அமரர் கண்மணி சோமசுந்தரம்

  • 1 members
  • 1 followers
  • 2177 views
  • Light Candle
  • More
Memories
Login or Join to comment.
Merry XMAS and Happy Holidays
  • 1319
மேஷம்குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகள் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : பச்சை ரிஷபம்பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். நட்பு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : இளம்மஞ்சள் மிதுனம்பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : அடர்நீலம் கடகம்சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அந்நிய தேச பயண வாய்ப்புகள் சாதகமாகும். பிற இன மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆதரவு மேம்படும் நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் சிம்மம்மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : காவி கன்னிதனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். முகத்தளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக துறையில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம் துலாம்எதிலும் கோபம் இன்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். வெற்றி கிடைக்கும் நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை விருச்சிகம்சஞ்சலமான சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்த தன்மை உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 3அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் தனுசுஉறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டாகும். அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை குறைத்துக் கொள்ளவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். செலவு நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 7அதிர்ஷ்ட நிறம் : வெளிர்பச்சை மகரம்பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழில் நிமித்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.அதிர்ஷ்ட எண் : 8அதிர்ஷ்ட நிறம் : நீலம் கும்பம்தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வியாபார பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 4அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு மீனம்ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.அதிர்ஷ்ட எண் : 6அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீலம் இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்.
  • 43
குரோதி வருடம் மார்கழி மாதம் 11 ஆம் தேதி வியாழக்கிழமை 26.12.2024சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.இன்று முழுவதும் ஏகாதசி.இன்று மாலை 06.51 வரை சுவாதி. பின்னர் விசாகம்.உத்திரட்டாதி ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம்.சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 67
Good Morning...
  • 77
·
Added a news
ஆழிப்பேரலை ஏற்பட்டு 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் உயிரிழந்த மக்களை நினைவுகூரும் வகையில் நாடு முழுவதும் இன்று முற்பகல் 9.25 முதல் 9.27 வரை இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுமுன்பதாக 2004 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி ஏற்பட்ட ஆழிப்பேரலையில் சிக்குண்டு இலங்கைத் தீவில் 35,000 அதிகமானோர் உயிரிழந்ததுடன், ஐயாயிரத்துக்கும் அதிகமானோர் காணாமல் போயிருந்தனர். இலங்கை எதிர்கொண்ட பாரிய இயற்கை அனர்த்தமாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளதுஅதன்படி, 2005 ஆம் ஆண்டு 26 ஆம் திகதி முதல் தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டு வருகிறது.அத்துடன், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆழிப்பேரலையில் உயிர் நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.இதன்படி, காலி ஆழிப்பேரலை நினைவுத்தூபிக்கு முன்பாக தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது. குறித்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் குழுவொன்றும் கலந்துகொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன், சுனாமி பேபி என்றழைக்கப்படும் அபிலாஷ் கல்முனையில் உள்ள அவரது இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள சுனாமி நினைவுத்தூபிக்கு முன்பாக ஆழிப்பேரலையால் உயிர் நீத்த உறவுகளுக்காக தமது அஞ்சலியை செலுத்தியுள்ளார்.இதேவேளை, மட்டக்களப்பின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் ஆழிப்பேரலையால் உயிரிழந்த உறவுகளின் ஆத்ம சாந்திக்காக பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், சுடர் ஏற்றப்பட்டும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.மேலும் ஆழிப்பேரலையால் உயிரிழந்தவர்களை நினைவு கூறும் வகையில் இன்றைய தினம் மன்னார் மாவட்டச் செயலகத்திலும் தேசிய பாதுகாப்பு தினம் அனுட்டிக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் மாவட்ட உதவி பணிப்பாளர் கே.திலீபன் தலைமையில் இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு, உடுத்துறை பகுதியிலும் ஆழிப்பேரலை நினைவேந்தல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.இதேவேளை, மூதூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பில் பொதுமக்களின் பங்களிப்புடன் இன்று மூதூர் இறங்குதுறைமுக வாசலில் ஆழிப்பேரலை நினைவுத் தூபி திறந்து வைக்கப்பட்டது  இதன்போது, உயிர்நீத்தவர்களுக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.அத்துடன், ஹட்டன் உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் ஆழிப்பேரலையினால் உயிர்நீத்தவர்களுக்கான ஆத்ம சாந்திக்காக பொதுமக்கள் பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், சுடர் ஏற்றப்பட்டும் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதது000
