Ads

பிக்பாஸ் சம்யுக்தா

பிக்பாஸ் சம்யுக்தாவின் புகைப்படங்கள்

  • 1446
  • More
  • 1223
  • More
  • 1203
  • More
  • 1229
  • More
  • 1193
  • More
  • 1235
  • More
  • 1136
  • More
  • 1303
  • More
  • 1186
  • More
  • 1210
  • More
Comments (0)
Login or Join to comment.
Added a video 
கைதாவாரா டக்ளஸ்
  • 39
  • 50
Added a post 
தற்போது வெயில் காலம் தீவிரமாக இருக்கும் நிலையில் உடல் சூட்டை தணிக்க ஒரு வெங்காயத்தை நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நம் உடலில் நீர்ச்சத்தை பாதுகாக்கலாம். குழந்தைகளுக்கு வெப்ப நோய்கள் வராமல் இருக்க, வெங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தாலோ அல்லது நெய்யில் வறுத்து சாப்பிடவைத்தாலோ சிறந்த பலன் கிடைக்கும்.தினமும் சிறிதளவு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். வெங்காயத்தில் உள்ள சல்பர் எனும் சத்து, ரத்தத்தை சுத்திகரித்து மாரடைப்பைத் தடுக்கும். அதேசமயம், இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு தன்மை சுவாசக் குழாய்களைத் தூய்மைப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, காசநோயைத் தடுக்கும். உடலில் தேக்கமாயிருக்கும் நச்சுகளை வெளியேற்றும் திறனும் வெங்காயத்துக்கு உண்டு.மூளையின் செயல் திறனை ஊக்குவிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் வெங்காயம் உதவுகிறது. எனவே, நம் உணவில் வெங்காயத்திற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும். இது உணவல்ல, ஒரு இயற்கை மருந்து......
  • 147
Added article 
ரத்னகுமார் இயக்கிய மேயாத மான் படத்தில், வைபவின் தங்கையாக நடித்தவர் இந்துஜா. தொடர்ந்து மெர்க்குரி, ஆர்யாவுடன் மகாமுனி , விஜய்யுடன் பிகில் படத்தில் நடித்து பெரும் புகழை சம்பாதித்தார்.தற்போது பல முன்னணி இயக்குனர்கள் இந்துஜா அணுகி வருகிறார்கள். சமீபகாலமாக உடல் எடை அதிகமாகிக் காணப்பட்ட இந்துஜா இப்போது ஒல்லியான தோற்றத்துக்கு மாறி இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிட அது கவனம் பெற்றுள்ளது. தனுஷுடன் அவர் நடித்த ‘நானே வருவேன்’ படம் அவருக்கு நல்ல பெயரைப் பெற்றுத்தந்தாலும் வணிக ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை.இதையடுத்து அவர் வாய்ப்புகளைக் பெறுவதற்காக கவர்ச்சி ரூட்டுக்கு மாறி வருகிறார். தற்போது கிளாமர் உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
  • 146
Added a news 
பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் ஃபோர்ட் செயிண்ட் ஜான் நகரத்திற்கு வடக்கே உள்ள இயற்கை வாயு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பணியாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் மற்றொருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக செய்தி வெளியாகி உள்ளது.இயற்கை வாயு தொழிற்சாலையின் பணியாளர்கள் குழாயைத் தட்டி காயப்படுத்தியபோது தீ விபத்து ஏற்பட்டதாக பி.சி. எனர்ஜி ரெகுலேட்டர் அறிவித்துள்ளது. தீ விபத்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக நிறுவனம் தரிவித்துள்ளது.இந்த விபத்தில், ஒப்பந்த பணியாளர் ஒருவர் உயிரிழந்தது உறுதியாகியுள்ளது. மேலும் மற்றொரு பணியாளர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிரிழந்தவரின் குடும்பம், நண்பர்கள் மற்றும் சக பணியாளர்களுக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்" என்று Tourmaline நிறுவனம் தெரிவித்துள்ளது. தீ விபத்திற்கான காரணங்களை கண்டறியும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
  • 152
Added a news 
பகுதிநேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து வில்லியனுார் நபர் மோசடி கும்பலிடம் ரூ.11.42 லட்சம் இழந்துள்ளார்.வில்லியனுாரை சேர்ந்தவர் இஸ்மத் நாச்சியார். இவரை தொடர்பு கொண்ட மர்மநபர், பகுதி நேர வேலையாக ஆன்லைனில் முதலீடு செய்து, வீட்டில் இருந்தபடி அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறியுள்ளார்.அதைநம்பிய, இஸ்மத் பல்வேறு தவணைகளாக 11 லட்சத்து 42 ஆயிரத்து 736 முதலீடு செய்து, அவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடித்துள்ளார். அதன் மூலம் வந்த லாபப் பணத்தை எடுக்க முயன்றபோது, முடியவில்லை. அதன் பிறகே, மோசடி கும்பலிடம் பணத்தை இழந்தது தெரிய வந்தது.லாஸ்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் என்பவரை தொடர்பு கொண்ட மர்மநபர் வங்கி அதிகாரி போல் பேசி, வங்கி கணக்கிற்கான KYC கே.ஓய்.சி.யை புதுப்பிக்கும்படி கூறியுள்ளார். அதற்கான லிங்க் ஒன்றையும் சீனிவாசனுக்கு அனுப்பியுள்ளார்.இதையடுத்து, சீனிவாசன் அந்த லிங்கை பதிவிறக்கம் செய்தபோது, அவரது வங்கி கணக்கில் இருந்து 5 லட்சத்து 6000 ரூபாயை மோசடி கும்பல் எடுத்து ஏமாற்றியுள்ளது.இதேபோல், முருங்கப்பாக்கத்தை சேர்ந்த கார்த்தி 72 ஆயிரத்து 800, கோரிமேட்டைச் சேர்ந்த ஜெகஜீவன் 1 லட்சத்து 63 ஆயிரத்து 300, முத்தியால்பேட்டைச் சேர்ந்த சரவணகுமார் 5 ஆயிரம், பெரியார் நகரைச் சேர்ந்த ஸ்ரீநிவேதா 25 ஆயிரம், கோரிமேட்டை சேர்ந்த இருதயராஜ் சார்லஸ் 19 ஆயிரத்து 700, அரியாங்குப்பத்தை சேர்ந்த முத்து மணிக்கம் 3 ஆயிரம் என மொத்தம் 8 பேர் மோசடி கும்பலிடம் 19 லட்சத்து 37 ஆயிரத்து 536 ரூபாய் இழந்துள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • 161
உனது ஆசைகள் அனைத்தும் நிறைவேறிவிட்டால் இந்த உலகத்தில்மிக மோசமான ஆள் நீயாகத்தான் இருப்பாய்.- ஓஷோ
  • 168
Added a post 
