Feed Item
Added a post 

பங்குனி உத்திரமானது தமிழ் மாதத்தில் கடைசி மாதமான பங்குனி மாதத்தில், கடைசி நட்சத்திரமான உத்திர நட்சத்திரம் இணைந்து வரும் நாள் - 25 .3. 2024. அன்றைய நாளில் பௌர்ணமியும் இணைந்து வரும் நாளை பங்குனி உத்திரமாக நாம் கொண்டாடி வருகிறோம்.

பங்குனி உத்தரத்தில் பக்தர்கள் முருகப் பெருமானையும் சிவபெருமானையும் வழிபட்டு மகிழ்கின்றனர். அது மட்டும் இன்றி இந்த பங்குனி உத்திர திருநாளை கல்யாண நாள் என்றும் கொண்டாடப்படுகிறது. இதனால் பல ஆலயங்களில் அன்று இறை திருமணங்கள் விமர்சையாக நடக்கும்.

உத்திர நாளில் சிவபெருமான் பார்வதிக்கு திருமணம் நடந்தேறியதாகவும், முருகப்பெருமான் தெய்வானையை மணந்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆகையால் பங்குனி உத்திர நாள் இந்த இரண்டு தெய்வங்களுக்கும் மிகவும் உகந்ததாகவும் திருமண வைபோக நாளாகவும் கொண்டாடப்படுகிறது.

இத்தகைய சிறப்பு மிக்க நாளில் நம்முடைய பண பிரச்சனை தீர எப்படி வழிபாடு செய்வது என அறியலாம். இந்த வருடம் பங்குனி உத்திரம் 25 .3. 2024 திங்கட்கிழமை அன்று அனுஷ்டிக்கப்படுகிறது. அன்றைய தினத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து பூஜை அறையில் முருகப்பெருமானையும் சிவபெருமானையும் நினைத்த தீபம் ஏற்றி விடுங்கள்.

முருகப்பெருமான் படம் இருப்பின் நன்றாக துடைத்து மலர்களால் அலங்காரம் செய்து அவருக்கு உகந்த செவ்வரளி பூக்களால் மாலை அணிவித்து விடுங்கள். அவருக்கு அன்றைய தினத்தில் செய்யக் கூடிய நெய்வேத்தியம் தான் மிகவும் விசேஷமானது. முருகக்கடவுளுக்கு தினை மாவு மிகவும் பிடிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

முருகப்பெருமானை காண குறத்தி மகள் வள்ளி இந்த தினை மாவை தான் கொடுத்தாக சொல்லப்படுகிறது .ஆகையால் அன்றைய தினத்தில் இந்த தினை மாவை அவருக்கு வைத்து படைப்பது மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. திணை மாவை அப்படியே வைக்காமல் சுத்தமான தேன் கொண்டு அதை பிசைந்து மாவாகவோ அல்லது அதை உருண்டைகளாகவும் செய்து வைக்கலாம்

அன்றைய தினத்தில் நீங்கள் முருகப்பெருமானை எப்படி வழிபட்டாலும் இந்த ஒரு தினை மாவு பிரசாதத்தை வைத்தால் போதும் அவர் மனம் மகிழ்ந்து பண பிரச்சனை முழுவதுமாக தீர்த்துவிடுவார் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி அன்றைய தினத்தில் முருகப்பெருமான் ஆலயத்திற்கு கட்டாயமாக செல்லுங்கள். அவருக்கு அபிஷேகப் பொருள்களான சந்தனம் பன்னீர் தேன் போன்றவற்றை அன்றைய தினத்தில் வாங்கித் தருவதும் மிகவும் விசேஷமானதாக கருதப்படுகிறது.

பக்தர்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வர கூடிய கந்தக்கடவுளை அன்றைய தினத்தில் இது போல வழிபட்டால் பரம ஏழையும் பணக்காரனாக கூடிய யோகத்தை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. இந்த வழிப்பாட்டு முறையில் நம்பிக்கையுடன் செய்து கந்தன் அருளைப் பெறலாம்.

  • 569