  • 243
·
Added a news
இரவு வேளைகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள், வாகனங்களை நிறுத்தும் போது செயற்பட வேண்டிய விதம் தொடர்பில் பதில் காவல்துறை மாஅதிபர் பிரியந்த வீரசூரியவினால் பல ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன.இரவு வேளைகளில் வாகனங்களை நிறுத்தும் போது போக்குவரத்து கடமையில் ஈடுபடும் காவல்துறை உத்தியோகத்தர்கள் வாகன சாரதிகளுக்கு ஒளி பிரதிபலிக்கும் கையுறை உள்ளிட்ட ஆடைகளை அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வகையில் காவல்நிலையங்களுக்கு வழங்கப்படும் சிவப்பு மின்விளக்குகளை பயன்படுத்துமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.000
  • 225
·
Added a news
இந்திய மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான போர்டர் ௲ கவாஸ்கரி டெஸ்ட் தொடரின் நான்காவது போட்டியில் விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்ட சம்பவம் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதனால் இரு வீரர்களுக்கு போட்டித் தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகின்றது.இரு அணிகளுக்கும் இடையிலான நான்காவது டெஸ்ட் போட்டி மெல்பேர்னில் இடம்பெறுகின்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடி வருகின்றது.சற்று முன்னர் வரை 76 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்துள்ள அந்த அணி 282 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்த போட்டியின் முக்கிய அம்சமாக சுமார் 1,445 நாட்களுக்கு பின்னர் பும்ரா வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்கப்பட்டது.கடந்த நான்கு ஆண்டுகளாக டெஸ்ட் போட்டிகளில் அபாராமாக திறமையை வெளிப்படுத்தி வரும் பும்ரா கடந்த காலங்களில் வீசிய 4,484 பந்துகளுக்கு பின்னர் இன்று முதல் முறையாக சிக்ஸர் அடிக்கப்பட்டது.அவுஸ்திரேலியா அணியின் அறிமுக வீரராக களமிறங்கியுள்ள சாம் கோன்ஸ்டஸ் பும்ராவின் பந்துவீச்சை லாவகமாக எதிர்கொண்டார். அவர் வீசிய இரண்டாவது ஓவரில் மட்டு 16 ஓட்டங்களை கோன்ஸ்டஸ் அடித்திருந்தார்.இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவின் ஓவரில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர் என்ற சாதனையை கோன்ஸ்டஸ் படைத்தார். இந்தப் போட்டியின் மற்றுமொரு முக்கிய சம்பவமாக விராட் கோலி மற்றும் சாம் கோன்ஸ்டஸ் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.10 ஓவரின் முடிவில் பந்தை கையில் எடுத்துக்கொண்டு ஓவர் மாற்றுவதற்காக விராட் கோலி நடந்து சென்ற போது எதிர்திசையில் கோன்ஸ்டஸ் நடந்து வந்தார். இதன்போது இருவரும் தங்களுடைய தோளில் நேருக்கு நேராக மோதிக்கொண்டனர்.இதனையடுத்து இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட போது மைதானத்தில் இருந்த உஸ்மன் கவஜா மற்றும் நடுவர்கள் தலையிட்டு நிலைமையை சரிசெய்தனர்.ஆனால் அந்த இடத்தில் விராட் கோலி தான் வேண்டுமென்றே கோன்ஸ்டஸ் மீது மோதியதாக நேரலையில் ரிக்கி பாண்டிங் மற்றும் மைக்கேல் வாகன போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தார்கள்.இந்நிலையில் அந்த தருணத்தில் யார் மீது தவறு இருக்கிறது என்பதை போட்டி நடுவர் ஆண்டி பைகிராஃப்ட் விசாரிப்பார் என அவுஸ்திரேலிய வாரியம் அறிவித்துள்ளது.ஒருவேளை அதன் முடிவில் அவர்கள் மீது தவறு இருந்தால் நடுவர் லெவல் 1 அல்லது லெவல் 2 விதிமுறை மீறியதாக பரிந்துரை செய்வார். அதை ஏற்றுக் கொண்டு ஐசிசி 3 அல்லது 4 கருப்பு புள்ளிகளை தண்டனையாக கொடுக்க (லெவல் 2 விதிமுறை) வாய்ப்புள்ளது.ஒருவேளை லெவல் 2 விதிமுறையை மீறியதற்காக 4 புள்ளிகளை பெற்றால் இந்தத் தொடரின் 5 வது போட்டியில் விராட் கோலி அல்லது கோன்ஸ்டஸ் விளையாடுவதற்கு தடை பெறுவார்கள். லெவல் 1 விதிமுறை மீறியதாக கருதப்பட்டால் அபராதம் மட்டும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது000
  • 235
·
Added a news
2024 ஆம் ஆண்டு இதுவரை 101 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 60 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 44 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்த அலுவலகம் தெரிவித்துள்ளதுஇதேவேளை, மீண்டும் தலைதூக்கும் பாதாள உலகத்தை ஒடுக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்."அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போராடுவதற்கு நாங்கள் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். ஆனால் இரண்டு வார நடவடிக்கைகளில் செய்ய எதிர்பார்க்கவில்லை. இதில் பாதுகாப்பு படையினர் படிப்படியாக தலையிட்டு வருகின்றனர். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்று மட்டும்தான் சொல்ல முடியும். அதன் முடிவுகளை பார்க்க முடியும். என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.000
  • 238
·
Added article
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவுள்ளார். அதன் பின்னர் வேறு எந்த படத்திலும் நடிக்கப் போவதில்லை என்றும் அத்துடன் நடிப்பில் இருந்து விலகவுள்ளார் என்றும் சொல்லப்படுகிறது.இந்நிலையில் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஜெயிலர் 2 பட ப்ரமோஷன் வீடியோ ஒன்று வெளியிடப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அதுபோல ரிலீஸாகவில்லை. ஆனால் சமீபத்தில் அந்த வீடியோ ஷூட் செய்யப்பட்டதாகவும் விரைவில் ரிலீஸாகும் எனவும் சொல்லப்படுகிறது.இந்நிலையில் ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங் வரும் மார்ச் மாதம் முதல் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கேரளாவில் தற்போது நெல்சன் லொகேஷன் தேடும் பணிகளில் ஈடுபட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.
