Feed Item
Added a post 

அமெரிக்காவில் நியூ யார்க் நகரத்தின் வங்கியில் ஒரு நபர் நுழைந்து தான் வியாபாரம் நிமித்தமாக லண்டன் செல்வதால் தனக்கு 5000 டாலர் கடன் உதவி தேவை என்று விண்ணப்பித்தார்.

வங்கி அவருடைய விண்ணப்பத்தை சரி பார்த்து பின் பாதுகாப்பு வைப்பு நிதியாக ஏதேனும் பொருளை வங்கியின் வசம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன் வைத்தது அதற்க்கு அந்த நபர் தன புது காரின் சாவியையும் அதற்குரிய அனைத்து உரிமை மற்றும் சட்ட தாள்களையும் வங்கியில் சமர்ப்பித்தார்.

பின் இரண்டு வாரம் கழித்து நியூயார்க் நகரம் வந்தபின் வங்கிக்கு சென்றார்... வங்கியில் 5000 டாலர் பணத்தை 15% வட்டியுடன் செலுத்தினர்.

வங்கி மேலாளர் அவரிடம் , ஐயா ஒரு சின்ன சந்தேகம்! உங்கள் பின்புலத்தை சோதித்த போது நீங்கள் பெரும் செல்வந்தர் என்று தெரிகிறது... உங்களுக்கு 5000 டாலர் என்பது ஒரு சிறு தொகை.......என்ன காரணத்தால் உங்கள் புதிய காரை வைப்பு நிதியாக வங்கி வசம் விட்டு சென்றீர்கள் என்று விளங்கவில்லை என்று கேட்க...... !

அதற்கு அவர் நியூயார்க் நகரில் இவ்வளவு குறைந்த வாடகையில் 15 நாள் கார் நிறுத்தம் செய்ய உங்களை விட பாதுகாப்பான இடம் வேறு இல்லை !!!!!!!!!

15 டாலர் வெறும் இரண்டு வாரத்திற்கு என்று சொல்ல.......

வங்கி மேலாளர் வாயடைத்து போனார் !

  • 409