கண

  • More
Followers
Empty
·
Added a post to , கண
அந்தக் காலத்தில் ஒரு கல்லூரிப் பேராசிரியை வானொலியில் பேசிக் கொண்டிருந்தார்கடுமையாக அவர் அப்படி தாக்கிப் பேசிக் கொண்டிருந்தது – ்ணதாசனை ..!ஆம் ... அடுக்கடுக்கான ஆதாரங்களோடு அந்தப் பெண் பேராசிரியர் வானொலியில் பேசிக்கொண்டிருந்தார்"ஒரு முறை சென்னை வானொலியில் 'இலக்கியங்களும் திரைப்படப் பாடல்களும்' என்ற தலைப்பில் ஒரு உரை நிகழ்த்த என்னை அழைத்திருந்தார்கள். நான் உரை நிகழ்த்தியபோது , இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல விஷயங்களை கவிஞர் கண்ணதாசன் எப்படி தன் பாடல்களில் எடுத்துக் கையாண்டிருந்தார் என்பதைச் சொல்லி விளக்கி , கிட்டத்தட்ட கண்ணதாசன் பண்டைய இலக்கியங்களில் இருந்து நிறைய காப்பியடித்துள்ளார் என்கிற ரீதியில் என்னுடைய உரை நிகழ்த்தினேன். ஒலிப்பதிவு செய்யப்பட்டு இரண்டு நாள் கழித்து என்னுடைய உரை வானொலியில் ஒலிபரப்பானது.”அவ்வளவுதான் ..!அடுக்கடுக்காக போன் கால்கள் ..! யார் யாரோ போன் செய்து பாராட்டினார்கள் ..!“சபாஷ்.. இத்தனை காலம் இதை கண்ணதாசனே சொந்தமாக எழுதி இருக்கிறார் என நினைத்துக் கொண்டிருந்தோம். நீங்கள் எடுத்துச் சொன்ன பிறகுதான் , இலக்கியங்களில் இருந்து இதையெல்லாம் காப்பி அடித்திருக்கிறார் கண்ணதாசன் என்பது தெரிகிறது.. அற்புதமாக பேசினீர்கள்..!”இந்த தினுசில் பலரது பாராட்டுக்களும் போன் கால்கள் மூலமாக வந்து குவிந்து கொண்டே இருக்க , உச்சி குளிர்ந்து போனது அந்தப் பெண்ணுக்கு ..!மறுபடியும் ஒரு போன் கால் !“இது யாருடைய பாராட்டோ ..?” என பரவசத்துடன் போனை எடுத்தார் அந்தப் பேராசிரியப் பெண்.மறுமுனையில் ஒலித்த குரல் : "நான் கண்ணதாசன் பேசுகிறேன்.."பதறிப் போனார் அந்தப் பெண் . அவருக்கு கையும் ஓடவில்லை .. காலும் ஓடவில்லை..!உலர்ந்து போன உதடுகள் ஒட்டிக் கொள்ள , போனைப் பிடித்திருந்த கை நடு நடுங்க “சொல்லுங்க சார் ..”தொடர்ந்து ்ணதாசன் :"சற்றுமுன்னர் வானொலியில் உங்களின் உரை கேட்டேன் மிக அருமையாக பேசியிருந்தீர்கள். ஒரு விஷயத்தை உங்களுக்கு தெளிவு படுத்த விரும்புகிறேன். பண்டைய இலக்கியங்களிலும் இதிகாசங்களிலும் சொல்லப்பட்டிருக்கும் பல நல்ல விஷயங்கள் , உங்களைப்போன்ற பேராசிரியர்கள், பண்டிதர்கள் மட்டத்தோடு நின்று விடுகின்றன. ஆனால் திரைப்படப் பாடல்கள் என்பது நாட்டின் கடைக்கோடியில் குக்கிராமத்தில் , பள்ளிக்கூடமே போகாத , மாடு மேய்க்கும் சிறுவன் வரை சென்றடையக்கூடிய வலிமை பெற்றது. அதனால் இலக்கியங்களில் சொல்லப்பட்ட பல நல்ல விஷயங்கள் அவர்களையும் சென்று சேர வேண்டும் என்று அவற்றை எளிமைப்படுத்தி தருகிறேன். உதாரணமாக , திருமணங்களில் ஓதப்படும் சமஸ்கிருத வேத மந்திரங்களில் , கணவன் மனைவிக்கிடையேயான மன ஒற்றுமையை எடுத்துக்காட்ட 'நான் மனமாக இருந்து நினைப்பேன்... நீ வாக்காக இருந்து பேசு' என்று ஒரு வரி வரும். அது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..?