Feed Item
Added a post 

சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களிடம் ஆயுதப்படை உறுப்பினர்கள் சிக்கக்கூடாது என பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 30 ஆண்டுகளாக நம் நாட்டில் நடந்து வந்த கொடூரமான போரை தோற்கடிக்க தங்கள் உயிரை தியாகம் செய்த ஏராளமான ஆயுதப்படை வீரர்கள், ஒரு குழுவின் மனித கடத்தலின் விளைவாக சட்டவிரோதமாக ரஷ்ய - உக்ரைன் போர் முனைக்கு சென்றனர்.

இந்த போர் முனைகளில் பணிபுரியும் போது கணிசமான எண்ணிக்கையான எமது போர் வீரர்கள் உயிரிழந்துள்ளனர். மேலுமொரு பகுதியினர் காயமடைந்துள்ளதாகவும் உண்மைகள் வெளியாகியுள்ளன.

இலங்கையின் முப்படைகளிலும் கௌரவமாக சேவையாற்றி ஓய்வு பெற்ற இவ்வாறான போர்வீரர்கள் வெளிநாட்டில் கூலிப்படையாக செயற்படுவது வருத்தமளிக்கிறது.

வெளிநாட்டு இராணுவத்தில் சேர்ப்போம், பெரும் சம்பளம் கொடுப்போம், குடியுரிமை மற்றும் பெரும் சலுகைகள் பெறுவோம் என்று கடத்தல்காரர்கள் கொடுத்த பொய் வாக்குறுதியின்படி போர் வீரர்கள் ரஷ்ய - உக்ரைன் போர்முனைக்கு கூலிப்படையாக அனுப்பப்பட்டனர், ஆனால் அவர்களுக்கு சம்பளம் எதுவும் கிடைக்கவில்லை.

இறந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்த கடத்தல்காரர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 268