுதிகளில் நோய் தொற்று ஏற்படக்கூடிய இடங்கள் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவற்றில் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.நீர் நிறைந்த விவசாய நிலங்கள் மற்றும் சதுப்பு நிலங்களில் சென்று வரக்கூடியவர்கள் என அடையாளப்படுத்தப்பட்டவர்களுக்கு முன்னெச்சரிக்கையாக தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை சுமார் 2000 க்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் எம்மிடம் போதிய மருந்துகள் காணப்படுகின்றது.மேலதிகமாக மருந்துகள் தேவைப்படுமானால் சுகாதாரத் திணைக்களம் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக எமக்கு தெரிவித்துள்ளது. எமது பிரதேசத்தில் சுகாதாரத் துறை சார்ந்து ஆளணிப் பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் மருத்துவ மாணவர்களின் உதவியும் கிடைத்துள்ளது. என்றார். 000
  • 250
·
Added a news
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் 3 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 6 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் தெரிவிக்கின்றன.குறித்த தாக்குதல் நேற்று (16) விஸ்கான்சினின் அபண்டன்ட் லைஃப் கிறிஸ்தவ பள்ளியில் இடம்பெற்றுள்ளது.மேலும், தாக்குதலை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் அதே பாடசாலையில் கல்வி பயிலும் மாணவனும் உயிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், அப்பகுதிக்கு மக்கள் செல்வதை தவிர்க்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அப்பகுதியில் வீதிகளும் தற்போது மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 265
·
Added a news
நாட்டில் மின்சாரம் துண்டிக்கும் சம்பவங்கள் கடுமையாக அதிகரித்துள்ளதாக மின்சாரம் பயன்படுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை மின்சாரம் துண்டிப்புகள் வேகமாக அதிகரித்து வருவதாக சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்தார்.இலங்கை மின்சார சபையின் தரவுகளின்படி 2023 ஆம் ஆண்டுக்குள் உரிய நேரத்தில் பணம் செலுத்தாமையால் 970,933 மின்சாரம் துண்டிப்புகள் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.2024 ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரை 6,28,286 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், 505,949 வீடுகள், 8,579 தொழிற்சாலைகள், 2,090 வழிபாட்டுத் தலங்கள், 39 ஹோட்டல்கள், 359 பொதுத்துறை நிறுவனங்கள், கடைகள் மற்றும் 111,276 மற்றவை அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கடந்த ஆண்டு நாள் ஒன்றுக்கு 2,660 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டு சராசரியாக 3,443 மின்சாரம் துண்டிப்புகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.மின்சார சபையின் தரவுகள் சரியாக இல்லாத காரணத்தினால் மின்கட்டண அதிகரிப்பால் அநாதரவாக இருந்த மக்களுக்கு இவ்வருடம் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.மின்சார சட்டத்தை மீறி இலங்கை மின்சார சபை பெரும் இலாபம் ஈட்டியுள்ளது. எனினும் வாடிக்கையாளர் அடமானம் வைத்து கூட கட்டணங்களை செலுத்த வேண்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.இறுதியில் அடகு வைத்த தங்கப் பொருட்களுக்கு வட்டி கட்ட வேண்டியுள்ளது. மின்சார பாவனையாளர்கள் தமது தோட்டத்தில் உள்ள பச்சை இலைகளை கூட விற்பனை செய்து இந்த கட்டணங்களை செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக மின்சார பாவனையாளர்கள் சங்கத்தின் தேசிய செயலாளர் சஞ்சீவ தம்மிக்க மேலும் தெரிவித்தார்.000
  • 269
·
Added a news
வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட மீசாலை அல்லாரை பிரதான வீதி தற்போது புனரமைக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த வீதி புனரமைக்கப்படுகின்ற பொழுது வீதியின் குறிப்பிட்ட சில இடங்களில் ஒரு அடி ஆழமான நீளமான குழிகள் தோண்டப்பட்டு, அதற்குள் காவோலைகள் போடப்பட்டு அதற்கு மேலாக கற்கள் போடப்பட்டு வீதி புனரமைப்பது பொதுமக்களிடையே ஆச்சரியத்தையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறான முறையில் பிரதான வீதி ஒன்று புனரமைக்கப்படுமா என்று மக்கள் விசனத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.இது தொடர்பாக வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினர் உடனடியாக உரிய நடவடிக்கை எடுப்பதோடு அதற்கான விளக்கத்தையும் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் சாவகச்சேரி மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 262
·
Added a news
சுற்றுலா நியூஸிலாந்து (New Zealand) அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி, 423 ஓட்டங்களால் சிறப்பு வெற்றியை பெற்றுள்ளது.போட்டியில் முதலில் துடுப்பாடிய நியூஸிலாந்து அணி, தமது முதல் இன்னிங்ஸில் 347 ஓட்டங்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 453 ஓட்டங்களையும் பெற்றது.எனினும் இங்கிலாந்து அணியால், முதல் இன்னிங்ஸில் 143 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 234 ஓட்டங்களையும் மாத்திரமே பெறமுடிந்தது.இந்தநிலையில் அந்த அணி 423 ஓட்டங்களால் தோல்வியை தழுவிக்கொண்டது.முன்னதாக இரண்டு அணிகளுக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்து அணியே வெற்றி பெற்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 000
  • 251
·
Added a news
பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோல் (Yoon Suk Yeol) தனது தோல்வியுற்ற இராணுவச் சட்ட முயற்சியை விசாரிக்க வார இறுதிக்குள் முன்னிலையாகுமாறு தென் கொரிய வழக்கறிஞர்கள் செவ்வாயன்று (17) உத்தரவிட்டனர்.உத்தரவுக்கு இணங்கத் தவறினால் யூன் கைது செய்யப்படுவார் என்று எச்சரிக்கப்பட்டதாகவும் தென்கொரியாவின் யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.சனிக்கிழமையன்று (14) நாடாளுமன்றத்தால் குற்றஞ்சாட்டப்பட்டு பதவி நீக்கப்பட்ட யூன், இராணுவச் சட்ட முயற்சி தோல்வியடைந்த சிறிது நேரத்திலேயே, கிளர்ச்சியின் குற்றச்சாட்டில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.இது குறித்து சட்டத்தரணிகள் மற்றும் காவல்துறை, பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் மற்றும் ஊழல் தடுப்பு புலனாய்வாளர்களின் கூட்டுக் குழு விசாரணையில் ஈடுபட்டுள்ளது.குற்றம் நிரூபிக்கப்பட்டால், யூனும் அவரது நெருங்கிய கூட்டாளிகளும் ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.சிக்கலுக்கு உள்ளான யூன் இந்த வாரம் இருமுறை விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.ஞாயிற்றுக்கிழமை (15) ஒரு செய்தி வெளியீட்டில், கிளர்ச்சி குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க யூனை அழைத்ததாக அரசுத் தரப்பு வெளிப்படுத்தியது. எனினும் இதற்கு அவர் இணங்கத் தவறிவிட்டார்.இப்போது, ​​வழக்கறிஞர்கள் விசாரணைக்காக எதிர்வரும் சனிக்கிழமைக்குள் முன்னிலையாகுமாறும், இணங்கத் தவறினால் பியைாணை பிறப்பிக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது.இதற்கிடையில், நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை (16) அவரது பதவி நீக்கத்தை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது.மேலும் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவதை உறுதிசெய்ய ஆறு மாதங்கள் (180 நாட்கள்) வரை கால அவகாசம் உள்ளது.நாடாளுமன்றத்தின் தீர்ப்பை நீதிமன்றம் உறுதி செய்தால், இரண்டு மாதங்களுக்குள் புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டும்.தற்சமயம் இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ஹான் டக்-சூ பதவி வகித்து வருகிறார்.அதேநேரம், விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜனாதிபதி பயணத் தடையின் கீழ் இருக்கிறார்.டிசம்பர் 3 அன்று, யூன் ஒரு இராணுவச் சட்ட ஆணையை வெளியிட்டார், இது குறுகிய காலத்திற்கு மட்டுமே நீடித்தாலும், பல ஆண்டுகளில் நாட்டை அதன் ஆழ்ந்த அரசியல் கொந்தளிப்பில் ஆழ்த்தியது.இந்த நடவடிக்கை நாடு முழுவதும் பரவலான கண்டனத்தையும் வெகுஜன எதிர்ப்புகளையும் தூண்டியமை குறிப்பிடத்தக்கது.000
  • 260
Good Morning...