ஆனால் அதையே நான் "நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்" என்று எழுதியபோது பெரும்பாலான மக்களை சென்று அடைந்தது. இது தவறு என்று சொல்கிறீர்களா?" ஆல் இந்தியா ரேடியோவில் ஆரவாரமாக பேசிய அந்தப் பெண் ,இப்போது அடுத்த முனையில் பேசிக் கொண்டிருந்த கண்ணதாசனுக்கு பதில் சொல்ல முடியாமல் தடுமாறினார் : “மன்னித்துக் கொள்ளுங்கள் சார் ..”இந்த நிகழ்வை பத்திரிகைகளில் பகிர்ந்து கொண்ட அந்த பேராசிரிய பெண் சொன்ன முத்தாய்ப்பு வார்த்தை :“கண்ணதாசன் சொன்னதைக் கேட்டது முதல் அவர் மேல் எனக்கிருந்த மதிப்பு பல மடங்கு அதிகரித்து விட்டது". இந்தப் பேராசிரியைக்கு கண்ணதாசன் மீது மதிப்பு அதிகரிக்க காரணம் ...அவர் பேச்சில் இருந்த எளிமை ...உண்மை..!அடுத்த காரணம் .. திரை உலகின் உச்சத்தில் இருந்த காலத்திலும் , இந்தப் பெண்ணுக்கு அவரே போன் செய்து , தன் தரப்பு நிலையை விளக்கிச் சொன்ன பண்பு.. பணிவு..!
  • 339
·
Added a post to , கண
ராமாவதாரம் முடிய மூன்று நாள் தான் இருந்தது. அவரை ரகசியமாக சந்தித்துப் பேச எமன் வந்திருந்தான். அப்போது ராமர் லட்சுமணரை அழைத்து, "நாங்கள் பேசும் சமயத்தில் யாரையும் அனுமதிக்க வேண்டாம்,'' என்று கட்டளையிட்டார்.அந்த சமயத்தில் கோபக்காரரான துர்வாச மகரிஷி ராமரைத் தரிசிக்க வந்திருந்தார். லட்சுமணர் துர்வாசரை உள்ளே அனுமதிக்க மறுத்தார். கோபம் கொண்ட மகரிஷி, "என்னை அனுமதிக்காவிட்டால் அயோத்தியேஅழிந்துபோக  சபித்து_விடுவேன்,'' என்று கூச்சலிட்டார். அயோத்திக்கு ஆபத்து நேருமே என்ற பயத்தில் லட்சுமணரும் மகரிஷிக்கு வழிவிட்டார். ஆனால் கட்டளையை மீறிய தம்பி லட்சுமணர் மீது ராமருக்கு கோபம் எழுந்தது.நீ மரமாகப் போ' என்று சபித்தார். அதைக் கேட்டதும் லட்சுமணர் கண்ணீருடன், "அண்ணா.... தங்களின் சாபத்தை எண்ணி நான் வருந்தவில்லை. தங்களுக்கு சேவை_செய்யாமல் எப்படி_வாழ்வேன்?'' என்றார்.லட்சுமணா! ்லாம் விதிப்படியே நடக்கிறது. சீதையை காட்டுக்கு அனுப்பிய பாவத்திற்காக நானும் பூலோகத்தில் 16 ஆண்டு அசைவின்றி தவ வாழ்வில் ஈடுபட வேண்டியிருக்கிறது. மரமாக மாறும் நீயே எனக்கு நிழல் தரும் பேறு பெறுவாய்,'' என்றார்.அதன்படியே, திருச்செந்தூர் அருகிலுள்ள ஆழ்வார்திருநகரியில் நம்மாழ்வாராக ராமர் அவதரித்த போது, லட்சுமணர் புளியமரமாக நின்று சேவை செய்தார். இந்த மரத்தை "தூங்காப்புளி' என்பர். அதாவது, இதன் இலைகள் எப்போதும் மூடுவதே இல்லை. லட்சுமணன் ் இமைக்காமல்ராமரைப் பாதுகாப்பதாக ஐதீகம்.
