அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்புக்காகத் தாம் உரிய நடவடிக்கைகளை சட்டபூர்வமாக மேற்கொண்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.அரச பணியாளர்களுக்கு வேதனத்தை அதிகரிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நிதி எதனையும் ஒதுக்கியிருக்கவில்லை எனப் பிரதமர் ஹரினி அமரசூரிய கொஸ்கம பகுதியில் வைத்து முன்னதாக தெரிவித்திருந்தார்.அத்துடன் நினைத்த உடனேயே ஜனாதிபதியினாலோ, பிரதமராலோ வேதனத்தை அதிகரிக்க முடியாது. அவ்வாறு ஒரு தீர்மானத்தை எடுத்தால் அதற்கான நிதியை ஒதுக்குவதற்கு திறைசேரியின் அனுமதியைப் பெற வேண்டும் எனவும் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்தார்.இந்தநிலையில் பன்னல பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது இதற்குப் பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, அரச சேவையாளர்களுக்கான வேதன அதிகரிப்பை மேற்கொள்ள உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என தற்போதைய அரசாங்கம் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானது எனக் குறிப்பிட்டுள்ளார்.நாம் அரசாங்கத்தைக் கையளிக்கும் போது மூன்று மாதங்களுக்குத் தேவையான கொடுப்பனவை வழங்குவதற்கான கையிருப்பு காணப்பட்டது.கடந்த காலங்களில் நாம் முன்னெடுத்திருந்த திட்டமே தற்போதும் முன்னெடுக்கப்படுகிறது. அமைச்சரவை தீர்மானங்களை மேற்கொண்டு அதனைச் செயற்படுத்துவதற்கு அரச அதிகாரிகளிடம் அனுமதி பெறப்பட வேண்டிய அவசியமில்லை.அரசியலமைப்பிற்கு இணங்க, அமைச்சரவையே ஆட்சி செய்ய வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.000
எஞ்சிய வருடங்களில் மின்சார கட்டணத்தைக் குறைக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வணிக சபையின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதற்கான திட்டங்களை வகுக்குமாறு அவர் உரிய அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார். இதன்போது, இலங்கை வணிக சபையினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.000
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி, இன்றைய தினமும் எதிர்வரும் நவம்பர் முதலாம் மற்றும் 4 ஆம் திகதிகளிலும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.அதற்கமைய, இன்றையதினமும் எதிர்வரும் 4 ஆம் திகதியும் மாவட்ட செயலகங்கள், தேர்தல் அலுவலகங்கள், சகல காவல்துறை அதிகாரிகளும் அஞ்சல் மூலம் வாக்களிக்க முடியும்அத்துடன், முதலாம் திகதியும் 4 ஆம் திகதியும், முப்படையினரும் ஏனைய அரச நிறுவனங்களைச் சேர்ந்தவர்களும் வாக்களிக்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தினங்களில் வாக்களிக்க முடியாதவர்களுக்காக எதிர்வரும் நவம்பர் மாதம் 7 ஆம் 8 ஆம் திகதி வாக்களிப்பதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.தேர்தல்கள் கடமைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள அரச பணியாளர்களுக்கு மாத்திரமே அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு அனுமதி வழங்கப்படுகிறது.அதேநேரம், எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான அஞ்சல் மூலம் வாக்களிப்புக்காக 759, 210 விண்ணப்பங்கள் கிடைத்திருந்ததாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதில் 20, 551 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.அதற்கமைய ஏற்றுக்கொள்ளப்பட்ட அஞ்சல் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களின் படி, 738, 659 பேர் அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்குத் தகுதி பெற்றுள்ளதாகத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.000
யாழ்ப்பாணம் - பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் - புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக காணப்படுகின்றனர்.மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டனர்.வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.50 மற்றும் 51 வயதான இரண்டு பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.000
ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 13 ஆம் தேதி புதன்கிழமை 30.10.2024சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 02.21 வரை திரியோதசி. பிறகு சதுர்த்தசி.இன்று இரவு 11.22 வரை அஸ்தம். பின்னர் சித்திரை.சதயம் பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
தவெக மாநாட்டை தொகுத்து வழங்கியவர் துர்கா தேவி(28). தனியார் கல்லூரி விரிவுரையாளர். இவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்துள்ளது. விஜயின் ரசிகையாக இருந்தவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தில் இணைந்திருக்கிறார். மக்கள் இயக்க நிகழ்வுகளை தொகுத்து வழங்கிய துர்கா தேவியை, சமீபத்தில் கட்சி துவங்கிய பிறகு கழகப் பேச்சாளராக தவெக அறிவித்துள்ளது.தவெகவின் முதல் மாநாட்டை தொகுத்து வழங்கினார். பலர் இவரது திறமையை பாராட்டிய நிலையில், குரலை ட்ரோல் செய்தும் வந்தனர். இதுகுறித்து பேசியுள்ள அவர், அந்த விமர்சனங்களையெல்லாம் பார்த்துட்டு சிரிப்பு வந்துடுச்சு.எனக்கு ஒரு பின்புலம், ஒரு நிறம் இருந்தாதான் ரசிப்பீங்களா? பாராட்டுவீங்களா? ரெஸ்பான்ஸ் கொடுப்பீங்களா? நல்ல குரல், வெளீர் நிறம் இருக்கணும்னு நினைப்பதே தவறான சிந்தனை. நான் தமிழச்சி. தமிழ் மண்ணை; தமிழ் மக்களை நம்பித்தான் பேசினேன்.எல்லா மேடையிலும் தமிழுக்காகவும் தமிழர்களுக்காகவும் அப்படின்னுதான் பேசவே ஆரம்பிப்பேன். அப்படியிருக்கும்போது, என்னோட குரலை, நிறத்தை வெச்சு விமர்சிக்கிறதை ஏற்றுக்க முடியாது. திறமையைத்தான் பார்க்க வேண்டும்.மாநாட்டுக்கு 8 லட்சம் பேர் வந்திருந்தார்கள். அத்தனை ஆண்கள் கூட்டத்தை ஒரு 28 வயசு இளம்பெண் குரலால் கட்டுக்குள் வெச்சிருந்ததைத்தான் முக்கியமா பார்க்கணும். பேசுறதுக்காக எனக்கு எந்த முன் தயாரிப்பும் கொடுக்கல. எல்லாமே, அந்த சூழலையொட்டி நானே பேசினது. ரொம்ப பெருமையா இருக்கு என தெரிவித்துள்ளார்.
தேனி அருகே முத்துதேவன்பட்டியைச் சேர்ந்தவர் கலைராஜன். 2017ல் மேல் படிப்பிற்காக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்று தனது படிப்பை தொடர்ந்துள்ளார். அங்கு அவருக்கு மரியம் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டு பின்னர் இருவரும் காதலித்து வந்துள்ளனர். தமிழர் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமண நிகழ்வில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மணப்பெண் மரியம் கூறுகையில், “பாரிசில் படிக்க சென்ற போது, கலைராஜனை சந்தித்தேன். அப்போது அவர் மீது காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டோம். தமிழர் முறைப்படி திருமணம் செய்வது தனக்கு மகிழ்ச்சி தருகிறது” என தெரிவித்துள்ளார்.
பயறு வகைகள், குறிப்பாக முருங்கை பயறு, துவரம் பயறு, மற்றும் பச்சை பயறு ஆகியவை உணவுகள் உயர்தர புரதங்களை வழங்குகின்றன. இதனால் உடல் வளர்ச்சி மற்றும் உடல் உறுப்புகளின் வேலைநிறுத்தத்திற்கு உதவுகிறது.பயறு வகைகள் நார்ச்சத்தில் செறிந்தவை, இது அடிக்கடி உண்ணுவதால் ஜீரணத்திற்குப் பயன்படும். இது அடிக்கடி மலச்சிக்கலுக்கு எதிராக போராடுகிறது.பயறு வகைகள் உடலில் கொழுப்புகளை குறைப்பதில் மற்றும் எடையை கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன. பயறு வகைகள் நிம்மதி மற்றும் மனநலத்தை மேம்படுத்துகிறது.பயறு வகைகள் ஆற்றலை அதிகரிக்கவும் உடலுக்கு தேவையான சக்தியை வழங்கவும் உதவுகின்றன. அவை ஆரோக்கியமான உயிருக்குப் பங்குதவுகின்றன.வைட்டமின்கள் மற்றும் ஆண்டிஓக்சிடன்ட்களில் செறிந்தவை, இது நோய்களை எதிர்கொள்வதில் மற்றும் உடலின் பாதுகாப்பில் உதவுகின்றன.பயறு வகைகள் இரத்த சர்க்கரை நிலையை கட்டுப்படுத்துவதில் உதவுகின்றன, இது சர்க்கரை நோயாளிகளுக்கான உணவு முறையில் முக்கியமாக இருக்கிறது.