  • 359
·
Added a news
போப் பிரான்சிஸ் தனது 88வது பிறந்தநாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக பிரான்சின் கோர்சிகா தீவிற்குப் பயணம் செய்தார்.நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் பயணமாக பிரான்ஸ் தீவான கோர்சிகாவுக்கு வந்தடைந்த போப் பிரான்சிஸ் , அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மக்ரோனை சந்தித்து பல ஆயிரம் பேருடன் ஆராதனை நடத்த உள்ளார்.மத்திய தரைக்கடல் அமைந்துள்ள கோர்சிகா தீவுக்கு பெரும்பான்மையான கத்தோலிக்க மக்கள் வாழும் பகுதியாக உள்ளது. இத்தீவுக்கு பயணம் செய்யும் முதல் போப் இவரே ஆவார். இத்தீவானது பிரான்சை விட இத்தாலிய நிலப்பரப்புக்கு அருகில் அமைந்துள்ளது.கோர்சிகாவின் தலைநகரான அஜாசியோவில் போப் தரையிறங்கியுள்ளார். இத்தீவானது மாமன்னன் நெப்போலியனின் பிறப்பிடமாகும். 1768 ஆம் ஆண்டில் ஜெனோவா பிரான்சுக்கு வழங்கிய தீவு இதுவாகும்.கோர்சிகா 340,000 க்கும் அதிகமான மக்கள் வசிக்கும் இடம் மற்றும் 1768 முதல் பிரான்சின் ஒரு பகுதியாக உள்ளது. ஆனால் இத்தீவு சுதந்திரத்திற்கு ஆதரவான வன்முறையைக் கண்டது. மற்றும் செல்வாக்கு மிக்க தேசியவாத இயக்கத்தைக் கொண்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு மக்ரோன் அதற்கு வரையறுக்கப்பட்ட சுயாட்சியை வழங்க முன்மொழிந்தார்.போப் பிரான்சிஸ் பாரிஸில் உள்ள மதிப்புமிக்க நோட்ரே டேம் கதீட்ரலை மீண்டும் திறக்க பிரான்சிற்கு போகவில்லை. இந்நிலையில் பிரான்சின் கடல் கடந்த தீவான கோர்சிகாவுக்கு பயணம் செய்துள்ளார்.
  • 492
·
Added article
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டார்கோவிலில் நேற்று இளையராஜா அவருடைய ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு மாலையில் நாட்டியஞ்சலி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இளையராஜா சென்றிருந்தார். அப்பொழுது அவருக்கு சிறப்பான முறையில் வரவேற்பு கொடுத்து மாலை அணிவித்து பரிவட்டம் கட்டி வரவேற்று இருந்தார்கள்.இளையராஜா அவருடைய நிகழ்ச்சியை ஆரம்பித்த நிலையில் அங்கு வந்த ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரித்து அவர்களுடைய உற்சாகத்தை கொடுத்தார்கள். அதெல்லாம் முடிந்த நிலையில் ஆண்டாள் கோவிலுக்குள் இளையராஜா சென்றார்.அப்பொழுது கருவறை என்று சொல்லப்படும் மூலஸ்தானத்துக்கு முன்பாக இருக்கும் அர்த்தமண்டபத்திற்குள் ஆன்மீக ஐயங்கார்ர்களுடன் இளையராஜா அடி எடுத்து வைத்தார். ஆனால் அப்படி இளையராஜா அடி எடுத்து வைக்கும் பொழுது உடனே அங்கு இருப்பவர்கள் இளையராஜாவை உள்ளே விடாமல் தடுத்து விட்டார்கள்.அதற்கு காரணம் ஆண்டாள் கோவிலின் மரபு படியும், பழக்கவழக்கப்படியும் அர்த்தமண்டபத்திற்குள் திருக்கோயிலின் அர்ச்சகர், பரிசாரகர் மற்றும் மடாதிபதிகள் தவிர யாருமே அனுமதி கிடையாது. அதனால் நீங்கள் வெளியில் இருந்து தான் கடவுளை பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டதாக தகவல் வெளியானது.அதன் பிறகு இளையராஜா பக்தர்களுடன் பக்தர்களாக வாசலில் நின்று சாமி தரிசனம் செய்திருக்கிறார். இந்த சூழலில் கோவிலில் அர்த்தமண்டபத்தில் இருந்து இளையராஜா வெளியேற்றப்பட்டதாக வெளியான தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. இது குறித்து சோசியல் மீடியாவில் பலரும் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.ஆனால் இளையராஜா இந்த சர்ச்சைக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவருடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார். அதாவது என்னை மையமாக வைத்து சிலர் பொய்யான வதந்திகளை பரப்பி வருகிறார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த இடங்களிலும் என்னுடைய சுயமரியாதையை விட்டுக் கொடுப்பவன் அல்ல. விட்டுக் கொடுக்கவும் இல்லை, நடக்காத செய்தியை நடந்ததாக பரப்புகின்றார்கள். இந்த வதந்திகளை ரசிகர்களும் மக்களும் நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் வைத்து இருக்கிறார்.
  • 494
·
Added article