  • 568
·
Added a post to , கண
படித்ததில் பிடித்தது............ பகிர்கிறேன்.....எல்லோருடைய அப்பாவை போல என்னுடைய அப்பாவும் கண்டிப்பானவர். அப்பாவின் அன்பு ்டிப்பு  முடி வெட்டவதில் இருந்தே கண்டிப்பு.ஒரே பார்பர். எப்போதும் சம்மர் கட் தான்.  "என்ன உன் பையன் இன்னும் முடி வெட்டலையா" அப்பா, அம்மாவிடம்."நேத்து தான் வெட்டிண்டு வந்தான்.இப்ப காலேஜ்க்கு போறான். அதான். ஏதோ இப்ப இதுதான் ஃபேஷனாம்". என்ன ஃபேஷனோ என்ன எழவோ.  ரவுடிப்பைய மாதிரி இருக்கு பாக்க.சரி.  ஹிந்து பேப்பராவது ஒழுங்கா படிக்கறானா? "அதெல்லாம் படிக்கறான்"."ஏண்டா எப்ப பார்த்தாலும் ஸ்போர்ட்ஸ் பக்கத்தை மட்டும் படிச்சா போதுமா? எப்படி Vocabulary  improve ஆகும்? ஊர் மேயறதை விட்டு, உருப்படற வழிய பாரு" - அப்பா "அப்பா தான் தினம் சொல்றாளே. அந்த இந்து பேப்பரை கொஞ்சம் படிடா கோந்தே. அப்பா வருத்தப்படறா பாரு" - அம்மா. "ஏண்டி, மணி எட்டாச்சு.  இன்னும் உன் பையனுக்கு விடியலயா?"  - அப்பா. "இல்ல.  ராத்திரி படிச்சுட்டு, லேட்டாதான் படுத்துண்டான்.அதான்." - அம்மா. "கிழிச்சான்..அஞ்சு மணிக்கு எந்திருச்சு படிச்சா மனசுல பதியும். இப்படி இருந்தா எப்படி உருப்படுவான்"?என்னால் அம்மாவிற்கு அர்ச்சனை. நான் இப்போது அஞ்சு மணிக்கெல்லாம் எழுந்து விடுகிறேன். அப்பா தான் இல்ல."ஏண்ணா! கண்ணனுக்கு புது சைக்கிள் வேணுமாம். இப்போ இருக்கிறது அடிக்கடி ரிப்பேர் ஆகிறதாம்" -அம்மா. "அப்ப தானே தொரை இன்னும் நல்லா ஊரு சுத்த முடியும்.  சைக்கிள் நல்லாத்தான் இருக்கு.  இல்லேனா நடந்து போகச்சொல்லு"- அப்பா. மாலை கல்லூரியிலிருந்து வரும்போது வீட்டில் பளபளவென்று புத்தம்பதிய அட்லஸ் சைக்கிள். "அம்மா,  யாரோடது இந்த புது சைக்கிள்?" உனக்குத்தான்டா. அப்பாதான் வாங்கிண்டு வந்தா. பூஜை போட்டு எடுத்துண்டு போ"- அம்மாகோபம் உதட்டில்தான். ஆனால் மனசு? அது தான் அப்பா. இப்போது என்னிடம் கார் இருக்கிறது.  அப்பா தான் இல்லை.ஏன், உன் புள்ளையாண்டான் அடிக்கடி லேட்டா வர்றான்?-அப்பா. "ஏதோ குரூப் ஸ்டடியாம்.  