  • 519
·
Added article
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. மிகக் குறுகிய கால படமாக உருவாகவுள்ள இந்த படம் அடுத்த ஆண்டு மத்தியில் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. படத்துக்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.இந்த படத்தின் பூஜை சமீபத்தில் கோயம்புத்தூரை அடுத்த பொள்ளாச்சியில் நடந்தது. அதன் பின்னர் தற்போது கோவை வேளாண்மை கல்லூரியில் செட் ஒன்று அமைத்து படமாக்கி வருகிறார் இயக்குனர் ஆர் ஜே பாலாஜி. படத்தில் கதாநாயகியாக த்ரிஷா ஒப்பந்தம் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் நட்டி நட்ராஜ், ஸ்வாஸிகா உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.தற்போது படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜி ஒரு முக்கியமானக் கதாபாத்திரத்த்தில் நடித்தும் வருவதாக சொல்லப்படுகிறது. அவரும் சூர்யாவும் படத்தில் வழக்கறிஞர் வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
  • 510
மேஷம் குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். தள்ளிப்போன திருமணப் பேச்சு வார்த்தையை திறமையாக முடிப்பீர்கள். வேலையிடங்களில் அன்பைக் காட்டி அனுகூலத்தைப் பெறுவீர்கள். வியாபாரத்தை வெற்றிகரமாக நடத்துவீர்கள். தொழில் துறையில் இருந்த போட்டிகளை விலக்குவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, சாம்பல், வெள்ளை, இளம் சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 9 7 6 1ரிஷபம்பணியிடத்தில் உங்களுக்கு எதிரிகள் முளைப்பார்கள். கடுமையாக வேலை செய்தாலும் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவது கடினம். ஆன்லைன் வர்த்தகங்கள் ஆபத்தை உண்டாக்கும். சூதாட்டத்தின் பக்கம் தலை வைத்துப் படுக்காதீர்கள். வசீகரமான பேச்சால் வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். எளிய முறையில் நடந்து வியாபாரத்தைப் பெருக்குவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம்சிவப்பு, சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 6 1 2 9மிதுனம்வெளியூர் பயணங்களில் பெரிய லாபம் அடைய மாட்டீர்கள். தொழிலில் அதிக முதலீடு செய்ய தயங்குவீர்கள். அடுத்தவருடைய பேச்சை நம்பி அகலக் கால் வைக்காதீர்கள். கடுமையான முயற்சிக்குப் பின்பே அரசாங்க காரியங்களை முடிப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய உதவி தாமதப்படுவதால் வீட்டு வேலையை ஒத்தி வைப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருப்பு, மஞ்சள்.அதிர்ஷ்ட எண்: 5 9 4 3கடகம்தொழில் படுமுன்னேற்றகரமான நிலையை காண்பீர்கள். பணவரவில் தாராளமான நிலையை அடைவீர்கள். உறவுகளில் இருந்த உரசல்களைச் சரி செய்வீர்கள். பிள்ளைகளின் கல்விக்காக பணத்தைச் சேமிப்பீர்கள். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கிப் போடுவீர்கள். முழங்கால் வலிக்காக மருத்துவ பரிசோதனை செய்து கொள்வீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், கருநீலம், பச்சை.அதிர்ஷ்ட எண்: 2 3 8 5சிம்மம்கூட இருந்தே குழி பறிக்கும் நண்பர்களை அடையாளம் காண்பீர்கள். தொழிலுக்கு எதிராக தோன்றிய போட்டிகளைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சிறு வியாபாரிகள் அதிகமான பலனைப் பெறுவீர்கள். அரசாங்க வேலைகள் அனுகூலமாக நடக்கும். கடன் சுமையை குறைப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: இளம்சிவப்பு, சாம்பல், வெள்ளை.அதிர்ஷ்ட எண்: 1 7 6கன்னிஉங்கள் சொல்லுக்கு வீட்டில் மரியாதை அதிகரித்து சந்தோஷம் அடைவீர்கள். பொதுநல சேவையால் வெளிவட்டாரத்தில் செல்வாக்கை உயர்த்துவீர்கள். பதவி உயர்வுக்கான வேலைகளை செய்வீர்கள். தனியார் துறையில் சம்பள உயர்வு அடைவீர்கள். முதலாளிகளின் அணுக்கமான அன்பை பெறுவீர்கள். பங்கு பரிவர்த்தனை தொழிலில் ஏற்றம் காண்பீர்கள்அதிர்ஷ்ட நிறம்: பச்சை, இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 5 1 2 9துலாம்நல்லதையே செய்தாலும் கெட்ட பெயர் எடுப்பீர்கள். வேண்டிய நபருக்கு நீங்கள் உதவி செய்வீர்கள். ஆனால், அது வீட்டில் உள்ளவர்களுக்குப் பிடிக்காததால் இம்சைப்படுவீர்கள். கடன் பத்திரங்களில் படித்துப் பார்க்காமல் கையெழுத்து போடாதீர்கள். பங்குச்சந்தை வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யாதீர்கள். நிலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் முடிவுக்கு வராமல் இழுபறியாக நிலையை காண்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு, கருப்பு ,பச்சை.அதிர்ஷ்ட எண்: 6 9 4 3விருச்சிகம்கொடுத்து வைத்த பணத்தைத் திருப்பிக் கேட்டால் விவகாரம் வந்து சேரும். கல்யாணம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கச்சிதமாக பேசுங்கள். ஆடம்பரமாகச் செலவு செய்யாதீர்கள். தேவையில்லாமல் பண விரயத்தை ஏற்படுத்தாதீர்கள். வியாபாரம் மந்த நிலையிலேயே நடக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் கிடைக்க தாமதமாகி சிரமத்தில் தவிப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, மஞ்சள், பச்சை, கருநீலம்.அதிர்ஷ்ட எண்: 9 3 8 5தனுசுதொட்டதெல்லாம் துலங்கி சந்தோஷத்தில் துள்ளுவீர்கள். விட்ட பணத்தை வியாபாரத்தில் மீட்டெடுப்பீர்கள். கூட்டாகத் தொழில் செய்ய ஒப்பந்தம் போடுவீர்கள். நில விற்பனையில் நல்ல லாபம் பார்ப்பீர்கள். தொழில்துறைகளை மிக முன்னேற்றமாக நடத்துவீர்கள். அரசு ஊழியர்கள் பணியிடத்தில் அனுகூலம் அடைவீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சாம்பல், வெள்ளை, இளம்சிவப்பு.அதிஷ்ட எண்: 3 7 6 1மகரம்தகவல் தொழில்நுட்பத் துறையில் திறமையை வெளிப்படுத்துவீர்கள். அரசு ஊழியர்கள் பதவி உயர்வும் இடமாற்றமும் அடைவீர்கள். புதிய வீடு கட்டுவதற்காக அடித்தளம் அமைப்பீர்கள். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். வியாபாரத்தை சிறப்பாக நடத்துவீர்கள். வீடு கட்டும் தொழிலில் பொறியியலாளர்கள் புதிய சாதனை படைப்பீர்கள்.அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், இளம்சிவப்பு, வெள்ளை, சிவப்பு.அதிர்ஷ்ட எண்: 8 1 2 9கும்பம்தந்தையின் ஆலோசனையால் புதிய தொழில் தொடங்குவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டை கலகலப்பாக்குவீர்கள். சுப காரியங்களுக்கான முன்னேற்பாடுகள் செய்வீர்கள். பிரிந்து போன உறவுகளை சேர்த்து வைக்க பெரும் முயற்சி செய்வீர்கள். நண்பர்களுக்கு தக்க சமயத்தில் உதவி செய்து பாராட்டுப் பெறுவீர்கள். சந்திராஷ்டம நாள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், வெள்ளை, கருப்பு, மஞ்சள்அதிர்ஷ்ட எண்: 8 9 4 3மீனம்அவசரமான காரியமாக இருந்தால் வெளியூர் செல்லலாம். இல்லையெனில் பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது. திமிராகப் பேசி வாக்குவாதம் செய்வதை தவிர்த்து விடுங்கள். குடும்பத்தில் கோபத்தை வெளிப்படுத்தாதீர்கள். பிள்ளைகளின் பேச்சை காது கொடுத்து கேளுங்கள். அலுவல் சுமையால் உடல் சோர்வு உண்டாகும். ஊழியர்கள் அக்கறையுடன் வேலை செய்து உயர்வு அடைவீர்கள்.சந்திராஷ்டம நாள். கவனமாக நடந்து கொள்ளுங்கள்.அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், கருநீலம், பச்சை.அதிர்ஷ்ட எண்: 3 8 5இன்றைய நாள் இனிய நாளாக அமைந்திட வாழ்த்துகள்
  • 553
குரோதி வருடம் மார்கழி மாதம் 10 ஆம் தேதி புதன்கிழமை 25.12.2024.சந்திர பகவான் இன்று துலாம் ராசியில் பயணம் செய்கிறார்.இன்று இரவு 11.02 வரை தசமி. பிறகு ஏகாதசி.இன்று மாலை 04.22 வரை சித்திரை. பின்னர் சுவாதி.பூரட்டாதி உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.