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த நடிகை ராதிகா தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள் யாராக இருந்தாலும் அவரவர் பாதையில் அரசியலுக்கு வருவது குறித்து எனக்கு மகிழ்ச்சி தான். விஜய் மிகப் பெரிய நடிகராக இருந்தாலும் அதையும் மீறி அரசியலுக்கு வந்திருப்பது எனக்கு உண்மையிலேயே ஆச்சரியம். சிறுவயதில் இருந்தே எனக்கு விஜய்யை தெரியும். அவர் தந்தையின் இயக்கத்தில் பல படங்கள் நடித்துள்ளேன். அப்போதே நான் விஜய்யை பார்த்திருக்கிறேன்.விஜய் எடுத்திருக்கும் அரசியல் முடிவு வித்தியாசமாக இருக்கிறது. பாஜகவை தாக்குவதற்கு விஜய் யோசித்து தான் பேசுவார் என நினைக்கிறேன். அவரது கண்ணோட்டம், அவரது அரசியல் வேறு. அவர் எப்போதும் அதிகம் பேசவே மாட்டார், ஆனால் மாநாட்டில் வேறு விஜய்யை பார்ப்பது போல் இருந்தது.திராவிட மாடலை எதிர்க்கிறேன் என்று விஜய் சொல்லி இருக்கிறார். நான் கேள்விப்பட்டவரை பெரியாரின் அடிப்படையே நாத்திகம், மூடநம்பிக்கை எதிர்ப்பது தான், அதை இல்லை என்று விஜய் சொல்லிவிட்டார் என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.
உக்ரைன் நேட்டோவுடன் இணைவதை எதிர்த்து உக்ரைன் மீது கடந்த 2022ம் ஆண்டில் ரஷ்யா போரைத் தொடங்கியது. போரில் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி செய்து வரும் நிலையில், ரஷ்யாவுக்கு சமீபமாக வடகொரியா தனது 10 ஆயிரம் வீரர்களையும், ஆயுதங்களையும் வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்த போர் தொடங்கியது முதலே இந்த போரை நிறுத்த இந்திய பிரதமர் மோடியால் முடியும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தொடர்ந்து பேசி வருகிறார். சமீபத்தில் பிரதமர் மோடி உக்ரைனுக்கு பயணம் சென்றதுடன், போரில் பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்தார். ப்ரிக்ஸ் மாநாட்டிற்காக ரஷ்யா சென்றவர் புதினுடன் பேசினார். பின்னர் இந்த யுகம் போருக்கானது அல்ல என்றும் பிரதமர் மோடி பேசினார்.போர் நிறுத்தம் குறித்து பேசிய ஜெலன்ஸ்கி உலகின் மிகப்பெரிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியா 5வது பெரிய பொருளாதார நாடாக உள்ளது. சர்வதேச அரசியலில் இந்தியா ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளது.இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகம் முழுவதும் செல்வாக்கு உள்ளது. உக்ரைன் போரை நிறுத்த அவரால் முடியும். இதுத்தொடர்பாக இந்தியாவில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்புள்ளது என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மூலம் விண்வெளிக்கு பலமுறை பயணித்துள்ளார். கடந்த ஜூன் 5 அன்று சுனிதா வில்லியம்ஸும், பட்ச் வில்மோரும் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சில நாட்கள் பணிகள் தொடர்பாக சென்றிருந்தனர். அதன்பின்னர் அவர்களை அழைக்க போயிங் ஸ்டார்லைனர் விண்கலம் அனுப்பப்பட்ட நிலையில் அதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக வீரர்களை அழைக்காமலே விண்கலம் பூமிக்கு திரும்பியது. பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் இருக்கும் சுனிதா வில்லியம்ஸ், அங்கிருந்து பூமியில் உள்ள அனைத்து மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு இந்த முறை பூமியிலிருந்து இவ்வளவு தொலைவில் தீபாவளி கொண்டாடும் வாய்ப்பு அமைந்திருப்பதாக அவர் பேசியுள்ளார்.விண்வெளியில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்த தீபாவளி வாழ்த்துக்கு ரிப்ளை செய்து வரும் பலரும் அவருக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்துள்ளதோடு, அவர் பூரண நலத்துடன் பூமிக்கு திரும்ப வேண்டும் என வேண்டிக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 12ஆம் தேதி மேஷம் -ராசி: எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். நெருக்கமானவர்களின் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோக முயற்சிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் அமையும். பலம் மற்றும் பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். செயல்பாடுகளில் இருந்துவந்த சோர்வு விலகும். எதிர்பாலின மக்கள் வழியில் அனுகூலம் உண்டாகும். எதிலும் அவசரம் இன்றி பொறுமையுடன் செயல்படவும். மறதி விலகும் நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு ரிஷபம் ராசி: கற்பனை கலந்த உணர்வுகள் மூலம் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். குண