Feed Item
Added a post 

திருப்பதி திருமலைக்குக்குடை போல திருவாரூருக்குத் தீவட்டி சிறப்புண்டு. வேறெங்கும் காணமுடியாதது.

ஐந்தடி உயரமும், நல்ல பருமனும் உடையது இத்தீவட்டி. இத்தீவட்டியில் நெய் உபயோகப்படுத்தப்படுகின்றது. தியாகேசரின் வலப்பக்கமும், இடப்பக்கமும் முன்னும் பின்னுமாக நால்வர் இத்தீவட்டிகளை ஏந்திச் செல்கின்றனர்.

தீவட்டி கொழுந்துவிட்டெறிய நெய் வார்க்க பின்னால் ஒருவர் வெள்ளியினால் செய்த பன்னீர் சொம்பு போன்ற பாத்திரத்துடன் தொடர்ந்து வருவார். இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்தது திருவாரூர் தீவட்டிகள்.

  • 527