இந்தியாவில் பல மொழிப் பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல மொழிகளிலும் இவர் பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு தேவ்தாஸ் என்ற இந்திப் படம் மூலம் சினிமாவில் பாடகியாக அறிமுகமானார்.இவர் பாடிய ஒவ்வொரு பாடலும், ரசிகர்களுக்குப் பிடித்தமானதாகவும் அமைந்தது. அவை ஹிட்டும் ஆகின. இதனால், இசையமைப்பாளர்களுக்கு மட்டுமல்ல, ரசிகர்களின் ஃபேவரெட் பாடகியாகியானார்.தமிழில், முன்பே வா, நினைத்து நினைத்து பார்த்தென். சாரல்,. உருகுதே உருகுதே, எனக்குப் பிடித்த பாடல், ஒன்ன விட எனப் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார்.ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா, இமான், ஜி.வி.பிரகாஷ், ஹாரிஸ் ஜெயராஜ், தமன் என முன்ன்ணி இசையமைப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். இதுவரை 4 தேசிய விருதுகள், பிலிம்பேர் விருதுகள் என பல விருதுகள் வென்றுள்ளார். இவரது லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.
  • 502
·
Added a news
இந்திய பிரபல தபேலா இசைமேதை சாகிர் ஹுசைன் அமெரிக்காவில் காலமானார். 73 வயதான பிரபல தபேலா இசை மேதை ஜாகிர் ஹுசைன்நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளுக்காக அமெரிக்கா, சென்பிரான்சிஸ்கோ உள்ள மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சாகிர் ஹுசைன், அமெரிக்காவில் வசித்து வந்துள்ள நிலையில், அவருக்கு நுரையீரல் தொடர்பான பிரச்சினைகள் இருந்ததாக அவருக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்துள்ளது. கடந்த ஒரு வாரமாக சாகிர் ஹுசைன் மருத்துவமனையில் சிச்சை பெற்று வருவதாகவும், நேற்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்ததாகவும் சாகிர் ஹுசைன் சிகிச்சை பலனின்றி உயரிழந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
  • 509
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, மார்கழி மாதம் 1ஆம் தேதி மேஷபம் ராசி: பண வரவில் ஏற்ற, இறக்கம் ஏற்படும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல் ஏற்படும். வாக்குறுதிகள் அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். எதிர்பார்த்த இடமாற்றம் கிடைக்கும். மனதளவில் துணிவோடு சில முடிவுகளை எடுப்பீர்கள். இறை வழிபாடு தொடர்பான பயணங்கள் சாதகமாகும். நலம் நிறைந்த நாள்.  அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை ரிஷபம் ராசி: மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களை பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். சபை பணிகளில் ஒத்துழைப்புகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவது நல்லது. அரசுப் பணிகளில் மாற்றங்கள் காணப்படும். சக ஊழியர்களால் அலைச்சல் ஏற்படும். வியாபார பணிகளில் போட்டிகள் உண்டாகும். நம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பச்சை மிதுனம் -ராசி: தந்தை வழியில் ஆதரவு கிடைக்கும். சேவைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். மற்றவர்கள் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. சிந்தனைப்போக்கில் சில தெளிவுகள் கிடைக்கும். தொழில் சார்ந்த சிந்தனைகள் மேம்படும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை உண்டாகும். வழக்கு விஷயங்களில் பொறுமையை கையாளவும். ஆசை மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல்  கடகம் -ராசி: எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல் உருவாகும். இனம் புரியாத சிந்தனைகள் மூலம் சோர்வு ஏற்படும். உத்தியோக பணிகளில் உடனிருப்பவர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். சில உதவிகள் மூலம் தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். நண்பர்களுக்கிடையே விட்டுக்கொடுத்துச் செல்லவும். எதிர்பாலின மக்களிடம் பொறுமையுடன் நடந்து கொள்ளவும். உயர்வு நிறைந்த நாள் அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் சிம்மம் -ராசி:கலை சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வழியில் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதில் தோன்றும் எண்ணங்களை வெளிப்படுத்துவதில் கவனம் வேண்டும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் ஏற்படும். எதிர்காலம் சார்ந்து சில முடிவுகளை எடுப்பீர்கள். அதிர்ஷ்டகரமான சில வாய்ப்புகள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். பரிசு கிடைக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிகப்பு கன்னி -ராசி: வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். உயர் அதிகாரிகள் இடத்தில் விவாதங்களைத் தவிர்க்கவும். புதிய செயல்பாடுகளில் சிந்தித்து செயல்படவும். முயற்சிகளில் இருந்துவந்த தாமதம் குறையும். பிரபலமானவர்களால் ஆதாயம் ஏற்படும். சுபகாரிய விரயம் உண்டாகும். மல்யுத்த போட்டிகளில் ஒரு விதமான ஆர்வம் ஏற்படும். செலவு நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் துலாம் -ராசி: பயணங்கள் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்மறை சிந்தனைகளால் சோர்வுகள் உண்டாகும். விவேகமான செயல்கள் வீண் பிரச்சனைகளை தவிர்க்கும். உடன் இருப்பவர்களிடம் பயனற்ற பேச்சுக்களை தவிர்க்கவும். ஆடம்பரப் பொருட்களில் ஆர்வம் ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்சனைகள் தோன்றி மறையும். எதிர்பாராத சில அதிர்ஷ்டகரமான வாய்ப்புகள் உண்டாகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் விருச்சிகம்- ராசி: பழைய நினைவுகள் மூலம் செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வு உண்டாகும். கணவன், மனைவி இடையே விட்டுக்கொடுத்து செல்லவும். புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களைத் தவிர்க்கவும். பணவரவுகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். எதிர்பாராத செலவுகள் மூலம் நெருக்கடியான சூழ்நிலை உண்டாகும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் மேம்படும். நிதானம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு தனுசு -ராசி: நண்பர்களின் ஆலோசனைகளால் மாற்றங்கள் ஏற்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். சுபகாரியம் தொடர்பான எண்ணங்கள் மேம்படும். மனதிற்கு விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் உண்டாகும். கூட்டாளிகளிடம் ஒத்துழைப்புகள் ஏற்படும். வியாபார பணிகளில் சிந்தித்துச் செயல்படவும். தெளிவு பிறக்கும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு மகரம் -ராசி:விருந்தினர்களின் வருகை ஏற்படும். கால்நடை வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். உடலில் இருந்துவந்த சோர்வு குறையும். எதிர்பாராத பொருள் வரவு உண்டாகும். இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். போட்டித்தேர்வுகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். உறுதி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : பச்சை கும்பம் –ராசி:மறைமுகமான எதிர்ப்புகளை புரிந்து கொள்வீர்கள். பெருந்தன்மையான செயல்கள் மூலம் நம்பிக்கை மேம்படும். இழுபறியான சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பொழுதுபோக்கு விஷயங்களில் சிந்தித்து செயல்படவும். காப்பீடு தொடர்பான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். அனுபவப்பூர்வமான பேச்சுக்கள் மூலம் மதிப்புகள் அதிகரிக்கும். முயற்சி ஈடேறும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மீனம் -ராசி: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். தன வரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். மனதை உறுத்திய சில விஷயங்களுக்கு தெளிவான முடிவுகள் பிறக்கும். பிறமொழி மக்களால் ஆதாயம் ஏற்படும். சிந்தனைப் போக்கில் சில மாற்றம் ஏற்படும். உறவினர்கள் வருகையில் மகிழ்ச்சி உண்டாகும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். பரிவு வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 695