  • 607
  • 633
  • 641
·
Added a news
நத்தார் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களின் பாதுகாப்பிற்காக 45,000 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அத்தியாவசியமான இடங்களுக்கு இராணுவ பாதுகாப்பை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.இதேவேளை, நத்தார் பண்டிகையை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு திறந்த வெளியில் பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலை திணைக்களம் தீர்மானித்துள்ளது.சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர், சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி. திஸாநாயக்க இதனை தெரிவித்துள்ளார். மேலும், நத்தார் பண்டிகையை முன்னிட்டு 389 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • 740
·
Added a news
கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் கடந்த 2021ஆம் ஆண்டு தீப்பற்றியெறிந்த ‘எக்ஸ்பிரஸ்-பேர்ல்’ (MV-X PRESS PEARL) என்ற கப்பலில் இருந்து சிதறிய பிளாஸ்டிக் மணிகளை சேகரிக்கும் நடவடிக்கைக்காக கடந்த ஆண்டு இறுதி வரையில் 802,016,487 ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் தொடர்பாக தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள கணக்காய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.கணக்காய்வு அலுவலகத்தின்படி, சமூக பங்களிப்பு கொடுப்பனவுகளாக 248,192,250 ரூபாயும், உபகரணங்கள், போக்குவரத்து, உணவு மற்றும் இதர செலவுகளாக 553,824,237 ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.2022 ஆம் ஆண்டை விட 2023 ஆம் ஆண்டளவில் நாளாந்தம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் மணிகளின் மொத்த அளவு 44 முதல் 20 கிலோகிராம் வரை குறைந்துள்ளது, எனினும், 2023 ஆம் ஆண்டில் சமூக பங்களிப்பிற்காக செய்யப்பட்ட செலவில் 124 இல் இருந்து 106 மில்லியன் ரூபாயாக 18 மில்லியன் ரூபாய் மட்டுமே குறைக்கப்பட்டுள்ளதாக என்று தணிக்கை கூறுகிறது.கடற்கரையில் அதிக பிளாஸ்டிக் மணிகள் சிதறி கிடப்பதால், கணிசமான எண்ணிக்கையில் துப்புரவு பணியாளர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்றும், 2021ஆம் ஆண்டை விட 2022இல் கடற்கரையை சுத்தம் செய்பவர்கள் குறைவாக இருப்பினும், செலவு குறையவில்லை என்றும் கடல்சார் பாதுகாப்பு ஆணையம் தணிக்கையில் தெரிவித்துள்ளது.000
  • 721
·
Added a news
2025 செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கட் போட்டிகளுக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதுபாகிஸ்தானில் 2025 பெப்ரவரி 19 ஆம் திகதி ஆரம்பமாகும், செம்பியன்ஸ் கிண்ண 2025 போட்டித் தொடருக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.எட்டு அணிகள் பங்கேற்கும் இந்தப் போட்டிகள் கலப்பின(ஹைபிரிட்) மாதிரியின் கீழ் நடைபெறவுள்ளன.இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயில் நடைபெற உள்ளன.அத்துடன் இந்திய அணி, அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு முன்னேறினால், அந்த இரண்டு போட்டிகளும் துபாயில் நடைபெறும் என்று சர்வதேச கிரிக்கட் சம்மேளனம் அறிவித்துள்ளது. ஏனைய போட்டிகள் பாகிஸ்தானிலேயே(Pakistan) நடைபெறவுள்ளன.போட்டிகளுக்கான ஏ குழுவில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, பங்களாதேஸ் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.பி குழுவில் தென்னாப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.இந்தநிலையில் பெப்ரவரி 19 ஆம் திகதியன்று, பாகிஸ்தான எதிர் நியூசிலாந்து போட்டி கராச்சியில் நடைபெறும்.பெப்ரவரி 20ஆம் திகதி பங்களாதேஸ் எதிர் இந்தியா போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.பெப்ரவரி 21இல் ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான போட்டி கராச்சியில் நடைபெறவுள்ளது.பெப்ரவரி 22 அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து போட்டி லாகூரில் நடைபெறுகிறதுபெப்ரவரி 23 இல் பாகிஸ்தான் எதிர் இந்தியா போட்டி துபாயில் இடம்பெறுகிறது.பெப்ரவரி 24 பங்களாதேஸ் எதிர் நியூசிலாந்து போட்டி ராவல்பிண்டியில் நடைபெறுகிறதுபெப்ரவரி 25 அவுஸ்திரேலியா எதிர் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான போட்டி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளதுபெப்ரவரி 26இல் ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து போட்டி லாகூரில் நடைபெறும்பெப்ரவரி 27இல் பாகிஸ்தான் எதிர் பங்களாதேஸ் போட்டி ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளதுபெப்ரவரி 28 இல் ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா போட்டி லாகூரில் நடைபெறும்மார்ச் 1, தென்னாப்பிரிக்கா எதிர் இங்கிலாந்து போட்டி கராச்சியில் நடைபெறும்மார்ச் 2, நியூசிலாந்து எதிர் இந்தியா போட்டி துபாயில் நடைபெறும்.மார்ச் 4, அரையிறுதி 1, துபாயில் நடத்தப்படும்.மார்ச் 5, அரையிறுதி 2, லாகூரில் நடத்தப்படும்.மார்ச் 9, இறுதிப் போட்டி, லாகூரில் நடத்தப்படும், இந்தியா தகுதி பெற்றால், துபாயில் நடத்தப்படும். 000
  • 742
·
Added a news