தமிழ் ஆண்டுகளை சமஸ்கிருத பெயரில் மட்டுமே அறிந்திருப்பீர்கள்..சமஸ்கிருதத்திற்கு இணையாக நம் முன்னோர்கள் வகுத்த அறுபது தமிழ் ஆண்டுகளின் தமிழ்ப்பெயர்கள்.*1.* பிரபவ - *நற்றோன்றல்**2.* விபவ - *உயர்தோன்றல்**3.* சுக்கில - *வெள்ளொளி**4.* பிரமோதூத - *பேருவகை**5.* பிரசோத்பத்தி - *மக்கட்செல்வம்**6.* ஆங்கீரச - *அயல்முனி**7.* சிறிமுக - *திருமுகம்**8.* பவ - *தோற்றம்**9.* யுவ - *இளமை**10.* தாது - *மாழை**11.* ஈசுவர - *ஈச்சுரம்**12.* வெகுதானிய - *கூலவளம்**13.* பிரமாதி - *முன்மை**14.* விக்ரம - *நேர்நிரல்**15.* விச - *விளைபயன்**16.* சித்திரபானு- *ஓவியக்கதிர்**17.* சுபானு - *நற்கதிர்**18.* தாரண- *தாங்கெழில்**19.* பார்த்திப - *நிலவரையன்**20.* விய - *விரிமாண்பு**21.* சர்வசித்த - *முற்றறிவு**22.* சர்வதாரி - *முழுநிறைவு**23.* விரோதி - *தீர்பகை**24.* விகிர்தி- *வளமாற்றம்**25.* கர - *செய்நேர்த்தி**26.* நந்தன - *நற்குழவி**27.* விசய - *உயர்வாகை**28.* சய - *வாகை**29.* மன்மத - *காதன்மை**30.* துன்முகி - *வெம்முகம்**31.* ஏவிளம்பி - *பொற்றடை**32.* விளம்பி - *அட்டி**33.* விகாரி - *எழில்மாறல்**34.* சார்வரி - *வீறியெழல்**35.* பிலவ - *கீழறை**36.* சுபகிருது - *நற்செய்கை**37.* சோபகிருது - *மங்கலம்**38.* குரோதி - *பகைக்கேடு**39.* விசுவாவசு - *உலகநிறைவு**40.* பராபவ - *அருட்டோற்றம்**41.* பிலவங்க - *நச்சுப்புழை**42.* கீலக - *பிணைவிரகு**43.* சவுமிய - *அழகு**44.* சாதாரண - *பொதுநிலை**45.* விரோதி கிருது - *இகல்வீறு**46.* பரிதாபி - *கழிவிரக்கம்**47.* பிரமாதீச - *நற்றலைமை**48.* ஆனந்த - *பெருமகிழ்ச்சி**49.* இராட்சச - *பெருமறம்**50.* நள - *தாமரை**51.* பீங்கள - *பொன்மை**52.* காளயுக்தி- *கருமைவீச்சு**53.* சித்தார்த்தி - *முன்னியமுடிதல்**54.* ரவுத்ரி- *அழலி**55.* துன்மதி- *கொடுமதி**56.* துந்துபி- *பேரிகை**57.* உருத்ரோத்காரி - *ஒடுங்கி**58.* இரக்தாட்சி- *செம்மை**59.* குரோதன்- *எதிரேற்றம்**60.* அட்சய - *வளங்கலன்*
  • 266
  • 268
  • 280
அம்மான்னா சும்மா இல்லையடா அவ இல்லை னா யாரும் இல்லையடா!
  • 289
Added a post 
நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.ஆவி பிடிப்பதால் சுவாசப்பாதை சீராகும். மூச்சுவிட இலகுவாக இருக்கும். சளி அடைப்பு போகும் என்று கூறப்படுகிறது. ஆனால் மருத்துவர்கள் ஆவி பிடிப்பதால் எந்த பலனும் இல்லை. தொற்று வைரஸ் அழியாது என்று கூறுகின்றனர். இருப்பினும் மக்கள் தங்கள் வீடுகளில் ஆவி பிடித்து வருகின்றனர்.ஆயுர்வேதம் , சித்த மருத்துவத்தில் ஆவிப்பிடிப்பது சிறந்த மருத்துவமாக பார்க்கப்படுகிறது. பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வீட்டு மருத்துவத்தில் ஆவி பிடித்தல் இன்றளவும் பின்பற்றப்படுகிறது. இந்த ஆவி பிடித்தலில் பயன்படுத்தப்படும் மூலிகையில் முதன்மையானது நொச்சி இலை.