ஸ்ரீ குரோதி வருடம் மார்கழி மாதம் 1 ஆம் தேதி திங்கட்கிழமை 16.12.2024சந்திர பகவான் இன்று மிதுன ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 01.54 வரை பிரதமை. பிறகு துவிதியை.இன்று அதிகாலை 03.37 வரை மிருகசீரிடம். பின்னர் திருவாதிரை.விசாகம், அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 718
Good Morning...
  • 738
·
Added article
தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியின் கபாலி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் நல்ல வரவேற்பை பெற்றார். கடந்த 2012ஆம் ஆண்டு Benedict Taylor என்பவரை திருமணம் செய்துகொண்டார். சமீபத்தில், இவர் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது. ராதிகா ஆப்தேக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு பாலூட்டியபடி அமர்ந்திருக்கும் போட்டோ ஒன்றை வெளியிட்டு அவருக்கு குழந்தை பிறந்துள்ளதை தெரிவித்துள்ளார்.
  • 816
·
Added a news
கனடாவின் மொன்றியல் பகுதியில் சிகிச்சை பெற்றுக் கொள்வதற்காக சுமார் 6 மணித்தியாலங்கள் காத்திருந்த 39 வயதான அடம் போர்கோயிங் என்ற நபர் உயிரிழந்துள்ளார். குறித்த நபருக்கு இசிஜி சோதனையை நடத்தப்பட்டதன் பின்னர் நீண்ட நேரம் சிகிச்சை அளிப்பதற்கு தாமதமாகியுள்ளது என தெரிவிக்கப்படுகிறது. நெஞ்சு வலி காரணமாக அவர் வைத்தியசாலையின் உதவியை நாடியுள்ளார். கனடாவில் இவ்வாறு சிகிச்சைக்காக காத்திருக்கும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
  • 834
·
Added a news
ஒண்டாரியோ மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வடக்கு ஒண்டாரியோவின் டெமிஷ்காமின் பகுதிகள் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது. இந்த விபத்தில் 65 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து தொடர்பில் டொரண்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 
  • 839
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, கார்த்திகை மாதம் 30ஆம் தேதி  மேஷம் -ராசி: உறவுகள் இடத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். விளையாட்டு விஷயங்களில் பொறுமையுடன் செயல்படவும். மனதளவில் சிறு தயக்கமும், குழப்பத்துடனும் காணப்படுவீர்கள். எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் உருவாகும். இழந்த பொருளைப் பற்றிய சிந்தனைகள் மேம்படும். சொத்துக்கள் விற்பது மற்றும் வாங்குவதில் அனுகூலம் ஏற்படும். தன்னம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை ரிஷபம் ராசி: உயர் கல்வி தொடர்பான விஷயங்களில் ஆலோசனைகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பங்கள் நீங்கி அமைதி ஏற்படும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். துணைவர் பற்றிய சிந்தனைகள் மேம்படும். திறமைகள் வெளிப்பட சாதகமான சூழல் உண்டாகும். வெளியூர் பயணம் மூலம் புதிய அனுபவம் உண்டாகும். சோர்வு மறையும் நாள். அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு மிதுனம் -ராசி: எதிர்பாராத சில உதவிகள் மூலம் நன்மைகள் கிடைக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல்கள் மேம்படும். அந்நிய நபர்களின் அறிமுகங்கள் ஏற்படும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்கள் கருத்துக்களால் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோக பணிகளில் மறைமுக எதிர்ப்புகள் ஏற்பட்டு நீங்கும். நம்பிக்கை வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு  கடகம் -ராசி: சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மனதில் மேம்படும். எதிராக இருந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் உண்டாகும். காலதாமதமான பணிகளைச் செய்து முடிப்பீர்கள். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். மனதில் நினைத்த பணிகளைச் செய்து முடிப்பீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான பயண வாய்ப்புகள் கைகூடும். பக்தி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை சிம்மம் -ராசி:தாயார் வழியில் ஆதரவான சூழ்நிலை காணப்படும். கல்வி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். கால்நடை செயல்களில் ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் சில நுட்பங்களை புரிந்து கொள்வீர்கள். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். துறை சார்ந்த தெளிவுகள் ஏற்படும். களிப்பு மேம்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் கன்னி -ராசி: குழந்தைகள் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள். அலுவலகப் பணிகளில் நிர்வாகத் திறமை வெளிப்படும். உறவினர்கள் பற்றிய புரிதல்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் மாற்றமான சூழல்கள் அமையும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். கல்வி தொடர்பான செயல்களில் இருந்துவந்த அலைச்சல் குறையும். சுகம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் துலாம் -ராசி: கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். பழமை சார்ந்த செயல்களில் ஆர்வம் ஏற்படும். பயணத்திற்கு தேவையான ஆவணங்களை எடுத்துச் செல்வது நல்லது. விவசாயப் பணிகளில் விவேகம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் ஏற்படும். பணிகளில் முன்கோபம் இன்றி செயல்படவும். பொழுதுபோக்கான செயல்பாடுகளால் விரயம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு விருச்சிகம்- ராசி: பெருந்தன்மையான செயல்பாடுகள் மூலம் பலரின் அறிமுகம் கிடைக்கும். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். முகத்தில் புதுவிதமான பொலிவுடன் காணப்படுவீர்கள். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். புதுவிதமான உணவுகளை உண்டு மனம் மகிழ்வீர்கள். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். வெற்றி நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : ஊதா தனுசு -ராசி: தாய் மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். உத்தியோக பணிகளில் பதற்றம் இன்றி செயல்படவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். வியாபாரத்தில் சாதகமான சூழல் உண்டாகும். திடீர் தனவரவுகள் உண்டாகும். இயந்திரம் தொடர்பான பணிகளில் சற்று கவனத்துடன் இருக்கவும். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் விலகும். நன்மை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை மகரம் -ராசி:புது விதமான ஆசைகள் உருவாகும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களைத் தவிர்க்கவும். பூர்வீக சொத்துக்கள் மூலம் சிறு விரயங்கள் ஏற்பட்டு நீங்கும். உலக வாழ்க்கை பற்றிய புரிதலும் புதிய கண்ணோட்டமும் பிறக்கும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். சாதனை வெளிப்படும் நாள். அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கும்பம் –ராசி:ஆரோக்கியத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சூழ்நிலைக்கேற்ப பேசி காரியத்தை சாதித்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவது சார்ந்த முயற்சிகள் கைகூடும். உத்தியோக பணிகளில் அதிகாரங்கள் மேம்படும். லாபம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : நீலம் மீனம் -ராசி: இளைய சகோதரர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கமிஷன் பணிகளில் லாபங்கள் உருவாகும். மறைமுக திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். கற்பனை கலந்த உணர்வுகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை  இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 885
ஸ்ரீ குரோதி வருடம் கார்த்திகை மாதம் 30 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை 15.12.2024.சந்திர பகவான் இன்று ரிஷப ராசியில் பயணம் செய்கிறார்.இன்று மாலை 03.13 வரை பௌர்ணமி. பிறகு பிரதமை.இன்று அதிகாலை 04.26 வரை ரோகினி. பின்னர் மிருகசீரிடம்.சுவாதி, விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 893
Good Morning...
  • 902