இயல்புகளில் மாற்றங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்லவும். பூர்வீக சொத்துக்களால் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வழக்கு விஷயங்களில் மாற்றமான சூழ்நிலை உண்டாகும். பிள்ளைகளின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். ஓய்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் மிதுனம் -ராசி: குடும்ப உறுப்பினர்களிடம் சூழ்நிலைக்கேற்ப அனுசரித்துச் செல்லவும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சமூகப் பணிகளில் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பணி நிமித்தமான பயணம் ஏற்படும். பழைய சிந்தனைகள் மூலம் நெருக்கடியான சூழல் உண்டாகும். பாராட்டு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : வெண்மை கடகம் -ராசி: செய்கின்ற முயற்சியில் சாதகமான பலன்கள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக்கொடுத்துச் செயல்படவும். இழுபறியான சில செயல்களுக்கு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நெருக்கமானவர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வைப்பீர்கள். வீட்டின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். சோதனை நிறைந்த நாள். அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு சிம்மம் -ராசி:குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு மூலம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். சூழ்நிலை அறிந்து பேசுவது நன்மை உண்டாகும். செய்கின்ற செயல்களில் கவனம் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரவாக இருப்பார்கள். விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்குவீர்கள். சாந்தம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் கன்னி -ராசி: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தன வருவாயை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். புதிய நபர்களிடம் விழிப்புடன் செயல்படவும். உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். மனதில் இருக்கும் ரகசியங்களை பகிர்வதை குறைக்கவும். உத்தியோக நெருக்கடிகள் மறையும். குழப்பம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை துலாம் -ராசி: பிற மொழி சார்ந்த மக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். பிள்ளைகளின் உயர் கல்வி குறித்த சிந்தனைகள் மேம்படும். வருமானத்தை பெருக்குவதற்கான வாய்ப்புகள் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். ஊக்கம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு விருச்சிகம்- ராசி: வியாபாரப் பணிகளில் சிறு மாற்றங்கள் மூலம் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில திடீர் பயணங்கள் கைகூடும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். சபை பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். செயல்பாடுகளில் புத்திக்கூர்மை வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதரவான வாய்ப்புகள் உண்டாகும். ஜெயம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் தனுசு -ராசி: வியாபாரப் பணிகளில் முன்னேற்றமான சூழல் ஏற்படும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சுபகாரியம் தொடர்பான பேச்சு வார்த்தைகள் ஈடேறும். நண்பர்களின் வழியில் சாதகமான சூழ்நிலை உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் மீதான எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக செயல்பாடுகளில் தெளிவு பிறக்கும். நலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 1அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் மகரம் -ராசி:வியாபாரப் பணிகளில் சிந்தித்து முடிவெடுக்கவும். தந்தையிடம் சூழ்நிலை அறிந்து செயல்படவும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உண்டாகும். தொலைதூர பயணம் குறித்த சிந்தனைகள் மேம்படும். கலை சார்ந்த செயல்பாடுகளில் ஈடுபாடு ஏற்படும். புதுவிதமான சிந்தனைகளை செயல்வடிவில் மாற்றுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொறுமை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 2அதிர்ஷ்ட நிறம் : சந்தனவெண்மை கும்பம் –ராசி:பணிபுரியும் இடத்தில் சில அவப்பெயர்கள் ஏற்பட்டு நீங்கும். குழப்பத்தால் பணிகளில் தாமதம் ஏற்படும். எதிலும் அவசரமின்றி பொறுமையுடன் செயல்படவும். ஆராய்ச்சி செயல்களில் அலைச்சல் ஏற்படும். வெளி