Feed Item
Added article 

2003ம் ஆண்டு ஷாம் நடித்த இயற்கை படத்தில் குட்டி ராதிகா அவருக்கு ஜோடியாக அறிமுகமானார். அழகான அழுத்தமான காதலை சொன்ன இந்த படம் திரையரங்கில் பல நாட்கள் ஓடியது.

அதிலும் "காதல் வந்தால் சொல்லி அனுப்பு" பாடல் இன்றும் காதலர்களை வளப்படுத்தும்.

கர்நாடகா மாநிலத்தில் பிறந்த குட்டி ராதிகா, கன்னடத்தில் பல படங்களில் நடித்து வந்தார். தமிழில் இயற்கை படத்தை தொடர்ந்து வர்ணஜாலம், மீசை மாதவன், உள்ளக்காதல் ஆகிய படங்களில் நடித்தார். இயற்கை படத்திற்கு பின் பெரிய ரவுண்டு வருவார் என்று எதிர்பார்த்த குட்டி ராதிகாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

இதையடுத்து, 2000ம் ஆண்டு ரத்தன் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் சில ஆண்டுகளில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், 2002ம் ஆண்டு ரத்தன் குமார் திடீரென உயிர் நீத்தார்.

பொது இடத்திலும் தலைகாட்டாமல் இருந்த குட்டி ராதிகா, திடீரென ஒரு நாள் குழந்தையும் கையுமாக வந்து, அப்போது கன்னட முதலமைச்சராக இருந்த குமாரசாமிக்கும் தனக்கும் 2006ம் ஆண்டு திருமணமாகிவிட்டதாகவும், தன்னை சின்ன வீடாக வைத்திருந்தார் எனவும், தங்களுக்கு ஷமிகா என்ற ஒரு குழந்தை இருப்பதாகவும், திருமண விஷயம் வெளியில் தெரிந்தால் பிரச்சனை என்பதால், இத்தனை ஆண்டு வெளிநாட்டில் வசித்து வந்ததாகவும் கூறி பெரும் சர்ச்சையை கிளப்பினார். குட்டி ராதிகா தற்போது பல படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 380