உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் 2,095 கோடி ரூபாய் மதிப்பிலான 27 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது, பசு மாடு நமக்கு தாய் போன்றது மற்றும் புனிதமானது. பசு மாடுகள், எருமை மாடுகளை கேலி செய்பவர்கள் அந்த கால்நடைகளை நம்பி கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் உள்ளது என்பதை மறந்துவிட்டனர். அனைவருக்குமான வளர்ச்சி மற்றும் அனைவரின் ஆதரவே எங்களுக்கு முக்கியம் என்றார்.
403 தொகுதிகளை கொண்ட உத்தரபிரதேச சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்தியாவில் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான உத்தரபிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் பல்வேறு தரப்பினர் இடையே மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சட்டசபை தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன. தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளன. ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக பல்வேறு நலத்திட்டபணிகளை அறிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- 1352