இந்த நொச்சி இலையில் இருக்கும் அற்புதமான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை. ஏனெனில் அதன் பயன்பாடு கிராமங்களைத் தாண்டி இன்னும் அதிகரிக்கவில்லை. இதனால் சென்னையில் சில இடங்களில் கிலோ கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.நீர் நிலைகளில் காணப்படும் நீர்நொச்சி, ஐந்து இலை கொண்ட நொச்சி, கருநிற இலைகள் கொண்ட நொச்சி என மூன்று வகைகளில் காணப்படுகிறது. இந்த நொச்சி இலையின் தாவரவையல் பெயர் Vitex negundo என்று அழைக்கப்படுகிறது. இந்த கரு நொச்சிதான் அதிக மருத்துவப் பலன் கொண்டது. ஆனால் இது காட்டுப்பகுதி, மலைப்பகுதிகளில் மட்டுமே அரிதாக கிடைக்கிறது. இதன் வளர்ப்பு குறைந்துவிட்டது.இந்த நொச்சி இலைகளில் ஒவித நறுமண வாசனை இருக்கிறது. அவைதான் சுவாசப்பாதையை சீராக்கி நன்மை அளிக்கிறது. எனவேதான் கடுமையான நெஞ்சு சளி, இருமல் இருப்பவர்களுக்கு கொதிக்க வைத்த தண்ணீரில் நொச்சி இலை சேர்த்து ஆவி பிடிக்க சொல்கின்றனர். இதனுடன் கற்பூரவல்லி அல்லது துளசி சேர்த்து ஆவி பிடிக்கலாம்.நொச்சி இலை போட்டு கொதிக்க வைத்த நீரை குளிக்க பயன்படுத்தினாலும் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கின்றன.தீராத தலைவலியால் அவதிப்படுகிறீர்கள் எனில் நொச்சியின் காய்ந்த இலைகளை முகைமூட்டி அந்த புகையை சுவாசிக்க தலைவலி தீரும். ஆஸ்துமா, நுரையீரல் பிரச்னை இருப்பவர்கள் இதை தவிர்க்கவும். மற்றொரு வழியாக நொச்சி இலையைக் கசக்கி தலையில் வைத்துக் கட்டினால் தலைப்பாரம் குறையும். கருநொச்சி இலைகளின் சாறு, சீதப்பேதி, உடல் பலவீனம், அஜீரணம், மந்தமாகச் செயல்படும் ஈரல், நரம்பு வலி, செரிமானம், ஆகியவற்றுக்குப் பயனளிக்கிறது.உடலில் ஏதேனும் கட்டி, வீக்கம் இருப்பின் நொச்சி இலைகளை வதக்கி வீக்கங்களுக்கும் கட்டிகளுக்கும் கட்ட அவை கரைந்து போகும்.இன்றைக்கும் கிராமங்களில் இந்த வழக்கம் இருந்துதான் வருகிறது. ஏனெனில் நொச்சி பாதிக்கப்பட்ட இடத்தில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலி, வீக்கத்தை குறைக்கிறது. இது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்ட உண்மை.கை, கால் முட்டி வலிக்கும் நொச்சி இலையை கசக்கி துணி வைத்து கட்டிக்கொள்ள வலி குறையும்.புண் காயங்கள் இருந்தால் நொச்சி இலை சாறை எடுத்து நல்லெண்ணெயில் கலந்து கொதிக்க வைத்து அதை பாட்டிலில் சேமித்துக்கொண்டு தினமும் தேய்த்து வர புண் ஆறிவிடும்.இச்செடியில் மலர்கள் பூக்கும்போது கொத்துக்கொத்தாக அடர்ந்த கத்திரி பூ நிறத்தில் பூத்திருக்கும். இந்த பூக்களில் உற்பத்தியாகிற தேனுக்கு உடல் வலியை, வீக்கத்தைப் போக்குகிற தன்மை உண்டு.உங்கள் வீட்டிலும் நொச்சி வளர்க்க நினைத்தால் ஒரு கிளையை வெட்டி வைத்தால் கூட நன்றாக வளரும். இதனை வீட்டில் வளர்ப்பதால் பல்வேறு சிகிச்சைகளை செய்வதற்கு உதவியாக இருக்கும். நொச்சியினை நாம் வளர்க்க வேண்டியது அவசியம். இவை மிக எளிதாக வளரக்கூடியது.