கடந்த ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்தில் கடற்றொழில் அமைச்சராக இருந்த டக்ளஸ் தேவானந்தா வடபகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரம் கருதி சீனா அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வலைகள் கடற்றொழிலாளர்களுக்கு யாழ்ப்பாணத்தில் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.குறித்த வலைகள், நேற்றையதினம் (24.12.2024) யாழ்ப்பாணம் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்களத்தில் வைத்து கையளிக்கப்பட்டுள்ளன. இதன்போது, 200 கடற்றொழில் பயனாளிகளுக்கு 06 வலைகள் வீதம் வழங்கப்பட்டுள்ளன.ஒரு பயனாளிக்கு 60,000 பெறுமதியான வலைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் கடற்றொழில் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெயராசசிங்கம் சுதாகரன் தெரிவித்துள்ளார்.இதேநேரம் கடந்த ஆட்சிக்காலத்தில் குறித்த வலைகள் வழங்கிவைக்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் என தேர்தல்கள் அறிவிக்கப்பட்டதால் அக்காலப்பகுதியில் குறித்த உதவித் திட்டங்கள் வழங்கிவைக்கப்டாது இருந்த நிலையில் தற்போது வழங்கிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது 000
  • 740
·
Added a news
ஸ்பெயினுக்கும் அல்ஜீரியாவுக்கும் இடையிலான மத்தியதரைக் கடலில், சரக்குக் கப்பல் ஒன்று மூழ்கியதில், இரண்டு பணியாளர்கள் காணாமல் போனதாக ஸ்பெயினின் கடல்சார் மீட்பு நிறுவனம் மற்றும் ரஸ்ய வெளியுறவு அமைச்சகம் ஆகியன அறிவித்துள்ளன.எனினும் பதினான்கு பேர் ஒரு உயிர்க்காக்கும் படகினால் மீட்கப்பட்டு ஸ்பெயினுக்கு மாற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இயந்திர அறையில் ஏற்பட்ட வெடிப்பைத் தொடர்ந்து குறித்த கப்பல் மூழ்கத் தொடங்கியதாக ரஸ்ய அமைச்சகம் தெரிவித்துள்ளது. எனினும் விபத்துக்கான காரணத்தை இன்னும் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.இந்த சம்பவம் குறித்து கடந்த திங்கட்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் தமக்கு தகவல் கிடைத்ததாக ஸ்பெயின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தநிலையில் மீட்பு நடவடிக்கைகளை மேற்பார்வையிட குறித்த பிரதேசத்துக்கு ரஸ்யாவின் போர்க்கப்பல் ஒன்று வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது000
  • 737
·
Added a news
இலங்கையில் பால் உற்பத்தி துறைசார் நடவடிக்கைகள் அதிகரித்துவரும் நிலையில் அந்த தொழிலை முன்னெடுக்கும் பண்ணையாளர்கள் மாடுகளுக்கான உணவு மற்றும் பராரிப்பு செலவு அதிகரித்துள்ளதாகவும் அதற்கேற்ப பசும் பாலின் விலை காணப்படவில்லை என கவலை வெளியிட்டுள்ளனர்இதேநேரம் இலங்கையில் பால்வளத் துறையின் அபிவிருத்தியில், இந்தியாவின் அமுல் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதற்கு ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளை, புதிய அரசாங்கம் பின்பற்றாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.இது தொடர்பில் கொழும்பின் ஊடகம் ஒன்று ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.இலங்கை தனது பால் உற்பத்தியை தன்னிறைவை கொண்டு வருவதற்காக, இந்தியாவின் தேசிய பால்வள அபிவிருத்தி சபை மற்றும் முன்னணி சந்தை நிறுவனமான அமுல் ஆகியவற்றிடம் உதவியை கோரியிருந்தது.அந்த நேரத்தில், இலங்கையின் அரசுக்குச் சொந்தமான பால் நிறுவனமான மில்கோ மற்றும் பால் பண்ணைகளை இந்தியாவின் அமுல் பால் நிறுவனம், இலங்கையுடனான கூட்டு முயற்சியின் கீழ் கையகப்படுத்தவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன. இதற்கான உடன்படிக்கை ஒன்றிலும் ரணிலின் அரசாங்கம் கையெழுத்திட்டிருந்தது.இந்தநிலையில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இந்தியாவிற்கு விஜயம் செய்தபோது, பால்வளத் துறையின் வளர்ச்சியில் ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளார்எனினும் ரணிலின் அரசாங்கம், இந்திய தரப்புடன் இணங்கிக்கொண்ட புரிந்துணர்வுகளின் அடிப்படையில் விடயங்கள் எவையும் பேசப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது000
  • 722
·
Added a news
இன்று டிசம்பர் 25 உலகம் முழுவதும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள்.இந்த நாள் கடவுளின் மகனான இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிப்பதாக கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர்.இந்த புனித நாள் இயேசு கிறிஸ்துவின் அன்பு, கருணை, இரக்கம் ஆகியவற்றையும் கொண்டாடுகிறது.கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது சொந்தங்கள், உறவுகள் ஒருங்கிணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபடுவர்.இப்படி எண்ணற்ற சிறப்புகள் அடங்கிய கிறிஸ்துமஸ் பண்டிகையின் வரலாற்றை நோக்கும்போது - கிறிஸ்தவர்கள் புனித நூலாக கருதும் பைபிளில் இயேசு கிறிஸ்துவின் பிறந்த திகதி குறித்த விவரம் இடம்பெறவில்லை.அதேபோல எந்த மாதம் என்ற தகவலும் தெளிவாக இல்லை.அந்த காலத்தில் கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடவில்லை என கூறப்படுகிறது.அதேபோல அவருடைய இறப்பு மற்றும் உயிர்த்தெழுதல் நிகழ்வுகளை கடைபிடிக்க தவறினர். பைபிள் போதனைகளை வழங்கும் புனித நூலாகவே விளங்கியுள்ளது.