Feed Item
Added a post 

.வாங்குற சம்பளம் வீட்டு செலவு & சாப்பாட்டுக்கே பத்தல.. பாக்க டீசன்டா வேலைக்கு போறேன்டா.. ஆனா மாசகடைசில பாக்கெட்ல 100ரூஇருக்க மாட்டுதுனு பொளம்புனான்...

உன்கிட்டயாவது 100ரூவா.. நான்லாம் அத விட மோசமா இருகேன்டானு பொளம்பிட்டு இருந்தேன்...

.டீ கொண்டு வந்து ஒரு ஹிந்திகார பையன் வச்சான்.. உடனே அவன் :

.பாருடா.. டீ கடை வரைக்கும் வந்துடானுக.. எல்லா இடத்துலயும் இருகானுக அப்புடினான்...

.சரிடா மாப்ள.. போயி அந்த கிளாச கழுவுனு சொன்னேன்..

.நான் எதுக்குடா கழுவனும்.. என் வேலையா அதுனு மூஞ்சிய சுன்டுனான்..

.உனக்கு உன் வேலை இருக்கு.. கிளாஸ் கழுவுற வேலைய யாரு செய்வா..? கிளாஸ் கழுவ தமிழன் வந்திருந்தா கடை ஓனர் எதுக்கு ஹிந்திகாரன கூட்டி வர போறாரு.. 

.குடிச்ச கிளாச குடிச்சவங்களே கழுவி வைக்கனும்னு போர்டு போட்டா அந்த டீ கடைக்கு எத்தன பேரு டீ குடிப்பாங்க..?

.என்ன தான் நாம அனைவரும் சமம், சம உரிமை, சமூவ நீதினு பேசுனாலும்.. நாம இருக்குற இடத்த விட்டு கீழ இருக்குற வேலைய செய்ய யாரும் முன் வரதில்லீல்ல அப்புடினேன்...

.அதுவும் வாஸ்தவம் தான்டானான்..

.அவன் இன்சூரன்ஸ்ல வேலை பாக்குறான்.. மாசம் 18ஆயிரம் சம்பாதிப்பான்.. நல்லா நீட்டான ஐயன் பன்னுன சட்டை.. போட்டு தான் இருப்பான்...

.நாங்க பேசிட்டு இருந்தத கவனிச்சிட்டு இருந்த அந்த ஹிந்திகார பையன் சிரிச்சான்...

.எனக்கு தெரிஞ்ச கிளிஞ்ச ஹிந்தில என்னடா தம்பினு கேட்டேன்...

.பதிலுக்கு அவன்.. ஒன்னும் இல்லணே.. நீங்க சொல்றத நினச்சி சிரிச்சேன்னு தமிழ்ல சொன்னான்...

.இங்க வந்து 2மாசத்துல தமிழ் நல்லா கத்துகிட்டானாம்... இன்னும் 2வருசம் இங்க இருந்தா மதுரை, தூத்துகுடி லோக்கல் பாசையே பேசுவான் போல..

. மூஞ்சில தவிர அவன வேற மொழிகாரன்னு சொல்லவே முடியாது..

அந்த டீ கடை தம்பிகிட்ட சம்பளம் எவ்வளவுனு கேட்டேன்..

.சாப்பாடு போட்டு தினம் 400ரூவாணே.. டிப்ஸ் சேத்தா தினம் ஒரு 600ரூவா வரும்ணேனு சொன்னான்...

.வண்டில ஏற போனேன்.. அவனயும் என்னையும் ஒரு பார்வை பாத்தான்.. அதுல பல அர்த்தம் இருந்துச்சி...

  • 263