  • 305
Added a video 
குருநகர் கடற்கரைப் பகுதியில் ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் மீட்பு
  • 314
Added a news 
யாழ்ப்பாணம் குருநகர் கடற்கரைப் பகுதியில் நேற்று இரவு ரி 56 ரக துப்பாக்கியொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய நடத்தப்பட்ட சோதனையில் ஆயுதம் மீட்கப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட துப்பாக்கி பாவிக்க கூடிய நிலையில் இருப்பதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பித்துள்ள யாழ்ப்பாணம் பொலிஸார் அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்காக கைப்பற்றப்பட்ட துப்பாக்கியை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.00
  • 319
  • 324
  • 338
  • 339
  • 338
Added a post 
இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.மேஷம்விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் வேண்டும். தந்தைவழி உறவுகளிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்துகொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். வியாபாரம் சார்ந்த பணிகளில் மந்தமான சூழ்நிலை ஏற்படும். எதிர்பாராத சில பயணங்கள் அமையும். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : ஊதா ரிஷபம்தொழில்ரீதியாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கால்நடை வியாபாரத்தில் லாபம் மேம்படும். பிரபலமானவர்களுடைய ஆறுதலும், நட்பும் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சிரமம் மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மிதுனம்கலகலப்பான பேச்சுக்களின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். பழக்கவழக்கங்களில் சிறு சிறு மாற்றங்கள் உண்டாகும். மனதை உருத்திய சில கவலைகள் விலகும். பொருளாதாரம் தொடர்பான சிக்கல்கள் குறையும். பாதியில் நின்ற பணிகளை செய்து முடிப்பீர்கள். தாய்மாமன் வகையில் ஒத்துழைப்பு மேம்படும். களிப்பு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு கடகம்மனதை வருத்திய சில பிரச்சனைகளுக்கு தெளிவு பிறக்கும். எதிர்பார்த்த சில காரியங்களில் போராடி வெற்றிப் பெறுவீர்கள். இலக்கிய பணிகளில் ஆர்வம் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சூழல் அமையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடன் பிறந்தோர்களின் ஆதரவுடன் சில செயல்களை செய்துமுடிப்பீர்கள். மறைமுகமாக இருந்துவந்த எதிர்ப்புகள் குறையும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை சிம்மம்உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த வரவு வந்து சேரும். குடும்பத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் விலகும். அரசு சார்ந்த காரியங்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். பழைய சிந்தனைகளால் மனதில் மகிழ்ச்சியற்ற சூழல் ஏற்படும். உடனிருப்பவரை அனுசரித்து செல்லவும். உழைப்பால் வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். பகை விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : ஊதா கன்னிசெய்யும் செயல்களில் மனமகிழ்ச்சியுடன் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் இருந்துவந்த சங்கடங்கள் விலகும். பழைய கடன் பிரச்சனைகள் குறையும். வருமானத்தில் ஏற்பட்டிருந்த தடை தாமதங்கள் விலகும். திட்டமிட்ட காரியத்தில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிலும் துணிச்சலுடன் செயல்படுவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வேலை அமையும். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு துலாம்புதியநபரின் அறிமுகம் ஏற்படும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் மேம்படும். குடும்பத்தினரிடம் மனம்விட்டு பேசுவது புரிதலை ஏற்படுத்தும். கல்வி பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். கடன் நெருக்கடிகள் ஓரளவு குறையும். இறை வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். வியாபாரத்தில் புதிய யுக்திகளால் மாற்றம் பிறக்கும். ஆர்வம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் விருச்சிகம்எதிலும் படபடப்பு இன்றி பொறுமையுடன் செயல்படவும். இனம்புரியாத சிந்தனைகளின் மூலம் தாழ்வு மனப்பான்மை வந்து செல்லும். மற்றவர்களை எதிர்பார்க்காமல் உங்கள் பணிகளை நீங்களே மேற்கொள்வது நன்மை தரும். நேர்மறை எண்ணங்களை வளர்த்து கொள்வது நல்லது. பெரியோர்களின் ஆலோசனைகள் சில மாற்றத்தை