சில நூற்றாண்டுகளுக்கு பிறகு கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை டிசம்பர் 25 இல் கொண்டாட முடிவெடுத்தனர்.இந்த கொண்டாட்ட திகதிக்கும் பைபிளில் உள்ள குறிப்புக்கும் நேரடி தொடர்பு இல்லை. எனினும் ரோமானிய குளிர்கால விழாவுடன் ஒத்துப்போகிறது.பண்டைய ரோமில் வித்தியாசமான காலண்டரை பின்பற்றினர். அதில் டிசம்பர் 25 ஆம் திகதி குளிர்கால விழா வந்தது.இதை ரோமானியர்கள் வெல்ல முடியாத சூரியனின் பிறப்பாக கடைபிடித்தனர்.குளிர்கால நிறைவு மற்றும் சூரியனின் மறுமலர்ச்சியாக டிசம்பர் 25 இல் கொண்டாட்டங்கள் அரங்கேறின.இயேசு கிறிஸ்துவை உலகிற்கு ஒளி தந்தவராக கருதியதால் நாளடைவில் அது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு வழிவகுத்தது.பைபிளிலும் ஜான் 8:12 இல் இயேசு கிறிஸ்து உலகின் ஒளியாக அடையாளப்படுத்தப்பட்டு இருந்தார்.336 அன்னோ டொமினியில் முதலாம் கிறிஸ்தவ ரோமானிய பேரரசர் ஆட்சி செய்த போது டிசம்பர் 25 ஆம் திகதி கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டதாக மற்றொரு தகவலும் உண்டு.இயேசு பிரானின் தாயான மேரி மார்ச் 25 ஆம் திகதி கர்ப்பம் தரித்தார். இதற்கு அடுத்த 9 மாதங்களில் இயேசு பிறந்ததாகவும் கூறப்படுகிறது.உலக மக்கள் தொகையில் பெரும்பாலானோர் இந்த கிறிஸ்துமஸ் நன்நாளை வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர்.கிறிஸ்தவர்கள் தங்களுடைய குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆசைப்பட்ட பரிசுகளை வாங்கி கொடுத்து அன்பை பரிமாறுவார்கள்.அதே போல இயேசு பிரானின் போதனைகளை நினைவு கொண்டு அவர் காட்டிய பாதையில் கிறிஸ்தவர்கள் பயணிக்க வேண்டும் என்பதையும் கிறிஸ்துமஸ் வலியுறுத்துகிறது. அந்தவகையில் உலகெங்கும் வாழ் கிறிஸ்தவ மக்களுக்குதமிழ் பூங்கா இணையத்தளம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தக் கொள்கின்றது000
  • 742
·
Added a news
கடந்த ஜூலை மாதம் தெஹ்ரானில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து ஐ.நா.வை கண்டிக்குமாறு ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.இது தொடர்பில் ஈரானிய தூதுவர் அமீர் சயீத் இரவானி (Amir Saeid Iravani), ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குடெரெஸுக்கு எழுதிய கடிதத்தில்,இந்த வெட்கக்கேடான செயல் பயங்கரவாதத்தில் இஸ்ரேலின் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்று சுட்டிக்காட்டியதுடன், 2024 ஒக்டோபர் 1 அன்று இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் ஏவுகணைத் தாக்குதலை சட்டப்பூர்வமாக்கியது என்று வாதிட்டார்.மேலும்,சியோனிச (இஸ்ரேல்) ஆட்சி உலக அமைதிக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலாக உள்ளது, இது நிறுத்தப்பட வேண்டும் என்றும் அக் கடிதத்தில் அடிக்கோடிட்டுக் காட்டினார்.அத்துடன், இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸால் பகிரங்கமாக ஒப்புக்கொள்ளப்பட்ட இந்த படுகொலை ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான கொந்தளிப்பான உறவில் குறிப்பிடத்தக்க விரிவாக்கத்தைக் குறிக்கிறது என்றார்.ஹமாஸின் முக்கிய பிரமுகரும் அதன் தலைவருமான ஹனியே, தெஹ்ரானுக்கு விஜயம் செய்து கொண்டிருந்தபோது கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டார்.62 வயதான ஹனியே, ஹமாஸின் ஒட்டுமொத்தத் தலைவராக பரவலாகக் கருதப்பட்டார், காசா பகுதியில் போர் நிறுத்தத்தை எட்டுவதற்கான பேச்சுவார்த்தைகளில் முக்கிய பங்கு வகித்தார்.இந்த நிலையில் ஐ.நா.வுக்கு ஈரான் எழுதிய கடிதம், இஸ்ரேல் பிராந்தியத்தை சீர்குலைப்பதாக குற்றம் சாட்டியதுடன், இஸ்ரேலை பொறுப்புக்கூற வைக்கும் பாதுகாப்பு சபையின் பொறுப்பை எச்சரித்தது.அதேநேரம், ஐ.நா. உறுப்பு நாட்டின் இறையாண்மை பிரதேசத்தில் ஒரு அரசியல் தலைவர் கொல்லப்பட்டதை பயங்கரவாதம் மற்றும் ஆக்கிரமிப்பு நடவடிக்கை என்றும் ஈரான் கண்டித்துள்ளது.ஹனியேவின் படுகொலையைத் தொடர்ந்து, செப்டம்பர் 27 அன்று பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாஹ் மற்றும் ஒக்டோபர் 7 அன்று காசாவில் ஹனியேவின் வாரிசான யாஹ்யா சின்வார் உட்பட பல உயர்மட்ட கொலைகளை இஸ்ரேல் நடத்தியதாகக் கூறப்படுகிறது00
  • 738
·
Added article
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெளியான திருஷ்யம் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதுமட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு , கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் இந்தியைத் தவிர மற்ற மொழிகளில் எல்லாம் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.இதையடுத்து 2020 ஆம் ஆண்டு திரிஷ்யம் 2 ஆம் பாகம் வெளியாகி நேரடியாக ஓடிடியில் வெளியானது. இந்த பாகமும் வெற்றி பெற்று தமிழைத் தவிர பிற மொழிகளில் எல்லாம் ரீமேக் செய்யப்பட்டது. இந்நிலையில் இப்போது மூன்றாம் பாகத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளதாக தெரிகிறது.இந்நிலையில் பர்ரோஸ் படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மோகன்லால் “த்ரிஷ்யம் 3 படத்தின் வேலைகள் விரைவில் தொடங்கவுள்ளன. மூன்றாம் பாகம் பான் இந்தியா படமாக உருவாகும்” எனக் கூறியுள்ளார்.
