Feed Item
Added a post 

1979 – பாரசீக யூத தொழிலதிபர் அபீப் எல்கானியான் தெகுரானில் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, ஈரானிய யூதர்கள் அங்கிருந்து பெரும் எண்ணிக்கையில் வெளியேறினர்.

1980 – புளோரிடாவில் லைபீரியாவைச் சேர்ந்த சரக்குக் கப்பல் பாலம் ஒன்றில் மோதியதில் பாலம் சேதமடைந்ததில் 35 பேர் உயிரிழந்தனர்.

1985 – காரைக்குடியில் அழகப்பா பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது.

1987 – போலந்து, வார்சாவா நகரில் பயணிகள் விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த அனைத்து 183 பேரும் உயிரிழந்தனர்.

1992 – நகோர்னோ கரபாக் போர்: ஆர்மீனியப் படைகள் சூசா நகரைக் கைப்பற்றின.

1992 – கனடா, நோவா ஸ்கோசியாவில் வெசுட்ரே சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 26 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

2001 – கானாவில் கால்பந்தாட்ட அரங்கு ஒன்றில் ஏற்பட்ட சலசலப்பை அடக்க காவல்துறையினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியதால் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 129 பேர் உயிரிழந்தனர்.

2002 – பெத்லகேமில் பலத்தீனியர்களின் பிறப்பிடத் தேவாலயத்தின் 38-நாள் முற்றுகை முடிவுக்கு வந்தது.

2012 – இந்தோனேசியாவில் மேற்கு சாவகப் பகுதியில் விமானம் ஒன்று சலாக் மலையில் மோதியதில் 45 பேர் உயிரிழந்தனர்.

2018 – மலேசியப் பொதுத் தேர்தல், 2018: மலேசியாவின் தேசிய முன்னணி கட்சி 1957 ஆம் ஆண்டுக்குப் பின்னர் முதல் தடவையாகப் பெரும் தோல்வியடைந்தது.

2022: மே 9 அன்று இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்த ராசபக்சவின் ஆதரவாளரான அமரகீர்த்தி அத்துகோரள துப்பாக்கி சூட்டில் இறந்தார். ராசபக்ச ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிசாந்தவின் வீடும் தீ வைத்து பொதுமக்களால் எரிக்கப்பட்டது. நாட்டின் ஆங்காங்கே பல்வேறு இடங்களில் அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தீ வைக்கப்பட்டன.

  • 396