ஏற்படுத்தும். முக்கிய கோப்புகளை கையாளும் போது கவனம் வேண்டும். பிரீதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளஞ்வப்பு தனுசுதேவையற்ற மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும். பணிபுரிபவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய செயல்களில் சிந்தித்து செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் உண்டாகும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன் பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். கவனம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மகரம்திடீர் வரவுகளால் சங்கடங்கள் நீங்கும். அரசு வழியில் உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். உணவு துறைகளில் இருப்பவர்களுக்கு லாபம் மேம்படும். எந்த செயலையும் முழு ஈடுபாட்டுடன் செய்து முடிப்பீர்கள். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உழைப்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் கும்பம்வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். வாதத் திறமையினால் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்வீர்கள். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். நண்பர்களிடம் அனுசரித்து செல்லவும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். தாய்மாமன் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். யோகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மீனம்வெளியுலகத் தொடர்புகளில் கவனம் வேண்டும். வியாபாரம் தொடர்பான அலைச்சல்கள் உண்டாகும். உயர் கல்வியிலிருந்த குழப்பங்கள் குறையும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஆதரவு கிடைக்கும். நீண்ட தூரப் பயண வாய்ப்புகள் சாதகமாகும். திட்டமிட்ட காரியங்களில் புதிய அனுபவம் ஏற்படும். பயண துறைகளில் விழிப்புணர்வு வேண்டும். பணிவு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பச்சை
  • 407
Added a post 
குரோதி வருடம் சித்திரை மாதம் 3 ஆம் தேதி புதன்கிழமை 16.4.2025.அதிதி  த்ரிதியை, பகல் 11:51AMநட்சத்திரம் அனுசம், காலை 4:11AMசந்திராஷ்டமம்  பரணி கார்த்திகைபரிகாரம்    பால்சூலம்     வடக்கு
  • 419
  • 430
Added article 
வாசன் விஷுவல் வென்ச்சர்ஸ் நிறுவனம், இந்தியன் மைக்கில் ஜாக்சன் என ரசிகர்களால் கொண்டாடப்படும், பிரபுதேவாவை ஹீரோவாக வைத்து தயாரித்துள்ள திரைப்படம் தான் 'எங் மங் சங்'. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் சீனாவில் படமாக்கப்பட்டுள்ளது.17ஆம் நூற்றாண்டில் நடப்பது போன்ற ஒரு கதை அமைப்பில் தொடங்கி, 1980 இல் நடக்கும் கதை, அப்போது அங்கு பிரபலமாக இருந்த குங்ஃபூ கலையை, இந்தியாவில் இருந்து செல்லும் மூன்று இளைஞர்கள் அந்த கலையை கற்று, எங் மங் சங் என்ற பெயரோடு தமிழ்நாட்டுக்கு திரும்புகிறார்கள். அங்கு கற்ற கலையை வைத்து இங்கு என்னென்ன செய்தார்கள் என்பதே இந்த படத்தின் திரைக்கதை.வித்தியாசமான கதைக்களத்தில், நகைச்சுவை உணர்வோடு எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் அர்ஜுன் எஸ் ஜே இயக்கி உள்ளார். இவர் தற்போது அஜித் நடித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் “ குட் பேட் அக்லீ “ படத்திற்கு திரைக்கதை எழுதியுள்ளார்,இப்படத்தில் பிரபுதேவாவிற்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்துள்ளார். ஆர்.ஜே.பாலாஜி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் இயக்குனர் தங்கர் பச்சான், சித்ரா லட்சுமணன், கும்கி அஸ்வின், மாரிமுத்து, காளி வெங்கட், முனீஸ் காந்த், பாகுபலி பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே எடுத்து முடிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படம்... ஒருவழியாக கோடையை முன்னிட்டு ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இப்படம் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது.
  • 604
Added article 