  • 956
·
Added a news
கிரீன்லாந்தின் உரிமை, கட்டுப்பாடு அமெரிக்காவுக்கு அவசியம் என்று அமெரிக்கா அதிபராக பொறுப்பேற்க உள்ள டிரம்ப் கூறிய நிலையில், "கிரீன்லாந்து எங்கள் நாடு; அது விற்பனைக்கு இல்லை" என கிரீன்லாந்து நாட்டு பிரதமர் மூட் எகெடே பதிலடி கொடுத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் இடையே அமைந்துள்ள கிரீன்லாந்து தீவு, அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக வட அமெரிக்கா கண்டத்தை சேர்ந்ததாகும்.இந்த நாட்டின் புவியியல் முக்கியத்துவத்தை கருதி, அமெரிக்கா மிகப்பெரிய விமானப்படை தளத்தை இந்நாட்டில் வைத்திருக்கிறது. இந்நிலையில், தங்கள் நாட்டின் விமானப்படை இங்கு அமைந்திருப்பதால், அந்த நாட்டை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ள அமெரிக்கா விரும்புவதாக கூறப்படுகிறது.இந்த நிலைய்ல் தேசிய பாதுகாப்பு நோக்கங்களுக்காக கிரீன்லாந்து உரிமை மற்றும் அதன் கட்டுப்பாடு அமெரிக்காவுக்கு அவசியமாக உள்ளது என்று டிரம்ப் கூறியதற்கு பதிலளித்த கிரீன்லாந்து பிரதமர், "கிரீன்லாந்து எங்களுடைய நாடு ஒருபோதும் விற்பனை செய்ய முடியாது" என பதிலடி கொடுத்துள்ளார். டிரம்ப் பதவியேற்றதும் இந்த விவகாரம் சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • 986
·
Added a news
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா அதிகளவில் வறண்ட பிரதேசமாக இருப்பதோடு, கடும் பொருளாதார நெருக்கடியிலும் சிக்கி தவித்து வருகிறது. அங்கு மக்கள் பலர் தினசரி ஒருவேளை உணவுக்கே திண்டாடும் நிலை உள்ளது. அந்நாட்டின் அனம்ப்ரா மாகாணத்தின் ஒகிஜா நகரில் கிறிஸ்துமஸ் பண்டிகையை ஒட்டி அன்னதானம் நடத்த தன்னார்வல அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்தது. பசி, பட்டினியால் தவித்த மக்கள் உணவு வாங்குவதற்காக முண்டியடித்து ஓடியதில் கூட்டத்தில் சிக்கி 32 பேர் நசுங்கி பலியாகியுள்ளனர்.இதேபோல அபுஜாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில் அதை வாங்குவதற்காக ஏராளமானோர் குவிந்ததில் நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உட்பட 35 பேர் பலியாகியுள்ளனர். இந்த சம்பவங்கள் நைஜீரியாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
  • 1000
·
Added a news
சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் பதில் அத்தியட்சர்கராக கடமையாற்றிய நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் - அருச்சுனா அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400 மில்லியன் ரூபா ஒதுக்கிடு செய்யப்பட்டது என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் மிகுதி ஊழல் செய்யப்பட்டது என்றும் பொதுவெளியில் குற்றம்சாட்டி இருந்தார்.இது தொடர்பான உண்மையான நிலையை அறிந்துகொள்ள தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையிடம் விளக்கம் கோரி இருந்தது. அதற்கான பதில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.தகவல் அறியும் சட்டம் ஊடாக பசுந்தேசம் அமைப்பு விளக்கம்1. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவில்லை.2. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க SHDP (இரண்டாவது) என்கின்ற 5ஆண்டு திட்டத்தில் தான் கட்டுமாண வேலைகள் நடைபெற்றது. அதனால் இதற்கு என்று தனி திட்டம் (Master Plan ) போடப்படவில்லை. இதற்கான கட்டுமாண வேலைகள் யாவும் கட்டிடங்கள் திணைக்களம் ஊடாகவே விலைமனுக்கள் கோரப்பட்டு கட்டுமாணம் மேற்கொள்ளப்பட்டது.3. சாவகச்சேரி ஆதார மருத்துவமனையில் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க கீழ்வரும் முறையில் தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.2015ஆம் ஆண்டு - 15மில்லியன்,2016ஆம் ஆண்டு - 41.49மில்லியன்,2017ஆம் ஆண்டு - 35.38மில்லியன்,2018ஆம் ஆண்டு - 26மில்லியன் ,2020ஆம் ஆண்டு - 2.00மில்லியன் ,2021ஆம் ஆண்டு - 2.56மில்லியன் ,2021ஆம் ஆண்டு - 4.93மில்லியன் ,2022ஆம் ஆண்டு - 3.96மில்லியன் ,2022ஆம் ஆண்டு - 0.43மில்லியன் ,2023ஆம் ஆண்டு - 3.56மில்லியன் ,2023ஆம் ஆண்டு - 16.91மில்லியன் ,2023ஆம் ஆண்டு - 2.654மில்லியன் ,2023ஆம் ஆண்டு - 6.69மில்லியன் ,2024ஆம் ஆண்டு - 12.00மில்லியன் ,2024ஆம் ஆண்டு - 25.20மில்லியன் ,2024ஆம் ஆண்டு - 3.59மில்லியன் இந்நிலையில் நாடாளும்ன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனா அவர்கள் அவசர மருத்துவ அலகு கட்டிடம் அமைக்க 400மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டது என்றும் அதில் 200மில்லியன் ரூபா நிதியே பயன்படுத்தப்பட்டது என்றும் கூறி இருப்பது உண்மைக்கு புறம்பானது என்று அரச தகவல் ஊடாக நிரூபணம் ஆகியுள்ளது.எனவே மருத்துவர் அருச்சுனா அவர்கள் கூறி இருக்கும் இந்த குற்றச்சாட்டுக்கு உண்மை உள்ளது என்றால் அதற்கான ஆதாரத்தை பொதுவெளியில் முன்வைக்கவேண்டும் என்று பசுந்தேசம் அமைப்பு பகிரங்கமாக கோரிக்கை முன்வைக்கின்றதாகவும் கூறியுள்ளது000