வட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். உறவினர்களிடத்தில் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். பயணம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் மீனம் -ராசி: உத்தியோகத்தில் தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு ஒத்துழைப்பும், ஆதரவும் அதிகரிக்கும். நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் இருந்துவந்த பிரச்சனைகள் தீரும். ஆடம்பரமான பொருட்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தடைபட்ட வரவுகள் கிடைக்கும். வெளியூர் பயணங்கள் கைகூடும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 12 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை 29.10.2024சந்திர பகவான் இன்று கன்னி ராசியில் பயணம் செய்கிறார்.இன்று பிற்பகல் 12.20 வரை துவாதசி. பிறகு திரியோதசி. இன்று இரவு 08.48 வரை உத்திரம். பின்னர் அஸ்தம்.அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
கோவிட் தடுப்பூசி தொடர்பில் டொரண்டோ நகர மக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. புதிய கோவிட் தடுப்பூசியை இன்று முதல் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.ஆறு மாதங்களுக்கு முன்னதாக தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்கள் புதிய தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியும்.தடுப்பூசி பெற்றுக்கொள்ள டொரண்டோ சுகாதார அட்டை தேவையில்லை என டொரண்டோ பொதுச் சுகாதார அலுவலகம் அறிவித்துள்ளது.மருந்தகங்கள் உள்ளிட்ட சில இடங்களில் தடுப்பூசி எற்றிக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாடாளுமன்ற தேர்தலில் 2009 இன் பின்னர் ஆளும் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெறதவறியுள்ளது.பெரும்பான்மையை பெறுவதற்கு 235 ஆசனங்களை கைப்பற்றவேண்டிய நிலையில் லிபரல் ஜனநாயக கட்சியும் அதன் கூட்டணிகளும் 215 ஆசனங்களை மாத்திரம் கைப்பற்றியுள்ளன.2009ம் ஆண்டின் பின்னர் ஜப்பானில் லிபரல் ஜனநாயக கட்சி பெரும்பான்மையை பெற தவறியமை இதுவே முதல் தடவை. லிபரல் ஜனநாயக கட்சி 1955 முதல் ஜப்பானை பலதடவைகள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்து வந்துள்ளது.கடந்த சில வருடங்களாக லிபரல் ஜனநாயக கட்சி ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் ஆதரவின்மை உட்பட பல குழப்பத்தில் சிக்குண்டுள்ள நிலையிலேயே இந்த தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன.கட்சி தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள போதிலும் தொடர்ந்து ஆட்சி செய்யப்போவதாக பிரதமர் சிகேரு இஸ்கிபா தெரிவித்துள்ளார்.
கனடாவில் பல்வேறு பகுதிகளில் இடம் பெற்று வரும் வாகன கொள்ளை சம்பவங்களை தடுத்து நிறுத்தும் நோக்கில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.கனடிய மத்திய போக்குவரத்து அமைச்சர் இது தொடர்பான திட்டத்தை முன்மொழிந்துள்ளார்.மத்திய அரசாங்கம் மாகாண மற்றும் பிராந்திய அரசாங்கங்களுடன் இணைந்து செயல்படுவதன் மூலம் வாகன கொள்ளைகளை தடுக்க முடியும் என அவர் தெரிவித்துள்ளார். பொதுவாக மாகாண மற்றும் மத்திய அரசாங்கங்களுக்கு இடையில் காணப்படும் சில சட்ட இடைவெளிகளை பயன்படுத்தி குற்றவாளிகள் வாகனங்களை திருடி அவற்றை விற்பனை செய்வதாக அவர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஈரானிய இயக்குனர் மஜித் மஜிது இயக்கிய பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தின் மூலம் நல்ல அறிமுகம் பெற்ற மாளவிகா மோகனன், அதன் பிறகு தமிழில் மாஸ்டர், பேட்ட மற்றும் மாறன் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார் மாளவிகா மோகனன். கடைசியாக அவர் நடித்த மாறன் திரைப்படம் தோல்வி படமாக அமைந்தது.சமீபத்தில் அவர் நடிப்பில் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் படம் வெளியாகி அவருக்குப் பாராட்டுகளைப் பெற்றுத்தந்தது. நடிப்பில் மாளவிகாவுக்குக் கிடைத்த ரசிகர்களை விட, அவரின் புகைப்படங்கள் மூலமாக கிடைத்த ரசிகர்கள்தான் அதிகம். இன்ஸ்டாகிராமில் அவர் பகிரும் புகைப்படங்கள் ஆயிரக்கணக்கில் லைக்ஸ்களைக் குவித்து வருகின்றன.தற்போது அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தில் உடல் எடை குறைந்து மிகவும் ஒல்லியான தோற்றத்துக்கு மாறியுள்ளார். வெள்ளை நிறத்தில் வித்தியாசமான சேலையணிந்து வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரல் ஆகிவருகின்றன.