நாராயணன் வீட்டுக்கு போயிருக்கான்"- அம்மா. நான் போன செகண்ட் ஷோவுக்கு அம்மாவின் சப்பக்கட்டு. இது மாதிரி பல நாட்கள். சே. என்ன அப்பா இவர். எது செஞ்சாலும் நைநைனு ஏதாவது சொல்லிண்டே இருந்தா எவன் இந்த வீட்டில் இருப்பான்? - நான்.   சின்ன வயசில் அப்பாவுக்கு TAS ரத்தினம் பட்டணம் பொடி நான்தான் வாங்கி வருவேன்.  இது பள்ளி வரை தொடர்ந்தது. கல்லூரி வந்ததும் நான் அம்மாவிடம்,  "நா இனிமே பொடி எல்லாம் வாங்கிண்டு வரமாட்டேன். அப்பாவை பொடி போடறதை நிறுத்த சொல்லு". இது எப்படி தெரிந்ததோ அதன் பின்பு என்னிடம் பொடி வாங்க சொல்வதில்லை. பொடி யாரு வாங்கறா? மனசு கேட்காமல் ஒருநாள் அப்பாவிடம்,  "அப்பா உனக்கு பொடி வாங்கிண்டு வரவா" வேண்டாம்பா.. நா பொடி போடறத விட்டாச்சு..நீ சிரமப்பட வேண்டாம்".  அம்மாவிடம் கேட்டதற்கு, "ஆமாடா.  அப்பா ஒரு வாரமாவே போடலை. நானும் கேட்டேன். விட்டாச்சுனானு சொன்னா" மனது ஏனோ லேசாக வலித்தது எனக்கு. இப்போது நினைத்தால் கண்கள் கலங்குகிறது. நான் இன்று ஆங்கிலத்தில் கொஞ்சம் எழுதுவதற்கு காரணம் அப்பா. இப்போதும் நான் படிப்பது இந்து பேப்பர்தான்.அப்பா தான் இல்லை.  சே... கேவலம். முடி வெட்ட எவ்வளவு சண்டை அப்பாவுடன். இன்றும் முடி வெட்டும்போது அப்பா ஞாபகம்.அப்பா தான் இல்லை. அப்பாவின் ஞாபகார்த்தமாக நான் எடுத்து வைத்து கொண்டது அந்த#பொடிடப்பா மட்டும் தான். இன்றும் என்னை பார்த்து ஏளனமாய் சிரிக்கிறது. என்னை என்ன பாடுபடுத்னாய் என்று.அப்பா,  எங்கப்பா இருக்கே?  வாப்பா! நான் பொடி வாங்கித்தருகிறேன் என்று இப்போது கதறலாம் போல் இருக்கிறது.  ஒன்று மட்டும் நிச்சயம். அப்பாவோட கண்டிப்பு இல்லேனா நம்ம வாழ்க்கை நிச்சயம் #தாறுமாறு தர்பார் தான்.  அதே மாதிரி அந்த நேரங்களில் அம்மாவோட அரவணைப்பு இல்லை என்றாலும் வாழ்க்கை தாறுமாறு தான்.பெற்றோர்களை அவர்கள் வாழும்போதே #போற்றி வழிபடுங்கள் நண்பர்களே.  அப்போதுதான் வாழ்க்கை வெல்லம் போல #சுவைக்கும். நினைவுகளை அசை போடும்போது ிக்கும்.படித்து முடிப்பதற்குள் கண்ணில் ஜலம் நிறைந்து விட்டது.
  • 1719

Add new...