Added a news
அனுராதபுர காலத்தைப் போன்று யாருக்கும் தலைவணங்காத, கடனற்ற வலுவான நாட்டை உருவாக்கி வருவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.அனுராதபுரத்தில் இன்று (28) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, 2022 ஆம் ஆண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி -11% ஆக காணப்பட்டதாகவும் இவ்வருடம் அது -3.5% அல்லது -4.0 % வரை குறைவடையலாம் என தெரிவித்தார். எனினும் 2024 ஆம் ஆண்டு முதல் இதனை நேர்மறையான வளர்ச்சிக்கு கொண்டு செல்வதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்தார்.
Added a news
தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர் பி.எஸ்.எம்.சார்ள்ஸின் இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்னும் தீர்மானிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமைகளில் இருந்து விலகுவதாக சார்ள்ஸ் கடந்த 25ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எவ்வாறாயினும், இராஜினாமாவை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி எதிர்வரும் தினமொன்றில் தீர்மானிக்கவுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Added a news
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அமைச்சரவை தீர்மானங்கள் ராஜபக்ஷ குடும்பத்தின் இரவு விருந்து உபசாரத்தின் ஊடாக எடுக்கப்பட்டது. ராஜபக்ஷ குடும்ப ஆதிகத்தினால் 69 இலட்ச மக்களின் அரசியல் தீர்மானம் சூன்யமானது. சகோதரனுக்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றிய உலகில் ஒரே ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ இடம் பிடித்துள்ளார் என முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.சுதந்திர மக்கள் கூட்டணியின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை வெளியிடும் நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்ல பகுதியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
Added article
நடிகர் ஷாருக் கான் நடிப்பில் கடைசியாக 2018-ம் ஆண்டு ஜீரோ படம் வெளியானது. அதற்கு நான்கு ஆண்டுகள் கழித்து ஷாருக் கான் நடிப்பில் உருவாகியுள்ள பதான் படம் பல தடைகளை எதிர்கொண்டது. இறுதியில் அந்த போராட்டத்தில் வெற்றி பெற்று, கடந்த 25-ந்தேதி உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆக்சன், திரில்லர், நகைச்சுவை கலந்த அதிரடி திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில், யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டு உள்ளது. படத்தில் ஷாருக் கான், தீபிகா படுகோனேவின் கலக்கல் கெமிஸ்ட்ரி, ஜான் ஆபிரஹாமின் அதிரடி நடிப்பு, சல்மான் கானின் 10 நிமிட சிறப்பு தோற்றம் என ரசிகர்களுக்கு திரை விருந்து அளித்துள்ளது. படத்திற்கு விஷால்-சேகர் இசையூட்டி உள்ளனர். இந்தியாவில் பெருநகரங்களான டெல்லி, மும்பை உள்பட நாடு முழுவதும் 5 ஆயிரம் தியேட்டர்களில் படம் வெளியிடப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி உள்ளது.