![](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
சூப்பர் சிங்கரில் மாற்று திறனாளி பாடகியை பாராட்டிய நெப்போலியன்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சியில் மாற்று திறனாளி பாடகி ஒருவரின் பாடலை பாராட்டி நெப்போலியன் பேசியிருக்கிறார். அதுபோல அந்த பாடகியின் குடும்பத்தில் இருக்கும் கஷ்டத்தை போக்குவதற்காக இசையமைப்பாளர் ஒரு லட்சம் பணம் கொடுத்து உதவி செய்திருக்கிறார்.
விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பலர் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக வலம் வருகிறார்கள். அதற்கு உதாரணமாக பலரை சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் சூப்பர் சிங்கர் சீனியர் மற்றும் ஜூனியர் என்று நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.
சமீபத்தில் தான் சீனியர்களுக்கான நிகழ்ச்சி முடிவடைந்தது. அதைத் தொடர்ந்து சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் ஆறு வயது முதல் 15 வயதிற்கு உட்பட்ட பல குழந்தைகள் கலந்து கொள்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சிகள் பாடகர் மனோ, சின்னக்குயில் சித்ரா மற்றும் இசையமைப்பாளர் டி. இமான் ஆகியோர் நடுவர்களாக இருக்கிறார்கள். அதுபோல இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பல குழந்தைகளுக்கு பல நெகிழ்வான கதைகள் இருக்கிறது. அந்த குழந்தைகள் தங்களுடைய கதைகளை சொல்லும் உணர்வுபூர்வமான ப்ரோமோக்கள் அடுத்தடுத்து வெளியாகி கொண்டிருக்கிறது.
அதில் ராணிப்பேட்டையில் இருந்து நஸ்ரின், சேலத்தில் இருந்து ரேணுகா, கோவையிலிருந்து பிரனேஷ் மற்றும் சென்னையிலிருந்து சாரா சுருதி ஆகியோர் இந்த ஜூனியர் போட்டியில் கலந்து கொள்ள எப்படி எல்லாம் தங்கள் உடைய சவால்களை கடந்து இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்று ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் என்ற டேக்லைனுக்கு ஏற்ப அவர்கள் பேசி இருக்கிறார்கள்.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 7ஆம் தேதி மற்றும் எட்டாம் தேதி ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் கிட்ஸ் ரவுண்டு நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ளும் குழந்தைகள் ரஜினியின் பாடல்களை பாட இருக்கிறார்கள். அதில் சிறப்பாக பாடும் குழந்தைக்கு நடிகர் ரஜினி கையெழுத்து போட்ட கிட்டார் பரிசாக வழங்கப்பட இருக்கிறது. இதற்கான ப்ரோமோ இப்போது வெளியில் இருக்கிறது.
அதில் ஒரு மாற்றுப் திறனாளி குழந்தை பாடும் பாடலை கேட்டு நடிகர் நெப்போலியன், "இதுபோன்ற குழந்தைகள் வீட்டிற்குள்ளேயே முடங்கி கிடக்காமல் தங்களுடைய திறமையை வெளியே கொண்டு வருவது சந்தோஷமாக இருக்கிறது" என்று கூறி இருக்கிறார்.
அதைக் கேட்டு அந்த குழந்தையின் பெற்றோர் கண்ணீர் வடிக்கிறார்கள். அந்த குழந்தை, "எவனடா கீழ எவன்டா மேல.. எல்லா உயிரையும் ஒண்ணா பாரு" என்ற ரஜினிகாந்தின் பாடலை பாடியிருக்கிறார்.
பிறகு பாடி முடிந்ததும் இசையமைப்பாளர் டி இமான் அந்த குழந்தையின் அம்மாவிடம், நீங்க உங்க பையனுடைய படிப்புக்காக ஒரு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாக கேள்விப்பட்டேன். அந்த ஒரு லட்சம் ரூபாய் இன்னைக்கு உங்க கையில் இருக்கிறது என்று காசோலையை கொடுக்க, அந்த குழந்தையின் அம்மா டக்கென்று இமான் காலில் விழுந்திருக்கிறார். இந்த உணர்வுபூர்வமான ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஆட்டம் போட்ட கௌதம் மேனன்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
- ·
- · GomathiSiva
![‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![வீடியோ காலில் பேசி குழந்தையை மகிழ்வித்த நடிகர் விஜய்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![மாடர்ன் உடையில் செம கிளாமராக போஸ் கொடுத்த பிரியா பவானி சங்கர்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரிலீஸுக்கு முன்னரே பட்டையை கிளப்பும் வலிமை](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புதிய தோற்றத்தில் சமந்தா](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![இளையராஜாவின் புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ரஜினியின் 170-வது படம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![விஜயின் நடிப்பில் பீஸ்ட் படத்தின் “அரபி குத்து” பிப்ரவரி 14.](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · TamilPoonga
![ரஜினியின் அடுத்த படத்திற்கான புதிய அறிவிப்பு](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![கூட்டுக் குடும்பமாக வாழும் மூன்று சினிமா நட்சத்திரங்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![ஹாலிவுட்டிலும் கால்பதித்த ஆறு தமிழ் நடிகர்கள்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![புத்தாண்டின் நள்ளிரவில் வெளியாகும் பீஸ்ட் திரைப்படத்தின் பாடல்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva
![சிவகார்த்திகேயனை பார்த்து ஆச்சரியப்படும் திரையுலகம்](https://tamilpoonga.com/template/images/icons/spacer.gif)
- ·
- · GomathiSiva