Feed Item
Added a post 

1792: ஆஸ்திரிய நெதர்லாந்து (தற்போதைய பெல்ஜியம்) மீது பிரான்ஸ் படையெடுத்தது.

1876 – பிரித்தானிய இந்தியாவின் அரசியாக விக்டோரியா மகாராணி தெரிவு செய்யப்பட்டமை லண்டன் வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டது.

1920: சோவியத் யூனியனுடன் அஸர்பைஜான் இணைக்கப்பட்டது.

1930: முதலாவது இரவுநேர கூடைப்பந்தாட்டப்போட்டி அமெரிக்காவின் கான்ஸாஸ் நகரில் நடைபெற்றது.

 1932: மனிதர்களின் மஞ்சள் காமாலை நோய்க்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

1945: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினியும் அவரின் காதலியும் கிளர்ச்சியாளர்களால் கொல்லப்பட்டனர்.

1952: இரண்டாவது சீன – ஜப்பானிய யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சீன – ஜப்பானிய சமாதான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

1969: பிரெஞ்சு ஜனாதிபதி சார்ள்ஸ் டி கோல் ராஜினாமா செய்தார்.

1970: வியட்நாமில் கம்யூனிஸ்ட் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக போரிடுவதற்கு அமெரிக்கத் துருப்புகளுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரிச்சர்ட் நிக்ஸன் அதிகாரிமளித்தார்.

1978: ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மொஹமட் தாவூத் கான், கம்யூனிஸ்ட் சார்பு கிளர்ச்யாளர்களால் சதிப்புரட்சியொன்றில் பதவி கவிழ்க்கப்பட்டு, கொல்லப்பட்டார்.

1995: பலாலியில் அவ்ரோ விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதற்கு அடுத்த நாள் இன்னுமொரு விமானம் வீழ்த்தப்பட்டது.

1996 – அவுஸ்திரேலியா, தாஸ்மேனியாவில் "மார்ட்டின் பிறையன்ட்" என்பவன் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 35 பேர் கொல்லப்பட்டு 37 பேர் காயமடைந்தனர்.

2000 – இலங்கை இராணுவத்தினருக்கெதிரான விடுதலைப் புலிகளின் ஓயாத அலைகள் மூன்று நடவடிக்கை முடிவுக்கு வந்தது.

2005 – இலங்கை ஊடகவியலாளர் தர்மரத்தினம் சிவராம் கொழும்பில் கடத்தப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டார்.

  • 558