தென்னிந்திய மொழி படங்களில் முன்னணி நடிகையாக விளங்கியவர் ஸ்ரேயா. ரஜினியோடு சிவாஜி படத்தில் நடித்ததை அடுத்து முன்னணி கதாநாயகர்களோடு ஜோடி சேர்ந்து நடித்து வந்தார். இடையில் பெரிய சம்பளத்துக்காக வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா அழகப்பன் படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடினார். அதன் பிறகு அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன.ஒரு கட்டத்தில் மற்ற மொழிகளிலும் வாய்ப்புகள் குறைய வெளிநாட்டுக் காதலரை திருமணம் செய்துகொண்டு பாரினிலேயே செட்டில் ஆகிவிட்டார். அவர்களுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ராதா என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் இப்போது திருமனத்துக்குப் பிறகு அவருக்கு வாய்ப்புகள் அதிகமாகியுள்ளன. சமீபத்தில் ரிலீஸ் ஆன பேன் இந்தியா படமான கப்ஜா படத்தில் நடித்திருந்தார்.இன்ஸ்டாகிராமில் வித்தியாசமான ஆடைகள் அணிந்து தனது கிளாமர் போட்டோக்களை பகிர்ந்து வரும் அவர் இப்போது தனது மார்பழகை காட்டி புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரலாகியுள்ளன.
காசாவில் நடைபெற்ற வான்வழி தாக்குதலில் 5 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. "பாலஸ்தீன பத்திரிகையாளர்களுக்கு எதிரான இந்தக் கொடுமைகளை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். இஸ்ரேலின் பாசிசத்தை அம்பலப்படுத்துவதில் எங்களது போராட்டம் ஒரு போதும் தளராது," என்று பாலஸ்தீன் ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இதுபோன்ற தாக்குதல்களை நிறுத்த சர்வதேச ஊடகங்கள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இஸ்ரேல் அரசு இந்த கொலைகளுக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் அல்-கிஸா டிவியின் நிருபர் சயீது ரத்வான், சனத் செய்தி நிறுவன நிருபர் ஹம்ஸா அபு சல்மியா, அல்-குத்ஸ் அமைப்பின் நிருபர் ஹனீன் பரூத், சாத் அல்-சகீப் செய்தி நிறுவனத்தின் அப்துல் ரகுமான் அல்-தனானி, சுயாதீன நிருபர் நாதியா அல்-சயீத் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
விமான அச்சுறுத்தல் அழைப்புகளின் குறிப்பிடத்தக்க அதிகரிப்பின் பின்னணியில், இந்திய தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) நாடு முழுவதும் அதன் பாதுகாப்பு முயற்சிகளை அதிகரித்துள்ளது.கடந்த இரண்டு வாரங்களில் மட்டும், 400 க்கும் மேற்பட்ட போலி அழைப்புகளைப் பெற்றதாக இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தெரிவித்துள்ளன.இந்த அழைப்புகள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பிற்கான சாத்தியமான அச்சுறுத்தல் குறித்து கவலைகளை அதிகரித்தது. அதிகரித்து வரும் இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள, NIA இன் சைபர் பிரிவு வெளிநாட்டு அச்சுறுத்தல் அழைப்புகள் பற்றிய விரிவான பகுப்பாய்வைத் தொடங்கியுள்ளது.இந்த விசாரணையானது இந்த அழைப்புகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்களை கண்டறிவதிலும் அவற்றின் நம்பகத்தன்மையை மதிப்பிடுவதிலும் கவனம் செலுத்துகிறது.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் முதலாவது அரச முறை வெளிநாட்டு விஜயமாக இந்தியா செல்ல உள்ளார்.இந்திய அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி ஜனவரி மாதத்தில் டெல்லிக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விஜயத்தில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேராத் மற்றும் தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார குழு பங்கேற்க உள்ளது.இதன்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுக்க உள்ளனர்.இலங்கை - இந்திய பொருளாதார, அரசியல் மற்றும் கலாசார உறவுகள் குறித்து பரந்துபட்ட பேச்சுவார்த்தைகளில் இருதரப்பும் ஈடுபட உள்ளன. இலங்கையில் முன்னெடுக்கப்படுகின்ற இந்திய திட்டங்கள் குறித்து இலங்கை குழு அவதானம் செலுத்த உள்ளது.இதேவேளை, பிரதமர் மோடியின் இலங்கை விஜயத்திற்கான அழைப்பினை அநுரகுமார கையளிக்க உள்ளார். மோடியின் விஜயமானது இலங்கையின் சுதந்திர தினத்தன்று இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது000