  • 1092
·
Added a news
வேலணை வங்களாவடி பிரதேச வைத்தியசாலையின் மருத்துவ சேவை செயற்பாடுகள் ஆளணிப் பற்றாக்குறையால் குறைக்கப்பட்டு பகுதியளவில் இழுத்து மூடப்படும் நிலைக்கு வந்துள்ளதாக தெரியவருகின்றது.இது தொடர்பில் தெரியவருகையில் -தீவகப் பிரதேசத்தின் இரண்டாவது பிரதான வைத்தியசாலையாகவும் தீவகத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ளதுமான குறித்த வைத்தியசாலை கடந்த நல்லாட்சிக் காலத்தில் அன்றைய சுகாதார அமைச்சராக இருந்த ராஜித சேனரத்னவினால் "பி" தரத்திற்கு அவசர அவசரமாக தரமுயர்த்தப்பட்டது.ஆனாலும் குறித்த தரத்திக்கு ஏற்ப ஆளணி வளங்களை நிவர்த்திக்கும் எந்தவிதமான பொறிமுறையையும் குறித்த அமைச்சர் ஏற்படுத்தவில்லை. அதன் பின்னரும் அமைக்கப்பட்ட அரசாங்கங்களில் இவ்விடயம் தொடர்பில் பல தடவைகள் உரிய தர்ப்பினரது பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும் அது கண்டுகொள்ளப்படாத நிலையில் இருந்துவந்தது.ஆனாலும் இருந்த குறைந்தளவான ஆளணி வளங்களை கொண்டு குறித்த வைத்தியசாலையின் தரத்துக்கு ஏற்ப 24 மணி நேரமும் குறைந்த ஆளணியுடன் சேவை முன்னெடுக்கப்பட்டது. குறிப்பாக இரு வைத்தியர்களே இவ் வைத்தியசாலைக்கு நியமிக்கப்பட்ட நிலையில் அவர்கள் இரவு பகலாக ஓய்வின்றி, தமக்கான விடுப்புகள் இன்றி சேவை செய்யும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்தனர். இதேபோன்று தாதியர் பற்றாக்குறையும் இவ் வைத்தியசாலையில் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றது. இதுவும் துறைசார் அதிகாரிகள் கவனத்திற்க்கு பல தடவைகள் கெண்டு செல்லப்பட்ட போதும் அவ்விடயமும் அலட்சியப் போக்காக பார்க்கப்பட்டு கைவிடப்பட்டது.ஆனாலும் குறித்த வைத்தியசாலையில் மாதாந்தம் 2500 இற்கும் அதிகமான நோயளர்களும் வருடாந்தம் 30 ஆயிரத்திற்கும் அதிகமான நோயர்களும் சிகிச்சை பெற்றுவந்ததற்கான ஆதாரங்களும் வைத்தியசாலையின் ஒட்டப்பட்டுள்ள பதிவேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.இதேநேரம் குழந்தை பிரசவ விடுதி உள்ளிட்ட பல சிகிச்சை தொகுதிகளை கொண்டுள்ள இந்த வைத்தியசாலை நெடுந்தீவு, ஊர்காவற்றுறை ,வேலணை, புங்குடுதீவு, நயினாதீவு மண்டைதீவு ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய தீவகத்தின் மையப்ப குதியில் அமைந்துள்ளதானது நோயாளர்களின் அவசர தேவைகளை நிவர்த்தரி செய்யும் ஒரு நிலையமாகவும் இருந்து வருகின்றது.அத்துடன் கறித்த வைத்தியசாலைக்கு அவசர நோயாளர் காவி வாகனங்களும் (அம்புலன்ஸ்) பற்றாக்குறை அல்லது இல்லாதத நிலையே காணப்படுவதாகவும் வைத்தியசாலை தரப்பினரால் சுட்டிக்காட்டப்படுகின்றதுஇன்னிலையில் வரும் ஜனவரி மாதம்முதல் குறித்த வைத்தியசாலையின் மருத்துவ சேயையை மாலை 6 மணியுடன் நிறுத்துவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் அது தொடர்பாகன அறிவுறுத்தலும் ஒட்டப்பட்டுள்ளது.குறித்த செய்தியானது தற்போது புதிய அரசாங்கம் பொறுப்பேற்றதன் பின்னர் புதிய மாற்றங்கள் வரும் என நம்பி வாக்களித்த மக்களுக்கு பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் இந்த சேவைக் குறைப்பை இடைநிறுத்தி வைத்தியசாலைக்கான ஆளணி வழங்களை நிவர்த்தி செய்து தொடர்ந்தும் வேலணை மக்களுக்கு குறிப்பாக தீவக மக்களுக்கு 24 மணி நேர சேவையை குறித்த வைத்தியசாலை ஊடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் துறைசார் தரப்பினரிடம் கோரிக்கை முன்வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.   
  • 1097
·
Added a news
முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கு அரசாங்கமே முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட விசேட தீர்மானத்திற்கமைய, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் நீக்கப்பட்டுள்ளனர்.  அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளுக்காக காவல்துறை பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மீளாய்வு செய்யப்பட்டு அதற்கேற்ப அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் சீரமைக்கப்படவுள்ளன. இந்தநிலையிலேயே, முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமாயின் அதற்கான முழு பொறுப்பையும் அரசாங்கம் ஏற்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த முப்படைகளின் உறுப்பினர்கள் நீக்கப்பட்டமையானது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகுமெனக் குறிப்பிடப்படுகிறது.000
  • 1107