இயக்குனர் மகேந்திரன் மற்றும் சசி இயக்கத்தில் வெளியான பல படங்களுக்கு துணை இயக்குனராக, சுமார் 12 வருடங்கள் பணியாற்றியவர் இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி. பின்னர் 2002 ஆம் ஆண்டு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகா நடிப்பில் வெளியான 'ஏப்ரல் மாதத்தில்', திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.இவருடைய முதல் படமே பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இந்த படத்தில் ஸ்ரீகாந்த் மற்றும் சினேகாவுடன் இணைந்து காயத்ரி ஜெயராம், வெங்கட் பிரபு, தேவன், கருணாஸ், டேனியல் பாலாஜி, மயில்சாமி, பாவா லட்சுமணன், கொட்டாச்சி, உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கல்லூரி காதலை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, நடிகர் தனுஷை வைத்து புதுக்கோட்டை சரவணன் திரைப்படத்தை இயக்கினார் எஸ் எஸ் ஸ்டான்லி. 2004 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களையும், வசூலையும் பெற்றது. மேலும் இந்த படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் அதிகம் பேசப்பட்டது. பின்னர் நடிகர் ஸ்ரீகாந்தை வைத்து மெர்குரி பூக்கள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில் திரைப்பட இயக்கத்தில் இருந்து விலகி நடிகராக சில படங்களில் நடிக்க தொடங்கினார்.பெரியார், ராவணன், நினைத்தது யாரோ, ஆண்டவன் கட்டளை, ஆண் தேவதை, 6 அத்தியாயம், சர்க்கார், போன்ற சில படங்களில் நடித்தார். கடைசியாக கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த 'மகாராஜா' திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.நடிகர் வைபவ் மற்றும் ஆண்ட்ரியாவை வைத்து 'ஆதாம் ஆப்பிள்' என்கிற திரைப்படத்தை இயக்க ஸ்டான்லி முயற்சி செய்து வந்த நிலையில், அந்த படம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இயக்குனர் எஸ் எஸ் ஸ்டான்லி (57) சிறுநீரக பாதிப்பு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். ஆனால் சிகிச்சை பலனிற்றி இவர் இன்று உயிரிழந்தார். இந்த சம்பவம் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை வளசரவாக்கத்தில் மின்மயானத்தில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
  • 608
Added article 
நடிகை பிரணிதா தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். எனக்கு வாய்த்த அடிமைகள், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும், உதயன், சகுனி, மாஸ் என்கிற மாசிலாமணி ஆகிய தமிழ் படங்களில் நடித்துள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இவர் நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்துகொண்டார்.பின்னர் இந்த தம்பதிகளுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. இதையடுத்து ப்ரணிதா மீண்டும் சினிமாவில் நடிக்க, பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். ஆனால் பெரியளவில் அவருக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.தற்போது ஜொலிக்கும் ஆடையொன்றை அணிந்து மிகவும் கவர்ச்சியாக புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.
  • 615
Added a news 
கன்சர்வேட்டிவ் கட்சி தொடர்பில் தனது நீண்டகால தேர்தல் ஆலோசகர் கோரி டெனெய்க் வெளியிட்ட கருத்துகளை முழுமையாக ஆதரிப்பதாகத் ஒண்டாரியோ மாகாண முதல்வர் டக் ஃபோர்ட் தெரிவித்தார்.டெனெய்க், கனடாவின் கூட்டணி கட்சி (Conservative Party) தலைவரான பியர் பொய்லிவ்ரின் தேர்தல் இயந்திரத்தை கடுமையாக விமர்சித்திருந்தார்.அண்மையில் நடைபெற்ற கருத்துக்கணிப்புகளில் காணப்படும் விவரங்களை சுட்டிக்காட்டி, "பொய்லிவ்ரும் அவரது குழுவும், வாக்குகள் பெறும் வாய்ப்பை முற்றிலும் இழந்துவிட்டனர்," என்று சுட்டிக்காட்டியிருந்தார். கருத்துக் கணிப்பு முடிவுகளை சிலரினானால் ஏற்க முடியாது என்ற போதிலும் இதுவே யதார்த்தம் என டெனெய்க் சுட்டிக்காட்டியிருந்தார். தனது தேர்தல் பிரச்சார மேலாளர் டெனெய்க்கின் கருத்துக்கள் உண்மையானவை எனவும், கன்சர்வேட்டிவ் கட்சி உண்மையை ஒப்புக்கொள்ள வேண்டுமெனவும் டக் ஃபோர்ட் தெரிவித்துள்ளார்.
  • 621
Added a news 
சிங்கப்பூர் நாடாளுமன்றம் இன்று (15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது.சிங்கப்பூரின் பொதுத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி நடைபெறவுள்ளதை கருத்தில் கொண்டு இன்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் மே மாதம் இடம்பெறவுள்ள தேர்தல், சிங்கப்பூரின் சுதந்திரத்திற்கு பின்னர் நடைபெறவுள்ள 14 ஆவது பொதுத் தேர்தல் ஆகும். ஏப்ரல் 23 ஆம் திகதி வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை சிங்கப்பூரின் பிரதமர் லோரன்ஸ் வோங்கு இம்முறை முதல் தடவையாக பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
  • 620
எனக்கு மிகவும் பிடித்த ஷேக்ஸ்பியரின் மூன்று வரிகள்... எல்லோரையும் நேசியுங்கள்... ஒரு சிலரை மட்டும் நம்புங்கள்... யாருக்கும் தவறு செய்யாதீர்கள்..
  • 623