தமிழ் வருடம் ஸ்ரீ குரோதி, ஐப்பசி மாதம் 11ஆம் தேதி மேஷம் -ராசி: எதிர்காலம் சார்ந்த செயல் திட்டங்களை வடிவமைப்பீர்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதில் புதுவிதமான தேடல் உண்டாகும். காப்பீடு துறைகளில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். பொன், பொருட்கள் பற்றிய சிந்தனைகள் மேம்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். மனம் விட்டு பேசுவதன் மூலம் புரிதல் அதிகரிக்கும். நிறைவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : அடர்மஞ்சள் ரிஷபம் ராசி: சிந்தனையில் இருந்துவந்த குழப்பம் நீங்கும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். பயனற்ற செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வாகனம் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் கைகூடும். விவசாயம் சார்ந்த துறைகளில் மேன்மை ஏற்படும். மேன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை மிதுனம் -ராசி: மறைமுகமான தடைகளை வெற்றி கொள்வீர்கள். தொழில்நுட்ப கருவிகள் மூலம் ஆதாயம் ஏற்படும். இசை சார்ந்த துறைகளில் ஈடுபாடு உண்டாகும். கடன் சார்ந்த பிரச்சனைகள் ஓரளவு குறையும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சனைகளில் தெளிவான முடிவுகள் கிடைக்கும். செயல்களில் திருப்தியான சூழல் அமையும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : இளநீலம் கடகம் -ராசி: பெரியோர்களின் ஆலோசனைகள் மனதளவில் உத்வேகத்தை ஏற்படுத்தும். குடும்ப உறுப்பினர்களின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். கடன் நிமித்தமான ஆலோசனைகள் கிடைக்கும். மற்றவைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். வாக்குறுதிகள் அழிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். அசதி மறையும் நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : நீலம் சிம்மம் -ராசி:மனதில் புதுவிதமான செயல் திட்டம் பிறக்கும். எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். எழுத்து சார்ந்த துறைகளில் வித்தியாசமான அனுபவம் கிடைக்கும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சல் ஏற்படும். கால்நடை துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். நேர்மறை சிந்தனையுடன் செயல்படுவது நல்லது. மனதளவில் இருந்துவந்த இறுக்கங்கள் குறையும். நன்மை நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை கன்னி -ராசி: குடும்ப உறுப்பினர்கள் பற்றிய புரிதல் மேம்படும். பயணங்களின் மூலம் மனதளவில் சில மாற்றங்கள் ஏற்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வாழ்க்கை துணைவரிடம் அனுசரித்துச் செல்லவும். உத்தியோகப் பணிகளில் மற்றவர்களின் பணிகளை பார்க்க வேண்டிய சூழல் அமையும். கால்நடைகளிடம் கவனத்துடன் இருக்கவும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் துலாம் -ராசி: தொழிலில் லாபகரமான சூழ்நிலை அமையும். துறைகளில் இருந்துவந்த குழப்பம் குறையும். உயர்நிலைக் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனையின் போக்கில் சில மாற்றங்கள் உண்டாகும். இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். மனதில் இருந்துவந்த குழப்பம் நீங்கி அமைதி ஏற்படும். மூத்த உடன்பிறப்புகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வரவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் விருச்சிகம்- ராசி: மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். மனதிற்குப் பிடித்த புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வாழ்க்கை துணை வழியில் ஒத்துழைப்பான சூழல் அமையும். உயர் கல்வியில் ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வியாபாரத்தில் புதுவிதமான கண்ணோட்டம் பிறக்கும். தன வருவாயை மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். ஆக்கப்பூர்வமான நாள்.அதிர்ஷ்ட எண் : 5அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் தனுசு -ராசி: சமூகப் பணிகளில் செல்வாக்கு மேம்படும். எதையும் செய்து முடிக்க முடியும் என்ற மனநிலை பிறக்கும். தன வருவாயில் இருந்துவந்த தடைகள் குறையும். வேலையாட்களின் ஒத்துழைப்பு மனதிற்கு திருப்தியை ஏற்படுத்தும். பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். மாணவர்களுக்கு முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு மகரம் -ராசி:மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும். எதிர்பார்த்த தனம் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உத்தியோகப் பணிகளில் திட்டமிட்டு செயல்படவும். தொழில் சார்ந்த பயணங்களில் பொறுமை வேண்டும். வெளிப்படையான பேச்சுக்களால் நெருக்கடிகள் ஏற்படும். உடன்பிறந்தவர்களிடத்தில் அனுசரித்து நடந்து கொள்ளவும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 9அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு கும்பம் –ராசி:கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அனுபவம் கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு மீனம் -ராசி: கவலைகள் நீங்கி புத்துணர்ச்சியுடன் செயல்படுவீர்கள். சமூகப் பணிகளில் முன்னேற்றமான வாய்ப்பு ஏற்படும். முக்கிய முடிவுகளில் நிதானம் வேண்டும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
ஸ்ரீ குரோதி வருடம் ஐப்பசி மாதம் 11 ஆம் தேதி திங்கட்கிழமை 28.10.2024.சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 10.27 வரை ஏகாதசி. பிறகு துவாதசி.இன்று மாலை 06.22 வரை பூரம். பின்னர் உத்திரம்.திருவோணம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
தமிழக வெற்றி கழகத்தின் கொடியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம், இரட்டைப்போர் யானை மற்றும் வாகை மலர் குறித்து கட்சியின் தலைவர் விஜய் விளக்கியுள்ளார்.சிவப்பு என்றாலே புரட்சிகரமான நிறம், அதனால் எல்லோர் கவனத்தையும் கவரும் என்பதால் சிவப்பு நிறத்தை தேர்வு செய்தோம். மஞ்சள் நிறமென்பது நம்பிக்கை, லட்சியம், உற்சாகம், நினைவாற்றல், இலக்கை நோக்கி உறுதியுடன் ஓட வைக்கும் எண்ணம் ஆகியவை காரணமாக இந்த இரண்டு நிறங்களை தேர்வு செய்தோம்.வாகை மலர் என்பது வெற்றியின் மலர். போருக்கு போய்விட்டு மன்னன் திரும்பும் போது வாகை சூடி வந்தான் என்று சொல்வார்கள். அதனால் வெற்றி என்ற அர்த்தத்தை குறிக்கும் வகையில் வாகை மலரை தேர்வு செய்தோம்.பொதுவாக பலம் குறித்து சொல்ல வேண்டுமென்றால் யானை பலம் என்று சொல்வார்கள். குணத்தில், உருவத்தில், உயரத்தில், எப்போதுமே தனித்தன்மை கொண்டது யானை. அதிலும் குறிப்பாக போர் யானை என்பது தன்னிகரற்றது. போர் பழகிய யானை எதிரிகளை துவம்சம் செய்வதில் கில்லாடி. அப்படிப்பட்ட போர்முனையில் இருக்கும் பலமான இரட்டை யானையை எங்கள் கட்சியின் கொடியில் வைத்து உள்ளோம் என்று விஜய் தனது கட்சியின் கொடியில் உள்ள நிறங்கள் மற்றும் யானை, வாகை மலருக்கு விளக்கம் அளித்துள்ளார்,
ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் வகையில் சட்டவிரோத செயலில் ஈடுபட்டமையினால் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலும் இருந்தும் கட்சியின் அடிப்படை உறுப்புறிமையிலிருந்து ம. பரமேஸ்வரன் (ஈசன்) நீக்கப்பட்டுள்ளார்.சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி பணம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறப்படும் ம. பரமேஸ்வரன் என்பவர் கடந்த வாரம் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபர் மீதான முறையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் விசாரணைகள் முடிவடைந்த பின்னர், அந்நபரை மீண்டும் கட்சியில் இணைத்துக்கொள்வதா இல்லையா என்பது குறித்து கட்சியின் மத்தியகுழு பரிசீலித்து அது தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்படும்.இத்தீர்மானம் சிறீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவின் பணிப்புரையின் பேரில் எடுக்கப்பட்டுள்ளது.